சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலம்

படம்
2001ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ம் தேதி. இந்த தேதிக்கு இரண்டு நாட்கள் முன்பாக தினகரன் பத்திரிக்கை தனது தலைப்புச்செய்திகள் விளம்பர வால் போஸ்டரில் இந்த செய்தியையும் போட்டிருந்தது. நடிகர்திலகம் சிவாஜிகணேசன் உடல் நலக் குறைவு காரணமாக  மருத்துவமனையில் அனுமதி என்று அந்த தகவலை சொன்னது. அந்த 90 கள் காலகட்டம் சிவாஜிக்கு உடல் நலக் குறைவை மாறி மாறி கொடுத்துக் கொண்டிருந்தது.சிவாஜி உடல் நல குறைவை பற்றி பல முறை பத்திரிக்கை செய்திகளாக வந்துள்ளது. இப்போது வந்த அந்த செய்தியும் பின் வரும் காலகட்டம் மறக்க வைக்கும் என்று தான் அந்த செய்தியை அன்று பார்த்த போதும் நினைக்க வைத்தது. 21.07.2001.இரவு எட்டு மணி இருக்கும். சன் டிவியின் செய்தி  வாசிப்பு அறை. எப்படிப்பட்ட செய்தியாக , தகவலாக இருந்தாலும் அதை சகஜமாக எடுத்து கடந்து போகும் சன் டிவியின் செய்தி வாசிப்பு குழு அந்த நேரத்தில் வந்த அந்த செய்தியை கேட்டதும் அதிர்ந்துதான் போனார்கள்.அப்போது சன் டிவியின் செய்தி எடிட்டராக இருந்தவர் ராஜா. இன்றைக்கெல்லாம் நியூஸ் சேனல்கள் ஓடுவதே கீழே ஓடும் அந்த ஸ்கோரிலிங் செய்திகளால் தான். லேலே குறிப்பிட் அன்றைய கால கட்டத்தில் இது ம...

சிவாஜி இளையதலைமுறை

தமிழ்சினிமாவுலே தினந்தோறும் புதுசு புதுசா நடிகர் நடிகைகள் இயக்குனர்கள் வந்துட்டுதான் இருக்காங்க.
சிவாஜியோட வேலை செய்யாத பிரபல நடிகர் நடிகைகள்  இயக்குனர்களே இல்லை அப்படின்னு சொல்லலாம் 
பிற்காலத்துலே வந்த இளைய தலைமுறை கலைஞர்களும் சிவாஜியோடு கைகோர்த்து தங்களை பெருமைப்படுத்திக்கிட்டாங்க. 
80 கள் வரை சிவாஜியோட படங்கள் ஒரு பயணம்ன்னா 80 களுக்குபின்னாலே அது ஒரு பயணமா அமைஞ்சது. 
80 களுக்கு பின்னலே வந்த இளைய தலைமுறை கலைஞர்களோட  நடிகர்திலகம் நடிச்ச படங்களை பற்றிய பதிவுதான் இது.

தாவணிக்கனவுகள் - 14.9.1984 லே வெளியாச்சு ..
"ஒரு இமயத்துடன் இணைவதில் பெருமைப்படுகிறோம்"ன்னு டைட்டில் போட்டே சிவாஜியை கேப்டன் சிதம்பரமாக அறிமுகம் செஞ்சார்  கே.பாக்யராஜ்.
வீரபாண்டிய கட்டபொம்மன் கப்போலோட்டிய தமிழன், பகத் சிங், திருப்பூர் குமரன்னு பல வரலாற்று வீரர்களோட வேஷங்கள் போட்ட சிவாஜியை 
 நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வேஷத்துலே  அறிமுகம் செஞ்சார் கே.பாக்யராஜ்.
“எமனுக்கு வாகனம் எதுன்னு கேட்டா எருமக்கடான்னு சொல்ல தெரியுதுல்ல. தேசத்துக்காக உயிர்விட்ட ஒரு தியாகியினுடைய பேர் தெரியாது உனக்கு” என நடிகர் திலகம் பேசுன "பஞ்ச்" வசனம் 
அந்த கேரக்டரோட பெருமையை   சொன்னது.
படத்தோட  உதவி இயக்குனர் பார்த்திபன் தன்னோட அறிமுக வேஷத்து அறிமுகம் ஆனார் இந்த படத்துலே.

.
பந்தம் - 26.1.1985
நடிகர் திலகத்துக்கும் கலையுலகத்துக்கும் உள்ள பந்தம் அவருக்கடுத்த இளைய தலைமுறையோடு மட்டுமல்ல, மலரப்போகும் அரும்பா வந்த புதிய தலைமுறையோடும் தொடருங்கறதுக்கு உதாரணமா பேபி ஷாலினிக்கு தாத்தாவாக சிவாஜி நடிச்ச  படம் பந்தம். 1985ல  குடியரசு தினத்தன்னைக்கு வெளியான பந்தம் சிவாஜியோட நடிப்பு அந்த வயசு நடிப்பை இன்னொரு கோணத்துலே காட்டுன படம்
தியாகம், திரிசூலம் சிவாஜியோடசூப்பர் ஹிட் படங்களை டைரக்சன் செஞ்ச        கே விஜயன் ரத்தபாசம் படத்துலே விலகி  பந்தம் படத்தில மறுபடியும்  இணைஞ்சார்.. தப்பைத் திருத்திக்கொள்ளற  வாய்ப்பு விஜயனுக்கு கிடைச்சது. 

நீதியின் நிழல் - 13.4.1985.
சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்புலே பிரபு ஏற்கனவே சந்திப்பு திரைப்படத்தில நடிச்சிருந்தாலும் கதாநாயகனா நடிச்ச  முதல் படம் இது தான்.   சிவாஜி கௌரவ வேடத்தில் நடிச்சிருந்தார்.. இரட்டை இயக்குனர்களாக இருந்த பாரதி - வாசு இந்த படத்தை டைரக்சன் செஞ்சாங்க.

முதல் மரியாதை - 15.8.1985
16 வயதினிலே படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு  புதிய ரத்தம் பாய்ச்சுன  பாரதிராஜா சிவாஜியோட  இணைஞ்சு  பண்ணுன படம் முதல் மரியாதை.
"உங்கவேஷம்தான் கொஞ்சம் மாறணும்
 எங்க சாமிக்கு மகுடம் 
ஏறணும்னு " சிவாஜிக்கு தேசியவிருது வாங்கித் தரணும்னு இலட்சிய ஆசையோட  இந்த படத்தை செதுக்கிச் செதுக்கி எடுத்திருந்தார் பாரதிராஜா. நடிகர் திலகத்துக்கு இந்த படம் ஒரு புதிய அனுபவம். 1971லே   வெளியான மூன்று தெய்வங்கள் படத்திற்குப் பின்னாலே இதுலே தான் 'விக்' இல்லாமல் நடிச்சார் . மேக்கப்  இல்லாம இயல்பா ஒரு மனுசரா ஸ்கிரீன்லே வந்தார்  சிவாஜி.
சிவாஜி இளவட்டக்கல்லைத் தூக்கறதும் அதுக்கு இளையராஜாவோட  பின்னணி இசையும் பெரிய அளவுலே ரசிகர்களாலே ரசிக்க வெச்சது. ராதாவுக்கு பின்னணிக்குரல் ராதிகா. வைரமுத்து தேசியவிருது  வாங்குன சிறப்பும் அமைஞ்சது.

படிக்காதவன் - 11.11.1985
சிவாஜியோட அபிமான நடிகர்களில் ஒருத்தர்  சஞ்சீவ் குமார். சஞ்சீவ்குமாரோட சிவாஜி பாராட்டுன  நட்பு பெருமை மிக்க நட்பாகும். நவராத்திரி படத்தை  இந்தியில ரீமேக்கா தயாரிச்சப்போ அதுலே நடிச்சவர்  சஞ்சீவ் குமார்.
பாரதவிலாஸ் படத்திலே  நடிகர் திலகத்தோட  நட்புக்காக சஞ்சீவ்குமார் ஒரு காட்சிலே வருவார்.
இந்தியாவுலே ஒரு சிறப்பான நடிகரான சஞ்சீவ் குமாரும் அமிதாப் பச்சனும் அண்ணன் தம்பியா நடிச்ச Khud-Daar இந்தி படத்தோட  தமிழ் ரீமேக் தான் படிக்காதவன். சஞ்சீவ் குமார் இறந்து  5 நாட்கள் கழிச்சு இந்த படம் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

சாதனை - 10.6.1986
நடிகர் திலகம் திரைப்பட இயக்குனராக நடிச்ச  படம் சாதனை.இந்த படத்திலே இளையராஜா ஒரு காட்சியில  நடிச்சிருப்பார் .பிரபு,நளினி எல்லாம்  சிவாஜிகிட்ட  நடிப்பைக் கத்துக்கறது மாதிரி  அமைஞ்ச காட்சிகள் எல்லாம் சிறப்பா இருக்கும்.பேராசியர் ஏ.எஸ்.பிரகாசம் இயக்கிய சில படங்களில்லே  இதுவும் ஒண்ணு.

கே.விஜயன்  திடீர்னு  விலக1980ல வெளிவந்த ரத்தபாசம் திரைப்படத்தை சிவாஜி  டைரக்சன் பண்ணுனார் .அந்த படத்தோட கதையை எழுதுனவர்  சிவாஜியின் மகன் ராம்குமார்ங்கறது  குறிப்பிடத்தக்க விஷயம்

விடுதலை - 11.4.1986
பெரோஸ்கான் தயாரிப்புலே 1980ல  வெளியான குர்பானி இந்திப்படத்தோட  தமிழ் ரீமேக் படம் தான்  விடுதலை.அம்ஜத்கானோட அசத்தலான வேஷத்திலே  சிவாஜி நடிச்சது  அம்ஜத்கானோட  15 வருஷ கலையுலக வாழ்க்கைக்கு மிகப்பெரிய பெருமை.
வினோத் கன்னா நடிச்ச இன்னொரு முக்கிய வேஷத்துலே  கன்னட நடிகர் விஷ்ணுவர்தன் நடிச்சிருந்தார்.
சிவாஜிக்கு சர்வதேசப் புகழ்  தந்த வீரபாண்டிய கட்டபொம்மன் படக்காட்சியை
நினைவு படுத்தற விதமா  இந்த படத்திலே கலாட்டாவான ஒரு காட்சியும் இருக்கும்.

தாய்க்கு ஒரு தாலாட்டு - 16.7.1986
கேரளாவின் கே.பாக்யராஜ்னு பேர் வாங்குன  பாலச்சந்திர மேனன் மது, ஸ்ரீவித்யாவோட தான் நடிச்சமலையாள படமான   "ஒரு பைங்கிளி கத" படத்தை தமிழ்லே ரீமேக் செஞ்சார்.அந்த படம் தான் "தாய்க்கு ஒரு தாலாட்டு".15 வருஷத்துக்கு பின்னாலே  சிவாஜி-பத்மினி சேந்து நடிச்ச  இந்த படத்திலே  பாலச்சந்திர மேனன் வேஷத்திலே  பாண்டியராஜன் நடிச்சார்.
படத்தில "உன்னை ஒன்று கேட்பேன்" புதிய பறவை பட பாட்டை   ரீமிக்ஸ் செஞ்சு  டி.எம்.எஸ்.- சுசீலாவைப் பாட வைச்சு  பதிவு செஞ்சிருந்தார் இளையராஜா.சூப்பரான  அந்த பாட்டு  படத்திலே  இல்லே.. . 

மண்ணுக்குள் வைரம் - 12.12.86
இயக்குனர் பாரதிராஜாவோட மைத்துனர் மனோஜ் குமார் இயக்குன  படம் இது.முதல் மரியாதை படத்தில அறிமுகமான ரஞ்சனி, முரளி, சுஜாதா நடிச்ச  படம் இது. சிவாஜி நடிச்ச  இந்த ஒரே படத்தில தான் கவுண்டமணி-செந்தில் காமெடி இருந்தது  . 

ராஜமரியாதை - 14-1-1987
ராணி லலிதாங்கி,  யார் பையன்  படங்களை இயக்கிய டி.ஆர்.ரகுநாத்தின் மகன் கார்த்திக் ரகுநாத் டைரக்சன் பண்ணுன படம் இது. கதை வசனம் வியட்நாம் வீடு சுந்தரம். கார்த்திக், ஜீவிதா சிவாஜியோட சேந்து நடிச்ச ஒரே படம் இது  .

வீரபாண்டியன் - 14.4.1987
விஜயகாந்த்-ராதிகா ஜோடி சிவாஜியோட நடிச்ச படம் இது .
இந்த படத்தை துரை எழுதி தயாரிச்சிருந்தார். கார்த்திக் ரகுநாத் இந்த படத்தையும் டைரக்சன் செஞ்சிருந்தார்.. மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் சிவாஜியோட
 நடிச்ச  கடைசி படம் இது.

ஜல்லிக்கட்டு - 28.8.1987
மணிவண்ணன் இயக்கத்திலே வியட்நாம் வீடு சுந்தரம் கதை-வசனத்தில சிவாஜியோட   சத்யராஜ், ராதாவுடன் சேந்து  நடிச்ச படம்.
சிவாஜியும் சத்யராஜும் எதிரிகளைப் பழி வாங்கறதா அமைஞ்ச இந்த  கதையை மணிவண்ணன் தன்னோட பாணியிலே டைரக்சன் செஞ்சிருப்பார்.

என் தமிழ் என் மக்கள் - 2.9.1988
காங்கிரசிலிருந்து பிரிஞ்சு தமிழக முன்னேற்ற முன்னணி  கட்சியை ஆரம்பிச்சப்போ சிவாஜி நடிச்ச அரசியல் படம் இது.
அனந்துவின் கதை ..
திரைக்கதை வசனம் எழுதுனது வாலி. இயக்குனர் சந்தான பாரதி.
"ரெட்டை இலையில சோறு போட்டா உங்க கைய ஊனிக்கிட்டு தின்னுவீங்க. சாப்பாடு தீந்து போச்சின்னா இலை கிழிஞ்சிபோச்சின்னு உங்க கையை கழுவிடுவீங்க"ன்னு  சிவாஜி பேசற  வசனம்
 அப்ப நடந்த அரசியலை காரசாரமா பேசற மாதிரி இருந்தது. இது மாதிரி படம் நிறைய காரசாரமான வசனங்கள் அப்ப நடந்த அரசியலை அப்படியே பகிரங்கமா பேசுன படம் இது.

புதிய வானம் - 10.12.1988
சத்யா மூவிஸ் பேனர்லே  சிவாஜி நடிச்ச ஒரே படம்.சிவாஜியின் 275வது படமாக அமைஞ்சது.  ஆர்.வி.உதயகுமாரின் டைரக்சன் பண்ணுன  படம். 

தேவர் மகன் - 25.10.1992
கமல்ஹாசன் எழுதி தயாரிச்ச  படம்.நீங்க நடிக்கலேன்னு சொன்னா இந்த படத்தை நான் எடுக்கலேன்னு கமல் சொன்ன பிறகு சிவாஜி நடிச்ச படம்
.பி.சி.ஸ்ரீராம், இளையராஜா, இயக்குனர் பரதன் கூட்டணியிலே உருவான படம் 

பசும்பொன் - 14.4.1995
முதல் மரியாதைக்கு பின்னாலே பாரதிராஜாவோட இணைஞ்சு சிவாஜி கௌரவ வேஷத்துலே நடிச்சிருந்தார்.
 பிரபு, சிவகுமார், ராதிகா, சரண்யா, விக்னேஷ், யுவராணி, பொன்வண்ணன், வடிவேலு என பெரிய இளைய நடிகர் பட்டாளமே நடிச்சிருந்தாங்க.முதல் மரியாதையில  உதவி ஒளிப்பதிவாளராவும் போட்டோகிராஃபராக ஒரு சிறிய வேசத்துலே நடிச்ச இளவரசு இந்த படத்திலே ஒளிப்பதிவாளராக வேலை செஞ்சதோட முக்கிய வில்லன் வேஷத்திலும் நடிச்சார்.
நாம் தமிழர் சீமான் இப்படத்தில தான் கதைவசனம் எழுதி தமிழ் சினிமாலே நுழைஞ்சார்.

ஒன்ஸ்மோர் - 4.7.1997 
சிவாஜியும் சரோஜாதேவியும் இணைஞ்சு நடிச்ச இருவர் உள்ளம் பட கதாப்பாத்திரங்களை புதிய திரைக்கதையில புதிய திரை வடிவில உருவாக்கி எடுத்த படம் இது.
விஜய் சிம்ரன் சிவாஜியோட நடிச்ச படம் இது.
விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரன் டைரக்சன் செஞ்ச படம்.

ஒரு யாத்ரா மொழி - 13.9.1997
சிவாஜி, மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு தமிழ்நாட்டு தந்தையா தமிழிலேயே பேசி நடிச்ச  படம் இது.இப்படத்திலே  இளையராஜா சிவாஜிக்கு பின்னணி பாடியிருப்பார்..  படத்தின் இயக்குனர் பிரதாப் போத்தன்.

என் ஆச ராசாவே - 28.8.1998
நாட்டுப்புற நடனக் கலைஞர்களாக சிவாஜியும் முரளியும் நடிச்ச இந்த  படத்தில கலைஞர்களோட  கலைப்பற்று, அவங்களுக்கு இருக்கற  மதிப்பு மற்றும் சமூகரீதியான அதோட  விமர்சனத்தை சொன்ன படம் இது.
எழுதி இயக்கியவர் தனுஷின் தந்தை கஸ்தூரிராஜா.
மலேசியா வாசுதேவன் இந்த படத்துக்காக தமிழக அரசின் சிறந்த பாடகர் விருது வாங்குனார்.  ஒன்ஸ்மோர், என் ஆச ராசாவே ரெண்டு படங்களுக்கும் இசை தேனிசைத் தென்றல்  தேவா. 

மன்னவரு சின்னவரு - 15.1.1999
அர்ஜுனின் 100வது படமா வெளிவந்த இந்த படத்திலே அர்ஜுனின் தந்தையாக நடிச்சிருந்தார் சிவாஜி. அர்ஜுனும் சவுந்தர்யாவும் நடித்த சுபவார்தா தெலுங்கு படத்தோட  ரீமேக்கான  இந்த படத்துலே சிவாஜி, விசு கே ஆர் விஜயாவும் நடிச்சிருந்தாங்க. விசுவுக்கு ஜோடியா கே ஆர் விஜயா  நடிச்சிருந்தாங்க

படையப்பா - 10.4.1999
ரஜினியின் அப்பாவா  கௌரவ வேஷத்திலே  சிவாஜி நடிச்ச படம் படையப்பா. 
ரஜினியின் ஆரம்ப  காலத்துலே  இருந்து  சிவாஜியோட  அவர் நடிச்ச  படங்கள் அவரோட  அப்போதைய  செல்வாக்கு நிலையை காட்டுச்சு.
அந்த வகையிலே  தன்னோட  வெள்ளிவிழா ஆண்டின் படமா, தன்னைத் தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக பறைசாற்றிக்கொள்ளற படத்தில சிவாஜி நடிக்க வேண்டும் என விரும்பி அவ்வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டார் ரஜினி. சிவாஜியும் பெருந்தன்மையுடன் ரஜினியின் விருப்பத்தை ஏற்றுக்கொண்டார்.

பூப்பறிக்க வருகிறோம் - 17.9.1999
சிவாஜி நடிச்சு  கடைசியா வெளியான படம் இது. அஜய், மாளவிகா ரகுவரன் சிவாஜியுடன் நடிச்ச  ஒரே படம் இது. மூத்த நடிகர் எம்.என்.நம்பியார் சிவாஜிக்கு தம்பியாக இதுலே நடிச்சிருப்பார்.

செந்தில்வேல் சிவராஜ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற