இடுகைகள்

ஜனவரி, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

சிவாஜி அண்ணன் வி.சி.தங்கவேல் அவர்கள் பற்றிய தகவல்கள்

படம்
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் அண்ணன் வி. சி. தங்கவேல் அவர்கள் பற்றியான தகவல்கள்  :- நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூன்றாவது அண்ணனான வி. சி. தங்கவேல் அவர்கள் நாகப்பட்டிணத்தில் அவரது தந்தை சின்னையா மன்றாயர் ரயில்வே பணிமனையில் வேலை செய்து கொண்டிருந்த போது விழுப்புரத்தில் பிறந்தார்.   சின்னையா மன்றாயர் ஆரம்பகாலத்தில் ரயில்வேயில் கேங்க் மேனாக இருந்த போது அதாவது ரயில்வே தண்டவாளம் பராமரிப்பு மற்றும் கண்காணிப்பு வேலையில் இருந்த போது முதலில் சீர்காழியில் பணிபுரிந்து வந்தார் அங்கு அவர்களின் முதல் மகனான திருஞானசம்பந்தமூர்த்தி பிறந்தார்.  அவருக்கு திருஞானசம்பந்தமூர்த்தி என்று பெயரிடுவதற்கு காரணம் 63 நாயன்மார்களில் முதன்மையான குழந்தை பாலகனான திருஞானசம்பந்தமூர்த்தியின் பிறந்த ஊரான சீர்காழி ஸ்தலம் என்பதால் அப்பெயர் இடப்பட்டது.  அதன் பிறகு சீர்காழி அடுத்த சிதம்பரத்தில் பணியிடை மாற்றம் சின்னையா மன்றாயருக்கு ஏற்பட்டதால் அங்கு பிரசிதி பெற்ற நடராஜர் திருபெயரில் ஆதி கருவறை பெயரான கனகசபைநாதர் என்பதை இரண்டாவது மகனுக்கு  கனகசபைநாதன் என்று பெயரிட்டார்.  அதன் பிறகு இரண்டு பிள்ள...

ஜீவபூமி

படம்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த சாண்டில்யனின் ஜீவ பூமி ... நடிகர் திலகம் சிவாஜி கணேசன் & சரோஜாதேவி மற்றும் v.k.ராமசாமி, டி. எஸ். பாலையா, எம். ஆர். ராதா, T.k.பகவதி ,நாகேஷ் ஆகிய அன்றைய முன்னணி நடிகர்கள் நடித்து வெளிவராத சரித்திர திரைப்படம். கிட்டத்தட்ட இந்த திரைப்படம் அதற்கு முன்பு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து வெளிவந்த வடநாட்டு  ராஜா கதைகளான தங்கமலை ரகசியம், ராஜ பக்தி, மருதநாட்டு வீரன், சித்தூர் ராணி பத்மினி போன்ற திரைப்படங்களின் கதை சாயலில் தான் இந்த திரைப்படமும்.  வடநாட்டு ராஜ வம்சத்தில் ஒன்றான ராஜ புத்திர வம்சத்தை அடிப்படையாக வைத்து இந்த திரைப்படமானது சாண்டில்யன் எழுதிய ஜீவ பூமி புதினத்தையும் மேலும் இரண்டு புதினங்களின் கலவையாக  இயக்குனர் சோமு அவர்கள் சிவாஜி கணேசன் மற்றும் சரோஜாதேவிவை வைத்து இயக்கினார்.  இந்த திரைப்படம் 1962 முதல் வெகு நாட்கள் தயாரிப்பில் இருந்து 1965ல் வெளி வருவதாக இருந்தது.படத்தின் காட்சிகள் எல்லாம் வடநாடுகளிலே படமாக்கப்பட்டது.  அந்த சமயத்தில் சிவாஜி கணேசன் கர்ணன், புதிய பறவை போன்ற பெரிய பட்ஜெட் திரைப்படங்களில் நடித்து கொண்டிருந்...

சிவாஜி நடித்த தெலுங்கு திரைப்படங்கள்

படம்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த தெலுங்கு திரைப்படங்கள் : 1.சிவாஜி கணேசன் நடித்த முதல் தெலுங்கு திரைப்படம் பரதேசி. இந்த திரைப்படம் வெளிவந்த ஆண்டு 14. 1. 1953 . நடிகை அஞ்சலி தேவி தயாரித்த திரைப்படம் இது.சிவாஜியுடன் நாகேஸ்வரராவும் நடித்திருந்தார் .இந்தப் படத்தை இயக்கியவர் எல் வி பிரசாத் நடிகர் திலகத்துக்கு ஜோடி வசந்தா.  2.நடிகர் திலகத்தின் அடுத்த தெலுங்கு திரைப்படம் பெம்புடு கொடுகு.இந்தத் திரைப்படம் வெளிவந்த ஆண்டு 11.11.1953  . சிவாஜிகணேசனுடன் சாவித்திரி நடித்த முதல்  திரைப்படம் இது.இந்தப் படத்தின் இயக்குனர்  எல் வி பிரசாத். ஏழு ஆண்டுகளுக்குப் பின்பு சிவாஜி நடித்து வந்த பெற்ற மனம் படத்தின் கதை தான் இது.இந்தப் படத்தில் நடிக்க சிவாஜி கணேசனை ஒப்பந்தம் செய்தால்தான் தெலுங்கில் தயாரிக்க அனுமதிப்பேன் என்று P.A.பெருமாள் அவர்கள் தயாரிப்பாளரிடம் நிபந்தனை விதித்தார்.  3.அடுத்து நடிகர் திலகம் நடித்து தெலுங்கில் வெளியான படம் மனோகரா.இப்படம் வெளிவந்த  தேதி 3.6.1954.இந்தப் படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்தவர் கிரிஜா. இயக்கம் எல் வி பிரசாத். இந்தப் படத்தின் தெலுங்கு வசனங்க...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்