இடுகைகள்

ஜூன், 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

டென்ட் கொட்டகையில் ராஜா

படம்
அமைதியான அன்றைய கிராம வாழ்வு. என் அன்றைய 1970 களின் இறுதி. இரவுகள் விழிப்பதற்காக அல்ல. இப்போது போல் அல்ல. அந்த காலங்கள் நிம்மதியானவை. காலை நேர விழிப்பு உற்சாகமாகவே விடியும். வீதி இறங்கி சென்றால். நண்பர் பட்டாளத்துடன் சிறகுகள் விரியும். திரைப்படங்கள் வாழ்வோடு ஓடியவை. ஊரை சொல்லாவிட்டால் எப்படி?  பொள்ளாச்சியை தொட்ட  ஜமீன் ஊத்துக்குளி... அந்த குட்டிச்சுவரை மறக்க முடியாது. காரை பெயர்ந்து செங்கல்களுடன். சினிமா போஸ்டர்களின்  தாங்கிகள். அன்று.. புதிய போஸ்டர். பழையதுதான். டென்ட் கொட்டகைக்கு புதியது. ராஜா.. வயதுக்கேற்ற படம்தான். அடடே!இன்றைய மாலையும் ,முன்னிரவும் ராஜா கொடுக்கும் விருந்தா.. சந்தோசமே சந்தோசம். பள்ளி சென்றாலும் மனம் 4 மணிக்கு காத்திருந்தது. 4 க்கு வீட்டுக்கு வந்தாலும் 6மணிக்கு காத்திருந்தது. படம் பார்க்க வேண்டும். காசு வேண்டும். கேட்டேன். எப்போதும் போலே 50 காசுகள்ள்ள்ள். 25 டிக்கட்டுக்கு. 25 கடலையும் மற்ற எதுவுமே. டென்ட் கொட்டகை ஆஜர். நானும் நண்பர்களும். இரண்டு தியேட்டர் கூட்டம். ஒன்றரை மக்கள் கொள்ளவை அடைத்து விட்டார்கள். தெரிந்தவர் வாங்கிக் கொடுத்தார் டிக்கட்டுகளை. சி...

தம்பி சண்முகத்துக்கு சிவாஜி எழுதிய கடிதங்கள்

படம்
நடிகர் திலகம்' சிவாஜி கணேசனை திரையில சிம்மக் குரலோட, காவிய நாயகனா, கம்பீரமா பார்த்துதான் நமக்கு பழக்கம்.ஆனா, கேமராவுக்குப் பின்னாடி, அவரோட நிஜ வாழ்க்கையில அவர் எவ்வளவு எளிமையான ஒரு மனுஷன், எவ்வளவு பாசக்கார அண்ணன் அப்படின்றது இப்ப இருக்கற பல பேருக்குத் தெரியாது. ​1962-ல் நிகழ்ந்த அந்த வரலாற்றுப் பயணம் ​கடந்த 1962-ஆம் வருஷம், அமெரிக்க அரசாங்கத்தோட சிறப்பு அழைப்பாளரா நம்ம நடிகர் திலகம் உலக நாடுகள் முழுக்க ஒரு வரலாற்றுப் பயணம் மேற்கொண்டார். இந்திய சினிமா வரலாற்றுலேயே ஒரு பொன்னான மைல்கல்லா அமைஞ்ச அந்தப் பயணத்துல, அந்நிய நாட்டுல நம்ம தேசத்தோட கலைப் பெருமையை அவர் உயர்த்திப் பிடிச்சார். ​அப்படி அவர் ரோம், பாரிஸ், வாஷிங்டன்னு உலகத்தோட பிரம்மாண்டமான நகரங்கள்ல வலம் வந்தப்ப... தன் மனசுக்கு ரொம்ப நெருக்கமான அவரோட அருமைத் தம்பி சண்முகத்துக்குத் தன் கைப்பட சில அரிய கடிதங்களை எழுதியிருக்காரு. ​பாசமும் எளிமையும் நிறைந்த கடிதங்கள் ​உலகமே கொண்டாடுன ஒரு மகா நடிகர், அந்த அந்நிய நாட்டுல கடும் குளிர்ல கூட தன்னோட துணிகளைத் தானே துவைச்சுக்கிட்டாராம்! அதுமட்டுமில்ல, "என் வாழ்நாள்லயே நான் என் கைப்பட எழு...

திரிசூலம் ரெக்கார்ட்

படம்
தமிழ் சினிமாவுல ஆயிரம் கோடி, ரெண்டாயிரம் கோடி வசூல்னு இன்னைக்கு நாம ரொம்ப சாதாரணமாகப் பேசுறோமே... ஆனா, அன்னைக்கு வெறும் அஞ்சே ரூபா டிக்கெட் விலைக்கு, தியேட்டர்கள்ல திருவிழா கூட்டத்த கூட்டி, அரசாங்கத்துக்கே ஒரு கோடி ரூபாய் வரி கட்டுன ஒரு மாஸ் வரலாறைத்தான் இதுலே பாக்க போறோம். அதுதான் தமிழ் சினிமாவோட வசூல்  வேட்டையை மாத்திப் போட்ட  நடிகர் திலகம் சிவாஜி கணேசனோட 200-ஆவது மெகா காவியமான 'திரிசூலம்' தியேட்டர்கள்ல பண்ணுன அந்த பாக்ஸ் ஆபீஸ் வேட்டைதான்!  வாய் வார்த்தையா இல்லாம, அப்போதைய செய்தித்தாள்கள்ல வெளியான அஞ்சு அசைக்க முடியாத வரலாற்று சான்றுகளை வெச்சு அந்த பிரம்மாண்ட பாக்ஸ் ஆபீஸ் பயணத்த இப்போ நாம பாக்கப்போறோம். ​படம் ரிலீஸான உடனே தியேட்டர்கள்ல கூட்டம் எப்படி அலைமோதியது தெரியுமா, அதைத்தான் நாம முதல்ல பார்க்கப்போற இந்த போட்டோ நமக்குத் தெளிவா காட்டுது. இத்திரைப்படம் வெளியான வெறும் ஆறே வாரங்கள்ல, அதாவது 42 நாட்கள்ல 60 லட்சம் ரூபாய்களை அள்ளிக்குவித்து, தென்னகத் திரைப்பட உலகிலேயே அதுவரை இல்லாத ஒரு புதிய சாதனையை ஏற்படுத்திய மாபெரும் வெற்றிச் சித்திரம்னு இந்த விளம்பரம் அதிகாரப்பூர்வமா ...

பாவை விளக்கு சூட்டிங் சம்பவங்கள்

படம்
 1960-கள்லே தமிழ் சினிமா பெரும்பாலும் ஏவிஎம், வாகினி மாதிரி பெரிய ஸ்டூடியோக்களுக்குள்ள செட் போட்டு மட்டுமே முடங்கி கிடந்த ஒரு காலத்துல, அந்த எல்லைகளை எல்லாம் உடைச்சுக்கிட்டு வட இந்தியாவுல போய் மிக பிரம்மாண்டமா படப்பிடிப்பு நடத்துன ஒரு காலகட்டம் அது. குறிப்பா, எழுத்தாளர் அகிலனோட புகழ்பெற்ற நாவலான 'பாவை விளக்கு' திரைப்படமா எடுக்கப்பட்டப்போ, அந்தப் படக்குழு டெல்லி, ஆக்ரானு முகாமிட்டு பல சாதனைகளைச் செஞ்சாங்க. இந்த ஷூட்டிங் ஸ்பாட்ல நடந்த பல சிலிர்க்க வைக்கும் சுவாரஸ்யங்கள் தான் பத்திதான் இந்த பதிவு. ​1960-கள்ல சென்னையில இருந்து அத்தனை பெரிய கேமராக்கள், லைட்டிங் உபகரணங்கள், அப்புறம் மொத்த படக்குழுவையும் கூட்டிக்கிட்டு டெல்லிக்கும் ஆக்ராவுக்கும் ரயில்ல போறதே ஒரு பெரிய படையெடுப்பு மாதிரி இருக்கும். பாவை விளக்கு படத்துக்காக அப்படி ஒரு பயணத்தை மேற்கொண்டாங்க. டெல்லியில குதுப்மினார்ல நடந்த ஷூட்டிங் பத்தி கண்டிப்பா சொல்லியே ஆகணும். இன்னைக்கு மாதிரி டிரோன் கேமரா, கிரேன் வசதிலாம் இல்லாத அந்த காலத்துல, பிரம்மாண்டமான குதுப்மினார் உச்சிக்கு போய் ஷூட்டிங் நடத்துறது சாதாரண விஷயமே கிடையாது. அந்த கு...

காதல் பாடல்களா? தத்துவ பாடல்களா?

படம்
நடிகர் திலகம் சிவாஜிக்கு  ஒரு தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கிக் கொடுத்தது அவருடைய காதல் பாடல்களா? அல்லது தத்துவப் பாடல்களா? ​இந்த பதிவுலே அவருடைய மிகச்சிறந்த 20 காதல் பாடல்களையும், 20 தத்துவப் பாடல்களையும் பார்த்துட்டு, இந்த இரண்டு பரிமாணங்களில் அவருக்குப் புகழ் சேர்த்தது எதுன்னு கடைசிலே பாக்கலாம். ​பகுதி 1:  நடிகர் திலகத்தின் 20 காலத்தால் அழியாத காதல் பாடல்கள் ​1. நான் பேச நினைப்பதெல்லாம் (பாலும் பழமும்)  "ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே, உலகங்கள் நமையன்றி வேறேதும் இல்லை" அப்படிங்கிற ஒரு வரி போதாதா! வார்த்தைகள் எவ்வளவு அழகா அமைஞ்சிருக்கு பாருங்க. ​2. மயக்கமென்ன இந்த மௌனமென்ன (வசந்த மாளிகை) காதலோட உச்சகட்ட போதையை, ஒரு பணக்காரக் காதலனோட மிடுக்குல நம்ம சிவாஜி வெளிப்படுத்திய பாடல் இது. "உன்னையல்லால் ஒரு பெண்ணை இனி நான் உள்ளத்தில் நானும் தொட மாட்டேன்" அப்படின்னு மனசால் கூட தொட மாட்டேன்னு சொல்ற அந்த வரி, உண்மையான காதலை சொல்ல இதைவிட வேற என்ன வேணும்னு கேட்க வைக்குது. ​3. முல்லைமலர் போலே மொய்க்கும் வண்டு போலே (உத்தமபுத்திரன்) இப்போ அரச கதையிலிருந்து ஒரு பாட்டை பார்க்கலாம். ...

சிவாஜியின் வங்காள ரீமேக் படங்கள்

படம்
மனித உணர்வுகளின் உன்னதத்தையும், உறவுகளின் சிக்கல்களையும் பேசிய உன்னத வங்காளப் படைப்புகள், தமிழ் மண்ணின் கலாச்சாரத்திற்கு ஏற்ப மறுவடிவம் பெற்றபோது அவை வெறும் 'ரீமேக்'குகளாக நிற்கவில்லை; காலத்தை வென்ற காவியங்களாக உருவெடுத்தன. பணத்தை விடப் பாசமே பெரியது என உணர்த்திய 'படிக்காத மேதை', ஷேக்ஸ்பியரின் நாடகக் குரலோடு தேசபக்தியைப் பேசிய 'ரத்தத் திலகம்', குதூகலம் நிறைந்த 'சுமதி என் சுந்தரி', மற்றும் தேசிய விருதுகளை அள்ளிய 'உயர்ந்த மனிதன்' என, இரு பெரும் திரையுலகின் அரிய கலைப் பகிர்வையும், திரைக்குப் பின்னால் நடந்த சுவாரசியமான வரலாற்றுப் பின்னணிகளையும் ஒரு அழுத்தமான ஆவணமாக இதில் நாம் பார்க்கலாம்  ​'ஜோக் பியோக்' முதல் 'படிக்காத மேதை' வரை:  ​வங்காள மொழியில் 'ஜோக் பியோக்' என்றால் 'கூட்டல் மற்றும் கழித்தல்' என்று பொருள்.ஆஷாபூர்ண தேவி எழுதிய நாவல் இது. ​1950களில் வணிக ரீதியான மசாலா கூறுகள் ஏதுமின்றி, நடுத்தர வர்க்க குடும்ப அமைப்பின் ஏமாற்றங்களையும் யதார்த்தத்தையும் அழுத்தமாகப் பதிவு செய்ய நினைத்த இயக்குநர் பினாகி பூஷன் முகர்ஜி,  நா...

பட்டிக்காடா பட்டணமா உருவான கதை

படம்
"வணக்கம் நண்பர்களே... 1972-ம் ஆண்டு தமிழ் சினிமாவுல ஒரு படம் வெளியாகுது. கருப்பு வெள்ளை படம். பெரிய செட் கிடையாது. பிரம்மாண்டமான  காட்சிகள் கிடையாது. ஆனா அந்த படம் பண்ணுன சம்பவம் என்ன தெரியுமா? அதுவரைக்கும் தமிழ் சினிமாவுல இருந்த வசூல் சாதனைகளையே தூக்கி சாப்பிட்டுச்சு. கிராமத்துல ஓடுச்சு... நகரத்துல ஓடுச்சு... பி சென்டர், சி சென்டர் மட்டுமில்ல, ஏ சென்டர்லயும் பட்டைய கிளப்புச்சு. எல்லா தியேட்டர்லயும் திருவிழா கூட்டம்தான். அந்த படம்தான் 'பட்டிக்காடா பட்டணமா'. சிவாஜி ஜெயலலிதா காம்போலே வெளியான இந்த படத்துல ஜெயலலிதா நடிச்சது கூட கடைசி நேரத்தில் நடந்த மாற்றம்னு சொன்னா நம்புவீங்களா? அதுக்கும் மேல, ஜெயலலிதாவுக்கும் சிவாஜிக்கும் அப்போ மனஸ்தாபம் இருந்த நேரத்துலயே இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கு. அந்த மனஸ்தாபத்தை மறந்து ஜெயலலிதாவை இந்த படத்துல நடிக்க வைக்க சொன்னது யாரு? முதல்ல இந்த வேஷத்துக்கு தேர்வு செய்யப்பட்ட நடிகை தான் யார்? அதுக்கும் மேல, இந்த பட்டிக்காடா பட்டணமா படம் உருவாகவே காரணமான ஒரு பழைய சூப்பர் ஹிட் படம் இருக்கு. அந்த படம் எது? அதுக்கும் பட்டிக்காடா பட்டணமாவுக்கும் என்ன ச...

சிவாஜி 1961 ஆம் ஆண்டு திரைப்படங்கள்

படம்
 இன்னைக்கு நாம பேசப்போற விஷயம், 1961-ம் வருஷம் சிவாஜி கணேசன் தமிழ் சினிமாவோட வணிக வரைபடத்தையே எப்படி மாத்தி எழுதினார்ங்கிறதுதான். அந்த வருஷம் அவர் கொடுத்த எட்டு படங்கள், ஒவ்வொரு படமும் ஓடிய நாட்கள்ல ஒரு பெரிய கதை இருக்கு.  ​முதல்ல, இந்த வருஷத்தோட முடிசூடா மன்னர்கள்னு சொல்லப்படுற 'பாசமலர்' மற்றும் 'பாவமன்னிப்பு'. இந்த ரெண்டு படங்களும் வெள்ளி விழா கொண்டாடினவை.இந்த படங்கள் தியேட்டர்கள்ல எவ்ளோ நாள் ஓடிச்சோ, அதைவிட அதிகமா மக்கள் மனசுல ஓடிக்கிட்டே இருக்கு. ​அடுத்ததா நூறு நாள் ஓடி சாதனை படைச்ச படங்கள் - 'பாலும் பழமும்' மற்றும் 'ஸ்ரீவள்ளி' மருத நாட்டு வீரன். இந்த படங்கள்  நூறு நாள் ஓடுச்சுன்னு சொல்றதைக் காட்டிலும், ஒரு கலைப்படைப்பு எப்படி மக்கள்கிட்ட போய் சேரணும்ங்கிறதுக்கு இது ஒரு  ஒரு சாட்சி. ஒரு வருஷத்துல அஞ்சு  படங்கள், வெள்ளி விழாவும் நூறு நாளும் ஓடுச்சுன்னா, அன்னைக்கு சிவாஜியோட மார்க்கெட் எப்படி இருந்திருக்கும்னு நீங்களே யோசிச்சுப் பாருங்க. ​இப்போ நீங்க ரொம்ப முக்கியமா கவனிக்க வேண்டியது, அந்த மற்ற படங்கள். 'கப்பலோட்டிய தமிழன்' நூறு நாள் ஓடலன்னு ஒரு...

சிவாஜியை வைத்து படம் தயாரித்த நடிகைகள்

படம்
​"வணக்கம் நேயர்களே! தமிழ் சினிமாவோட பொற்காலத்தை ஆண்ட  'நடிகர் திலகம்' சிவாஜி கணேசன் அவர்கள் எத்தனையோ பெரிய பெரிய பிரம்மாண்டமான தயாரிப்பு நிறுவனங்கள்ல நடிச்சிருக்காரு. ஆனா, அவரோட ஜோடியா, இல்லன்னா அவரோட சமகாலத்துல நடிச்ச முன்னணி நடிகைகளே சொந்தமா புரொடக்ஷன் கம்பெனி ஆரம்பிச்சு, அவரை ஹீரோவா வச்சு படம் தயாரிச்சதுங்குறது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க விஷயம். ​இங்க நாம ரொம்ப முக்கியமா கவனிக்க வேண்டிய விஷயம் என்னன்னா, இவ்வளவு முன்னணி நடிகைகள் தங்களோட சொந்த காசைப் போட்டு, வேற எந்த ஒரு ஹீரோவையும் இந்த அளவுக்கு முன்னிறுத்தி தங்களது சொந்தப் படங்களைத் தயாரிச்சதே கிடையாது! இது ஒண்ணே  போதும்—நடிகர் திலகத்தோட அசாத்திய நடிப்புத் திறமைக்கும், அவர் மேல அந்த காலத்து பெண் ஆளுமைகள் வச்சிருந்த மாபெரும் மதிப்புக்கும், அவரோட படங்கள் தயாரிப்பாளர்களுக்கு கொடுத்த அசைக்க முடியாத கலெக்ஷன் வெற்றிக்கும் ஒரு மிகப்பெரிய சான்று. வேற எந்த ஒரு இந்திய நடிகருக்கும் கிடைக்காத தனிப்பெரும் பெருமை இதுன்னு சொன்னா அதுல சந்தேகமே இல்லை! ​இன்னைக்கு இந்த பதிவுலே சிவாஜி கணேசனை மட்டுமே நம்பி படம் தயாரிச்ச அந்த சாதனை நடிகைகள் ...

திருவிளையாடல் படத்தைப் பற்றிய 100 செய்திகள்

படம்
​நடிகர் திலகம் சிவாஜி கணேசனோட 'திருவிளையாடல்' படத்தைப் பத்திப் பேசணும்னா... சொல்லிக்கிட்டே போலாம், ஆயிரம் விஷயங்களுக்கு மேல கொட்டிக் கிடக்கு! அந்தப் படத்தோட ஒவ்வொரு பிரேம்லயும், ஒவ்வொரு வசனத்துலயும், பாட்டிலயும் அவ்ளோ சுவாரஸ்யங்கள் ஒளிஞ்சிருக்கு.  அந்த ஆயிரம் சுவாரஸ்யங்கள்ல இருந்து '100 சிறப்பான தகவல்கள் : 1.​'திருவிளையாடல்' திரைப்படம் 1965 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் தேதி வெளியானது. 2.​இப்படத்தை இயக்கி, தயாரித்தவர் புகழ்பெற்ற இயக்குநர் ஏ.பி.நாகராஜன். 3.​​பரஞ்சோதி முனிவர் இயற்றிய 'திருவிளையாடல் புராணத்தை' அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டது. 4.​இப்படத்தின் கூர்மையான மற்றும் செம்மையான தமிழ் வசனங்களை ஏ.பி.நாகராஜனே எழுதினார். 5.கே.எஸ்.பிரசாத் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்தார். ​கலை இயக்குநராக கங்கா பணியாற்றி, கைலாயம் மற்றும் மதுரை அரண்மனை அரங்குகளை அமைத்தார். ​ 6.​1965-ஆம் ஆண்டிற்கான இரண்டாவதுசிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருதை இப்படம் வென்றது. 7.சென்னையில் வெளியான மூன்று திரையரங்குகளான சாந்தி கிரவுண் புவனேஸ்வரி மூன்றிலும் வெள்ளி விழா கொண்டாடிய ஒரே ...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்