இடுகைகள்

மே, 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

சிவாஜியுடன் கமல் ரஜினி விஜய் அர்ஜுன் பிரபு பாடல்கள்

படம்
​​​சினிமால ஒருத்தரோட பயணம் எப்படிப்பட்டதா இருக்கணும்னு கேட்டா, சிவாஜி சாரைத்தான் கைகாட்டணும். அவர் ஒரு 'கால இயந்திரம்' . ​அவருடைய தொடக்க காலத்துல, ஜெமினி கணேசன், TR.ராமச்சந்திரன் சந்திரபாபு முத்துராமன், ஜெய்சங்கர், நாகேஷ், பாலாஜி ஜெய்கணேஷ்னு அந்தப் பொற்காலத்து நடிகர்களோட  இணைந்து பாடி, அந்தத் திரையையே அதிர வச்சவர். அது ஒரு பக்கம் இருக்கட்டும்... ஆனா, அதிசயம் அங்க தான் ஆரம்பிக்குது! ​எண்பதுகளுக்கு அப்புறம், சினிமா உலகம் டோட்டலா மாறிடுச்சு. புதுசு புதுசா எத்தனையோ முகங்கள்! ரஜினி, கமல்னு அந்தப் பெரிய துருவங்கள் தொடங்கி, விஜய், அர்ஜுன், சத்யராஜ், முரளி, பிரபு, மோகன்லால், ஏன்... அஜய்  வரைக்கும்! இப்படி எந்தக் காலத்துல, எந்த ஸ்டைல் நடிகரா இருந்தாலும், அவங்க கூடத் தோள் மேல கை போட்டு, அவங்களுக்கு ஈடுகொடுத்து, அவங்க கூடவே நின்னு பாடி, 'நான் தான் இங்க ஆல் டைம் கிங்'னு நிரூபிச்ச அந்த ஒற்றைப் புள்ளி இருக்கே... அதுதான் சிவாஜி கணேசன்! ​இன்னைக்கு வரைக்கும் யாரும் இப்படி ஒரு 'கலைப்பாலத்தை' உருவாக்கினது கிடையாது. பல தலைமுறை நடிகர்களுக்குப் பக்கத்துல நின்னு, அவங்க கூடவே இணைந்து க...

சிவாஜி கே பாலாஜி கூட்டணியில் ஒவ்வொரு படமும் எத்தனை நாள் ?

படம்
​தமிழ் சினிமாவுல எத்தனையோ தயாரிப்பாளர்களைப் பார்த்திருப்பீங்க. ஆனா, 'சிம்மக் குரலோன்' நம்ம நடிகர் திலகம் சிவாஜி கணேசனை வச்சு, வரிசையா தியேட்டர்கள்ல வசூல் வேட்டை நடத்துன ஒரு மாஸ் தயாரிப்பாளர்னா... அது  கே. பாலாஜி  தான்! சுஜாதா சினி ஆர்ட்ஸ், சுரேஷ் ஆர்ட்ஸ்னு பேரை மாத்தினாரே தவிர, ஹிட் குடுக்குற ஃபார்முலாவை அவர் மாத்தவே இல்லை. இன்னைக்கு இவங்க கூட்டணியில உருவான 17 படங்களோட பாக்ஸ் ஆபீஸ் சாதனையைப் பத்தி இந்த பதிவு. 1.தங்கை (1967) –  ​ 1967-ஆம் வருசம்  ரிலீசான இந்தப் படம் தான், தயாரிப்பாளர் கே. பாலாஜி  நடிகர் திலகம் சிவாஜி கணேசன வச்சு தயாரிச்ச முதல் பிள்ளையார் சுழி படம். ​ஏன் இந்தப் படம் தமிழ் சினிமாவுல ரொம்ப ஸ்பெஷல்?  ​அன்றைய காலகட்டத்துல நடிகர் திலகம் சிவாஜி சார்னாலே உணர்ச்சிப்பூர்வமான குடும்பக் கதைகள், வரலாற்றுப் படங்கள்ல தான் மிரட்டுவாருனு ஒரு பொதுவான பிம்பம் இருந்துச்சு. ஆனா, பாலாஜி சார் தான் முதன்முதலா "உங்களால ஒரு செம்ம ஸ்டைலான ஆக்ஷன்-டிராமாவையும் தாங்க முடியும்"னு சிவாஜி சாரை நம்பி இந்த 'தங்கை' படத்தை எடுத்தாரு.  இந்த படத்துல வர்ற பாடல்கள்லே "கேட்டவரெ...

இவர்கள் ஐந்து பேரும் சந்தித்தால்

படம்
ஐந்து சிகரங்களின் சங்கமம்! ​தமிழ் சினிமாவோட பொற்காலத்தை சேர்ந்த ஐந்து மகா கலைஞர்கள்... நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நாட்டியப் பேரொளி பத்மினி, நடிகையர் திலகம் சாவித்திரி, புன்னகை அரசி கே.ஆர்.விஜயா, கன்னடத்து பைங்கிளி சரோஜாதேவி... இவங்க எல்லாரும் ஒரே இடத்துல உட்கார்ந்து பேசினா எப்படி இருக்கும்?  ஒரு அழகான விஐபி அறையின் சோபாவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடுவில் அமர்ந்திருக்கிறார். அவருக்கு இருபுறமும் சாவித்திரி, பத்மினி, சரோஜாதேவி மற்றும் கே.ஆர்.விஜயா ஆகியோர் புன்னகையோடு அமர்ந்து காபி குடித்துக்கொண்டே பேசத் தொடங்குகிறார்கள்.) ​சிவாஜி கணேசன்: (தமக்கே உரிய கம்பீரமான குரலில், கைகளை அசைத்து) என்னம்மா... எல்லாரும் எப்படி இருக்கீங்க? ரொம்ப நாளைக்கு அப்புறம் நம்ம 'பாசமலர்' குடும்பம், 'சரஸ்வதி சபதம்' டீம், 'தில்லானா மோகனாம்பாள்' டீம்னு எல்லாரும் ஒண்ணா சேர்ந்த மாதிரி இருக்கு! இந்த நேரத்துல எனக்கு நாம ஒண்ணா சேர்ந்து நடிச்ச அந்த பழைய நினைவுகள் தான் ஞாபகத்துக்கு வருது. ​சாவித்திரி: (கனிவான புன்னகையோடு) ஆமா அண்ணே... குறிப்பா 'பாசமலர்' படத்தோட நாட்களை இப்போ நினைச்சாலு...

வேசத்துக்குத்தான் உடையா?

படம்
​வேஷத்துக்குத்தான் உடையா? இல்லை ஹீரோயிஸத்துக்கு உடையா? –  ​தமிழ் சினிமாவில் 'கதாநாயகன்' என்றாலே எப்பொழுதும் பளபளப்பான உடைகளுடனும், ஸ்டைலான தோற்றத்துடனும் தான் திரையில் தோன்ற வேண்டும் என்ற எழுதப்படாத விதி ஒன்று இன்றும் இருக்கிறது. தான் ஒரு மாபெரும் உச்ச நட்சத்திரம், அதனால் தன் அந்தஸ்துக்குக் குறைவில்லாத உடைகளைத்தான் உடுத்த வேண்டும் என்று நினைக்கும் எத்தனையோ நடிகர்களுக்கு மத்தியில், "நான் முக்கியமில்லை, கதையின் கதாபாத்திரம்தான் முக்கியம்" என்று வாழ்ந்து காட்டியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள். ​அவருடைய ஆடை அலங்காரம், ஒப்பனைத் தேர்வுகள் ஒவ்வொன்றும் அவர் ஒரு 'நட்சத்திரமாக' வாழ நினைக்காமல், ஒரு 'உன்னதமான கலைஞனாக' வாழ நினைத்தார் என்பதற்குப் பேரெடுத்துக்காட்டுகள் ஆகும். ​ ​சிவாஜி கணேசன் அவர்கள் தான் ஒரு மாபெரும் சூப்பர் ஸ்டார் என்பதற்காகத் தேவையற்ற ஆடம்பரங்களை ஒருபோதும் தன் படங்களில் திணித்ததே இல்லை. அந்தத் தம்பிக்கோ, அந்தத் தாத்தாவுக்கோ, அந்தத் தொழிலாளிக்கோ என்ன தேவையோ... அதைத்தான் தன் ஆடையாக மாற்றிக்கொண்டார். ​' சிவாஜி அவர்கள் தன்னுடைய உச்சக்கட்ட...

சிவாஜி மன்ற மாநாடுகள்

படம்
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மாநாடுகள்: ஓர் வரலாற்று ஆய்வு: ​ ​தமிழக அரசியல் வரலாற்றில் சினிமாவும் அரசியலும் பிரிக்க முடியாதபடி பிணைந்துள்ளன. திராவிட இயக்கங்கள் சினிமாவைத் தங்களின் அரசியல் பிரச்சார மேடையாகப் பயன்படுத்திய காலகட்டத்தில், தேசிய இயக்கமான காங்கிரஸ் கட்சிக்குத் தன் ரசிகர் பலத்தின் மூலம் மிகப்பெரிய தற்காப்பு அரணாக விளங்கியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். பெருந்தலைவர் காமராஜரைத் தனது அரசியல் குருவாக ஏற்றுக்கொண்ட சிவாஜி கணேசன், தமிழகம் முழுவதும் நடத்திய பிரம்மாண்ட ரசிகர் மன்ற மாநாடுகள் அனைத்தும் உண்மையில் காமராஜரின் அரசியல் வளர்ச்சிக்காகவும், காங்கிரஸ் கட்சியின் தொண்டர் பலத்தைப் பெருக்குவதற்காகவும் நடத்தப்பட்ட மறைமுக அரசியல் மாநாடுகள் ஆகும். ​1. மாநாடுகளின் அரசியல் பின்னணி:  ​1967-ல் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்த பிறகு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் (தி.மு.க) அசுர வளர்ச்சியை எதிர்கொள்ளவும், இளைஞர்களை மீண்டும் தேசிய இயக்கத்தின் பக்கம் இழுக்கவும் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மாபெரும் மக்கள் சக்தி தேவைப்பட்டது. ​ இந்தச் சூழலில், காமராஜரின் கரங்களை வலுப்படுத்தவும், தமிழ...

சாணக்யா

படம்
நடிகர்திலகத்தின்  நடிப்பில் உருவாகவிருந்த 'சாணக்கியா', வெறும் கனவாகவே நின்று போனது தமிழ் கலை உலகின் பெரும் துரதிர்ஷ்டம். ​அர்த்தசாஸ்திரம் தந்த அந்த அரசியல் மேதையின் ஆளுமைக்கும், சிவாஜியின் நடிப்புப் பசிக்கும் இடையில் ஒரு மாபெரும் காவியம் நிகழ்ந்திருக்க வேண்டியது. துரதிர்ஷ்டவசமாக, அந்தப் பிரம்மாண்டத் திட்டம் பாதியிலேயே கைவிடப்பட்டது.  அவிழ்ந்த குடுமியுடனும், அனல் தெறிக்கும் வசனங்களுடனும் சாணக்கியராகச் சிவாஜி கணேசன் திரையில் தோன்றியிருந்தால், அது காலத்தால் அழியாத ஒரு அரசியல் ஆவணமாக மாறியிருக்கும்.  கர்ணனுக்கு அடுத்து உருவான ஒரு மாபெரும் கனவுதான் 'சாணக்கியா'. ​சுமார் 2400 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சாணக்கியர், வெறும் அறிஞர் மட்டுமல்ல; அவர் ஒரு பேரரசை உருவாக்கிய சூத்திரதாரி. ​அர்த்தசாஸ்திரம்: அரசு நிர்வாகம், போர் தந்திரங்கள் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளை உள்ளடக்கிய உலகப்புகழ் பெற்ற நூலை வழங்கியவர். ​அரசியல் ஆளுமை: நந்த வம்சத்தின் வீழ்ச்சிக்கும், மௌரியப் பேரரசின் எழுச்சிக்கும் வித்திட்ட மகா தந்திரசாலி. ​தற்காலப் பொருத்தம்: இன்றைய நவீன அரசியலிலும் சாணக்கியரின் தந்திரங்கள் ...

சிவாஜியின் செல்வாக்கு

படம்
​சினிமாவுல ஒரு நடிகன் நாலு பேருக்குத் தெரிஞ்சிருக்கிறது பெரிய விஷயமே இல்லை. ஆனா, ஒரு மனுஷன் நினைச்சா... ஹாலிவுட்ல இருந்து ஆரம்பிச்சு, ஹரித்வார் வரைக்கும், ஜனாதிபதி மாளிகையில இருந்து சாதாரண ரசிகனோட திண்ணை வரைக்கும் ஒரு சாம்ராஜ்யத்தையே கட்ட முடியும்னு நீங்க நம்புவீங்களா? ​நம்ம ஊர்ல 'சிவாஜி' அப்படின்னு சொன்னாலே, அந்தப் பேருக்குப் பின்னாடி ஒரு பிரம்மாண்டமான வரலாறு இருக்கு. அவர் வெறும் கேமரா முன்னாடி நடிச்சுட்டுப் போன நடிகர் மட்டும் இல்ல... அவர் ஒரு 'குளோபல் கனெக்டர்'! ​அமெரிக்க அதிபர் ஜான் கென்னடி, இவருக்கு கௌரவம் பண்றார்... எகிப்து அதிபர் நாசர், இந்தியாவுக்கு வந்தப்போ இவரோட தனிப்பட்ட விருந்தை ஏத்துக்கிறார்... இங்கிலாந்து ராணி எலிசபெத்தே இவரோட நடிப்புக்குச் சலாம் போடுறாங்க! ​அரசியல்னு எடுத்துக்கிட்டா நேரு இந்திரா வாஜ்பாய் விபிசிங் இன்னும் பல  ஆளுமைகளோட நட்பு... விளையாட்டுன்னு பார்த்தா கபில்தேவ்ல இருந்து இன்னைக்கு இருக்கிற சச்சின் வரைக்கும் 'சிவாஜி சார்'னா ஒரு தனி மரியாதை! தொழில்துறையில அம்பானி, பிர்லா... ஆன்மீகத்துல காஞ்சி பெரியவர், வாரியார் சுவாமிகள்... ​ஒரே ஒரு மன...

300 பட சாதனைகள்

படம்
"நடிகர் திலகம்" - இந்த இரண்டு வார்த்தைகளுக்குள் அடங்காத ஆளுமையா? இல்லை, அந்த இரண்டு வார்த்தைகளே ஒரு வரலாற்றின் அடையாளம்! ​ எத்தனை எத்தனை வேடங்கள்! அவர் தொட்டதெல்லாம் பொன்னானது, அவர் நடித்ததெல்லாம் காவியமானது. சண்டைக் காட்சிகள் இல்லாமலேயே வரலாறுகளைப் படைத்தவர், எண்களால் அளவிட முடியாத சாதனைகளுக்குச் சொந்தக்காரர். ​நடிகர் திலகத்தின் இந்த அசுரத்தனமான மற்றும் ஆச்சரியமூட்டும் திரையுலகப் பயணத்தை, புள்ளிவிவரங்களோடும், சுவாரஸ்யமான தகவல்களோடு  இதில் பார்க்கலாம். நடிகர்திலகம் நடித்த 300 திரைப்படங்கள் ஓர் பார்வை. இந்த 300 படங்களில்.. சரித்திர படங்கள் ஒரு பகுதி புராண படங்கள் அது ஓர் அத்தியாயம் சமூக படங்கள் நீண்ட தொகுதி பாசத்தை மையமாக கொண்ட படங்கள் பழிவாங்கும் படலங்கள் பக்தி படங்கள் வரிசை என்று இன்னும் பல வரிசைகள் கொண்ட திரைப்படங்களின் ஆச்சர்யமூட்டும் தகவல்களை இப்போது பார்க்கலாம். முதலில் உண்மையான சரித்திர கதைகள் திரைப்படங்கள் ஆனவை : வீரபாண்டிய கட்டபொம்மன் சித்தூர் ராணி பத்மினி  கப்பலோட்டிய தமிழன் ராஜ ராஜ சோழன் விஸ்வநாத நாயக்கர் தெலுங்கு சந்திரகுப்த சாணக்யா தெலுங்கு  புராண திரைப்படங்க...

தியாகம் இசை அலசல்

படம்
எப்பவாச்சும் பழைய பாடல்களைக் கேட்கும்போது, நீங்க அந்தப் பழைய காலத்துக்குப் போயிருக்கீங்களா?அப்போதைய தியேட்டர்களின் வாசம், அந்தப் பாடல்களின் ஆழம்... இப்படி பல மனசுக்குள்ளே தூங்கிட்டு இருக்கற அந்த உணர்வுகளை தட்டி எழுப்பற ஒரு விஷயத்தை தான் இப்போ பேசப் போறோம். அப்படி இதுலே நாம பேசப்போற விஷயம் தியாகம் படத்தை பத்திதான். இந்த 'தியாகம்' படம் நம்ம மனசை எவ்வளவு அழகா வருடுன அந்த நினைவுகளை கொஞ்சம் நெனச்சு பார்போமா?   சிவாஜி நடிப்பு, இளையராஜாவோட இசை, கே.பாலாஜியோட மேஜிக் - இது எல்லாத்தையும் பத்தி ஒரு ரசனை கலந்த ஒரு பயணத்துக்குப் போகலாம். என் கூடவே வாங்க!"  அது தமிழ் சினிமாவின் ஒரு பொற்காலம்னு சொல்லலாம்.. 1978... அந்த வருஷம் பொறந்தப்பவே ஒருவிதமான எதிர்பார்ப்பு. ஜனவரி 26, 1978. அன்னைக்குத்தான் 'அந்தமான் காதலி' ரிலீஸ் ஆகுது. அந்தப் படம் பத்தி பேசவே வேண்டாம், பாட்டெல்லாம் செம ஹிட்டு. ஆனா அதே தேதியில, கே.பாலாஜி சார் தன்னோட அடுத்த படமான 'தியாகம்' படத்தை ரிலீஸ் பண்ணணும்னு பிளான் பண்ணியிருந்தார். ஒரு தயாரிப்பாளரா அந்த தேதியை அவர் ரொம்ப நம்பினார். ஆனா, அந்த முறை சின்னதா ஒரு மாற்ற...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்