1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

சிவாஜியுடன் கமல் ரஜினி விஜய் அர்ஜுன் பிரபு பாடல்கள்

​​​சினிமால ஒருத்தரோட பயணம் எப்படிப்பட்டதா இருக்கணும்னு கேட்டா, சிவாஜி சாரைத்தான் கைகாட்டணும். அவர் ஒரு 'கால இயந்திரம்' .
​அவருடைய தொடக்க காலத்துல, ஜெமினி கணேசன், TR.ராமச்சந்திரன் சந்திரபாபு முத்துராமன், ஜெய்சங்கர், நாகேஷ், பாலாஜி ஜெய்கணேஷ்னு அந்தப் பொற்காலத்து நடிகர்களோட  இணைந்து பாடி, அந்தத் திரையையே அதிர வச்சவர். அது ஒரு பக்கம் இருக்கட்டும்... ஆனா, அதிசயம் அங்க தான் ஆரம்பிக்குது!
​எண்பதுகளுக்கு அப்புறம், சினிமா உலகம் டோட்டலா மாறிடுச்சு. புதுசு புதுசா எத்தனையோ முகங்கள்! ரஜினி, கமல்னு அந்தப் பெரிய துருவங்கள் தொடங்கி, விஜய், அர்ஜுன், சத்யராஜ், முரளி, பிரபு, மோகன்லால், ஏன்... அஜய்  வரைக்கும்! இப்படி எந்தக் காலத்துல, எந்த ஸ்டைல் நடிகரா இருந்தாலும், அவங்க கூடத் தோள் மேல கை போட்டு, அவங்களுக்கு ஈடுகொடுத்து, அவங்க கூடவே நின்னு பாடி, 'நான் தான் இங்க ஆல் டைம் கிங்'னு நிரூபிச்ச அந்த ஒற்றைப் புள்ளி இருக்கே... அதுதான் சிவாஜி கணேசன்!
​இன்னைக்கு வரைக்கும் யாரும் இப்படி ஒரு 'கலைப்பாலத்தை' உருவாக்கினது கிடையாது. பல தலைமுறை நடிகர்களுக்குப் பக்கத்துல நின்னு, அவங்க கூடவே இணைந்து குரல் கொடுத்து, சினிமா ரசிகர்களுக்கு விருந்து படைச்ச அந்தப் பிரம்மாண்டமான பயணத்தை பத்தி தான் இந்த பதிவு.

சீனியாரிட்டி அடிப்படையிலே இதை பாக்கலாம்.
முதல்லே கமலஹாசன்.
சத்யம் நாம் பிறந்த மண் தேவர்மகன்னு மூணு படத்துலே நடிச்சிருக்காங்க சிவாஜியும் கமலும்.சத்யம் படத்துலே ரெண்டு பேரும் சேந்து பாடற மாதிரி பாட்டிருக்கு. அம்மா மேல் ஆணையிட்டேன் அம்பலத்தில் சொல்லிப்புட்டேன்னு பாட்டு.இது ஒரு குத்துப்பாட்டு டைப்புதான். சிவாஜி ஒரு வித்தியாசமான டான்ஸ் மூவ்மெண்ட்லே பட்டைய கிளப்புவார். சிவாஜி ஆரம்பிச்சு வைக்க கமலும் இடையிலே சேந்துக்குவார்.KV.மகாதேவன் இசையமைப்பு.சிவாஜிக்கு 
TMSசும் கமலுக்கு SP.பாலசுப்ரமணியமும் பாடியிருப்பாங்க.

அப்புறம் நாம்பிறந்தமண் படத்துலே ரெண்டு பேருக்குமே பாட்டிருக்கு. சேந்து பாடற மாதிரி இல்லே.
தேவர்மகன்லே போற்றி பாடடி பாட்டு. ரெண்டு பேரும் காட்சிலே இருப்பாங்க. ரெண்டு பேரும் பாடற மாதிரி இல்லாமே பிண்ணனியா இந்த பாட்டு  இருக்கும்.

இந்த வரிசைலே அடுத்ததா ரஜினிகாந்த்.
ஜஸ்டிஸ் கோபிநாத் நான் வாழ வைப்பேன் படிக்காதவன் விடுதலை படையப்பான்னு அஞ்சு படத்துலே சேந்து நடிச்சாங்க. அஞ்சு படத்துல ரெண்டு பேரும் சேந்து நடிச்சிருந்தாலும் சேந்து பாடற பாடல்களை பாத்தா அது கொஞ்சம் வித்தியாசமான தகவலா இருக்கு. விடுதலை படத்துலே ரெண்டு பேரும் ரெண்டு பாட்டுலே நடிச்சிருப்பாங்க. இதுலே நாட்டுக்குள்ளே நம்மை பத்தி கேட்டுப் பாருங்க பாட்டை ரஜினி விஷ்ணு வர்த்தன் சேந்து பாடற மாதிரி காட்சியமைப்பு இருக்கும். சூரக்கோட்டை வாத்தியாரு என்ன நடிப்பு காக்கிச் சட்டை மாட்டிக்கிட்டா என்ன துடிப்புன்னு எல்லாம் சிவாஜியை புகழ்ந்து ரஜினிபாடற மாதிரி வரிகள் இருக்கும்.சிவாஜி ரஜினி விஷ்ணுவர்த்தன்  மூணு பேரும் நடிச்சிருப்பாங்க. ரஜினி விஷ்ணுவர்த்தன் பாட சிவாஜி பாடற மாதிரி காட்சி இல்லே. இன்னொரு கிளப் பாட்டான ராஜாதி ராஜாங்கற பாட்டு சிவாஜி மாதவி பாடற மாதிரி இருக்கும் .ரஜினி பாடற மாதிரி காட்சி இல்லே.சிவாஜிக்கு SPB பாடியிப்பார்.இப்படி ஒரு வித்தியாசமா பாட்டுகள் அமைஞ்சிருக்கும்.
படையப்பா படத்துலே மின்சார கண்ணா பாட்டுலே ரெண்டு பேரும் நடிச்சிருப்பாங்க. ரஜினி பாடற மாதிரி பாட்டு. சிவாஜி ரஜினி ரெண்டு பேரும் சேந்து அஞ்சு படத்துலே நடிச்சிருந்தாலும் ,ரெண்டு பேரும் பாடல் காட்சிகள்லே சேந்து நடிச்சிருந்தாலும் ,ரெண்டு பேருமே சேந்து பாடற மாதிரி பாட்டுகள் இல்லேங்கறது ஒரு ஆச்சர்யமான தகவல்.

அப்புறம் சத்யராஜ். ஜல்லிக்கட்டு புதியவானம் முத்துக்கள் மூன்றுன்னு மூணு படத்துலயும் சிவாஜி சத்யராஜ் சேந்து பாடற மாதிரி பாட்டுக்கள் அமைஞ்சது ஒரு ஆச்சர்யமான விஷயம் தான். ஜல்லிக்கட்டுலே  ஹே ராஜா ஒன்றானோம் இன்று பாட்டு,புதிய வானம் படத்துலே ஒரு பாடம் சொல்கிறேன் பாட்டு ,முத்துக்கள் மூன்று படத்துலே தேவன் கோயில் தீபமே பாட்டு.இந்த பாட்டுகள் ரெண்டு பேரும் சேந்து பாடற மாதிரி இருக்கும்.

சிவாஜி விஜய். ஒன்ஸ்மோர் படத்துலே ஒரு பாட்டு. சின்ன சின்ன காதல்னு ஒரு பாட்டு. வைரமுத்து எழுதுன பாட்டு. தேவா இசையமைப்பு.சிவாஜி விஜய் சிம்ரன் மணிவண்ணன் SS சந்திரன் எல்லாம் சேந்து பாடற மாதிரியான குரூப் பாட்டு. 
அந்த காலத்து ஆட்டம் என்ன ,இதோ இந்தகாலத்து டான்ஸ்னு சிவாஜி ஆடுன டான்ஸை பாத்து எல்லாரும் அசந்துட்டாங்கன்னு  சொல்லலாம்.இன்னொரு விஷயமும் சொல்லணும். சிவாஜி இதுலே ஆடுனப்போ அவருக்கு வயசு 69 .ஜீன்ஸ் ஜெர்கின் போட்டுட்டு சிவாஜி விஜய் சிம்ரனோட ஆடுன டான்ஸ் எல்லாம் வேற லெவல்.

அடுத்து சிவாஜி அர்ஜூன் காம்போ .நடிகர் அர்ஜூன் நடிகர்திலகத்தோட சேந்து முதல் குரல் மன்னவரு சின்னவருன்னு ரெண்டு படம் நடிச்சிருக்கார்.மன்னவரு சின்னவரு படத்துலே வான்நிலாவே வான்நிலாவேன்னு ஒரு பாட்டு வரும். நடிகர்திலகம் அர்ஜூன் ரெண்டு பேரும் வர்ற பாடல்காட்சி இது. ரெண்டு பேருமே பாடற மாதிரியும் இருக்கும் .ஆனா இந்த பாட்டுலே சிவாஜி தனியா பாட அந்த பாட்டுலயே
அர்ஜுன் சௌந்தர்யா டூயட் பாடற மாதிரி இருக்கும் .

அப்புறம் நடிகர்திலகம் இளையதிலைகம் காம்போ. 20 படங்கள் பண்ணி இருக்காங்க.
சந்திப்பு படத்துலே செம ஹிட்டான பாட்டு இந்த காம்போவுலே  இருக்கு. உன்னைத்தான் கும்பிட்டேன் உன்னையே நம்பிட்டேன் பாட்டு.வம்ச விளக்கு படத்துலே மனிதன் கதை இது பாட்டு.இந்த பாட்டுலே நடிகர் திலகம் போடற ஸ்டெப் எல்லாம் வேற லெவல்லே இருக்கும்.

அடுத்து..சிவாஜி முரளி சேந்து நடிச்ச படங்கள் குடும்பம் ஒருகோவில் ,என் ஆச ராசாவே .
குடும்பம் ஒரு கோவில் படத்துலே எல்லாரும் சேந்து பாடற மாதிரி ஒரு குடும்ப பாட்டு இருக்கு.
என் ஆசை ராசா படத்துலே முந்தி முந்தி விநாயகனே ,கட்டுனேன் கட்டுனேன் கோட்டையொண்ணு பாடல்கள்லே சிவாஜியோட முரளியும் பாடற மாதிரி வரும்.

சிவாஜி மோகன்லால் காம்பினேஷன்ல வந்த படம் ஒரு யாத்ரா மொழி. இது ஒரு மலையாள படம். தமிழ்லே ஒரு பயணத்தின் மொழி  அப்படிங்கிற பேர்ல டப்பிங் செய்யப்பட்டது.இந்த படத்துல சிவாஜி மோகன்லால் பாடுற மாதிரி ஒரு சூப்பர் ஹிட் பாட்டு ஒண்ணு இருக்கு .காக்கால கண்ணம்மான்னு பாட்டு .இந்த படத்துக்கு இசையமைத்தவர் இளையராஜா. 
சிவாஜி மோகன்லால் நடிப்புலே அட்டகாசமா இந்த பாட்டை எடுத்திருப்பாங்க.

இவங்க எல்லாம் ஒரு தலைமுறைன்னா இவங்களுக்கு அடுத்த தலைமுறையான அஜய் அப்படிங்கற நடிகரோடவும் பூப்பறிக்க வருகிறோம் படத்துக்காக ஒரு சூப்பர் பாட்டுலே சிவாஜி நடிச்சிருப்பார்.

இப்படி சிவாஜி சார் எந்தப் படத்துல நடிச்சாலும், கூட வர்ற நடிகரை விட அவரோட நடிப்போட பிரம்மாண்டம் மட்டும் குறையவே குறையாது.
​அந்த காலத்துல சிவாஜி, ஜெமினி கணேசன் காலத்துல ஆரம்பிச்சு... இன்னைக்கு இருக்குற இளைய தலைமுறை நடிகர்கள் வரைக்கும், தன் நடிப்புச் சுடரை அணையாம பார்த்துக்கிட்ட அந்த விஸ்வரூபம் தான் 'நடிகர்திலகம்'! ஒரு நடிகனா அவரோட ஸ்கிரீன் பிரசன்ஸ், எக்ஸ்பிரஷன்ஸ், அந்த கம்பீரம்... இதெல்லாம் வெறும் நடிப்பு இல்ல, இது ஒரு பாடம்.
​காலங்கள் மாறலாம், தொழில்நுட்பம் மாறலாம், ஆனா சிவாஜிங்கிற சகாப்தம் மட்டும் எப்பவும் மாறாது. நம்ம ஒவ்வொருத்தரோட ரசனைக்குள்ளயும் அவர் எப்பவும் ஒரு ராஜாவாதான் இருப்பாரு.

செந்தில்வேல் சிவராஜ்
9087620800



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்