இடுகைகள்

லட்சுமி கல்யாணம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

லட்சுமி கல்யாணம் யாரடா மனிதன் இங்கே?

படம்
யாரடா மனிதன் இங்கே பாடல். (லட்சுமி கல்யாணம்) நல்ல  குணங்களுக்கு விலங்குகளின் குணத்தை  உவமை கூறி பாராட்டுவது உலக இயல்பு. மான் விழி சிங்ககர்ஜனை புலிப்பாய்ச்சல் குதிரை ஓட்டம். இப்படி சில.மிருகங்களை உவமையாக்கி பாராட்டும் அதே சமயம் ,தீய குணம் கொண்டோரின் குணங்களுக்கும் அதே மிருகங்களின் குணத்தையே உவமை யாக பயன்படுத்துகின்றான்.  இது ஒரு முரண் ?என்றுசிலர் கூறுவதும் உண்டு. கவியரசரும் தன் பங்கிற்கு  லட்சுமி கல்யாணம் படத்திற்காக மிருகங்களை உவமையாக்கி  இந்தப்பாடலை கொடுத்துள்ளார்.அந்த விவாதங்கள் நமக்கெதற்கு. நமக்கு நம் நடிகர்திலகத்தின் நடிப்பு ஒன்று போதுமே. கதைமாந்தர்களின் வஞ்சக எண்ணங்களால் பாதிக்கப்படும் கதையின் நாயகன் அம்மனிதர்களின் குணங்கள் கண்டு கொந்தளித்து பாடுவதாக அமைந்த பாடல் இது. அதை நம் தலைவர் எப்படி வெளிப்படுத்துகிறார் பாருங்கள்.நல்ல மனிதர்கள்யாராவது  நடந்து போகிறார்களா என்று தீப்பந்தத்தைதூக்கி ஒவ்வொரு மனித முகமாகப் பார்த்து  சலித்துப்போய் தீப்பந்தத்தை தூக்கி எறியும் அந்த முதல் ஷாட்டிலேயே அந்த விரக்தியை எப்படி அருமையாகக் காட்டுவார் பாருங்கள்.முகத்தில் வந்து...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்