இடுகைகள்

ஜூன், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

அம்பென பாய்ந்த கலைஞன்..சிவாஜி

படம்
 சிவாஜி ... ஏழு கலர் தான் அடிப்படை.பக்கத்துல பாக்கையில. எல்லாக் கலரும் ஜோராத்தான் இருக்கும்.ஆனா தூரமா போனா மஞ்சள் கலருதா மின்னும்.உதாரணமா இருட்டுல ஆகாசத்த பாருங்க.நட்சத்திரம் எல்லாம் மஞ்சள் கலருல பளீர்னு இருக்கும்.அது மாதிரிதான் சிவாஜி படங்களும்.காலமாக ஆக ரொம்ப வியப்பா இருக்கும். நாலு தலைமுறைக்கு முன்னால நடிக்க வந்தாரு.அப்ப இருந்தவங்களும் ரசிச்சாங்க. ரசிகனா மாறுனாங்க.இப்பவும் நாலு தலைமுறை தாண்டியாச்சு. இப்ப இருக்கற சின்ன பசங்க கூட சிவாஜி நடிப்புல மயங்கறாங்க.5 ஆம் வகுப்பு படிக்கிற பையன் சிவாஜியோட 300 படத்த அப்படியே சொல்லுறான்.மேடையில, டிவில எல்லாம்  சிவாஜி செஞ்ச வேஷத்த, நடிப்பை எல்லாம் சின்ன பசங்க செய்யறாங்க.இதெல்லாம் சில உதாரணங்கதான். தனுர் வேதமானது அசாத்திய வில் வித்தையை சொல்லறது.யுத்த வித்தைகளில் ரொம்ப  மேலானது.குறிப்பிட்ட இலக்கை வீழ்த்த துணை புரியறது .வில் வித்தையில துரோணாச்சாரியாரை அடிச்சுக்க யாருமில்ல.அந்த துரோணாச்சாரியார் மாதிரித்தான் நடிப்புல சிவாஜி. ஒரு கேரக்டரை கொடுத்து நடிக்கச் சொன்னா அவர் நடிக்கறப்போ அந்த நடிப்போட இலக்கு குறி தவறாத தனுர் வித்தை போலத்தான். தமிழ்...

புனர் ஜென்மம்

படம்
புனர் ஜென்மம் இந்தப் படத்துக்கு முன் வெளியான நடிகர் திலகத்தின் படம் பாவமன்னிப்பு. புனர் ஜென்மம் படத்தை அடுத்து நடிகர் திலகம் நடித்து வெளியான படம் பாசமலர் . பாவமன்னிப்பு ,பாசமலர் இரண்டுக்கும் இடையில் வெளியான படம் தான் புனர்ஜென்மம். இந்தப் படம் வெளியான காலகட்டத்தில் உலகின் மகோன்னத நடிகராக இருந்தார் நடிகர்திலகம். உலகத்தின் பாதியைக் கொண்ட ஆசிய ஐரோப்பா கண்டங்களின் மிகச் சிறந்த விருதை பெற்றிருந்தார் அந்த உலக மகா நடிகன். இதற்கடுத்த காலகட்டங்களில் தான் நடிகர்திலகத்திடம் சொல்லப்பட்ட கதை புனர்ஜென்மம். எந்த தைரியத்தில் நடிகர் திலகத்திடம் கதை சொல்லி இருப்பார்கள்?  கதாசிரியர் நடிகர்திலகத்திடம் கதை சொன்ன விதத்தை சற்று ஊகித்து பார்க்கலாம் . கதை விவாதம்: நடிகர்திலகம், கதாசிரியர் (புனர்ஜென்மம் குழு) நடிகர்திலகம் :என்ன புதுசா ஒரு கதை இருக்குன்னீங்களே! கதையை சொல்லுங்க. கதாசிரியர்: படம் ஆரம்பிக்குது.மழை கொட்டி தள்ளுது.அப்ப ஒரு தெருவை காட்டறோம்.அந்த தெருவுல ,மழைத்தண்ணியில ஒரு உருவம் படுத்திருக்குது.அளவுக்கு அதிகமான. குடி .போதை. எழுந்திருக்கவே முடியல.மழை வேற கொட்டித் தள்ளுது.அந்த மழையிலும் தெளியாத குடி ...

நடிகர் திலகத்தின் 1983 ஆம் ஆண்டு சாதனைகள்

படம்
நடிகர் திலகத்தின் 1983 ஆம் ஆண்டு சாதனைகள்.... நடிகர்திலகம்  சிவாஜிகணேசன் அவர்கள் ஒரே வருடத்தில்  இரண்டு வெள்ளி விழா படங்களையும்  மூன்று நூறு நாள் வெற்றி  விழா படங்களையும் கொடுத்து சாதனை புரிந்திருக்கிறார்.அதிகம் தெரியப்படாத நடிகர் திலகத்தின் சாதனைகளில் இதுவும் ஒன்று.இந்த சாதனையானது நடிகர் திலகம் தன் இளமைப் பருவத்தில் நடித்து வெளியிட்ட படங்களில் இருந்து அல்ல .இப்போது நான் குறிப்பிடும் இந்த சாதனையானது நடிகர் திலகம் தன்னுடைய 55 ஆவது வயதில் செய்த சாதனையை . நடிகர் திலகம் இந்த சாதனையை செய்த ஆண்டு 1983. 1983 ஆம் ஆண்டு நடிகர் திலகம் நடித்த வெளியான படங்கள் மொத்தமே ஏழு தான்.இந்த ஏழு படங்களிலும் ஒன்று தெலுங்கு படம். மற்ற ஆறு படங்கள் தான் தமிழ் படங்கள். இந்த 1983 ஆம் ஆண்டு ஆண்டின் தொடக்கமாக முதலில் வெளியான படம் தெலுங்கு படம் . படத்தின் பெயர் பெஜவாடா பெப்புலி.வெளியான தேதி  14. 1 .1983 . இதற்கு அடுத்ததாக வெளியான நடிகர் திலகத்தின் திரைப்படம் நீதிபதி .வெளியான தேதி  26 1 1983.இந்த ஆண்டில் தொடக்கத்தில் வெளியான முதல் படத்திற்கும் இந்த இரண்டாவது படத்துக்கும் இடைப்பட்ட நாட்கள் ...

சிவாஜிக்காக TMS சிரமப்பட்டு பாடிய பாடல்கள்

படம்
டி எம் எஸ் ,சிவாஜிக்காக கஷ்டப்பட்டு பாடிய பாடல்கள் ... பராசக்தி படம் வந்ததிலிருந்து தூக்கு தூக்கி படம் வரைக்கும் சிவாஜிக்கு எத்தனையோ பேர் பாடி இருப்பார்கள்.. எல்லா பாடகர் குரலையும் தன்னுடைய  நடிப்பால்  மேட்ச் செய்து  இருப்பார் சிவாஜி .தூக்கு தூக்கி படத்துக்கு பின்னால் சிவாஜிக்கு ,சிவாஜியே  பாடுவது மாதிரி ஒரு வாய்ஸ் கிடைத்தது.அதுதான்  டி எம் எஸ் குரல். டிஎம்எஸ் இன் குரல் நல்ல கம்பீரமான குரல் என்றாலும்  ஒவ்வொரு நடிகர்களுக்கும் ஒவ்வொரு மாதிரி பாடி இருப்பார் . சிவாஜியை தவிர மற்ற நடிகர்களுக்கு பாடிய டிஎம்எஸ்ஸின் குரல் ஆனது அதிகம் கம்பீரத்தை காட்டாத ஒரு மிருது தன்மையுடன் இருக்கும். சிவாஜிக்கும் TMS எத்தனையோ மிருதுவான சாந்தமான பாடல்களை பாடி இருந்தார்.சிவாஜிக்கு பாடிய சில கடினமான பாடல்களை  அடிவயிற்றில் இருந்து காற்றை நெஞ்சுக்கு கொண்டு வந்து அடித்தொண்டையிலிருந்து கஷ்டப்பட்டு பாடி இருப்பார். அவ்வாறு சிவாஜிக்கு பாடிய சில கடினமான பாடல்கள் என்னென்ன என்று இந்த பதிவில் நாம் பார்க்கலாம். வசந்த மாளிகை படத்தில் அவர் பாடிய" யாருக்காக இது யாருக்காக "என்ற பாடலை தியேட்டரில்...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்