சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலம்

படம்
2001ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ம் தேதி. இந்த தேதிக்கு இரண்டு நாட்கள் முன்பாக தினகரன் பத்திரிக்கை தனது தலைப்புச்செய்திகள் விளம்பர வால் போஸ்டரில் இந்த செய்தியையும் போட்டிருந்தது. நடிகர்திலகம் சிவாஜிகணேசன் உடல் நலக் குறைவு காரணமாக  மருத்துவமனையில் அனுமதி என்று அந்த தகவலை சொன்னது. அந்த 90 கள் காலகட்டம் சிவாஜிக்கு உடல் நலக் குறைவை மாறி மாறி கொடுத்துக் கொண்டிருந்தது.சிவாஜி உடல் நல குறைவை பற்றி பல முறை பத்திரிக்கை செய்திகளாக வந்துள்ளது. இப்போது வந்த அந்த செய்தியும் பின் வரும் காலகட்டம் மறக்க வைக்கும் என்று தான் அந்த செய்தியை அன்று பார்த்த போதும் நினைக்க வைத்தது. 21.07.2001.இரவு எட்டு மணி இருக்கும். சன் டிவியின் செய்தி  வாசிப்பு அறை. எப்படிப்பட்ட செய்தியாக , தகவலாக இருந்தாலும் அதை சகஜமாக எடுத்து கடந்து போகும் சன் டிவியின் செய்தி வாசிப்பு குழு அந்த நேரத்தில் வந்த அந்த செய்தியை கேட்டதும் அதிர்ந்துதான் போனார்கள்.அப்போது சன் டிவியின் செய்தி எடிட்டராக இருந்தவர் ராஜா. இன்றைக்கெல்லாம் நியூஸ் சேனல்கள் ஓடுவதே கீழே ஓடும் அந்த ஸ்கோரிலிங் செய்திகளால் தான். லேலே குறிப்பிட் அன்றைய கால கட்டத்தில் இது ம...

நடிகர் திலகத்தின் 1983 ஆம் ஆண்டு சாதனைகள்

நடிகர் திலகத்தின் 1983 ஆம் ஆண்டு சாதனைகள்....

நடிகர்திலகம்  சிவாஜிகணேசன் அவர்கள் ஒரே வருடத்தில் 
இரண்டு வெள்ளி விழா படங்களையும்  மூன்று நூறு நாள் வெற்றி  விழா படங்களையும் கொடுத்து சாதனை புரிந்திருக்கிறார்.அதிகம் தெரியப்படாத நடிகர் திலகத்தின் சாதனைகளில் இதுவும் ஒன்று.இந்த சாதனையானது நடிகர் திலகம் தன் இளமைப் பருவத்தில் நடித்து வெளியிட்ட படங்களில் இருந்து அல்ல .இப்போது நான் குறிப்பிடும் இந்த சாதனையானது நடிகர் திலகம் தன்னுடைய 55 ஆவது வயதில் செய்த சாதனையை .
நடிகர் திலகம் இந்த சாதனையை செய்த ஆண்டு 1983.

1983 ஆம் ஆண்டு நடிகர் திலகம் நடித்த வெளியான படங்கள் மொத்தமே ஏழு தான்.இந்த ஏழு படங்களிலும் ஒன்று தெலுங்கு படம். மற்ற ஆறு படங்கள் தான் தமிழ் படங்கள்.

இந்த 1983 ஆம் ஆண்டு ஆண்டின் தொடக்கமாக முதலில் வெளியான படம் தெலுங்கு படம் .
படத்தின் பெயர் பெஜவாடா பெப்புலி.வெளியான தேதி 
14. 1 .1983 .

இதற்கு அடுத்ததாக வெளியான நடிகர் திலகத்தின் திரைப்படம் நீதிபதி .வெளியான தேதி
 26 1 1983.இந்த ஆண்டில் தொடக்கத்தில் வெளியான முதல் படத்திற்கும் இந்த இரண்டாவது படத்துக்கும் இடைப்பட்ட நாட்கள் 12 மட்டுமே .

1983 ஆம் ஆண்டில் மூன்றாவதாக வெளியான படம் இமைகள் .வெளியான தேதி 14 4 1983.

1983 ஆம் ஆண்டில் நான்காவதாக வெளியான நடிகர் திலகத்தின் திரைப்படம் சந்திப்பு .வெளியான தேதி 16 6 83.

83 ஆம் ஆண்டில் ஐந்தாவதாக வெளியான படம் சுமங்கலி. வெளியான தேதி 12 8 1983.

1983 ஆம் ஆண்டில் ஆறாவதாக வெளியான நடிகர் திலகத்தின் திரைப்படம் மிருதங்க சக்கரவர்த்தி .
வெளியான தேதி
 24 9 83. 

83 ஆம் ஆண்டில் இறுதியாக வெளிவந்த திரைப்படமும் ஏழாவது திரைப்படமும் ஆன வெள்ளை ரோஜா வெளியான தேதி 4 11 1983.


மேற்கு கூறப்பட்ட ஏழு படங்களில்
நீதிபதி ,சந்திப்பு ஆக இரண்டு படங்கள் வெள்ளி விழா ஓடி வெற்றி கண்ட படங்கள்.
 பெஜவாடா பெப்புலி தெலுங்கு திரைப்படம் 
மிருதங்க சக்கரவர்த்தி வெள்ளை ரோஜா ஆகிய மூன்று படங்கள் 100 நாட்கள் ஓடி வெற்றி பெற்றவை ஆகும்.

மேற்கூறப்பட்ட இந்த ஏழு படங்களில் ஒரு மகத்தான உலக சாதனை உள்ளது.
தந்தை  மகன் ஆகிய 
நடிகர் திலகம் இளைய திலகம் ஐந்து படங்களில் இணைந்து  நடித்து ஒரே வருடத்தில் வெளியிட்டு சாதனை புரிந்துள்ளார்கள். உலகிலேயே தந்தை மகன் ஆகிய இருவரும் ஒரே வருடத்தில் இணைந்து நடித்து வெளியிட்ட சாதனையை செய்தவர்கள் நடிகர் திலகமும் இளைய திலகமும் ஆவார்கள் .உலகிலேயே இதுவரை யாரும் செய்யப்படாத சாதனை இது.

1983 ஆம் ஆண்டில்  நடிகர் திலகம் இளைய திலகம் இணைந்து நடித்து வெளியான படங்கள் :
நீதிபதி சந்திப்பு சுமங்கலி மிருதங்க சக்கரவர்த்தி வெள்ளை ரோஜா ...ஆகிய படங்களாகும் .

1983 ஆம் ஆண்டில் வெளியான சந்திப்பு வெள்ளை ரோஜா ஆகிய இரண்டு படங்களில் நடிகர் திலகம் இரட்டை வேடம்  ஏற்று நடித்தவை என்பது குறிப்பிடத்தக்கது ...

நடிகர் திலகம் இளைய திலகம் இருவரும் இணைந்து நடித்து நீதிபதி சந்திப்பு ஆக இரண்டு படங்களும் வெள்ளி விழாக்களை கண்டன. மிருதங்க சக்கரவர்த்தி வெள்ளை ரோஜா இரண்டு படங்கள் 100 நாட்கள் 
 ஓடி சாதனை புரிந்தது ...
தந்தை மகன் இருவரும் இணைந்து நடித்து ஒரே வருடத்தில் இரண்டு வெள்ளி விழா படங்களையும் இரண்டு 100 நாள் படங்களையும் கொடுத்துள்ளார்கள் என்பது மேலும் ஒரு விசேஷமான தகவல் .

1983 ஆம் ஆண்டு நடிகர் திலகம் 51 நாட்களுக்கு ஒரு படம் என்ற கணக்கில் திரைப்படங்களை வெளியிட்டு சாதனை புரிந்துள்ளார். அப்போது அவருக்கு வயது 55 என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த ஆண்டு வெளியான ஏழு படங்களில் இமைகள்,
 இரட்டை வேடத்தில் நடித்த வெள்ளை ரோஜா ஆகிய இரண்டு படங்களிலும்  சிவாஜிக்கு ஜோடி கிடையாது.

நீதிபதி படத்தில் நீதிபதியாகவும்,
இமைகள் படத்தில் முஸ்லிம் வேடமேற்றும்,
சந்திப்பு படத்தில் கிராமத்து பெரிய மனிதராகவும், டானாகவும் ஆகிய இரு வேறுபட்ட வேடங்களிலும் ,
சுமங்கலி படத்தில் லாரி டிரைவர் ஆகவும்,
மிருதங்க சக்கரவர்த்தி படத்தில் மிருதங்க வித்வான் ஆகவும்,
வெள்ளை ரோஜா படத்தில் பாதிரியார் போலீஸ் அதிகாரி
என்று ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.

வெள்ளை ரோஜா திரைப்படம் சென்னையில் திரையிடப்பட்ட ஆறு திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடி சாதனை புரிந்த படம்.

செந்தில்வேல்  சிவராஜ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற