இடுகைகள்

சிவாஜிகணேசன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

1968 ஆம் வருட சிவாஜி படங்கள்

படம்
திருவிளையாடல் படத்துலே கடைசி எபிசோட்லே  விறகுவெட்டியா நடிச்ச சிவாஜி ஒரு வசனம் பேசுவார் . ஒரு விறகை எரிச்சா சந்தனவாசனை , இன்னொரு விறகை எரிச்சா  சாம்பிராணி வாசனை, அடுத்த விறகை எரிச்சா ஜவ்வாது வாசனை வரும்பார். இப்ப எதுக்கு இந்த வசனத்தை நான் சொல்றேன்னு நீங்க நினைக்கலாம். 1968 ஆம் வருஷம் வந்த சிவாஜி படங்களை நெனச்சா இந்த வசனம் தான் ஞாபகத்துக்கு வருது. ஒரு படம் புராணக்கதையை சொன்னது. அடுத்த படம் சரித்திரத்தை கொண்டது. மூணாவது படம் குடும்ப சென்டிமென்ட். அடுத்ததை பாத்தா அது கலையை பத்தி. அடுத்தது ஒரு மனுசனோட வைராக்யத்தை பத்தி. அடுத்ததா இந்த சமூகத்தோட அவலத்தை பத்தி. கடைசியா ஒரு பெரிய மனுசனோட வாழ்க்கை பதிவையும் சொன்ன படம்.  வேற வேற ஊருக்கு போற பஸ்ஸோட வழித்தடம் மாதிரி வேற வேற ரூட்டுலே போற கதையமைப்பை கொண்ட படங்கள்.புது ஊரு புது அனுபவம்  மாதிரி எல்லாமே வேற வேற வெரைட்டி மீல்ஸ் படங்கள்.ஒவ்வொரு சாப்பாடு,ஒவ்வொரு ருசி. ரசிச்சி ரசிச்சு சாப்பிட வெச்சார் சிவாஜி. 1967 லே கடைசி படமா ஊட்டிலே போயி ஜில்லுன்னு ஊட்டி வரை உறவு படத்துலே நடிச்சுட்டு  1968 லே நெத்திலே நாமம்,பூணூல் போட்...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்