இடுகைகள்

மே, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

சிவாஜியைப் பற்றி...உலகத் தலைவர்கள் முதல் உள்ளூர் மந்திரி வரை ...

படம்
சிவாஜிகணேசன் பாரதத்தின் புகழுக்காக பாடுபட்டவர் என்றார் ஜவஹர்லால் நேரு சிவாஜிகணேசன் நடிப்புக் கலையின் நாயகன் என்றார் அன்னை இந்திரா காந்தி  சிவாஜிகணேசன்  இந்தியாவுக்கே பெருமை என்றார்  ஒய் பி சவான் இந்தியப் பண்பாட்டை திரையிலேயே வடித்தவர் என்றார் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன். காங்கிரசின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர் என்றார் முன்னாள் ஜனாதிபதி வெங்கட்ராமன். சிவாஜி கணேசன் தன்னிகரற்ற நடிகர் என்றார் கே ஆர் நாராயணன் முன்னாள் ஜனாதிபதி . ஏழை எளிய மக்களின் நல்வாழ்வுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் என்றார் ராஜீவ் காந்தி. வாழும் காலத்தில் ஒரு காவியமாக திகழ்ந்தவர் என்றார் அடல் பிகாரி வாஜ்பாய். தமிழ் திரைப்பட உலகில் தனக்கென தனி இடம் பிடித்த ஒப்பற்ற கலைஞர் என்றார் டாக்டர் அப்துல் கலாம். சிவாஜி அவர்களின் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தை நான் பார்த்து வியந்திருக்கிறேன் என்றார் எல் கே அத்வானி. லட்சக்கணக்கான மக்களால் போற்றி புகழப்பட்ட மாபெரும் மனிதர் சிவாஜி கணேசன் என்றார் சோனியா காந்தி . நான் சிவாஜியின் தீவிர ரசிகன் எனக்கு அவரது நடிப்பு ரொம்ப பிடிக்கும் என்றார் தேவே கவுடா. நடிகர் சிவாஜி கணேசன் நட...

சிவாஜியின் நடிப்புக்கு இன்ஸ்பிரேஷன் ஆக இருந்த விஐபிகள்

படம்
சிவாஜி தன்னோடசில பட கேரக்டர்களுக்கு சில முக்கியமான நபர்களைப் பாத்து பழகுனப்போ அவங்களோட நடை பாவனைகளை தன்னோட கேரக்டர்களுக்கு இன்ஸ்பிரேசனா பயன்படுத்தியிருப்பார்.அப்படி சிவாஜி எந்தெந்த படங்களுக்கு யாரையெல்லாம் இன்ஸ்பிரேசனா எடுத்து நடிச்சிருக்கார் அப்படிங்கறதை இதுல பாக்கலாம். முதல்ல கௌரவம் பாரிஸ்டர் ரஜினிகாந்த்.இந்த வேஷத்துக்கு சிவாஜி யாரை இன்ஸ்பிரேசனா எடுத்து நடிச்சார் அப்பிடிங்கறத சொல்றதுக்கு முன்னாலே அதுக்கு அடிப்படையா அமைஞ்ச நிகழ்ச்சியை பாக்கலாம். சிவாஜி எப்ப மதுரை வந்தாலும் பாண்டியன் ஹோட்டல்லதான் தங்குவார் .கௌரவம் பட கதை விவாத சமயத்துலயும் சிவாஜி திடீரென்று மதுரைக்கு வந்தார். சிவாஜி முன்னறிவிப்பு இல்லாம திடீர்னு வந்ததால பாண்டியன் ஹோட்டல்ல அவர் தங்கறதுக்கு ரூம் இல்லை.  அதனால சிவாஜி தங்கறதுக்கு டிவிஎஸ் கிருஷ்ணாவோட கெஸ்ட் ஹவுஸ் ஏற்பாடு செய்யப்பட்டது. இவர் TVS குரூப் முதலாளி.சிவாஜி டிவிஎஸ் கிருஷ்ணாவோட கெஸ்ட் ஹவுஸ்க்கு போனதும் அவரை பாக்குறதுக்கு கிருஷ்ணா வந்தார் .டிவிஎஸ் கிருஷ்ணா சிவாஜியோட பேசிகிட்டு இருந்தப்ப அவர் பேசிக்கொண்டிருந்ததை உன்னிப்பாக கவனிச்சு கிட்டே இருந்தார் சிவாஜி .டிவிஎஸ்...

பலேபாண்டியா தெய்வமகன் திரிசூலம்

படம்
பலே பாண்டியா தெய்வமகன் திரிசூலம் இதுலே பலே பாண்டியா படத்துலே மட்டும் கொஞ்ச சீன் ஆள் மாறாட்டத்த வச்சு இருக்கும்.பெரும்பாலும் எல்லா ரெட்டை வேஷ படத்துலேயும் கதாநாயகன் ரோலை  மட்டும்தான் ஆள் மாறாட்ட கதையா அமைச்சிருப்பாங்க.பலே பாண்டியா படத்துலே  கதாநாயகன் சிவாஜி ,வில்லன் MR.ராதா ரெண்டு பேரையுமே வெச்சு ஆள் மாறாட்டகாட்சிகளை வெச்சிருப்பாங்க. பலேபாண்டியா படத்துலே  ஒரு சிவாஜிக்குத்தான் பாட்டு .தெய்வமகன்லே ரெண்டு சிவாஜிக்கு  பாட்டு.திரிசூலத்துலே 3 சிவாஜிக்குமே பாட்டு. 3 படத்துக்கும் விஸ்வநாதன் மியுசிக்.பலே பாண்டியா தெய்வமகன் இந்த ரெண்டு படமும் கருப்பு வெள்ளை.மூணு சிவாஜிலே ஒரு சிவாஜி க்ளைமேக்ஸ்லே இறந்து போற மாதிரி காட்சி இருக்கும் . ஆனா திரிசூலத்துலே அப்படி இல்லே.பலே பாண்டியாவுலே அண்ணன் தம்பின்னு  ரெண்டு சிவாஜி , தனி ரவுடி கேரக்டரா இன்னொரு சிவாஜி. தெய்வமகன் திரிசூலம்  ரெண்டு படத்துலேயும் அப்பா ரெண்டு மகனுகளா  சிவாஜி கேரக்டருங்க.இந்த ரெண்டு படத்துலேயும் மகனை பிரிஞ்சு அப்பா இருக்கற மாதிரி கதை. பலே பாண்டியாவுலே சிவாஜி 11 நாள்லே நடிச்சு முடிச்ச ரெக்கார்டு படம்.தெய்வமகன...

ஒரு சீனுக்கு இவ்வளவு டயலாக்கா?

படம்
பக்க பக்கமா வசனம் பேசறதிலே சிவாஜியைப் பத்தி சொல்லவே வேணாம்.மனுஷன்   எத்தனை பக்கத்திற்கும் வசனத்தை எழுதி நீட்டினா அப்படியே ஒரு ஷாட்டுலே கூட பேசி தள்ளிடுவார்.இந்த அதிசயமான சிறப்பு இருக்கிற சிவாஜி ஒரு படத்துக்கு ஆரூர்தாஸ் எழுதி கொடுத்த வசனங்களை பாத்து ,என்ன இவ்வளவு பக்கத்துக்கு எழுதி கொடுத்திருக்கே ,அதுவும் இந்த  ஒரு சீனுக்கு மட்டும்  அப்பிடின்னுன்னு கோபப்பட்டிருக்காரு.சிவாஜியா அப்படி சொன்னாரு ? சான்ஸே இல்லையே ,அப்படின்னு நாம நினைக்கிறது சரியா இருந்தாலும் மேலே சொன்ன விஷயமும் உண்மைதான். அது என்ன படம் ,என்ன காட்சி ,சிவாஜி ஏன் அப்படி சொன்னாரு ,அதுக்கு பின்னாலே என்ன நடந்துச்சு அப்பிடிங்கறத இனிமேலே பாக்கலாம். தெய்வமகன் படத்துலே மூணு சிவாஜி சந்திக்கிற காட்சிதான் அது. இந்த ஒரு சீனுக்காக ஏகப்பட்டவசனங்களை எழுதி தள்ளிட்டார் ஆரூர்தாஸ். ஷூட்டிங் ஸ்பாட்டுலேயே யாரையாச்சும் படிக்கச் சொல்லி அப்படியே ஷூட்டிங்லே பேசி அசத்திருவார்  சிவாஜி.இது தான் சிவாஜி பழக்கம். தெய்வமகன்லே மூணு சிவாஜி சந்திக்கிற காட்சியை  எடுத்த நாள் அது.வழக்கம்போலே வசனகர்த்தா வசனங்ளை சொல்லிட்டே வர்றாரு.அது ரொ...

அஞ்சுமணி நேரம் வாசிப்பை கேட்ட சிவாஜி

படம்
நாதஸ்வரம்னு ஒரு வார்த்தையை சொன்னா சினிமா ரசிகர்களுக்கு தில்லானா மோகனாம்பாள் நினைவும் கூடவே வரும். அந்த படம் அடிச்சு தூக்குன விதம் அப்படி .ஹைகிளாஸ் சினிமாக்களை மட்டும் பாக்கற ஆடியன்ஸை மட்டுமில்லே ,தரையிலே உக்காந்து அலப்பறை பண்ற ரசிகர்களையும் அசுரத்தனமா பாக்க வெச்ச படம்.இந்த படத்துக்காக நாதஸ்வரம் வாசிச்ச சேதுராமன் பொன்னுச்சாமி எல்லா கல்யாணம் கச்சேரிகளுக்கு  வாசிச்ச மாதிரி சும்மா வந்து வாசிச்சிட்டு போயிடல.நாதஸ்வரத்துக்கு கொடுத்த காத்தை வயத்துல இருந்து நெஞ்சுக்கு வரவழைச்சு தொண்டையிலே  இருந்து அதை வெளிப்படுத்தனப்போ  அது இசையா இல்லை இசை மழையா இருந்துச்சு. அவங்க மத்த கச்சேரிகளுக்கு வாசிச்சதை கேட்டு மட்டும் தில்லானா மோகனாம்பாள் படத்துக்கு புக் பண்ணிடலே .அவங்களை சிவாஜிக்கு முன்னாலே வாசிக்க வச்சு  சிவாஜி அதை கேட்டு ரசிச்சு ஆஹா ஓகோன்னு பாராட்டுன பின்னாலே தான் ஒப்பந்தம் செஞ்சாங்க.சேதுராமன் பொன்னுச்சாமியும் சிவாஜிக்கு முன்னாலே அரைமணி நேரமோ ஒரு மணி நேரமோ மட்டுமில்லே,அஞ்சரை மணி நேரம் வாசிச்சாங்க.இப்படிப்பட்ட அருமையான வாசிப்பை இந்த படத்துலே நாம பயன்படுத்திக்கணும்னு APN   இ...

ஒரே வார்த்தையில் தொடங்கும் சிவாஜி வாழ்க்கை வரலாறு

படம்
ஒரே எழுத்தில் ஆரம்பிக்கும் வார்த்தைகளைக் கொண்டு சிவாஜிகணேசன் வரலாறு.. 'க' என்று ஆரம்பிக்கும் வார்த்தைகளால் வடிவமைக்கப் பட்டுள்ளது.... கமலாவை கரம்பிடித்த கணேசனுக்கு கலைமகளின் கருணைதான் கம்பளத்தானை  கண்டு கட்டபொம்மனானவன்தானே கரிபெருமாளவர்தம் கலைப்படத்திலே கணேசன்தான் கட்டாயமென்றாரே கஷ்டப்பட்டே கலையுலகில் கரை கடந்தான் கடந்தோன் கலையுலகின் கருவூலமானானே கமலத்தால் கருநான்கு கணேசமூர்த்திக்கே கலையார்வத்தால் கலைஞனவன் கனமாக கர்ஜித்தே கலையுலகை கலங்கடித்தானே கலையும் கழகமும் கண்களேயவனுக்கு கழகமும் கலையும் கலந்தே கடந்தனவே கறையில்லாதவனை கண்டு கட்சியொன்று கலக்கமானது கலந்தே கணேசனுக்கு களங்கமிழைத்தது கலங்கிய  கணேசனுக்கு கருணைசெய்ததே கடல்வண்ணணின் கடாட்சமே கலையுலகிலே கட்டபொம்மனாக கர்ணனாக கப்பலோட்டியவனாக கடந்தானே கடல்தனை கடந்து கவுரவம் கண்டானே கன்னித்தமிழால் கலையுலகை கடைசிவரை  கலங்கடித்தானே கர்மவீரரின் கண்ணியத்தால் கட்சியவரின் களமிறங்கி கடமையாற்றினானே கஷ்டப்பட்டதை கரைத்தான் கட்சிக்காக கர்மவீரனுக்காக கரமுயர்த்திய  கர்ணனேயானானே கண்டபாரதத்திற்காக கர்மவீரரும் கடந்தாரே கணேசன் கவலை கரை கடக்காதது...

திரைப்படங்களில் நடிக்க சிவாஜி வாங்கிய சம்பளங்கள்

படம்
சிவாஜி வாங்கிய சம்பளங்கள்.. முதல் படமான பராசக்தியில் சிவாஜி நடித்தபோது மாத சம்பளத்திற்குத்தான் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.அதிலும் படத்தில் நடித்தபோது சிவாஜி ஒல்லியாக இருப்பதை காரணம் காட்டி சிவாஜியை பல மாதங்கள் நன்றாக சாப்பிட்டு ஓய்வு எடுக்கும் படி ஏவிஎம் நிறுவனத்தால் கட்டாயப்படுத்தப்பட்டார். பராசக்தி படத்தில் நடித்ததற்காக சிவாஜிக்கு மாதச் சம்பளமாக ரூபாய் 250 கொடுக்கப்பட்டது.ஒரே படத்தின் மூலமாக ஒரே நாளில் சூப்பர்ஸ்டாரான சிவாஜிக்கு கொடுக்கப்பட்ட மாதச் சம்பளம் 250 ரூபாய். பராசக்தியில் நடித்து கொண்டிருந்த காலத்திலேயே சிவாஜியை தன் பணம் படத்திற்காக கலைவாணர் ஒப்பந்தம் செய்தார்.இந்த படத்தில் நடிக்க எவ்வளவுசம்பளம் கேட்பது என்று சிவாஜிக்கு கூட இருந்த சினிமா நண்பர்களே சிவாஜிக்காக பேசி 25000 ரூபாய் சம்பளம் வாங்கி கொடுத்தனர்.ஆக பணம் படத்திற்காக சிவாஜி வாங்கிய  சம்பளம் 25000. 1954ல் வெளிவந்த கூண்டுக்கிளி படத்தில் நடித்தபோது சிவாஜி ராமண்ணாவிடம் அட்வான்ஸ் எதுவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். ராமண்ணாவிடம் உங்கள் கையால் சில வெள்ளிக் காசுகளை மட்டும் கொடுங்கள் என்று கேட்டு வாங்கிக் கொண்டார...

ராஜ்கபூருக்காக சாந்தி தியேட்டரை விட்டுக் கொடுத்த சிவாஜி

படம்
சிவாஜியோட படங்களை எந்த வித இடைஞ்சலும் இல்லாமே ரிலீஸ் பண்றதுக்காகவே சாந்தி தியேட்டரை சென்னையிலே தொடங்குனாங்க. சாந்தி தியேட்டர்லே முதல்ல போட்ட படம் சிவாஜி படமில்லே.சிவாஜி படம் சாந்தியிலே போடற வரைக்கும் சிவாஜி படங்களை சித்ரா தியேட்டர்லே தான் போட்டுட்டு இருந்தாங்க. பாவ மன்னிப்பு படத்தை முதல் முறையா ரிலீஸ் பண்ணி அது வெள்ளிவிழா ஓடுன பின்னாலே தான் சிவாஜி படங்களை ரிலீஸ் பண்ணிணாங்க. 1964 லிலே சிவாஜி பிலிம்ஸ் புது படம் தயரிக்குது. பெரிய பொருட்செலவிலே கலர் படமா தயாரிச்சாங்க.புதிய பறவை தான் அது.சிவாஜி பிலிம்சோட முதல் கலர் கனவு படம் அது.புதிய பறவை படத்தை சாந்தி தியேட்டர்லே தான் கண்டிப்பா ரிலீஸ் பண்ணுவாங்க அப்படின்னு எல்லோரும் நினைச்சுகிட்டு இருந்தப்போ அந்த படத்தை சாந்தியிலே ரிலீஸ் பண்ணலே.சிவாஜியோட சொந்தப்படம்,பெரிய படம் ,முதல் படம் இப்படிப்பட்ட படத்தை சொந்த தியேட்டரான  சாந்தியிலே ஏன் ரிலீஸ் பண்ணலே.இதுக்கு பின்னாலே ஆச்சர்யமான ஒரு விஷயம் இருக்கு. ஆரம்ப காலத்துலே பல படங்கள்லே வில்லன் டைப் ஆன்டி ஹீரோ வேஷங்களை தைரியமா செஞ்ச சிவாஜி சில வருஷமா அந்த மாதிரியான வேஷங்களை செய்யறதுக்கு வாய்ப்பு அமையலே.1964 ...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்