சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலம்

படம்
2001ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ம் தேதி. இந்த தேதிக்கு இரண்டு நாட்கள் முன்பாக தினகரன் பத்திரிக்கை தனது தலைப்புச்செய்திகள் விளம்பர வால் போஸ்டரில் இந்த செய்தியையும் போட்டிருந்தது. நடிகர்திலகம் சிவாஜிகணேசன் உடல் நலக் குறைவு காரணமாக  மருத்துவமனையில் அனுமதி என்று அந்த தகவலை சொன்னது. அந்த 90 கள் காலகட்டம் சிவாஜிக்கு உடல் நலக் குறைவை மாறி மாறி கொடுத்துக் கொண்டிருந்தது.சிவாஜி உடல் நல குறைவை பற்றி பல முறை பத்திரிக்கை செய்திகளாக வந்துள்ளது. இப்போது வந்த அந்த செய்தியும் பின் வரும் காலகட்டம் மறக்க வைக்கும் என்று தான் அந்த செய்தியை அன்று பார்த்த போதும் நினைக்க வைத்தது. 21.07.2001.இரவு எட்டு மணி இருக்கும். சன் டிவியின் செய்தி  வாசிப்பு அறை. எப்படிப்பட்ட செய்தியாக , தகவலாக இருந்தாலும் அதை சகஜமாக எடுத்து கடந்து போகும் சன் டிவியின் செய்தி வாசிப்பு குழு அந்த நேரத்தில் வந்த அந்த செய்தியை கேட்டதும் அதிர்ந்துதான் போனார்கள்.அப்போது சன் டிவியின் செய்தி எடிட்டராக இருந்தவர் ராஜா. இன்றைக்கெல்லாம் நியூஸ் சேனல்கள் ஓடுவதே கீழே ஓடும் அந்த ஸ்கோரிலிங் செய்திகளால் தான். லேலே குறிப்பிட் அன்றைய கால கட்டத்தில் இது ம...

சிவாஜியின் நடிப்புக்கு இன்ஸ்பிரேஷன் ஆக இருந்த விஐபிகள்

சிவாஜி தன்னோடசில பட கேரக்டர்களுக்கு சில முக்கியமான நபர்களைப் பாத்து பழகுனப்போ அவங்களோட நடை பாவனைகளை தன்னோட கேரக்டர்களுக்கு இன்ஸ்பிரேசனா பயன்படுத்தியிருப்பார்.அப்படி சிவாஜி எந்தெந்த படங்களுக்கு யாரையெல்லாம் இன்ஸ்பிரேசனா எடுத்து நடிச்சிருக்கார் அப்படிங்கறதை இதுல பாக்கலாம்.

முதல்ல கௌரவம் பாரிஸ்டர் ரஜினிகாந்த்.இந்த வேஷத்துக்கு சிவாஜி யாரை இன்ஸ்பிரேசனா எடுத்து நடிச்சார் அப்பிடிங்கறத சொல்றதுக்கு முன்னாலே அதுக்கு அடிப்படையா அமைஞ்ச நிகழ்ச்சியை பாக்கலாம்.
சிவாஜி எப்ப மதுரை வந்தாலும் பாண்டியன் ஹோட்டல்லதான் தங்குவார் .கௌரவம் பட கதை விவாத சமயத்துலயும் சிவாஜி திடீரென்று மதுரைக்கு வந்தார்.
சிவாஜி முன்னறிவிப்பு இல்லாம திடீர்னு வந்ததால பாண்டியன் ஹோட்டல்ல அவர் தங்கறதுக்கு ரூம் இல்லை. 
அதனால சிவாஜி தங்கறதுக்கு டிவிஎஸ் கிருஷ்ணாவோட கெஸ்ட் ஹவுஸ் ஏற்பாடு செய்யப்பட்டது. இவர் TVS குரூப் முதலாளி.சிவாஜி டிவிஎஸ் கிருஷ்ணாவோட கெஸ்ட் ஹவுஸ்க்கு போனதும் அவரை பாக்குறதுக்கு கிருஷ்ணா வந்தார் .டிவிஎஸ் கிருஷ்ணா சிவாஜியோட பேசிகிட்டு இருந்தப்ப அவர் பேசிக்கொண்டிருந்ததை உன்னிப்பாக கவனிச்சு கிட்டே இருந்தார் சிவாஜி .டிவிஎஸ் கிருஷ்ணா என்ன என்னையவே பாத்துட்டு இருக்கீங்க, அப்படின்னு கேட்டப்ப நீங்க பேசிக்கிட்டே இருங்க எனக்கு தேவைப்படுது அதனால நான் பார்த்துகிட்டு இருக்கேன்னு சொல்லிட்டார்.
டிவிஎஸ் கிருஷ்ணாவோட பேச்சு ஸ்டைல் பாடி லாங்குவேஜ் எல்லாத்தையும் நல்லா கவனிச்சு மனசுல ஏத்திக்கிட்டார் சிவாஜி .
சென்னைக்கு வந்ததும் வியட்நாம் வீடு சுந்தரத்தை கூப்பிட்டு கௌரவம் பட சூட்டிங்குக்கான வேலைகளை ஆரம்பிக்க சொல்லிட்டார் .அப்படி பாரிஸ்டர் ரஜினிகாந்தா சிவாஜி கௌரவம் படத்தில் செஞ்சது டிவிஎஸ் கிருஷ்ணாவை இன்ஸ்பிரேஷன் வச்சுத்தான்.

தங்கப்பதக்கம் எஸ்பி சௌத்ரி .
இதுக்கு சிவாஜி இன்ஸ்பிரேஷன் எடுத்துகிட்டது போலீஸ் ஆபீஸர் வால்டர் தேவாரம். இதுக்கு காரணமா அமைஞ்ச  ஒரு நிகழ்ச்சியை இங்கே சொல்லணும் .
தங்கச் சுரங்கம் பட சூட்டிங்குக்காக சிவாஜி ஊட்டி போயிருந்தார். சிவாஜிய பாக்குறதுக்கு நிறைய மக்கள் கூட்டம் சேர்ந்துடுச்சு. படப்பிடிப்புல இருந்தவங்கனால அந்த கூட்டத்தை சமாளிக்க முடியல .அந்தக் கூட்டத்தை சமாளிக்க போலீச வரவழைச்சாங்க. அப்போ ஸ்பீடா ஜீப்ல வந்து இறங்கினார் வால்டர் தேவாரம். 
வால்டர் தேவாரம் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக லத்திய வீசி கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். 
வால்டர் தேவாரம் ஜீப்ல இறங்குன அந்த நிமிஷத்தில் இருந்து, கூட்டத்தை சமாளிக்க வால்டர் தேவாரம் எடுத்துகிட்ட அந்த முயற்சிகளை எல்லாம் சிவாஜி தூரத்திலிருந்து உன்னிப்பாக கவனித்து கொண்டே இருந்தார்.
அவரோட அந்த கம்பீரம் ஸ்டைல் எல்லாம் சிவாஜிக்கு பிடிச்சு போச்சு .அந்த ஒரு நிகழ்வை வெச்சு தங்கப்பதக்கம் சினிமா எடுத்தப்ப எஸ்பி சௌத்ரி பாத்திரத்துக்கு வால்டர் தேவாரத்தை இன்ஸ்பிரேஷனா எடுத்துகிட்டார் ...

அதே மாதிரி திருவருட்செல்வர் படத்த்துலே  அப்பரா சிவாஜி நடித்திருப்பார். இந்த கேரக்டரை எப்படி பண்ணலாம்னு சிவாஜி யோசனை செஞ்சப்போ சிவாஜி நினைவுக்கு வந்தவர் காஞ்சிப்பெரியவர். சிவாஜி பெரியவரை ஒரு முறை சந்திச்சப்போ அவர் பேசுனது நடந்துகிட்டது எல்லாம் சிவாஜியை கவர் பண்ணிடுச்சு.
திருவருட்செல்வர் படம் பண்ணுனப்போ சிவாஜிக்கு அவருடைய ஞாபகம் தான் வந்தது. அவர மனசுல வச்சுக்கிட்டு சிவாஜி செஞ்ச வேஷம் தான் திருவருட்செல்வர் அப்பர் வேஷம் .

ராமன் எத்தனை ராமனடி படத்துலே முன்பாதி வெகுளி கேரக்டரான சாப்பாட்டு ராமன் பாத்திரத்துக்கு   சிவாஜி யாரை 
மனசுல வெச்சுட்டு அந்த பாத்திரத்தை செஞ்சார்னு சொன்னா பெரிய ஆச்சர்யமா இருக்கும்.ஒரு தடவை சிவாஜி ஒரு படத்துக்காக 
கும்பகோணத்துக்கு போயிருந்தார்.அங்க நிறைய கூட்டம் இருந்துச்சு.அவ்வளவு கூட்டத்துலேயும் ஷுட்டிங் நடந்துகிட்டிருந்த இடத்துக்கு பக்கத்துலே ஒரு அதிக விபரம் இல்லாத மாதிரி வெகுளியா சுத்திக்கிட்டு இருந்தும் ,வழ வழன்னு பேசிகிட்டும் இருந்த ஒரு நபரை பாத்துகிட்டு இருந்தார்.அவரை சிவாஜி வரவழைச்சு சாப்பாடு எல்லாம் போட்டு அவர் பேசுனத எல்லாம் நல்லா கவனிச்சுக்கிட்டார்.அந்த நபரை மனசுல வச்சுகிட்டு சிவாஜி பண்ணுன கேரக்டர்தான் ராமன் எத்தனை ராமனடி படத்துலே பண்ணுன சாப்பாட்டு ராமன்பாத்திரம்.

ஆண்டவன் கட்டளை படத்தில் வர்ற ஒரு பாட்டு ஆறு மனமே ஆறு .இந்த ஒரு பாட்டுல சிவாஜி மூணு தோற்றத்தில் வருவார். இந்த மூணு தோற்றத்துக்கும் சிவாஜி இன்ஸ்பிரேஷனா எடுத்துகிட்டது ராமகிருஷ்ண பரமஹம்சர் விவேகானந்தர் சாய்பாபா ஆகிய மூணு மகான்களை .பாட்டுல வர்ற மூணு சரணத்துக்கும் மேல சொன்ன மூணு மகான்களோட தோற்றத்த காண்பித்து இருப்பார் சிவாஜி.

நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியார் தயாரித்த படம் பெற்ற மனம். இந்த படத்துலே சிவாஜி வெண்தாடி ,தோற்றம்னு வித்தியாசமா மேக்கப் செஞ்சு நடிச்சிருப்பார் .இந்த கேரக்டருக்கு இன்ஸ்பிரேசனா சிவாஜி பெரியாரோட தோற்றத்தை முன்னுதாரணமா எடுத்து நடிச்சிருப்பார்.இந்தப் படத்தை பற்றி சிவாஜி கருத்து சொன்னப்போ,ஐயாவை போல வேஷம் போட்டு நான் நடிச்ச படம் அப்படின்னு சொல்லி இருக்கார். 

சிவாஜிக்கு பிடித்தமான ஊர் பொள்ளாச்சி. வேட்டைக்காரன் புதூர் சேத்துமடை ஆகிய ஊர்களில் சிவாஜிக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். விவசாயத் தொழில் செழிப்பாக இருக்கும் ஊர்கள்.பொள்ளாச்சிக்கு சிவாஜி வரும்போது அங்குள்ள வயல்வெளிகளையும் தோப்புகளையும் அடிக்கடி சுற்றிப் பார்ப்பார். அங்கு வயல்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுடனும்,
விவசாயிகளுடனும் சிவாஜி சகஜமாக பேசுவார். சிவாஜி நடித்த பழனி ,மக்களைப் பெற்ற மகராசி படங்களில் அந்த விவசாயத் தொழிலாளர்களுடன் பழகியதை வைத்தே படத்தில் செய்தார்.

ஞானப்பறவை படத்தில் சிவாஜி நடிக்க யாகவா முனிவரை இன்ஸ்பிரேசனாக எடுத்துக்கொண்டார்.

இப்படி தன்னுடன் பழகிய ,சமூகத்தில் வித்தியாசமான மேனரிசங்களை கொண்ட மனிதர்களை பார்க்கும் போதும் பழகும் போதும் அவர்களுடைய பாவனைகளை கூர்ந்து கவனிக்கும் பழக்கம் கொண்ட சிவாஜி வாய்ப்பு கிடைக்கும் போது, தேவைப்பட்டால் தன் பட கேரக்டர்களுக்கு பயன்படுத்திக் கொள்வார்.அவ்வாறு சிவாஜி உபயோகப்படுத்திய சில கேரக்டர்கள்தான் இதில் சொல்லப்பட்டுள்ளது.

செந்தில்வேல் சிவராஜ்..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற