இடுகைகள்

வெள்ளிவிழா படங்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

சிவாஜியின் வெள்ளிவிழா படங்கள்

படம்
நடிகர்திலகம் சிவாஜிகணேசன் நடித்த வெள்ளிவிழா திரைப்படங்கள். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த மொத்த நேரடி தமிழ் படங்கள் 288. 1952 ல் நடிக்க தொடங்கி 47 வருடங்களாக திரையுலகில் நடித்துக் கொண்டிருந்தார். 1988 வரை 36 வருடங்களாக ஓய்வில்லாமல் படங்களை நடித்து வெளியிட்டுக் கொண்டிருந்தார் நடிகர் திலகம்.  இந்த 36 வருடங்களில் நடிகர் திலகத்தின் பட சராசரியை எடுத்துக் கொண்டோமானால் வருடத்திற்கு எட்டு படங்கள் கணக்காகின்றது. ஆக 45 நாட்களுக்கு ஒரு படம் வெளியானது என்று கணக்காகின்றது . ஒரு படம் வெள்ளி விழா ஓட வேண்டும் என்றால் 175. நாட்கள் ஓடி இருக்க வேண்டும் . 175 நாட்கள் என்று கணக்கு வரும் போது கிட்டத்தட்ட நான்கு படங்கள் சிவாஜி படங்கள் வெளியாகி இருக்கும் .இப்படி வெளியானால் அது 100 நாள் ஓடுவதற்கே பெரும் தடையாக அல்லவா  இருக்கும் . இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் நடிகர் திலகத்தின் படங்கள் வெள்ளிவிழா ஓடி வெற்றி வாகை சூடிய பட பட்டியலை  காணலாம் . 1.நடிகர் திலகத்தின் முதல் படமான பராசக்தியே நடிகர் திலகத்தின் வெள்ளி விழா பட்டியலில் முதலாவதாக இடம்பெற்றுள்ளது . இலங்கை மைலன் திரையரங்கில் 266 நாட்கள் ஓடி வெள...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்