இடுகைகள்

மார்ச், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

மக்களை பெற்ற மகராசி -செங்கோடனின் கொங்குத்தமிழ்

படம்
புதிய பதிவு.. மக்களை பெற்ற மகராசி... பேச்சுத் தமிழில் கொங்கு பாஷைக்கு தனி மரியாதை உண்டு.மற்ற வட்டார பாஷைகளை காட்டிலும் கொங்கு பாஷையில் மரியாதை அதிகம் கொட்டும்.தமிழ் திரைப்படங்களில் வட்டார பாஷைகளை முழுதும் காட்டிய படங்கள் விரல் எண்ணிக்கையில்தான்.கொங்கு பாஷையை சிலகாட்சிகள் தான் சில படங்கள் காட்டியிருந்தன.முழுவதும் காட்டிய படமாகவும், முத்தாய்ப்பான படமாகவும் மக்களைப் பெற்ற மகராசியை  சொல்லலாம். செந்தமிழ் வசனங்கள் , வீர வசனங்கள்  கர்ஜனை புரிந்த வசனங்கள், அடுக்கு மொழி வசனங்களில் மிரட்டிய நடிகர்திலகம் கொங்கு பாஷையையும் விட்டு வைக்கவில்லை.செந்தமிழ் வசனங்களையே பேசி வரும் எவருக்கும் வட்டார பாஷை சறுக்கவே செய்யும்.அந்த சறுக்கலில் விழாமலும், ஜெயித்தும் காட்டியவர் நடிகர்திலகம்.மக்களைப் பெற்ற மகராசி கொங்கு மண்ணுக்கு பெருமை சேர்த்த படம். செங்கோடன் என்ற பாத்திரத்தில் நடிகர்திலகம்.இந்த பாத்திரத்தின் தன்மையை கொண்ட இளைஞர்களை  இன்றும் கொங்கு மண்டல விவசாயம் செய்வோரிடம் காணலாம். அதிகம் படிக்காத, மூர்க்கத்தனமான வீரம்,  உறவுகளிடம் தோழமை, நேர்மையான உழைப்பு கலந்த குணங்களை கொண்டது தான் இப் பாத்த...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்