இடுகைகள்

ஆகஸ்ட், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

சிவாஜி கதை கேக்கறாரா? தூங்கறாரா?

படம்
சிவாஜி கதை கேக்குற விதமே மத்த நடிகர்கள் கதை கேக்கற விதத்துல இருந்து வேறுபட்டது.அவர் கிட்ட கதாசிரியர்கள் கதை சொல்லறப்போ ,எதிர்லே இருக்கறவங்களை நல்லா கவனிச்சுகிட்டு கதையை சொல்லுங்கன்னு கேக்க ஆரம்பிப்பார்.கொஞ்ச நேரத்துலே கண்ணை மூடிட்டு அமைதியா உக்காந்துக்குவார்.கதை ரொம்ப நேரமா சொல்லிட்டு வர்றவங்க சிவாஜி எங்க தூங்கிட்டாரோன்னு சட்டுன்னு கதை சொல்றதை நிப்பாட்டுவாங்க.என்னடா சத்தத்தை காணோம்னு சிவாஜி கண்ணு முழிச்சு ,ஏப்பா நிப்பாட்டிட்டேன்னு கேக்கறப்போ கதை சொல்றவங்களுக்கு திக்குன்னு ஆயிடும். நீங்க ஒண்ணும் ரியாக்சன் காட்டலே , தூங்கிட்டிங்களோன்னு நெனச்சுட்டோம்னு அவங்க நினச்சத சிவாஜிகிட்ட சொல்லாமே மழுப்பலா ஏதோ ஒரு பதிலைச் சொல்லி ,மறுபடியும் தொடர்ந்து கதை சொல்ல ஆரம்பிப்பாங்க.இருந்தாலும் அவங்களுக்கு ஒரு சந்தேகம் இருந்துட்டே இருக்கும்.முழு கதையையும் கேட்ட பின்னாலே சிவாஜி கண்ணு முழிச்சு , அந்த கதையிலே அந்த கேரக்டரை பத்தியும் ,கதையை பத்தியும் கரெக்ஷன் சொல்லுவாரு .அத அப்படிச் செய்யாலாமா ,இதை இப்படி பண்ணலாமான்னு யோசனை சொல்லுவார்.அதை கேட்டதும் கதையாசிரியர்கள் ஆடிப் போவாங்க.இப்படி பல தடவை இது மாதிரி நடந்துரு...

தமிழ்நாட்டில் சிவாஜி படங்கள் எடுக்கப்பட்ட ஊர்கள்

தமிழ்நாட்டில் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் காலடி படாத ஊர்களே இல்லை எனலாம்.சிவாஜியளவுக்கு சினிமாவுக்காக பயணம் செய்தவர்கள் யாரும்  இல்லை எனௌறும்கூறலாம். .சிவாஜியவர்களின் திரைப்படங்கள் தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த ஊர்களில் எடுக்கப்பட்டது என்பதை ஒரு பார்வை பார்க்கலாம். ஒரு திரைப்படம் ஒரு ஊரில் முழுவதுமாக ,அல்லது சில காட்சிகள் மட்டும் படமாக்கப்பட்டிருக்கும்.அந்த விபரங்களை தான் இதில் நாம் பார்க்கப்போகிறோம்.. சென்னை சென்னையில் ஏராளமான படங்கள்.உதாரணத்துக்கு திருடன் படத்தில் வரும் ஷுட்டிங் காட்சி .சென்னை நகரில் முக்கிய தெரு ஒன்றில் படஷுட்டிங் நடத்துவது போன்ற காட்சி படமாக்கப்பட்டிருக்கும்.. நீலவானம் சாந்தி தியேட்டர் காட்சி... பட்டிக்காடா பட்டணமா ,எங்கமாமா என்று நிறைய படங்கள் சென்னையில் படமாக்கப்பட்டுள்ளது. தர்மம் எங்கே திரைப்படம் கடலூரில் எடுக்கப்பட்டன. தர்மம்எங்கே படத்தில் க்ளைமாக்ஸில்  காண்பிக்கப்படும் கோட்டை காட்சிகள் செஞ்சிக்கோட்டையில் படம் பிடிக்கப்பட்டவையாகும். பொன்னூஞ்சல் திரைப்படம் வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள ஏலகிரி பகுதியிலும்,ஆகாயப் பந்தலிலே என்ற பாடல் இந்த பகு...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்