தமிழ்நாட்டில் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் காலடி படாத ஊர்களே இல்லை எனலாம்.சிவாஜியளவுக்கு சினிமாவுக்காக பயணம் செய்தவர்கள் யாரும் இல்லை எனௌறும்கூறலாம்.
.சிவாஜியவர்களின் திரைப்படங்கள் தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த ஊர்களில் எடுக்கப்பட்டது என்பதை ஒரு பார்வை பார்க்கலாம்.
ஒரு திரைப்படம் ஒரு ஊரில் முழுவதுமாக ,அல்லது சில காட்சிகள் மட்டும் படமாக்கப்பட்டிருக்கும்.அந்த விபரங்களை தான் இதில் நாம் பார்க்கப்போகிறோம்..
சென்னை
சென்னையில் ஏராளமான படங்கள்.உதாரணத்துக்கு திருடன் படத்தில் வரும் ஷுட்டிங் காட்சி .சென்னை நகரில் முக்கிய தெரு ஒன்றில் படஷுட்டிங் நடத்துவது போன்ற காட்சி படமாக்கப்பட்டிருக்கும்..
நீலவானம் சாந்தி தியேட்டர் காட்சி...
பட்டிக்காடா பட்டணமா ,எங்கமாமா என்று நிறைய படங்கள் சென்னையில் படமாக்கப்பட்டுள்ளது.
தர்மம் எங்கே திரைப்படம் கடலூரில் எடுக்கப்பட்டன.
தர்மம்எங்கே படத்தில் க்ளைமாக்ஸில் காண்பிக்கப்படும் கோட்டை காட்சிகள் செஞ்சிக்கோட்டையில் படம் பிடிக்கப்பட்டவையாகும்.
பொன்னூஞ்சல் திரைப்படம் வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள ஏலகிரி பகுதியிலும்,ஆகாயப் பந்தலிலே என்ற பாடல் இந்த பகுதியில் தான் எடுக்கப்பட்டது.
பாதுகாப்பு திரைப்படம் தென் ஆற்காடு மாவட்டத்தில் உள்ள கடலூர் பகுதியிலும்,
மண்ணுக்குள் வைரம் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கோபிசெட்டிபாளையத்திலும்,
பாவை விளக்கு படத்தில் வரும் ஆயிரம் கண் போதாது வண்ணத் தமிழ் பெண்ணொருத்தி ஆகிய பாடல்கள் மற்றும் சில காட்சிகள் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த குற்றாலம் பகுதியில் எடுக்கப்பட்டது.
கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி பகுதியில் நடிகர் திலகத்தின் பல படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. பாகப்பிரிவினை படத்தில் வரும் தாழையாம் பூ முடிச்சு பாடல் சேத்துமடை பகுதியிலும்,
விடிவெள்ளி பட பலகாட்சிகள் சேத்துமடை பகுதிகளிலும் ,
நாம் இருவர் பட சில காட்சிகள் பொள்ளாச்சி பகுதிகளில்,
தேவர் மகன் பசும்பொன் திரைப்படங்கள் சிங்காநல்லூர் பங்களாவிலும்,வீரபாண்டியன் திரைப்பட சில காட்சிகள் பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி ஊரிலும் ,கல்தூண் படம் முழுதும் பொள்ளாச்சி சேத்துமடை காளியாபுரம் இன்னும் சில ஊர்களிலும் ,
கல்தூண் திரைப்படத்தில் வரும் அந்த சிறிய கோவில் காளியாபுரத்தில் படத்துக்காக கட்டப்பட்டது..
என்று இன்னும் பல படங்கள் பொள்ளாச்சியில் படமாக்கப்பட்டுள்ளன .
செல்வம் பட பாடல் காட்சி திருச்சி கல்லணையில் படமாக்கப்பட்டது.
இருவர் உள்ளம் படத்தின் சில காட்சிகள் கன்னியாகுமரியில் எடுக்கப்பட்டது.
பாஞ்சாலங்குறிச்சி கயத்தாறு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்ட படம் வீரபாண்டிய கட்டபொம்மன்.
திருவாரூரில் எடுக்கப்பட்டன தில்லானா மோகனாம்பாள் படத்தின் சில காட்சிகள்.
சிவந்தமண் படத்தில் வரும் அந்த ஹெலிகாப்டர் குண்டு போடும் காட்சி செங்கல்பட்டு பகுதியில் படமாக்கப்பட்டது.
திருப்பரங்குன்றம்
திருச்செந்தூர்
பழனி
அழகர்மலை
திருத்தணி
சுவாமிமலை...
ஆகிய இடங்களில் ஆண்டவன் கட்டளை படத்தில் வரும் ஆறு மனமே ஆறு பாடல் படமாக்கப்பட்டது.
ஞானஒளி படம் பூண்டியிலும் மாதாகோயிலிலும் படமாக்கப்பட்டது.
மிருதங்க சக்கரவர்த்தி சுசீந்திரத்தில் படமாக்கப்பட்டது.நடிகர்திலகம் வசிக்கும் அந்த வீடு, தெப்பக்குளம் எல்லாம் சுசீந்திரத்தில் எடுக்கப்பட்டது.
சவாலே சமாளி திரைப்படம் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த மல்லியம் என்ற ஊரில் எடுக்கப்பட்டது .இப் படத்தை இயக்கிய ராஜகோபால் இந்த ஊரை சேர்ந்தவர்.
பட்டிக்காடா பட்டணமா படம் மதுரை சோழவந்தான் கிராமத்தில் எடுக்கப்பட்டது.
சில நகர காட்சிகள் சென்னையில் எடுக்கப்பட்டது.
விளையாட்டுப்பிள்ளை காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த படப்பை கிராமத்தில் எடுக்கப்பட்டன.
பிராப்தம் படத்தின் சில காட்சிகள் கடலூரில் எடுக்கப்பட்டவை.
மன்னவன் வந்தானடி படத்தில் வரும் காதல் ராஜ்ஜியம் எனது பாடல் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு பகுதியில் எடுக்கப்பட்டது.
சிவாஜி கணேசன் நடித்த "பழனி " படம் தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகில் உள்ள புளியரை என்ற ஊரில் படமாக்கப்பட்டுள்ளது
திருவண்ணாமலையில் உள்ள
சாத்தனூர் அணைக்கட்டில் நடிகர்திலகத்தின் பல படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
அருணோதயம் படத்தில் வரும் உலகம் ஆயிரம் சொல்லட்டுமே பாடல் காட்சி அங்குதான் எடுக்கப்பட்டது.
திருவருட்செல்வர் படத்தில் வரும் மாசில் வீணையும் பாடல் வேதாரண்யத்தில் எடுக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஊட்டிவரை உறவு ,சுமதி என் சுந்தரி படங்களின் பெரும்பாலான காட்சிகள் எடுக்கப்பட்டன.ஊட்டியில் நிறைய படங்களின் பாடல் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானலில் ஞானஒளி படத்தில் வரும் தேவனே என்னை பாருங்கள் பாடல் ,உயர்ந்த மனிதன் பாடல்கள், காட்சிகள் மற்றும் நிறைய படங்கள் எடுக்கப்பட்டன.
கர்ணன் படத்தில் வரும் வில்வித்தை காட்சிகள் ,
வளைகாப்பு காட்சிகள் தஞ்சாவூர் அரண்மைனையில் படமாக்கப்பட்டது.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் திருவிளையாடல் பட காட்சிகள் எடுக்கப்படன.
நாம் பிறந்த மண் படம்
ஈவிகே சம்பத் வீட்டில் சென்னை வேப்பேரியில் படப்பிடிப்பு நடந்தது
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், பெரும்பாலான ஊர்களில் நடிகர் திலகத்தின் காலடி படாத இடங்களில் இல்லை எனலாம். இந்த பதிவில் சொல்லப்படாத ஊர்கள் நிறைய உண்டு. சினிமாவுக்காக அதிக ஊர்களுக்கு பயணப்பட்ட நடிகர்களில் நடிகர் திலகமே முதலிடம் வகிக்கிறார் ..
செந்தில்வேல் சிவராஜ்
கருத்துகள்
கருத்துரையிடுக