இடுகைகள்

ஜனவரி, 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

என் தம்பி -என்ன ஸ்பெசல்?

படம்
k.பாலாஜி சிவாஜியை வெச்சு எடுத்த முதல் படம் தங்கை. இதுக்கு அடுத்ததா சிவாஜியை வெச்சு எடுத்த படம் என்தம்பி . 1968 லே வந்துச்சு. கதைக்காக எதை செலக்சன் பண்றதுன்னு பாலாஜி முடிவு செஞ்சப்போ அவருக்கு கை கொடுத்தது ஒரு தெலுங்கு படம்.நாகேஸ்வரராவ் ஜெயலலிதா நடிச்சு தெலுங்குலே ஹிட்டான ஆஸ்திபரலு தான். இந்த படத்தை எடுக்கச் சொல்லி ஜடியா கொடுத்தவர் ஜாவர் சீதாராமன். இந்த படம் ஒரு குடும்பக்கதையா இருந்தாலும் சில ஆக்ஷன் காட்சிகளும் படத்துலே இருந்துச்சு. ஆரம்பத்துலே அரச கதையிலே சிவாஜி நடிச்ச்சிட்டு இருந்தப்போ வாள்சண்டை போட்டு நடிச்சிருந்தார்.கொஞ்சம் கேப் ஆயிடுச்சு.இந்த படத்துக்காக மறுபடியும் வாள் சண்டையிலே சிவாஜி நடிச்சார்.பல வருஷம் தூங்கிட்டு இருந்த வாளை சிவாஜி மறுபடியும் இந்த படத்துக்காக எடுத்தப்போ அது வேற ஒரு அட்ராக்சன்லே அட்ரா சக்கைன்னு சொல்ல வெச்சது. பேன்ட் சட்டை போட்ட கையிலே ஒரு வாள்.சிவாஜி கொடுத்த போஸை பாத்தப்போ ரசிகர்களை குதியாட்டம் போட வெச்சது. நின்ன போசுக்கே இப்படின்னா ரீலா ஓடுனத பாத்தப்போ வேற லெவலா இருந்துச்சு. வாள் சண்டை மட்டும்தானா அசர வெச்சது? அதை விட சாட்டையை வெச்சே கலக்கியெடுத்தார் சிவாஜி....

sivaji mgr film

படம்
நடிகர்திலகம் சிவாஜியும் எம்ஜிஆரும் நடித்த படம் கூண்டுக்கிளி.இந்த படம் 1954 ஆம் ஆண்டு வெளி வந்தது. இரு தரப்பு ரசிகர்களால் நடந்த சண்டை சச்சரவுகளால் மேற்கொண்டு இருவரும் இணைந்து நடிக்காமல் போனது.சரியான கதை அமைப்பு ,அதற்கான முயற்சிகள், வாய்ப்பும்.. அதற்கு பின்பு அமையாமல் போனதும் ஒரு காரணம்.இருந்தாலும் நடிகர்திலகமும் எம்ஜிஆரும் இணைந்து ஒரு படத்திலாவது நடிக்க மாட்டார்களா என்ற எதிர்பார்ப்பும் சில ரசிகர்களிடம் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டே நெடுங்காலமாக இருந்து வந்தது. நடிகர்திலகம் நடிக்க வந்து இரண்டே வருடங்களில் கூண்டுக்கிளி படம் வந்து அதோடு அந்த இருவர் கூட்டணி நடைபெறாமல் போய் விட்டது.இது நடந்து கிட்டத்தட்ட இருபது வருடங்கள் கழித்து  அதற்கு ஒரு வாய்ப்பு வந்தது.அதற்கான முயற்சியை மேற்கொண்டவர் தயாரிப்பாளர் K.பாலாஜி.இருவரையும் வைத்து பாலாஜி செய்ய நினைத்த படம் என்ன? அதற்கு பின் என்னநடந்தது? 1975 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று வெளியானஇந்தி  படம் ஷோலே.தர்மேந்திரா அமிதாப்பச்சன் சஞ்சீவ்குமார் ஹேமாமாலினி ஜெயாபாதுரி  அம்ஜத்கான் ஆகியோர் முக்கிய  வேடங்களில் நடித்த திரைப்படம் இது. ஷோலே இந்தி த...

சாந்தியில் வெளியான 82 சிவாஜி படங்கள்

படம்
நடிகர்திலகம் சிவாஜியின் சொந்த திரையரங்கான சென்னை சாந்தியில் வெளியான சிவாஜி படங்கள் 82.அந்த திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் காணலாம். அதற்கு முன்பு சாந்தி திரையரங்கை பற்றிய ஒரு பிளாஸ்பேக். சாந்தி தியேட்டர் 1961 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இதை கட்டியவர் ராஜராஜ சோழன் தயாரிப்பாளரான ஜி.உமாபதி.இவருடன் இணைந்து சிவகங்கை ராஜா சண்முகராஜாவும் இதை கட்டினார்கள். சாந்தி தியேட்டருக்கு முதலில் வைக்கப்பட இருந்த பெயர் மனசாட்சி. பின்பு சாந்தி என பெயர் சூட்டப்பட்டது.உமாபதி அவர்களின் மகள் பெயரும் சாந்திதான்.சாந்தி தியேட்டரை திறந்து வைத்தவர் முதல்வர் காமராஜர்.சாந்தி தியேட்டரின் பங்குகளை சிவாஜி விலைக்கு வாங்கி தன் பெயரில் மாற்றம் செய்தார்.தமிழகத்தின் முதல் AC தியேட்டர் சாந்திதான். சாந்தி தியேட்டரில் திரையிடப்பட்ட முதல் படம் தூய உள்ளம். சிவாஜியின் ஆலோசனை படி  தியேட்டரின் உள்ளே,  திரையுலகிற்குப் பெருமை சேர்த்த பிரபலங்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டன.  அணிவகுத்து நிற்கும் இந்த புகைப்படங்களையும் ஒரு சினிமாவுக்குரிய ஆர்வத்துடன் நின்று ரசிகர்கள் பார்ப்பார்கள். தனது சக போட்டியாளரான எம்.ஜி.ஆரின...

தெய்வமே தெய்வமே பாட்டு...

படம்
இப்ப வர்ற படங்கள்லே கதையை சொல்லி கதையிலே வர்ற ஒரு முக்கியமான காட்சியை சொல்லி பாட்டெழுதுங்கன்னு சொன்னா,அந்த பாட்டை கேட்டா கதைக்கும் சம்பந்தம் இருக்காது .அந்த காட்சிக்கும் சம்பந்தம் இருக்காது. ஏதோ ஒண்ணோ ரெண்டோ தப்பிச்சது. பாட்டு கேக்கறீங்களா ,இந்த பாட்டை கேளுங்க ,இனி இந்த பாட்டையே கேக்க கூடாதுன்னுதான் எண்ணம்  வரும்.அப்படி இருக்கு பெரும்பாலான பாட்டுக. என்ன பண்றது. பழைய பாட்டுகள கேட்டு வளந்தவங்களோட எண்ணம் இப்படித்தான் இருக்கும்.அப்படி ரசிச்சு வளந்த  மனசு. இந்த தலைமுறையிலே பழைய பாட்டுகள கேட்டு பழக்கப்பாடாதவங்கதான் , பாட்டுன்ன்னா இப்படித்தான் இருக்கும்னு அவங்க கேக்கறாங்க.அவங்க என்ன பண்ணுவாங்க.  இது தலைமுறை இடைவெளின்னு சொன்னாலும் நாகரீகத்தோட தலைவலின்னுதான் சொல்லணும். கண்ணதாசன்  பாட்டெல்லாம் என்னத்தை சொல்லறது.சில பாட்டுகள்லே படத்தோட கதையையேஅந்த பத்து வரிபாட்டுல சொல்லிருவார்.தெளிவா புரியும் படி இருக்கும். சில பாட்டுகள்லே கதையோடஅந்த காட்சியை தெளிவா சொல்லியிருப்பார் .வசனம் காட்சின்னு காட்ட வேண்டிய படத்தை அந்த பாட்டுலே முடிச்சிரலாம். தெய்வமகன் படத்துலே வர்ற தெய்வமே தெய்வமே பாட்ட...

vadanthamaligai -ATM machine

படம்
வசந்த மாளிகை படத்தை ஒரு ATM ன்னு சொல்லலாம்.எப்போ வந்தாலும் படம் பணமா கொட்டும்.1972 லே படம் வந்தப்பவே இந்த படம் வசூலை சுனாமியா அள்ளி கொட்டுச்சு . 1972 ஆம் வருஷம் படம் வெளியானப்போ 200 நாள் ஓடுச்சு.இதே வருஷத்துலேயே சிவாஜி இன்னொரு வெள்ளிவிழா படத்தையும் கொடுத்திருக்கார்.அது  பட்டிக்காடா பட்டணமா.இந்த படத்துக்கும் வசந்தமாளிகை படத்துக்கும் 4 மாசம்தான் இடைவெளி. அதில்லாமே நாலு  100 நாள் படத்தையும் கொடுத்திருக்கார்.வருஷம் முழக்க தமிழ்நாட்டுலே எல்லா ஊருலயுமே சிவாஜி படங்களா ஓடிட்டு இருந்துச்சு .ஒரு படம் 100  நாள் ஓடி முடியறதுக்குள்ளேயே அடுத்த படம் 100 நாள் ஓடறதுக்கு தயாரா இருக்கும்.எந்த படத்தை தூக்கறது எதைய ரிலீஸ் பண்றதுன்னு ஒரு குழப்பமே இருந்த வருஷம் தான் 1972. இலங்கையிலே ரெண்டு தியேட்டர்லே 200 நாள் ஓடுச்சு வசந்த மாளிகை.அதில்லாமே 13 தியேட்டர்லே 50 நாளை தாண்டி ஓடுச்சு. பத்து வருஷம்  கழிச்சுஇதே இலங்கையிலே  மறு வெளியீடு செஞ்சப்போ 70 நாளுக்கு மேலே ஓடுச்சு. வசந்த மாளிகை படத்துக்கு பின்னாலே இப்ப வரைக்கும் ஏகப்பட்ட காதல் சப்ஜெக்ட் படங்கள் வந்திருக்கு. அதுலே பல படங்கள் பெரிய ஹிட்டு...

சிவாஜி ஜெயலலிதா 100 நாள் திரைப்படங்கள்

படம்
நடிகர்திலகம் சிவாஜி ஜெயலலிதா சேந்து நடிச்ச படங்கள் 20.இந்த இரு பது படங்கள்லே 100 நாள் ஓடுன, வெள்ளிவிழா ஓடுன படங்கள் விபரங்கள பத்தி இதுலே பாக்கலாம். சிவாஜியோட ஜெயலலிதா நடிச்ச படங்கள். 1.மோட்டார் சுந்தரம் பிள்ளை  2.கந்தன் கருணை 3.கலாட்டா கல்யாணம்  4.எங்க ஊர் ராஜா 5..குருதட்சணை 6..தெய்வமகன் 7..எங்கமாமா 8..எங்கிருந்தோ வந்தாள் 9.பாதுகாப்பு 10.சுமதி என் சுந்தரி 11..சவாலே சமாளி 12..ராஜா 13.பட்டிக்காடா பட்டணமா 14.தர்மம் எங்கே 15.நீதி 16..தாய் 17..அன்பைத்தேடி 18.அவன்தான் மனிதன் 19...பாட்டும் பரதமும் 20..சித்ரா பௌர்ணமி ஓடுன நாள் விபரத்தை விட சிவாஜியோட பல சிறப்பான படங்கள்லே ஜெயலலிதா நடிச்சிருக்கார் .அது தான் ஒரு நடிகைக்கு பெருமை.அது என்னென்ன அப்படிங்கறத பாக்கலாம். ஒரு கதாநாயகன்.. அந்த கதாநாயகன் அப்படிங்கற இமேஜை உடைச்சு சிவாஜி நடிச்ச படம்.ஒரு பெரிய குடும்பஸ்தர் 13 குழந்தைகளுக்கு தகப்பன் ரெண்டு மனைவி கொண்ட ஒரு கதையிலே  சிவாஜி அந்த கதையோட நாயகனா நடிச்ச படம் மோட்டார் சுந்தரம் பிள்ளை.இந்த படத்துலே பதிமூணு வாரிசுலே ஒருத்தரா நடிச்சிருப்பார் ஜெயலலிதா. சிவாஜி கூட ஜோடியா ஜெயலலிதா நடிக்கலேன்னா...

சிவாஜி டைரக்சன் செஞ்ச ஒரே படம்

படம்
சார் நீங்க எவ்வளவு பெரிய நடிகர் ,நடிப்பை பத்தி எவ்வளவு தெரிஞ்சு வெச்சிருக்கீங்க ,அப்படி இருக்கும் போது நீங்க ஏன் ஒரு படத்தை டைரக்சன் பண்ணக் கூடாதுன்னு ஒரு சமயம் சிவாஜி கிட்டே கேட்டாங்க. அதுக்கு சிவாஜி சொன்ன பதில்: என்னாலே டைரக்சன் பண்ண  முடியாதுன்னு இல்லே.எனக்கு நடிக்கறதுக்கு நேரம் சரியா இருக்கு.நான் டைரக்சன் பண்ணுணா என்னை நம்பி பல படங்க எடுத்துட்டு இருக்கறவங்களுக்கு அதனாலே காலதாமதம் ஏற்பட்டு பட தாமதம் ஆகலாம்.நடிக்கறது என் தொழில்.டைரக்சன் பண்றது வேற ஒருத்தரோட தொழில்.அவங்க தொழில்லே நான் குறுக்கிட விரும்பலேன்னு  சொல்லியிருந்தார். ஆனா... ஒரு சந்தர்ப்பம் சூழ்நிலை சிவாஜியை டைரக்சன் பண்ண வெச்சது. அதுக்கு காரணம் என்ன ?சிவாஜி டைரக்சன் பண்ணுன படம் எதுங்கறத மேலே பாக்கலாம். அதுக்கு முன்னாலே சில விஷயங்களை சொல்லியாகணும். K.பாலாஜி எப்பவும் மத்த மொழியிலே ஹிட்டான படங்களை விலைக்கு வாங்கி படம் எடுக்கறதுதான் வழக்கம். 1977 லே மலையாளத்திலே நல்ல பேர் வாங்குன ஒரு படத்தையும் இதே மாதிரி விலைக்கு வாங்கி சிவாஜியை வெச்சு படம் எடுக்க திட்டமிட்டார்.இதுக்கு முன்னாலே பாலாஜி படங்களை திருலோகசந்தர் CV .ராஜேந்தி...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்