சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலம்

படம்
2001ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ம் தேதி. இந்த தேதிக்கு இரண்டு நாட்கள் முன்பாக தினகரன் பத்திரிக்கை தனது தலைப்புச்செய்திகள் விளம்பர வால் போஸ்டரில் இந்த செய்தியையும் போட்டிருந்தது. நடிகர்திலகம் சிவாஜிகணேசன் உடல் நலக் குறைவு காரணமாக  மருத்துவமனையில் அனுமதி என்று அந்த தகவலை சொன்னது. அந்த 90 கள் காலகட்டம் சிவாஜிக்கு உடல் நலக் குறைவை மாறி மாறி கொடுத்துக் கொண்டிருந்தது.சிவாஜி உடல் நல குறைவை பற்றி பல முறை பத்திரிக்கை செய்திகளாக வந்துள்ளது. இப்போது வந்த அந்த செய்தியும் பின் வரும் காலகட்டம் மறக்க வைக்கும் என்று தான் அந்த செய்தியை அன்று பார்த்த போதும் நினைக்க வைத்தது. 21.07.2001.இரவு எட்டு மணி இருக்கும். சன் டிவியின் செய்தி  வாசிப்பு அறை. எப்படிப்பட்ட செய்தியாக , தகவலாக இருந்தாலும் அதை சகஜமாக எடுத்து கடந்து போகும் சன் டிவியின் செய்தி வாசிப்பு குழு அந்த நேரத்தில் வந்த அந்த செய்தியை கேட்டதும் அதிர்ந்துதான் போனார்கள்.அப்போது சன் டிவியின் செய்தி எடிட்டராக இருந்தவர் ராஜா. இன்றைக்கெல்லாம் நியூஸ் சேனல்கள் ஓடுவதே கீழே ஓடும் அந்த ஸ்கோரிலிங் செய்திகளால் தான். லேலே குறிப்பிட் அன்றைய கால கட்டத்தில் இது ம...

சிவாஜி ஜெயலலிதா 100 நாள் திரைப்படங்கள்

நடிகர்திலகம் சிவாஜி ஜெயலலிதா சேந்து நடிச்ச படங்கள் 20.இந்த இரு
பது படங்கள்லே 100 நாள் ஓடுன, வெள்ளிவிழா ஓடுன படங்கள் விபரங்கள பத்தி இதுலே பாக்கலாம்.

சிவாஜியோட ஜெயலலிதா நடிச்ச படங்கள்.

1.மோட்டார் சுந்தரம் பிள்ளை 
2.கந்தன் கருணை
3.கலாட்டா கல்யாணம் 
4.எங்க ஊர் ராஜா
5..குருதட்சணை
6..தெய்வமகன்
7..எங்கமாமா
8..எங்கிருந்தோ வந்தாள்
9.பாதுகாப்பு
10.சுமதி என் சுந்தரி
11..சவாலே சமாளி
12..ராஜா
13.பட்டிக்காடா பட்டணமா
14.தர்மம் எங்கே
15.நீதி
16..தாய்
17..அன்பைத்தேடி
18.அவன்தான் மனிதன்
19...பாட்டும் பரதமும்
20..சித்ரா பௌர்ணமி

ஓடுன நாள் விபரத்தை விட சிவாஜியோட பல சிறப்பான படங்கள்லே ஜெயலலிதா நடிச்சிருக்கார் .அது தான் ஒரு நடிகைக்கு பெருமை.அது என்னென்ன அப்படிங்கறத பாக்கலாம்.

ஒரு கதாநாயகன்.. அந்த கதாநாயகன் அப்படிங்கற இமேஜை உடைச்சு சிவாஜி நடிச்ச படம்.ஒரு பெரிய குடும்பஸ்தர் 13 குழந்தைகளுக்கு தகப்பன் ரெண்டு மனைவி கொண்ட ஒரு கதையிலே  சிவாஜி அந்த கதையோட நாயகனா நடிச்ச படம் மோட்டார் சுந்தரம் பிள்ளை.இந்த படத்துலே பதிமூணு வாரிசுலே ஒருத்தரா நடிச்சிருப்பார் ஜெயலலிதா.
சிவாஜி கூட ஜோடியா ஜெயலலிதா நடிக்கலேன்னாலும் ஒரு சிறப்பான படத்துலே நடிச்சிருக்கார் ஜெயலலிதா .

ஆஸ்கார்பரிசுக்காக அனுப்பப்பட்ட முதல் தமிழ்ப்படமான தெய்வமகன் படத்துலே சிவாஜிக்கு ஜோடியா நடிச்சிருந்தார்.இது எவ்வளவு பெரிய விஷயம்.தமிழ் சினிமா வரலாறுலே முக்கியமானது இந்த படம்.

சிவாஜியோட 150 வது படம் சவாலே சமாளி.இந்த 150 வது சிறப்பு படத்துலே கதாநாயகியா நடிச்சவர் ஜெயலலிதா.

சிவாஜியோட 175 வது சிறப்பு படமான அவன்தான் மனிதன் படத்துலயும் நடிச்சிருந்தார் ஜெயலலிதா.

தமிழ் சினிமா வரலாறுலே பெரிய வசூல் சாதனை செஞ்ச கறுப்பு வெள்ளை படம் பட்டிக்காடா பட்டணமா .இந்த படத்துலே கதாநாயகியா நடிச்சவரும் ஜெயலலிதா.

சிவாஜியோட கடைசி கறுப்பு வெள்ளை படம் தாய்.இதுலே நடிச்சவரும் ஜெயலலிதா.

பரதநாட்டியத்தை முக்கிய களமா வெச்சு எடுத்தபடம் பாட்டும் பரதமும்.இந்த படத்துக்கு பரத நாட்டியம் தெரிஞ்ச நடிகையைதான் கதாநாயகியா போடணும்.
ஜெயலலிதாவோட பரத நாட்டிய அரங்கேற்றத்தை நடத்தி வெச்சவரே சிவாஜிதான்.சிவாஜி தலைமையிலே பரத நாட்டிய அரங்கேற்றத்துலே ஆடுன சின்ன பொண்ணு,
பிற்காலத்துலே சிவாஜியோடவே பரத நாட்டியம் சம்பந்தப்பட்ட  பாட்டும்பரதமும் படத்துலே ஜோடியா நடிச்சது ஒரு புதுமையான சிறப்பான விஷயம்.

நிஜமான சினிமா கதாநாயகி ஒரு சினிமாவிலயும் கதாநாயகி வேஷம் போட்டு நடிக்கறது  ஒரு வித்தியாசமான சிறப்பான விஷயம். மத்த கதாநாயகிகளுக்கு அமையாத சிறப்பு விஷயம் .அப்படி ஒரு வாய்ப்பு ஜெயலிதாவுக்கு அமைஞ்சது.அதுவும் சிவாஜி படம் தான்.படம் சுமதி என் சுந்தரி.

ஜெயலலிதாவோட கேரியர்லே அவரோட நடிப்பு திறமைக்கு சவாலா அமைஞ்ச படம் எங்கிருந்தோ வந்தாள்.இந்த படத்தை சொல்லாமே இருக்க முடியாது.

சிவாஜி பீம்சிங் கூட்டணியோட கடைசி படம் பாதுகாப்பு.படம் முழுக்க கதாநாயகியோட ஆக்கிரமிப்புத்தான்.படம் பெரிசா போகலேன்னாலும் இந்த கூட்டணியோட கடைசி படத்துலே நடிச்ச சிறப்பும் ஜெயலலிதாவுக்கு கிடைச்சது.

சிவாஜி துப்பறியும் போலீசா ரொம்ப ஸ்டைலிசா நடிச்சு பெரிய மாஸ் ஹிட்டான படம் ராஜா.இதுல நடிச்சவரும் ஜெயலலிதா.

சட்டத்தை பத்தி எடுத்த தமிழ் சினிமாக்கள்லே ரொம்ப வித்தியாசமா ,இதை சொல்லாமே இருக்க முடியாத படமா அமைஞ்சது நீதி படம்.இதுலே கதாநாயகியா நடிச்சவர் ஜெயலலிதா.இந்த  படத்துலே ஒருபாட்டுலே ,கர்மவீரர் பக்கம் நிற்கும் சிவாஜி பாருங்கன்னு வரி வரும்.இந்த காட்சியிலே 
சிவாஜி காமராஜர் போட்டோவை காட்டுவாங்க. இந்த பாட்டுக்கு நடிச்சவர் ஜெயலலிதா.
சிவாஜியோட ஜெயலலிதா நடிச்ச எல்லா படத்துக்கும் ஏதோ ஒரு சிறப்பு இருக்கு.

சிவாஜி ஜெயலலிதா நடிச்ச படங்கள மொத்தமா சொல்லறப்போ ,ஜெயலலிதா வேற எந்த நடிகர்களோட நடிச்ச எந்த படத்துக்கும் இப்படி பல சிறப்புகள் அமைஞ்சது கிடையாது.

சிவாஜி ஜெயலலிதா நடிச்சு 100 நாள் ,வெள்ளிவிழா ஓடுன படங்கள் எது எது அப்படிங்கறத இனி பாக்கலாம்.

சிவாஜியோட சேந்து நடிச்ச முதல் படமான மோட்டார் சுந்தரம் பிள்ளை படமே 100 நாள் ஓடுன படம்.
இந்த படம் 26.01.1966 லே வெளியான படம்.100 நாள் ஓடுன படங்கற சிறப்பை விட தரமான படம் அப்படிங்கற முத்திரை பதிச்ச படம் மோட்டார் சுந்தரம் பிள்ளை. அந்த வகையிலே இதை உயர்த்தி சொல்ல அருகதை இருக்கு.

1968 ஆம் வருஷம் வெளியான கலாட்டா கல்யாணம் 100 நாள் ஓடுன படம்.சிவாஜி ஜோடியா 
ஜெயலலிதா நடிச்ச முதல் படம் இது.

சிவாஜி ரெட்டை வேஷத்துலே நடிச்ச படம் எங்க ஊர் ராஜா .இதுவும் 100 நாள் ஹிட்டான படம்.1968 ல் வெளியான படம் இது.

5.8.1969 லே தமிழ் சினிமா சரித்திரத்துலே ,நடிப்பை பெரிய அதிசயமா  பாக்க வெச்ச தெய்வமகன் வெளியான தினம்.இந்த படத்தோட தகுதிக்கு 100 நாள் ஓட்டம்கறது ரொம்ப சாதாரணம் தான்.ஆனா அந்த நேரத்துலே சிவாஜி மாசா மாசம் படத்தை வெளியிட்டதாலே இது 100 நாள்  சாதனை படமா அமைஞ்சது.

சிவாஜிக்கு முன்னாலே யாரும் பேரு வாங்க முடியாது.ஆனா சிவாஜி படத்துலே நடிச்சு நிறைய பேர் பெயர் வாங்கி இருக்காங்க.அந்த வகையிலே ஜெயலலிதாவுக்கு நல்ல பேர் வாங்கி கொடுத்த படம் எங்கிருந்தோ வந்தாள்.
1970 லே வெளியான படம் இது.
இதுவும் 100 நாள் ஓடிய படம்.

3.7.71 லே வெளியான சவாலே சமாளி பெரிய ஹிட் படமா அமைஞ்சது.இந்த படம் 100 நாள் ஓடி முடியறதுக்குள்ளேயே சிவாஜியோட மூணு படங்கள் வெளியாகிருச்சு.வெள்ளிவிழாஓட வேண்டிய படம் இது .100 நாள் படமா அமைஞ்சது.

26.01.1972 லே வெளியான ராஜா படம் நல்ல வசூல் செஞ்சது.இது 100 நாள் ஓடுன படம்.இதுவெள்ளிவிழா ஓட வேண்டிய கமர்ஷியல் பட தகுதி படமா இருந்ததும் வரிசையா வந்த சிவாஜியோட சூப்பர் ஹிட் படங்களாலே ராஜா படம் 100 நாள் படமா அமைஞ்சிருச்சி.

 6.5.72 லே வெளியான பட்டிக்காடா பட்டணமா வெள்ளிவிழா சாதனை படமா அமைஞ்சது.கறுப்பு வெள்ளை கிராமிய படங்களிலியே பெரிய வசூல் சாதனை செஞ்சபடமா இந்த படம் அமைஞ்சது.

இதே 1972 லேயே வெளியான நீதி படமும் 100 நாள் ஓடி சாதனை செஞ்ச படம் ஆகும்.
இந்த வருஷம் வெளியான சிவாஜியோட 7 படங்கள்லே 4 படத்துலே கதாநாயகியா நடிச்சார் ஜெயலலிதா.அதுலே 2 நூறு நாள் படம்.ஒண்ணு வெள்ளிவிழா படம்.

11.4.1975 லே வெளியான சிவாஜியோட 175 வது படமான அவன்தான் மனிதன் படமும் 100 ஓடி சாதனை செஞ்ச படம் ஆகும். 

மேலே சொன்ன 20 படங்கள்லே 11 படம் 100 நாள் ஓடி சாதனை செஞ்ச படங்கள்.

5 படங்கள் 50 நாளுக்கு மேலே ஓடிய படங்கள்.

சுமாராக ஓடிய படங்களா இதை சொல்லலாம் .
குரு தட்சணை பாதுகாப்பு சித்ராபௌர்ணமி.

செந்தில்வேல் சிவராஜ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற