இடுகைகள்

ஏப்ரல், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

9 வேஷம் சிவாஜி செய்ய இன்ஸ்பிரேசன் இதுதான்

படம்
ஒரு நடிகர் ரெண்டு வேஷம் போட்டு பாத்திருக்கு தமிழ் சினிமா .மூணு வேஷம் போட்டு நடிச்சதையும் பாத்திருக்கு.இதுக்கு மேலே அஞ்சு வேஷமா ஆறு வேஷமா ஒரே நடிகர் ஒரு படத்துல நடிச்சா எப்படியிருக்கும்.வேஷம்னா மேக்கப் மட்டும்  மாத்தி மாத்தி நடிக்கிறதில்லே.ஒரு கேரக்டராகவே நடிக்கிற மாதிரி பல கேரக்டருங்க ஒரே படத்துலே பண்ணுனா பாக்கறதுக்கு எப்படியிருக்கும் அப்படிங்கறதுதான். 1964 ஆம் வருஷம் வரைக்கும் தமிழ்சினிமாலே அந்த மாதிரி மேஜிக் நடக்கலே.அந்த வருஷந்தான் அது நடந்துச்சு. சிவாஜியோட நவராத்திரி படம் வந்தப்போ மேலே சொன்ன விஷயம் நடந்துருச்சு. சிவாஜி இந்த வேஷங்களை செய்யணும்ங்கற எண்ணம் சிவாஜி சினிமாலே நடிக்கறதுக்கு முன்னாலேயே சிவாஜிக்கு இருந்திருக்குன்னு சொன்னா அது ஆச்சர்யமான செய்தி இல்லே. அது தான் உண்மை. சிவாஜி நாடகத்துல   நடிச்சிக்கிட்டிருந்த காலத்துலே சிவாஜிக்கு புடிச்ச ஒரு நாடக நடிகர் சாமண்ணா. இவரு நடிச்ச நாடகங்களை சிவாஜி அடிக்கடி போய் பார்ப்பார். இந்த சாமண்ணா நடிச்ச ஒரு  நாடகந்தான் "டம்பாச்சாரி " அப்படிங்கற நாடகம். இது காமெடியான ஒரு காதல் நாடகம்தான்.தான் காதலிக்கிற பெண்ணை தன்னை விரும்ப வெச்ச...

சாமி பாட்டுல கண்ணதாசன் கலந்த அரசியல்

படம்
காதல் பாட்டோ சோகப்பாட்டோ தத்துவ பாட்டோ எந்த பாட்டா இருந்தாலும் வரிகளை கொட்டிகிட்டே வர்றப்போ இடையிலே சான்ஸ் கிடைச்சா தன் சொந்த அனுபவத்தையோ நாட்டு நடப்பையோ அரிசியலைக் கூட கலந்து அடிச்சிடுவார் கண்ணதாசன்.அப்ப அவரோட மூடு எப்படி இருக்குதோ அதுக்கு தகுந்த படி வார்த்தைகளை கொட்டி எழுதிடுவார்.அப்படி சினிமா உலகத்துலே அவர் எழுதின பாட்டுகள் அதிகம்.இப்படிப்பட்ட ஒரு பாட்டுலதான் முக்கியமான அரசியலை கலந்து எழுதியிருந்தார் கண்ணதாசன்.அதுவும் ஒரு சாமி பாட்டுலே ,அதுவும் ஒரு அம்மனை பத்தி பாடற பாட்டுலே .பொதுவா மத்த கவிஞர்களா இருந்தா இதை தனி பாட்டாத்தான் எழுதுவாங்க.சாமி பாட்டுலே எல்லாம் எழுத மாட்டாங்க.கண்ணதாசன் தான் தைரியமா இதை செய்வாரு.கண்ணதாசன் எந்த படத்துலே,என்ன சாமி பாட்டுலே எதுக்காக அதை எழுதுனாரு அப்படிங்கறத இதுல பாக்கலாம். அதுக்கு முன்னாலே இந்த பாட்டுலே அந்த அரசியல் வரிகளை ஏன்  கலந்தார்னு சொல்றதுக்கு முன்னாலே அந்த அரசியல் விஷயத்தை பாக்கலாம். 1967 லே தமிழ்நாட்டுல நடந்த சட்டசபைத் தேர்தலிலே விருதுநகர்லே போட்டியிட்ட காமராஜர் தோத்துட்டார்.1200 வாக்கு வித்தியாசத்துலே.9 வருஷமா தமிழ்நாட்டை எப்படியெல்லாம் ஆட்ச...

சிவாஜி படத்தில் நீக்கப்பட்ட பாடல்கள்

சிவாஜி படங்களில் நீக்கப்பட்ட பாடல்கள்: மகாராஜன் உலகை ஆளலாம் கர்ணன் படத்துக்காக ஒலிப்பதிவு செஞ்ச பாட்டு இது. கர்ணன் படத்துல 17 பாட்டு.இதுல சில கவிதை வரி  பாட்டுகளும் சில சுலோகங்களும் அடங்கும்.இவ்வளவு பாட்டுக இருந்தாலும் ஒரு பாட்டு கூட போரடிக்காது.ஏன் இதச் சொல்றேன்னா அந்த காலத்துல அதிக பாட்டுக இருந்தாலும் மக்கள் ரசிச்சு பாத்தாங்க.இதே கர்ணன்  2012 லே வந்தப்போ ரொம்ப வரவேற்பு இருந்துச்சு.இதுல மகாராஜன் உலகை ஆளலாம் பாட்டு ரொம்ப பிரமாதமா இருக்கு.ஆனா இந்த பாட்டை படத்துல ஏன் வைக்கலேன்னு தெரியலே.இந்த படம் 1964 லே ரிலீசானப்போ இருந்ததான்னு தெரியலே.ஆனா இந்த படத்தோட ஆடியோ இணையதளங்கள்ல இருக்கும்.இந்த பாட்டை இது வரைக்கும் கேக்காதவங்க கேட்டுப் பாருங்க. என் மனது ஒன்றுதான். அவன் ஒரு சரித்திரம் படம் வர்றதுக்கு முன்னாலேயே ரொம்ப பிரபலமாயிடுச்சு இந்த பாட்டு .ரேடியோவுல அடிக்கடி ஒலி பரப்பிக்கிட்டே இருந்தாங்க.படம் ரிலிசானப்போ முதல் நாள் பாத்தவங்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியா இருந்துச்சு.பாட்டு எவ்வளவு சூப்பரா இருக்கு.இந்த பாட்ட ஏன் படத்துல வைக்கலேன்னு நினப்பு வந்தப்போ ஆனந்த அதிர்ச்சியா ரசிகர்களுக்கு இன்னொர...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்