1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

சிவாஜி படத்தில் நீக்கப்பட்ட பாடல்கள்

சிவாஜி படங்களில் நீக்கப்பட்ட பாடல்கள்:
மகாராஜன் உலகை ஆளலாம் கர்ணன் படத்துக்காக ஒலிப்பதிவு செஞ்ச பாட்டு இது.
கர்ணன் படத்துல 17 பாட்டு.இதுல சில கவிதை வரி 
பாட்டுகளும் சில சுலோகங்களும் அடங்கும்.இவ்வளவு பாட்டுக இருந்தாலும் ஒரு பாட்டு கூட போரடிக்காது.ஏன் இதச் சொல்றேன்னா அந்த காலத்துல அதிக பாட்டுக இருந்தாலும் மக்கள் ரசிச்சு பாத்தாங்க.இதே கர்ணன் 
2012 லே வந்தப்போ ரொம்ப வரவேற்பு இருந்துச்சு.இதுல மகாராஜன் உலகை ஆளலாம் பாட்டு ரொம்ப பிரமாதமா இருக்கு.ஆனா இந்த பாட்டை படத்துல ஏன் வைக்கலேன்னு தெரியலே.இந்த படம் 1964 லே ரிலீசானப்போ இருந்ததான்னு தெரியலே.ஆனா இந்த படத்தோட ஆடியோ இணையதளங்கள்ல இருக்கும்.இந்த பாட்டை இது வரைக்கும் கேக்காதவங்க கேட்டுப் பாருங்க.

என் மனது ஒன்றுதான்.
அவன் ஒரு சரித்திரம் படம் வர்றதுக்கு முன்னாலேயே ரொம்ப பிரபலமாயிடுச்சு இந்த பாட்டு .ரேடியோவுல அடிக்கடி ஒலி பரப்பிக்கிட்டே இருந்தாங்க.படம் ரிலிசானப்போ முதல் நாள் பாத்தவங்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியா இருந்துச்சு.பாட்டு எவ்வளவு சூப்பரா இருக்கு.இந்த பாட்ட ஏன் படத்துல வைக்கலேன்னு நினப்பு வந்தப்போ ஆனந்த அதிர்ச்சியா ரசிகர்களுக்கு இன்னொரு அனுபவம் கிடைச்சது.எந்த பாட்டை அவங்க நினைச்சாங்களோ அந்த பாட்டு சீனுல அதுக்கு பதிலா அம்மானை அழகு மிகும் கண்மானைங்கற பாட்ட வச்சிட்டாங்க.ரசிகர்களுக்கோ ரொம்ப சந்தோசமா போயிருச்சி.என் மனது ஒன்றுதான் பாட்டு நல்லா இருந்தாலும் அதுக்கு மேலா அம்மானை அழகு மிகும் கண்மானை பாட்டு ரொம்ப சூப்பர் ஹிட்டாயிடுச்சு.
என் மனது ஒன்றுதான் பாட்டை சிவகுமார் நடிச்ச பெருமைக்குரியவள் படத்திலே பயன்படுத்திக்கிட்டாங்க

பட்டினும் மெல்லிய பெண்ணிது
ஞாயிறும் திங்களும்.இந்த படமே ரிலீசாகலே.இந்த படத்துக்காக ரெக்கார்ட் பண்ணி ரேடியோல எல்லாம் ஒலிபரப்புனாங்க. இந்த பாட்டு ரொம்ப பாப்புலரா இருந்துச்சு அந்த காலத்துலே.படம் முக்கால்வாசி முடிஞ்சிருச்சி.பைனான்ஸ் பிரச்சினையாலே இந்த படம் நின்னு போச்சு.சிவாஜி தேவிகா நடிச்ச படம் இது .படம் வெளிய வராம போனாலும் இன்னிக்கும் இந்த பாட்டு இணையதளத்துல மறையாம இருக்கு.

உள்ளம் போ என்றது - ஞான ஒளி 
ஞான ஒளி படத்துக்காக ஒலிப்பதிவு செஞ்ச பாட்டு இது.இப்பவும் இணையதளத்துல இந்த பாட்டுகிடைக்குது.இப்படி ஒரு பாட்டு இருக்கறதே ரொம்ப பேருக்கு தெரியாது.படத்துல இந்த பாட்டு  அனேகமா  சிவாஜி மகளா நடிச்ச சாராதாவும்  ஸ்ரீகாந்தும் பாடற மாதிரி இருக்கலாம்.ஞான ஒளி அமைஞ்ச விதத்தை பாத்து இந்த படத்துக்கு இந்த பாட்டு தேவையில்லேன்னு நினைச்சிருக்கலாம்.
பாட்டு நல்ல பாட்டு.Spb பாடுன பாட்டு.

அடியம்மா ராசாத்தி சங்கதி என்ன 
வசந்தமாளிகைக்காக ரெக்கார்ட் பண்ணுன பாட்டு இது.அதுல என்ன பாட்டுக.எல்லாமே கிளாஸா அமஞ்சிருக்கும்.ஆனா அடியம்மா ராசாத்தி பாட்டு டைப்போ குத்துப்பாட்டு ரகம்.அப்படி மத்த எல்லா பாட்டுமே ஒரே  அமைப்புல கிளாஸா இருக்கும் போது இந்த பாட்டோ அந்த வரிசையிலே ஒட்டாது.நல்ல முடிவா இந்த பாட்டை படத்துல வைக்கலே.இந்த பட்டு வர்ற இடத்துல ரொம்ப அட்டகாசமான  மியூசிக் மட்டும் வெச்சு பிரமாதப்படுத்தி இருப்பாங்க.அடியம்மா ராஜாத்தி பாட்ட இந்தப் படத்துல வைக்காதது நல்லது தான். பாட்டு நல்ல பாட்டு.ஆனா வேற படத்துக்கு பயன்படுத்தி இருக்கலாம்.


இது மார்கழி மாதம் முன்பனிக்காலம் -பிராப்தம் படத்துக்காக ரெக்கார்ட் பண்ணுன பாட்டு இது.
ஆனா படத்துல இல்லே.நேத்து பறிச்ச ரோஜா ,சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் ,சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து அப்பிடின்னு படத்துல மத்த எல்லா பாட்டுமே சூப்பரா இருக்கும்.இந்த பாட்டும் நல்லா இருக்கு.ஆனா படத்துல பயன்படுத்தல.அனேகமா இந்த பாட்டு படத்துல சந்திரகலா பாடி நடிக்கிறதா தான் படமாக்கறதா இருந்துருக்கணும்.

இளைய தலைமுறை படத்துக்காக பொம்பளையா  லட்சணமா புடவையை கட்டு அப்பிடிங்கற பாட்டு ரெக்கார்ட் பண்ணிட்டாங்க. ரெக்கார்ட் பண்ணனும் பின்னால அந்த பாட்டு பாமரத்தனமா இருக்கு அப்பிடிங்கறதலே அந்த பாட்டுக்கு பதிலா சிங்கார தேர் கூட திரை போட்டு போகும்ங்கற பாட்டை மறுபடியும் ரெக்கார்ட் பண்ணி பாட்டை ஷூட் பண்ணுணாங்க.


இளமைக்காலம் எங்கே 
இந்த பாட்டு தாய்க்கு ஒரு தாலாட்டு படத்துக்காக இளையராஜா இசையமைச்ச பாட்டு.புதிய பறவையில் வர்ற உன்னை ஒன்று கேட்பேன் மெட்டிலேயே இந்த பாட்டை இளையராஜா இசை அமைச்சிருப்பார்.இந்த படம் வர்றதுக்கு முன்னாலேயே இந்த பாட்டு ரொம்ப பேமஸ் ஆயிடுச்சு.ரசிகர்கள் படத்துலேயே இந்த பாட்டை தான் ரொம்ப எதிர்பார்த்தாங்க.நடிகர்திலகம் ஆரம்பத்துல வர்ற லாலாலாலான்னு அந்த ஹம்மிங் பாடறமாதிரி சீனு இருக்கும்.அட இப்பத்தான் அந்த பாட்டு ஆரம்பிக்கப்போகுதுன்னு
ஆசையா நிமிந்து உக்காந்தா அந்த ஹம்மிங்கோட அந்த சீனு முடிஞ்சிரும்.இளையராஜா முடிவெடுத்துத்தான் TMS  ஐ பாடவெச்சு ரெக்கார்ட் பண்ணியிருப்பாரு.படம் ரிலீசாகறதுக்குள்ள அவங்களுள்ள அதுக்குள்ள என்ன பிரச்சினை வந்துச்சோ.பாட்டை தூக்கிட்டாங்க.இது இளையராஜாவாலதான்.


என்னோடு பாடுங்கள்
நான் வாழ வைப்பேன் படத்துல வர்ற பாட்டு இது.படத்துலதான் இந்த பாட்டு இருக்குதல்ல அப்பிடின்னு நீங்க நினைக்கிறது சரி.இந்த பாட்டை முதல்ல TMS பாடி ரெக்கார்ட் பண்ணியாச்சு.அவரோடது கம்பீரமான குரல்.இந்த பாட்டு சிச்சுவேஷனுக்கு அவ்வளவு கம்பீரம் வேண்டாம் ,கொஞ்சம் சாப்டா இருக்கணும்னு SPB யை பாடவெச்சு மறுபடியும் ரெக்கார்ட்  பண்ணுணாங்க.TMS ஓட சரித்திரத்துல இது மாதிரி நடந்துருக்காதுன்னு நினைக்கிறேன்.படத்துல SPBபாடுன பாட்டுதான் இருக்கும்.

நிறைகுடம் படத்துக்காக ரெக்கார்ட் செய்யபட்ட பாட்டு
அத்தான் நிறம் சிவப்பு 
அந்த ஆங்கிலேயர் போல உடுப்பு பாடலாகும்.இந்த படத்துக்கு இசையமைச்சவர் v.குமார்.சிவாஜி படத்துக்கு V.குமார் இசையமைச்ச ஒரே படம் நிறைகுடம் தான்.
வாணிஸ்ரீ சிவாஜியை கிண்டல்செய்து பாடுவது போல இந்த பாட்டு அமைஞ்சிருக்கும்.
படத்துலே இந்த பாட்டு அமஞ்சிருந்தா சிவாஜி வாணிஸ்ரீயோட துள்ளலான நடிப்பை நாம ரசிச்சு பாக்கறதுக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கும்.

அதே போலே பாலும் பழமும் படத்துக்காக ரெக்கார்ட் செய்த பாட்டு தென்றல் வரும் சேதி வரும் அப்படிங்கற பாட்டு.சௌகார் ஜானகி படத்துல பாடற மாதிரி இருந்துச்சு.ரேடியோவில் எல்லாம் அடிக்கடி ஒலி பரப்புனாங்க.படத்துல மட்டும் இல்லே.படத்தோட நீளம் அதிகமா போயிடிச்சு ,அதனாலே  இந்த பாட்டை வைக்க முடியலே அப்பிடின்னு பீம்சிங் இதைபத்தி சொல்லி இருந்தாரு.

இழு இழு ..இழுக்க இழுக்க இறுதிவரை இன்பம் அப்படிங்கற பாட்டு.இது என்னைப்போல் ஒருவன் படத்துக்காக ரெக்கார்ட் பண்ணுன பாட்டு.படத்துல எல்லாப் பாட்டுகளும் சூப்பரா இருக்கும்.படத்தோட சுவாராஸ்யத்துக்காககவும் நீளத்துக்காகவும் இந்த பாட்டை படத்துல இருந்து நீக்கி இருக்கலாம்.

வாணிராணி படத்துக்காக ரெக்கார்ட் பண்ணுன பாட்டு,
பொன் ஒளிரும் புது நிலவே ,
கட்டிலிடவா அப்படிங்கற பாட்டு.
இந்த பாட்டை TMS ,ஜானகி பாடியிருகாங்க.அநேகமா இந்த பாட்டு வாணிஸ்ரீ ,முத்துராமனுக்காக 
பதிவு செஞ்ச பாட்டா இருக்கலாம்.இந்த பாட்டு ரெக்கார்ட் பிளேயர்,கேசட்ல இருக்கு.ஆனா படத்துல இந்த பாட்டை நீக்கிட்டாங்க.

செந்தில்வேல் சிவராஜ்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்