இடுகைகள்

ஆறு மனமே ஆறு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

ஆறு மனமே ஆறு

படம்
ஆறு மனமே ஆறு பாடல் ஆய்வு... ஆண்டவனை நினைத்து சரணாகதி அடையும் பாடல்களில் ஒரு ரசிகனுக்கு மட்டுமல்ல ,தமிழ் தெரிந்த அனைவருக்குமே பெரும்  உள்ளக்கிளர்ச்சியையும் ,ஆன்மீக பற்றுதலையும் இப்பாடல் அளிக்கிறது. நல்ல சிந்தனைகளையும் நன்னடைத்தையையுமே சிறந்த ஒழுக்கப் பண்புகளாக கொண்டு வாழ்ந்து வரும் ஒரு பேராசரியரியரின் வாழ்வுத் தடத்தில் இடறிய கல்லாக வந்த காதலால் ஏற்பட்ட நிகழ்வுகளால் தன் நிலையறிந்த நிலையில் பாடுவதாக அமையப் பெற்ற ஆறு மனமே ஆறு பாடல் ஆண்டவன் கட்டளை படத்திற்கு மட்டுமன்றி ஆன்மீக உலகிற்கும் கிடைக்கப் பெற்ற சிறப்பு பாடல். படம் ஆரம்பத்தில் இருந்து பயணிக்க தொடங்கிய காட்சிகளில் இருந்து இது ஒரு வித்தியாசமான களமாக மாறி இப்படியோரு ரசிப்பை நமக்கு கொடுக்கும் என்று  யாரும் நினைத்துப் பார்த்திருக்க முடியாதது தான். இது வழக்கமான சிறந்தபாடல் என்ற  வரிசையை தாண்டி தமிழுலகம் இருக்கும் வரை நிலைத்து இருக்கும் பாடலாக அமைந்து விட்டது. பாடல் படமாக்கப்பட உதித்த யோசனைக்கு நல்ல பாராட்டுக்கள் பார்க்கும் போதெல்லாம் கிடைத்துக் கொண்டேதானிருக்கும்.எத்தனை நடைகள். நடிகர்திலகத்தின் அந்த விதவிதமான நடைகள் பாடலை பார...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்