இடுகைகள்

சிவாஜி கணேசன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

சிவாஜி கணேசன் கே ஆர் விஜயா இணைந்து நடித்த படங்கள்

படம்
தமிழ் திரைப்பட ரசிகர்களால் ‘புன்னகை அரசி’ என அன்போடு அழைக்கப்படும் கே. ஆர். விஜயா அவர்கள், தென்னிந்தியத் திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகை ஆவார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளில் தன்னுடைய கலைப் பயணத்தைத் தொடர்ந்த இவர், சுமார் 450–க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.   நாடக நடிகையாகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, பிறகு தமிழ் சினிமா ரசிகர்களால் ‘புன்னகை அரசி’ எனப் புகழப்பட்ட கே. ஆர். விஜயா அவர்கள் நடிகர்திலகத்தோடு இணைந்து நடித்த படங்களையும் அப் படங்களின் சாதனைகளையும் இதில் பார்க்கலாம். நடிகர்திலகத்துடன் சேர்ந்து நடித்த படங்கள். கை கொடுத்த தெய்வம்,சரஸ்வதி சபதம்,செல்வம்  கந்தன் கருணை நெஞ்சிருக்கும் வரை தங்கை பாலாடை திருவருட் செல்வர் இரு மலர்கள் ஊட்டி வரை உறவு திருமால் பெருமை திருடன் எதிரொலி ராமன்  எத்தனை ராமனடி சொர்க்கம் தவப்புதல்வன் பாரதவிலாஸ் தங்கப்பதக்கம்  கிரகப் பிரவேசம் நாம் பிறந்த மண் ஜெனரல் சக்கரவர்த்தி தச்சோளி அம்பு  ஜஸ்டிஸ் கோபிநாத் திரிசூலம் நான் வாழ வைப்பே...

சின்னையாவின் சுதந்திரப் போர்

படம்
வெள்ளை தலைகளின் காலம் களம் ஒன்று... 'வெடி போடணும்டா ' தமிழன் யாருன்னு அந்த வெள்ளை பறங்கிகளுக்கு காட்டணும்.எது செஞ்சாலும் அடக்கு முறைன்றாங்க,லத்தில வெளுக்ககறான் .நம்ம மண்ணுல இருந்துட்டே நம்மை வெரட்டறான் . அடி அடின்னு அடிச்சுகிட்டே இருப்பானுக ,நாம முதுக காமிச்சுகிட்டே நிக்க வேண்டியதுதான்.எத்தன நாளக்கு இந்த பொழப்பு. நாம யாருன்னு காட்டணும். அவர்கள் உறுமினார்கள் . அவர்கள் வெடித்தார்கள். ஏதோ செய்ய துடித்தார்கள்.  சத்தங்கள் இல்லாத அந்த இரவு. வெள்ளைமார்களின் நடமாட்டம் குறைவான அந்த நேரம். மனித வாசனை வராத அந்த நொறுங்கியிருந்த கட்டிடங்களின் ஒரு பகுதியில்... அந்த கூட்டம் கூடிற்று.. கூட்டத்திலே தலைவன் போல் இருந்தவர் பேசினார். நாம மறைமுகமாக நம்ம எதிர்ப்பை வெள்ளைத் தலையனுகளுக்கு எதிராக செஞ்சிட்டு வந்தோம்.எதும் பெரிசா செஞ்சுப்புடலே. பெரிசாவும் எதும் இல்லே.இப்படியே பொறுத்துக்க முடியாது.வேற பெரிசா என்ன செய்யலாம், உங்களுக்கு தெரிஞ்சத சொல்லுங்க. எது நல்லா இருக்குன்னு எல்லோரும் ஏத்துக்கற முடிவை செய்யலாம். பாதி இருட்டில் பனி  இரவில் அந்த உருவங்கள் ஒவ்வொன்றும் ஒன்று சொல்லின . 'வெடி வைப்போம் '...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்