சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலம்

படம்
2001ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ம் தேதி. இந்த தேதிக்கு இரண்டு நாட்கள் முன்பாக தினகரன் பத்திரிக்கை தனது தலைப்புச்செய்திகள் விளம்பர வால் போஸ்டரில் இந்த செய்தியையும் போட்டிருந்தது. நடிகர்திலகம் சிவாஜிகணேசன் உடல் நலக் குறைவு காரணமாக  மருத்துவமனையில் அனுமதி என்று அந்த தகவலை சொன்னது. அந்த 90 கள் காலகட்டம் சிவாஜிக்கு உடல் நலக் குறைவை மாறி மாறி கொடுத்துக் கொண்டிருந்தது.சிவாஜி உடல் நல குறைவை பற்றி பல முறை பத்திரிக்கை செய்திகளாக வந்துள்ளது. இப்போது வந்த அந்த செய்தியும் பின் வரும் காலகட்டம் மறக்க வைக்கும் என்று தான் அந்த செய்தியை அன்று பார்த்த போதும் நினைக்க வைத்தது. 21.07.2001.இரவு எட்டு மணி இருக்கும். சன் டிவியின் செய்தி  வாசிப்பு அறை. எப்படிப்பட்ட செய்தியாக , தகவலாக இருந்தாலும் அதை சகஜமாக எடுத்து கடந்து போகும் சன் டிவியின் செய்தி வாசிப்பு குழு அந்த நேரத்தில் வந்த அந்த செய்தியை கேட்டதும் அதிர்ந்துதான் போனார்கள்.அப்போது சன் டிவியின் செய்தி எடிட்டராக இருந்தவர் ராஜா. இன்றைக்கெல்லாம் நியூஸ் சேனல்கள் ஓடுவதே கீழே ஓடும் அந்த ஸ்கோரிலிங் செய்திகளால் தான். லேலே குறிப்பிட் அன்றைய கால கட்டத்தில் இது ம...

சிவாஜி கணேசன் கே ஆர் விஜயா இணைந்து நடித்த படங்கள்

தமிழ் திரைப்பட ரசிகர்களால் ‘புன்னகை அரசி’ என அன்போடு அழைக்கப்படும் கே. ஆர். விஜயா அவர்கள், தென்னிந்தியத் திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகை ஆவார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளில் தன்னுடைய கலைப் பயணத்தைத் தொடர்ந்த இவர், சுமார் 450–க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். 

 நாடக நடிகையாகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, பிறகு தமிழ் சினிமா ரசிகர்களால் ‘புன்னகை அரசி’ எனப் புகழப்பட்ட கே. ஆர். விஜயா அவர்கள் நடிகர்திலகத்தோடு இணைந்து நடித்த படங்களையும் அப் படங்களின் சாதனைகளையும் இதில் பார்க்கலாம்.
நடிகர்திலகத்துடன் சேர்ந்து நடித்த படங்கள்.
கை கொடுத்த தெய்வம்,சரஸ்வதி சபதம்,செல்வம்  கந்தன் கருணை நெஞ்சிருக்கும் வரை தங்கை பாலாடை திருவருட் செல்வர்
இரு மலர்கள் ஊட்டி வரை உறவு திருமால் பெருமை திருடன் எதிரொலி
ராமன்  எத்தனை ராமனடி சொர்க்கம் தவப்புதல்வன் பாரதவிலாஸ் தங்கப்பதக்கம் 
கிரகப் பிரவேசம் நாம் பிறந்த மண்
ஜெனரல் சக்கரவர்த்தி தச்சோளி அம்பு 
ஜஸ்டிஸ் கோபிநாத் திரிசூலம் நான் வாழ வைப்பேன் ரிஷிமூலம்
தர்மராஜா  சத்திய சுந்தரம் கல்தூண்
ஹிட்லர் உமாநாத் 
ஊருக்கு ஒரு பிள்ளை
ஊரும் உறவும் நீதிபதி  
மிருதங்க சக்கரவர்த்தி
தராசு சிம்ம சொப்பனம் 
வம்ச விளக்கு படிக்காத பண்ணையார்
சாதனை கிருஷ்ணன் வந்தான் 
மன்னவரு சின்னவரு 
ஆகிய படங்களாகும்.
நடிகர்திலகம் கே ஆர் விஜயா மொத்தம் 41 படங்களில் நடித்துள்ளார்கள் .
அவற்றில் 33 படங்களில் ஜோடியாக நடித்துள்ளார்கள்.
கை கொடுத்த தெய்வம் தான் இருவரும் நடித்த படம்.இதில் விஜயா ஜோடியில்லை.
அடுத்த படமான சரஸ்வதி சபதத்திலும் ஜோடியில்லை.
மூன்றாவதாக செல்வம். இதுதான் நடிகர்திலகம் கே ஆர் விஜயா ஜோடியாக நடித்த முதல் படம்.
சரஸ்வதி சபதத்தை தொடர்ந்து வெளியான நடிகர்திலகத்தின் நான்கு படங்களில்  நடித்தார் கே ஆர் விஜயா.
1.11.67 ல் ஒரே நாளில் வெளியான 
இரு மலர்கள் ஊட்டி வரை உறவு இரண்டிலும் விஜயாதான் நாயகி.இரண்டும் ஒரே நாளில் வெளியாகி 100 நாள்களை தொட்ட படம்.
10.10.69 ல் வெளியான திருடனும் 100 நாள் ஓடி வெற்றி பெற்றது.
நடிகர்திலகத்தை வைத்து 
கே பாலச்சந்தர் இயக்கிய ஒரே படம்.இதில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்தவர் கே ஆர் விஜயா. அடுத்து சிவாஜி விஜயா ஜோடி சேர்ந்த படங்களான  ராமன் எத்தனை ராமனடி சொர்க்கம் இரண்டும் 100 நாள் படங்களாக அமைந்தன.

எதிரொலி   படத்தில் இருந்து விஜயாவின் நடிப்பு பாணி மாறியிருக்கும்.விஜயாவுக்கே உரித்தான அந்த குடும்ப பாங்கான நடிப்பு இதில் இருந்துதான் நடிகர்திலகத்தின் படங்களில்  தொடர ஆரம்பித்திருக்கும்.
சிறந்த அன்னியோன்ய ஜோடி நடிப்பில் சிவாஜி  விஜயா ஜோடி தான் அருமை என்ற கருத்துக்கு ஆரம்பமாக அமைந்த படம்.

22 மாதங்களுக்கு பின் தான் மறு படியும் இந்த ஜோடி இணைந்தனர்.26.8.72 ல் வெளியான தவப்புதல்வன் 100 நாள் படமாக அமைந்தது.
24.3.73 ல் வெளியான பாரதவிலாஸ் 100 நாள் ஓடிய படம் என்ற சிறப்பை காட்டிலும் தேச  ஒருமைப்பாட்டை சொன்னதற்காக இந்தியாவுக்கே பெருமை சேர்த்த படமாக அமைந்தது தான் பெருஞ்சிறப்பு.

1.6.74 ல் வெளியான, இந்தியாவையே மிரளச் செய்த ப்ளாக் பஸ்டர் படமான தங்கப்பதக்கத்தில் விஜயாவின் நடிப்புக்கு ஈடு இணை இல்லை எனலாம்.விஜயாவுக்கு திரை வாழ்வில் ஒரு மைல்கல்  இந்த தங்கப்பதக்கம்.

மீண்டும் 22 மாதங்கள் இடைவெளியில்தான் இந்த ஜோடியின் அடுத்த படமாக கிரகப் பிரவேசம் படம் வெளியானது.எங்க வீட்டு ராணிக்கிப்போ இளமை திரும்புது என்ற பாடல் .இது திலகம் விஜயாவின் அந்நியோன்ய நடிப்புக்கு எடுத்துக் காட்டாக அமைந்தது.

7.10.77ல் வெளியான படம் நாம் பிறந்த மண்.
25.6.78ல் ஜெனரல் சக்கரவர்த்தி வெளியாகி 100 நாள் ஓடியும் வெற்றி பெற்றது.
நடிகர்திலகம் நடித்த முதல் மலையாள படமான தச்சோளிஅம்பு படத்திலும்
 கே ஆர் விஜயா நடித்தார்.இப் படம் வெளியான நாள் 1.9.78.

அடுத்து ஜஸ்டிஸ் கோபிநாத்.

மகா மெகா  பிளாக் பஸ்டரான திரிசூலம் வெளியானநாள் 27.1.79.
சுமதி என்ற பெயர் கேட்கும் போதெல்லாம் கே ஆர் விஜயாவின் நினைவுதான் வரும். அந்தளவுக்கு 
கே ஆர் விஜயா செய்திருப்பார்.

நடிகர்திலகத்தை வைத்து கே ஆர் விஜயா தயாரித்த சொந்த படம் நான் வாழ வைப்பேன். 10.8.79 ல் வெளியானது.இப் படம் நடிகர்திலகம் கே ஆர் விஜயா நடித்த 25 வது படம் என்ற சிறப்பை பெற்றது.100 நாள் படம் இது.

S.P.முத்துராமன் இயக்கத்தில் வெளியான ரிஷிமூலம் 100 நாள் படமாகும்.ஐம்பதிலும் ஆசை வரும் என்ற பாடல் ஹிட்டானது.26.1..80 ல் இப் படம் வெளியானது.

26.4.80 ல் வெளியான சுமாரான படம் தர்மராஜா.

அடுத்து சத்தியசுந்தரம்.21.2.81ல் வெளியாகி 100 நாள் ஓடி வெற்றி பெற்றது.

மேஜர்சுந்தரராஜனின் சொந்த படமான கல்தூணிலும் இருவரும் ஜோடி.கிராமத்து கதையில் இருவரும் இணைந்து நடித்த முதல் படம் இது.1.5.81 ல் வெளியான இப்படம் 100 நாள் வெற்றி பெற்ற படம் ஆகும்.

நடிகர்திலகம் முதன் முதலாக ஹிட்லர் மீசை வைத்து நடித்த வித்தியாசமான படம் ஹிட்லர் உமாநாத்.இதிலும் விஜயாதான் இணை.26.1.82 ல் வெளியானது இப் படம்.

5.2.82 ல் ஊருக்கு ஒரு பிள்ளை.சுமாரான படம்.
14.11.82ல் ஊரும் உறவும்.மலைப் பிரதேச மக்களின் பிரச்சினைகளை வைத்து தயாரிக்கப்பட்ட இப்படம் நல்ல கதையம்சம் கொண்டது.சுமார்தான் ஓட்டத்தில்.

மீண்டும் ஒரு வெள்ளிவிழா படம் இந்த ஜோடி கொடுத்தது. அது நீதிபதி.
26.1.83 ல் வெளியானது.

24.9.83 ல் வெளியான படம் மிருதங்க சக்கரவர்த்தி.
 என்ன ஒரு நடிப்பு. அர்ப்பணிப்பு இருவரும்.என்ன ஒரு அன்னியோன்யமான நடிப்பு.கணவன் மனைவி பாத்திரம் என்றாலே அது அது நடிகர் திலகம் கே ஆர் விஜயா ஜோடி தான்.மிருதங்க சக்கரவர்த்தி நூறு நாள் ஓடி வெற்றி கண்ட படம்.

16.3.84ல் தராசு.

30.6.84 ல் சிம்மசொப்பனம்.100 நாள் ஓடவில்லை என்றாலும் சுவராசிய கதை அமைப்பில் தாட்சிகள் விறுவிறுப்பாக அமைந்த படம் .

23.10.84 ல் வெளியான படம் வம்ச விளக்கு. இதில் கே ஆர் விஜயா நடித்திருந்தாலும் நடிகர் திலகத்துக்கு ஜோடியில்லை.

 23 .3.85 இல் வெளியான படம் படிக்காத பண்ணையார். இதிலும் நடிகர்திலகத்துக்கு  ஜோடி இல்லை ஆர் விஜயா .நடிகர் திலகத்தின் 250வது படமாக இந்தப் படம் அறிவிப்பு செய்து விளம்பரம் நல்ல முறையில் செய்யப்பட்டு இருந்தால் இந்தப் படமும் நூறு நாள் ஓடி வெற்றி பெற்றிருக்கும் .

10 1 86 இல் வெளியான படம் சாதனை.
நடிகர் திலகம் சினிமா இயக்குனராக நடித்து அவருக்கு மனைவியாக கே ஆர் விஜயா நடித்த இந்தப் படம் நூறு நாள் ஓடி வெற்றி கண்டது.

தேங்காய் சீனிவாசனின் சொந்தப் படம் கிருஷ்ணன் வந்தான். 28.8.87 ல் வெளியானது .

15.1.99 ல் வெளியான படம் மன்னவரு சின்னவரு.நடிகர்திலகம் கேஆர் விஜயா இருவரும்  ஜோடியில்லாமல் சேர்ந்து நடித்த கடைசி படம். 

நடிகர்திலகம் கே ஆர் விஜயா ஜோடி நடித்த படங்களில்  21 நூறு நாள் ஓடி வெற்றி கண்ட படங்கள்.
மூன்று வெள்ளிவிழா கண்ட படங்கள்.
தங்கப்பதக்கம்
திரிசூலம்
நீதபதி ஆகியன..

தமிழ் திரைப்பட வரலாற்றில் சிவாஜி கே ஆர் விஜயா ஜோடி  சிறப்பாக அமைந்த ஜோடி.
ஒரு கணவன் மனைவி எப்படி இருப்பார்கள் என்பதை திரையில் தத்ருபமாக நடித்து காட்டியவர்கள்.

வணக்கம் 
செந்தில்வேல் சிவராஜ் ....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற