இடுகைகள்

தமிழ் பிளாக்பஸ்டர் மூவிஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

இன்றைய தமிழ் சினிமா சீரழிவுக்கு யார் காரணம்

படம்
இன்றைய தமிழ் சினிமா சீரழிய யார் காரணம்?  இன்னைக்கு ஒரு படம் ரிலீஸ் ஆச்சுன்னா அந்த படம் எப்படி இருக்குன்னு படம் பாத்துட்டு வர்றவங்கள கேட்டா ஒருத்தர் ரெண்டு பேர் இல்லேரொம்ப பேர்  படம் வேற லெவல், மாஸ், தெறி அப்படின்னு  ரெண்டு மூணு வார்த்தைகளை தவிர வேற எதையும் சொல்ல மாட்டாங்க. இந்த ரெண்டு மூணு வார்த்தைகளை தவிர வேற எதையும் சொல்லத் தெரியாதா? அப்புறம் இன்னொரு வார்த்தையும் கூடவே சேர்த்து சொல்லுவாங்க. பக்கமே வர முடியாது ..என்ன பக்கமே வர முடியாது ..? எந்த தமிழ் படமும் பக்கத்திலேயே வராது அப்படிங்கற அர்த்தத்துல ..தமிழ்ல இதுவரைக்கும் 6000 படம் வந்து இருக்குது .அந்த 6000 படங்களும் பக்கத்துல வர முடியாதா இந்த படத்துக்கு .. என்ன பேசணும் தெரிஞ்சு தான் பேசுறாங்களா .. அதுல அந்த நடிகர் நடிச்ச படமும் இருக்குதுல்ல ... இந்த மாதிரி ரசிகர் கிட்ட வந்து என்னைக்குமே நல்ல விமர்சனத்தை எதிர்பார்க்க முடியாது. காலைல படம் பாக்க நடுராத்திரியே போய் தியேட்டர்ல உக்காந்துக்குறாங்க ரொம்ப பேரு. அந்த தூக்க மப்பான்னு தெரியல . படத்துல விஷயம் இருக்குதோ இல்லையோ அந்த நடிகரை காட்டுறப்ப எல்லாம் ஒரே காட்டுக்கத்தலா தான் இர...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்