இடுகைகள்

யானை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

யானை பாஷை தெரிந்த சிவாஜி

படம்
சிவாஜியை மிகச்சிறந்த நடிகராக மட்டுமே இன்னமும் இந்த உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது . அவர் மிகச்சிறந்த ஆச்சரியங்களை  புதைத்து வைத்திருக்கிற ஒரு அற்புத மனிதர் .அவருடன் பல வருடங்களாக பழகிக் கொண்டிருக்கும் நெருங்கிய நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் 50 வருடங்களுக்கு மேலாக ரசிகர்களாக இருந்து கொண்டிருப்பவர்களுக்கும் கூட அவரைப் பற்றிய நிறைய விஷயங்கள் தெரிவதில்லை.அப்படிப்பட்ட விஷயங்களில் ஒன்றுதான் இந்த பதிவில் கூறப்போகும் விஷயம். சரஸ்வதி சபதம் படத்தில் உச்சகட்ட காட்சி. புலவராக நடித்திருக்கும் சிவாஜியை யானை இடறி கொல்ல வேண்டும் என்று  அரச தண்டனை விதிக்கப்படும். இந்த காட்சியில் ஒரு மேடையில் நடிகர் திலகத்தை சங்கிலியால் பிணைத்து வைத்திருப்பார்கள் .யானை  பல அடி தூரம் நடந்து வந்து காலை தூக்கி தலையை நசுக்குவதாக பட காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.இந்த காட்சியை படமாக்கும்போது டம்மியை வைத்து படமாக்கிவிடலாம் என்று இயக்குனர் உள்பட  பட யூனிட்டும் சிவாஜியிடம் சொன்னது.ஆனால் காட்சி தத்ரூபமாக இருக்க வேண்டும் என்று நடிகர் திலகம் அதை மறுத்துவிட்டார்.நானே அதில் நடிக்கிறேன் என்று உறுதி கூறி விட்டார்...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்