1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

யானை பாஷை தெரிந்த சிவாஜி

சிவாஜியை மிகச்சிறந்த நடிகராக மட்டுமே இன்னமும் இந்த உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது .
அவர் மிகச்சிறந்த
ஆச்சரியங்களை 
புதைத்து வைத்திருக்கிற ஒரு அற்புத மனிதர் .அவருடன் பல வருடங்களாக பழகிக் கொண்டிருக்கும் நெருங்கிய நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் 50 வருடங்களுக்கு மேலாக ரசிகர்களாக இருந்து கொண்டிருப்பவர்களுக்கும் கூட அவரைப் பற்றிய நிறைய விஷயங்கள் தெரிவதில்லை.அப்படிப்பட்ட விஷயங்களில் ஒன்றுதான் இந்த பதிவில் கூறப்போகும் விஷயம்.
சரஸ்வதி சபதம் படத்தில் உச்சகட்ட காட்சி. புலவராக நடித்திருக்கும் சிவாஜியை யானை இடறி கொல்ல வேண்டும் என்று  அரச தண்டனை விதிக்கப்படும். இந்த காட்சியில் ஒரு மேடையில் நடிகர் திலகத்தை சங்கிலியால் பிணைத்து வைத்திருப்பார்கள் .யானை  பல அடி தூரம் நடந்து வந்து காலை தூக்கி தலையை நசுக்குவதாக பட காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.இந்த காட்சியை படமாக்கும்போது டம்மியை வைத்து படமாக்கிவிடலாம் என்று இயக்குனர் உள்பட  பட யூனிட்டும் சிவாஜியிடம் சொன்னது.ஆனால் காட்சி தத்ரூபமாக இருக்க வேண்டும் என்று நடிகர் திலகம் அதை மறுத்துவிட்டார்.நானே அதில் நடிக்கிறேன் என்று உறுதி கூறி விட்டார் .பட யூனிட்டை சேர்ந்தவர்கள் அது வேண்டாம் என்று சொல்ல இன்னொரு காரணமும் இருக்கிறது .படமாக்க ரிகர்சல் பார்த்தபோது யானையானது முரண்டு பிடித்து சரியாக ஒத்துழைக்க மறுத்ததுடன் படப்பிடிப்பில் வைத்திருந்த பொருட்களை காலால் மிதித்தும் ததிக்கையால் அடித்து நொறுக்கியும் கலவரம் செய்ததாம்.இதையெல்லாம் பார்த்துத்தான் பட யூனிட் நடிகர்திலகத்தை நடிக்க வைக்க யோசித்தார்களாம்.நடந்து வரும் யானையையும் சிவாஜியையும் காட்டி பக்கம் வந்து நிற்கும் போது டம்மியை வைத்து விடலாம் என்று யோசித்து அதை சிவாஜியிடம் சொன்ன போதுதான் சிவாஜியவர்கள் மறுத்திருத்கிறார்.சிவாஜியவர்கள் இவ்வளவு உறுதியாக இருப்பதை பார்த்து பட யூனிட்டை சேர்ந்தவர்கள் பரபரப்புடன் பீதியுடனும் நின்றிருக்கிறார்கள்.காட்சி படமாக்கம் தொடங்குகிறது.சிவாஜி அவர்கள் மேடைமீது படுத்திருக்க 200 அடிக்கு அப்பால்  இருந்து யானை நடந்து வருகிறது ..யானை நடந்து வர வர நடிகர் திலகம் அவர்கள் வசனங்களை பேசுகிறார். சிவாஜியின் அருகில் வந்து நின்ற யானை காலை தூக்கியது. சூட்டிங் ஸ்பாட்டே பெரிய கலக்கத்துடன் பார்த்தது .உணர்ச்சி பொங்க வசனங்களை பேசிக் கொண்டிருந்த சிவாஜி அவர்கள் கடைசி சொல்லாக ' நில்' என்ற வார்த்தையை தன் சிம்மக் குரலில் பெரிதாக கர்ஜித்தார். அந்த நில் என்ற வார்த்தையை அவர் சொல்லும்போது ஒரு பெரிய மந்திரத்தை சொல்வது போல தான் இருக்கும். என்னாகுமோ? ஏதாகுமோ? என்று பரபரப்புடன் யூனிட்டார்கள் சுற்றிலும் பயத்துடன்  நின்று 
பார்த்துக் கொண்டு இருந்தார்கள் ..அப்போது பெரிய அதிசயம் நடந்தது என்று தான் சொல்ல வேண்டும். கணேசனாரின்  அந்த 'நில்' என்ற வார்த்தையை கேட்டதும் யானையானது காலை தூக்கி அப்படியே நின்றது. இதுதான் பெரிய ஆச்சரியம்!
ஆரம்பத்தில் சொன்ன விஷயத்துக்கும் இப்போது சொல்லப்படுகின்ற இந்த விஷயத்துக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா ? சற்று பொறுங்கள்.

சிவாஜி அவர்களும் யானைகளும் சம்மந்தப்பட்ட காட்சிகள்  பல படங்களில் வருகின்றன .தங்கமலை ரகசியம் ,காத்தவராயன் வணங்காமுடி ,அந்தமான் காதலி ...இப்படி  சொல்லிக் கொண்டே போகலாம். சிவாஜி அவர்கள் வேட்டையாடுவதில் பெரும் வீரர் என்று தெரியும். பெரும்பாலும் எல்லா விலங்குகளையும் வேட்டையாடி இருக்கிறார் சிவாஜி அவர்கள் .யானைக்கு முன் துப்பாக்கி தூக்கியது இல்லை. யானை சவாரி செய்து வேட்டைக்கு சென்றிருக்கிறார்.
தமிழ்நாட்டின் பிரபலமான கோவில்களுக்கு யானைகளை கொடையாக கொடுத்திருக்கிறார்.
அமெரிக்காவின் மிருகக்காட்சி சாலைக்கு குட்டி யானையை  பரிசாக அனுப்பி வைத்தார் .

இன்னும் ஒரு ஆச்சரியமான சம்பவம். கலைஞர் கருணாநிதி அவர்கள் தஞ்சைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது அப்போது சூரக்கோட்டையில் சிவாஜி இருப்பதாக கேள்விப்பட்டு அப்படியே நடிகர் திலகத்தை பார்த்துவிட்டு வரலாம் என்று முடிவெடுத்து இருக்கிறார். சிவாஜி அவர்களுக்கு கருணாநிதி தன்னை பார்க்க வருவதாக தகவல் சொல்லபட்டது .என்ன? இப்படி திடீர் என்று சொல்கிறாரே!
முதன் முதலாக வருகிறார்!
என்ன செய்யலாம் என்று யோசித்த சிவாஜி அவருக்கு நன்றாக வரவேற்பளிக்க வேண்டும் என்று முடிவு செய்தார் .
விலை உயர்ந்த மாலையை தயார் செய்தார்.திருவானைக்காவல் கோவிலில் இருந்து யானையை வரவழைத்தார் .
சூரக்கோட்டை வீட்டுக்கு வரும் கருணாநிதியை  வாசலில் நிற்க வைத்து யானையிடம் மாலையை கொடுத்து கருணாநிதியின் கழுத்தில் போட ஏற்பாடு செய்திருந்தார் சிவாஜி அவர்கள் .
கருணாநிதி வந்ததும் அவர் கழுத்தில் மாலை போட யானை முரண்டு பிடித்தது. தயங்கி தயங்கி நிற்பது போல் அது நின்றது.இதை பார்த்த சிவாஜி அவர்கள் யானையிடம் ஏதோ சொல்ல உடனே யானையானது முரண்டு பிடிக்காமல் அந்த மாலையை கருணாநிதி கழுத்தில் அணிவித்தது.
இதைப் பார்த்து வியந்து போன கருணாநிதி என்ன கணேசு ,நீ சொன்னபடி எல்லாம் யானை கேக்குது இன்று ஆச்சரியமாக கேட்டாராம்.
யானைகளுடன் படு இயல்பாக நடிப்பார் .ஒன்றல்ல, இரண்டல்ல பல யானைகளை கொடையாக கொடுத்துள்ளார். அந்த யானைகளுடன் படு நேசமாக பழகுவார்.
யானைகளுடன் நடிகர் திலகத்தின் பந்தமானது மிகவும் உணர்வுபூர்வமானது.

யானைகளை கட்டுப்படுத்த பாகன்கள் இருப்பார்கள் .யானைக்கென்று ஒரு பாஷை இருக்கிறது .யானைகள் முரண்டு பிடிக்கும்போது எல்லாம் அந்த பாஷையில் பேசி தான் யானை பாகன்கள்  அதை கட்டுப்படுத்துவார்கள். அந்த பாஷையில் ஒரு அன்பு இருக்க வேண்டும். அந்த பாஷைக்கு யானைகள் அடிபணியும்.
யானைகளுக்கும் பாகன்களுக்கும் உண்டான ஒரு சங்கேத பாஷை அது .
பொன்னியின் செல்வன் புதினத்தில் கூட ராஜ ராஜ சோழத் தேவர் அந்த பாஷையை தெரிந்து வைத்திருந்தார் என்று அந்தப் புதினத்தில் சொல்லப்பட்டிருக்கும்.
சிவாஜி அவர்கள் ஆரம்ப காலத்தில் இருந்து யானைகளுடன் மிகவும் விருப்பமாக பழகி இருக்கிறார்  .
யானைகளுடன் பழக ,நேசத்தை காட்ட ,அதை கட்டுப்படுத்த அதன் பாஷையை  தெரிந்து வைத்திருந்தார் என்பது தான் நடிகர் திலகத்தின் இன்னொரு சிறப்பு ..இந்த யானை  பாஷையை தெரிந்து வைத்திருந்ததால் தான் சரஸ்வதி சபதம் படத்தில் நடிக்கும் போது யானை ஆனது அவர் பேச்சுக்கு கட்டுப்பட்டது. கருணாநிதிக்கு மாலை போட சொன்ன போது அது பணிந்தது. நடிப்பு  தொழிலை மீறி என்னவெல்லாம் தெரிந்து வைத்திருக்கிறார் இந்த ஆச்சர்ய மனிதர் !  இது போன்ற விஷயங்களை கேட்கும் போது அவர் நடிகர் என்பதைவிட அவர் எவ்வளவு பெரிய ஆச்சரிய மனிதர்  என்பதை  எண்ணும்போது நாம் ஆச்சரியப்படாமல் இருக்க முடியுமா? கடவுளின் அருளும் ,
ஆசியும் இருந்தால் தான் ஒரு மனிதருக்கு இத்தனை சிறப்புகள் அமையும். அப்படிப்பட்ட ஒரு மாமனிதர் தான் சிவாஜி அவர்கள்.
அவரிடத்தில் இன்னும் எத்தனையோ ?

செந்தில்வேல் சிவராஜ் ...


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்