இடுகைகள்

ஜூன், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

சிவாஜி MP

படம்
நடிகர்திலகம் சிவாஜிக்கு M.P.பதவி கொடுத்து பெருமை படுத்தியவர் இந்திராகாந்தி. இந்த பதவி சிவாஜிக்கு எப்படி கிடைச்சது?  இந்த பதவி சிவாஜிக்கு கிடைக்கறதுக்கு முன்னாலே எவ்வளவு பிரச்சினைகள் வந்துச்சு அப்படிங்கறது ரொம்ப பேருக்கு தெரியாது. அந்த விபரங்களை இப்ப பாக்கலாம். அதுக்கு முன்னாலே இந்தி நடிகை நர்கீஸ் பத்தி கொஞ்சம் சொல்ல வேண்டியிருக்கு. இந்தி சினிமா பீல்டுலே பெரிய நடிகர் ராஜ்கபூர்.இவரோட நர்கீஸ் நடிச்சு பெரிய ஹிட்டான படங்கள் தான் ஆவாரா ,ஸ்ரீ420.இந்த படங்களோட மாபெரும் வெற்றி இவங்களை இந்தி சினிமா சூப்பர் ஜோடியா ஆக்கிடுச்சு. தமிழ் சினிமாலே ஜெமினி சாவித்திரி போலே இந்தி சினிமா பீல்டுலே ராஜ்கபூரும் நர்கீசும் இருந்தாங்க.சினிமாலே மட்டும் ஜோடியா இல்லாமே நிஜ வாழ்க்கையிலும் அப்படித்தான் இருந்தாங்க. ஜெமினி மாதிரியே ராஜ்கபூரும் ஏற்கெனவே கல்யாணம் ஆனவர்.ராஜ்கபூர் தனக்கு மட்டுமே சொந்தமா இருக்கணுங்கற ஆசைலே முதல் மனைவியை டைவோர்ஸ் பண்ணச் சொல்லி கட்டாயப்படுத்தினார் நர்கீஸ்.ஆனா அதுக்கு ராஜ்குமார் சம்மதிக்கவில்லை.இது நர்கீசுக்கு மன வருத்தத்தை கொடுத்துச்சு.ரெண்டு பேருக்கும் இடையிலே கருத்து ,பிரச்சி...

இளையதிலகம் பிரபு

படம்
என் தங்கச்சி படிச்சவ.. 1988 லே வெளியான படம் இது. பட பூஜை விளம்பரத்தை பாத்துட்டு என்னடா இது கொச்சையா தலைப்பு வெச்சிருக்காங்களேன்னு தான் யோசிக்க வெச்சது. படம் வந்த பின்னாலே பாத்தா P.வாசு படத்தை பிரமாதமா பிரசண்ட் பண்ணியிருந்தார். இந்த படம் 70 சதவீதம் பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளியிலேதான் ஷுட்டிங் பண்ணுணாங்க. இது என்னோட சொந்த ஊர். இந்த படத்துக்கு பின்னாலே சத்தியவாக்கு, காவலுக்கு கெட்டிக்காரன் படத்தையும் இந்த ஊர்லே ஷூட் பண்ணுணாங்க. 1992 லே தினத்தந்திலே உத்தமராசா முழுப்பக்க  பூஜை விளம்பரம் வந்துச்சு. பிரபு தலை அலைங்காரம் நல்லா இருந்துச்சு.  மறுபடியும் பிரபு சூட்டிங்குக்காக   எங்க ஊருக்கு வந்திருந்தார். நேர்லே பாத்தப்போ பட்டிக்காடா பட்டணமோ நெனப்பு வந்துச்சு. இந்த படமும் பாதி சூட்டிங் ஜமீன் ஊத்துக்குளியிலே தான் எடுத்தாங்க.முதல்நாள் சூட்டிங் லஞ்ச் பிரேக்லே இளையதிலகத்தை போய் பாத்தோம். எந்த சூட்டிங்லே அவரை போய் பாத்தாலும் ரசிகர்களை பாத்து அவர் கேக்கற முக்கியமான கேள்விலே ஒண்ணு ,சாப்டீங்களா? லஞ்ச் டயமா இருந்தா சூட்டிங் ஆளுகளை கூப்பிட்டு சாப்பாடு போடச் சொல்வார். இது எங்க ஊரா இருந்த...

இரண்டு 200 நாள் படங்கள்

நடிகர்திலகத்தின் இரண்டு படங்கள் 200 நாட்கள் ஓடிய ஒரே திரையரங்கு என்ற சாதனை தமிழ்நாட்டில் ஓரே ஒரு தியேட்டருக்குத்தான் உள்ளது. அது என்ன தியேட்டர் , என்ன படங்கள் என்று தெரிந்து கொள்வதற்கு முன்பாக அந்த தியேட்டர் பற்றிய சில சுவையான செய்திகளை தெரிந்து கொள்ளலாம். "சிந்தாமணி"-இலக்கியத்திலும், சினிமாவிலும் இந்தப் பெயருக்கு எப்போதும் முக்கியத்துவம் உண்டு. அப்போதைய சினிமா சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதரை புகழ் அரியணையில் அமரவைத்து அழகு பார்த்தது, இந்தச் சிந்தாமணி என்ற பெயர்தான் என்பது வரலாறு. ஆம்! 1937-ம் ஆண்டு பாகவதர் நடித்த சிந்தாமணி என்ற திரைப்படம், தீபாவளி அன்று வெளியாகி, மறு தீபாவளியையும் கடந்து வெற்றிகரமாக ஓடியது. மதுரையில், அப்போது இருந்த சில தியேட்டர்களில் ஒன்றான சிட்டி சினிமாவில் அந்தப் படம் ரிலீசாகி ரசிகர்களுக்கு விருந்து படைத்தது. அப்போது மதுரையை தலைமை இடமாகக்கொண்டு இயங்கிய 'ராயல் டாக்கீஸ்' என்ற நிறுவனம்தான் அந்தப் படத்தை தயாரித்தது.  தமிழகம் முழுவதும் சிந்தாமணி படம் சக்கைப்போடு போட்டது. அவர்கள் எதிர்பார்த்த வசூலைவிட அதிகமாக ஈட்டிக்கொடுத்தது. அந்த லாபத் தொகையை எ...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்