1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

சிவாஜி MP

நடிகர்திலகம் சிவாஜிக்கு M.P.பதவி கொடுத்து பெருமை படுத்தியவர் இந்திராகாந்தி. இந்த பதவி சிவாஜிக்கு எப்படி கிடைச்சது?  இந்த பதவி சிவாஜிக்கு கிடைக்கறதுக்கு முன்னாலே எவ்வளவு பிரச்சினைகள் வந்துச்சு அப்படிங்கறது ரொம்ப பேருக்கு தெரியாது. அந்த விபரங்களை இப்ப பாக்கலாம்.
அதுக்கு முன்னாலே இந்தி நடிகை நர்கீஸ் பத்தி கொஞ்சம் சொல்ல வேண்டியிருக்கு.
இந்தி சினிமா பீல்டுலே பெரிய நடிகர் ராஜ்கபூர்.இவரோட நர்கீஸ் நடிச்சு பெரிய ஹிட்டான படங்கள் தான் ஆவாரா ,ஸ்ரீ420.இந்த படங்களோட மாபெரும் வெற்றி இவங்களை இந்தி சினிமா சூப்பர் ஜோடியா ஆக்கிடுச்சு.

தமிழ் சினிமாலே ஜெமினி சாவித்திரி போலே இந்தி சினிமா பீல்டுலே ராஜ்கபூரும் நர்கீசும் இருந்தாங்க.சினிமாலே மட்டும் ஜோடியா இல்லாமே நிஜ வாழ்க்கையிலும் அப்படித்தான் இருந்தாங்க. ஜெமினி மாதிரியே ராஜ்கபூரும் ஏற்கெனவே கல்யாணம் ஆனவர்.ராஜ்கபூர் தனக்கு மட்டுமே சொந்தமா இருக்கணுங்கற ஆசைலே முதல் மனைவியை டைவோர்ஸ் பண்ணச் சொல்லி கட்டாயப்படுத்தினார் நர்கீஸ்.ஆனா அதுக்கு ராஜ்குமார் சம்மதிக்கவில்லை.இது நர்கீசுக்கு மன வருத்தத்தை கொடுத்துச்சு.ரெண்டு பேருக்கும் இடையிலே கருத்து ,பிரச்சினைகள் வர ரெண்டு பேரும் பிரிஞ்சுட்டாங்க.

அதுக்கு பின்னாலே தான் நர்கீஸ் சுனில்தத்தை கல்யாணம் செஞ்சுகிட்டார்.சொந்த வாழ்க்கை அப்படி இருந்தாலும் சினிமா பீல்டுலே நர்கீஸ் பெரிய புகழோடவே இருந்தார்.நடிப்பு துறையிலே கொடி கட்டி பறந்துட்டு இருந்தார்.பாராட்டுகள் விருதுகள் எல்லாம் நிறைய கிடைச்சது நர்கீசுக்கு.

இந்திய கவர்மெண்ட் கூட நர்கீசுக்கு சிறப்பு  MP.பதவி கொடுத்துச்சு.நடிகைகள்லே இந்த பதவி வாங்குன முதல் நடிகை அப்படிங்கற பெருமையும் நர்கீசுக்கு கிடைச்சது.
நர்கீஸ்  MP.பதவி வகிச்ச ரெண்டு வருசத்துலே அவர் இறந்துட்டார்.அதுக்கு காரணம் அவருக்கு ஏற்பட்ட புற்றுநோய்தான்.நர்கீஸ் மரணம் அடைஞ்சதாலே அவர் வகிச்ச MP.பதவி வெற்றிடமா ஆச்சு.

சினிமா பீல்டுலே இருக்கற யாரை அந்த சீட்டுலே உக்கார வைக்கலாம்னு காங்கிரஸ் கட்சி 
ஆலோசனைகள் செஞ்சது.
சஞ்சய்காந்தி இறந்து போனதாலே அப்பதான் அரசியலுக்கு வந்திருந்தார் ராஜிவ்காந்தி.காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள்லே ஒருத்தரா இருந்தார் ராஜிவ்காந்தி.
ராஜிவ்காந்தியும் இந்தி நடிகர்அமிதாப்பச்சனும் நெருங்குன நண்பர்கள்.அந்த நட்பு அடிப்படையிலே 
அமிதாப்பச்சனுக்கு அந்த பதவியை கொடுக்க சொல்லி ரெகமண்ட் பண்ணினார் ராஜிவ்காந்தி.

இப்ப இதுலே தமிழக காங்கிரஸ் நிலையை பத்தி சொல்லணும்.தமிழக காங்கிரஸ்லே மூப்பனாரை முன்னுக்கு கொண்டு வந்தவர் சிவாஜி.இதனால் பல தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு சிவாஜி மேலே வருத்தம் இருந்துச்சு.தப்பான ஒருத்தரை சிவாஜி கொண்டாடுகிறார்னு மனவருத்தத்துலே இருந்தாங்க.

கலைஞர்கள்லே யாரை MP யா
போடலாம்னு கேள்வி வந்தப்போ சிவாஜி மேலே வருத்தத்துலே இருந்த காங்கிரஸ் தலைவர்கள் கூட சிவாஜியை ரெகமண்ட் பண்ணுனாங்க. இது ஒரு ஆச்சர்யமான விஷயம்தான்.
இந்த நிலையிலே மூப்பனார் ,இனி காங்கிரஸ் கட்சி ராஜிவ்வோட கன்ட்ரோல்லதான் கட்சி நடக்கும் ,அதுக்கேத்தபடி அவர் தன்னோட அரசியல் சுயலாபத்தை மனசுலே வெச்சுட்டு ராஜிவ் ரெகமண்ட் பண்ணுன அமிதாப்பச்சனை ஆதரிக்கறமாதிரி நடந்துகிட்டார்.
ராஜிவ்வோட நெருக்கமாகி தன்னோட வளர்ச்சியை அதிகமாக்கி கொள்ளலாம்னு மூப்பனாரோட எண்ணம் மாறிப் போச்சு.
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கு மூப்பனாரோட இந்த முடிவு அதிர்ச்சியா இருந்துச்சு.மூப்பனார் பேரை பட்டி தொட்டியெல்லாம் கொண்டு போய் பிரபலம் ஆக்குன சிவாஜி பேரை சொல்லாமே ராஜிவ்காந்திக்கு ஜால்ரா போட்டுட்டாரேன்னு மனக்குழப்பத்துலே இருந்தாங்க காங்கிரஸ் தலைவர்கள்.

இதுலே அமிதாப் பேரை முதன்முதலா சிபாரிசு பண்ணினவரே மூப்பனார்ங்கற  தகவல் இன்னும் அதிர்ச்சியை கொடுத்துச்சு.

இவங்க நிலைப்பாடு இப்படி இருந்ததுன்னா ,இந்திரா காந்தியோட எண்ணம் வேற மாதிரி இருந்துச்சு.சிறப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சிவாஜியைத்தான் நியமிக்கணும்னு இந்திராகாந்தி இருந்தார் .சிவாஜியை தவிர யாருக்கும் கொடுக்க கூடாதுங்கற முடிவுலே இந்திரா உறுதியா இருந்தாங்க.தமிழக காங்கிரஸ் தலைவர்கள் வேற அந்த பதவியை சிவாஜிக்குத்தான் கொடுக்கணும்னு உறுதியா இருந்தது இந்திராவோட எண்ணத்துக்கு கூடுதல் பலமா ஆனது.

மூப்பனார் பிளான் பண்ணி சிவாஜிக்கு எதிரா அமிதாப் பேரை சிபாரிசு செஞ்சார்ங்கற செய்தி பத்திரிக்கைகளில்லே கமுக்கமான துணுக்கு செய்திகளா வெளி வந்துச்சு.
இந்த விஷயம் பத்தி மூப்பனார் எந்த கருத்தும் சொல்லாமே மௌனமா இருந்தார்.அந்த மௌனமே அவர்  சிவாஜிக்கு எதிரா செயல்பட்டார்ங்கற கருத்தை உறுதிப்படுத்திடுச்சு.

டெல்லிலே இருந்த சில நண்பர்கள் மூலமா மூப்பனாரோட நிலைப்பாட்டை சிவாஜி தெரிஞ்சுகிட்டார்.அது தெரிஞ்சும் தன்னோட வேதனையையும் வருத்தத்தையும் சிவாஜி வெளியிலே காட்டிக்கலே.

MP. பதவி தனக்கு வேணுமா ,வேண்டாமா அப்படிங்கறது சிவாஜிக்கு முக்கியமா படலே.மக்கள் கிட்டே அறிமுகமே இல்லாத மூப்பனாரை தமிழகம் முழுக்க கொண்டு போய் பிரபலப்படுத்துன தன்னையே எதுத்து மூப்பனார் எடுத்த நிலைப்பாடுதான் சிவாஜிக்கு அதிர்ச்சியா இருந்துச்சு.

அரசியல்வாதிகள் எப்போதுமே சுயநலத்தோடதான் தங்களுடைய செயல்பாடுகளை 
செஞ்சுட்டு வருவாங்க.அதனாலே தான் மக்கள் அவங்களை அரசியல் வியாதிகள்னு வெறுப்போட சொல்றாங்க.இந்த வரிசையிலே மூப்பனாரும் சேந்துட்டார்.அவர் எப்பவோ அப்படி ஆயிட்டார். சிவாஜிக்கு இப்பத்தான் தெரிய வந்தது.

ராஜிவ்காந்தியிடம் நல்ல பேரை வாங்கவேண்டும் என்று சிவாஜியை சத்தமின்றி காயப்படுத்தினார் மூப்பனார்.தான் முன்னேற வேண்டும் என்ற  எண்ணம் வந்துவிட்டாலே சுயநலம் இயல்பாகவே வந்து கொள்கிறது அரசியல்வாதிகளிடம்.அது மூப்பனாரிடம் இல்லாமல் இருந்திருந்தான் வியப்பு.சிவாஜிக்கு எதிரான நிலைப்பாட்டை மூப்பனார் எடுத்துட்டார்னு தெரிஞ்ச சிவாஜி ரசிகர்கள் மூப்பனார் படங்களை கழட்டி வீச ஆரம்பிசுட்டாங்க.மன்ற நிகழ்ச்சிகள்லே மூப்பனார் ஆதரவு தலைவர்களை தவிர்த்து நிகழ்ச்சிகளை நடத்துனாங்க.சிவாஜி கோஷ்டி மூப்பனார் கோஷ்டின்னு பிரிவு உண்டாச்சு. சிவாஜியெல்லாம் இவங்க மாதிரி அரசியல் பண்ணாமாயே இந்த கோஷ்டிகளை எல்லாம் இல்லாமே பண்ணியிருக்க முடியும். அதுவும் நேர்மையாவே.
காமராஜர் அணி ராஜாஜி அணின்னு  முன்னாலே இருந்த மாதிரி சிவாஜி அணி மூப்பனார் அணிண்னு மாறிடுச்சு.

சிவாஜிக்கு MP பதவி கொடுக்கறதுலே இங்க தான் பிரச்சினைகள் இருந்தாலும் வட நாட்டுலேயும் ஒரு  எதிர்ப்பு இருந்துச்சு. அமிதாப்பச்சனுக்கு பதவி கிடைக்கணும்ங்கற ஆசை அவரோட மனைவி ஜெயா பச்சனுக்கு அதிகமா இருந்துச்சு. அதனாலே அதுலே ஆர்வமா இருந்தார்.

யார் என்ன சொன்னாலும் சரி மக்களவை சிறப்பு உறுப்பினர் பதவியை சிவாஜிக்குத்தான் கொடுக்கணும்ங்கற முடிவுலே இருந்து இந்திரா காந்தி பின் வாங்கவே இல்லே.நர்கீஸ் MPயா இருந்தப்போ ஒரே தடவை மட்டும் தான் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்துகிட்டார். இனிமேலே அது போல அந்த பதவிக்கு வர்றவங்க யாரும் இருந்திடக் கூடாதுங்கற முடிவுலே தெளிவா இருந்த இந்திராகாந்தி, தமிழக காங்கிரசோட தூணா இருந்த சிவாஜிக்கு சிறப்பு நாடாளுமன்ற MP.பதவி கொடுத்து பெருமைப்படுத்தினார்.

டெல்லி போய் பதவிப் பிரமாணம் எடுத்துகிட்டு தமிழகம் திரும்புன சிவாஜிக்கு ஏர்போர்ட்லே இருந்தே பிரமாண்ட வரவேற்பு கொடுத்து அசத்துனாங்க.சிவாஜிக்கு வரவேற்பும் பாராட்டுகளும் கொடுத்து அமர்க்களப்படுத்துனாங்க.
தமிழகம் முழுக்க சிவாஜி ரசிகர்கள் வாழ்த்துக் கூட்டம் போட்டு சிறப்பு செஞ்சாங்க.

காணவில்லை காணவில்லை மூப்பனாரை காணவில்லைங்கற கோஷ முழக்கம் சிவாஜி ரசிகர் மன்ற கூட்டங்கள்லே இருந்துச்சு.

நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்னு அவன்தான் மனிதன் பட பாட்டு வரி இருக்கும்.அது சிவாஜியோட உண்மையான வாழ்க்கைலே தொடர்கதையாவே நடதுட்டு இருந்துச்சு.சிவாஜியோட வாழ்க்கைலே மறக்க முடியாத பாதிப்புகளை ஏற்படுத்தினது ,திமுக பிரிவு ,நடிகர்சங்கம் ,தேவர் மண்டபம் ,மூப்பானாரோட அரசியல்னு இந்த நிகழ்வுகள் முக்கியமானது...

களமும் இல்லாமல் வாளும் இல்லாமல் வெறுங்கையோடு நின்ற மூப்பனாருக்கு களம் அமைத்துக் கொடுத்து கையில் வாளும் கொடுத்து அமர்வதற்கு பதவியும் கொடுத்து அழகு பார்த்தவர் சிவாஜி.
உயரத்துக்கு வந்து விட்டதும் அவர் எட்டி உதைத்தது ஏணியாய் இருந்த சிவாஜியைத்தான்.நண்பர் என சிவாஜி தாலாட்டி சீராட்டிய நட்பு கருந்தேளாக மாறியது என்றால் எல்லாம் சுயநலம் சார்ந்த கேடு கெட்ட அரசியலால் தான்.ஒரு முறை திண்டிவனம் 
ராமமூர்த்தியிடம் ,காங்கிரசின் வீழ்ச்சிக்கு யார் காரணம் என்று பத்திரிக்கை ஒன்று கேள்வி கேட்டது. அதற்கு அவர்,சிறிதும் தாமதிக்காமல் மூப்பனார் என்று பட்டென்று சொன்னார்.
இந்திரா காந்தியை தன் வாழ்நாள் முழுதும் அம்மா அம்மா என்றழைத்து அவரை உயர்வான நிலையில் வைத்து போற்றியவர் சிவாஜி.



 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்