இடுகைகள்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

நடிகர் திலகமும் நானும் ..

படம்
நடிகர்திலகமும் நானும்.. நினைவுகள் சிறுவயதில் நடிகர்திலகத்தின் படங்களை தவிர வேறு படங்களை பார்த்து வளர்க்கப்பட்டதல்ல எங்கள் குடும்பம்.நான் கிராமத்திலே பிறந்து வளர்ந்தவன்.மின்சாரஒளி விளக்குகளை கொண்டிராத பெரும்பாலான வீடுகள் அடங்கியது நான் வசித்த கிராமம்.1970 கால கட்டம் அது.நானும் நிலாச்சோறு ஊட்டி வளர்க்கப்பட்டவன் தான்.நிலாவில் கூட நடிகர்திலகம் தெரிவாரா என்று நான் யோசித்த நினைவுகள் இன்றும் வந்துபோவதுண்டு. நடிகர்திலகத்தின் படங்கள் அடிக்கடி டூரிங் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும்.அன்று காலையில் தெருக்களில் நடிகர்திலகத்தின் பட போஸ்டர் பார்த்தால் மாலை அந்த திரைப்படம் பார்ப்பதுதான் தான்  எங்களது தவிர்க்க முடியாத நிகழ்ச்சி.அதில் எந்த மாற்றமும் ஏமாற்றமும் நான் அனுபவித்ததில்லைஇந்த சூழ்நிலைகளில் வளர்ந்து வந்தவன் நான். கால சுழற்சி. 1986 ஆம் வருடம்.10ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். எப்பொழுதும் போல் 4மணிக்கு பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தேன்.நடிகர்திலகம் நம் ஊருக்கு வந்திருக்கிறார் என்ற தகவல் காதினில் வந்து விழுந்தது.நம்ப மறுத்தது மனம்.அவர் எதற்கு இந்த ஊருக்கு வருகிறார்.வீடு வந்...

எதார்த்த சினிமாவிலும் முதன்மையான சிவாஜியின் முதல் மரியாதை

படம்
முதல் மரியாதை வாக்கப்பட்டு வந்த பொஞ்சாதி வக்கனையா ஆக்கிப் போட தெரியாதவளா இருந்தாலும் சரி, நல்ல பேச்சு நாலு பேசத் தெரியாதவளா இருந்தாலும் சரி, நாலு பேருக்கு கிள்ளிப் போடாதவளா இருந்தாலுஞ்  சரி கட்டிக்கிட்ட புருசன் மனச கல்லாக்கிக்கிட்டு காலத்தைஏதோ ஓட்டிடலாம்.ஆனா மானத்தை தொலச்சவள கட்டிக்கிட்ட புருஷன் தான்,   வெளியவும் சொல்ல முடியாம உள்ளவே புழுங்கிக்கிட்டு நடைப்பிணமாத்தான் வாழ்ந்துகிட்டு இருப்பான்.இது நல்ல மனுசனுக்குண்டான குணம்.  ஊருக்கே பெரிய மனுசனா இருந்தாலும், குடும்பம்னு ஒண்ணு இருந்தா அவரு பேச்சை கேட்கிற மாதிரி பொண்டாட்டியும் ,  புள்ள குட்டிகளும் இருந்தாத்தேன்  மனுசனுக்கு படுக்கையிலே தூக்கம் வரும்.இல்லேன்னா அந்த படுக்கை கூட சுமையாத்தான் தெரியும்.ஊருக்குள்ள போயிட்டும்,  வந்துட்டும் இருக்கும் போது  கௌரவத்திற்கு சிரிச்சு தொலச்சு செத்த பொணமா வாழ்க்கைய நடத்தனும்ங்கறமாதிரிதான் அவுக பொழப்பு இருக்கும். இங்க மலைச்சாமியோட கதயும் இதப் போலத்தேன்.மத்த மனுசங்களோட குணத்தோட இந்த மனுசனோட குணத்த இணைச்சுப் பேச முடியாது.அந்த மனுசனோட குணம் பூமிக்குள்ள புதஞ்சிருக்கிற வைர...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்