இடுகைகள்

விடுதலை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

வெளிநாட்டில் எடுக்கப்பட்ட சிவாஜி படங்கள்

படம்
சினிமாவுக்காக சிவாஜி சென்ற வெளிநாடுகள் ... இப்போதெல்லாம் பல தமிழ் படங்கள் வெளிநாடுகளில் தான் படமாக்கப்பட்டு வருகின்றன. அப்படி இல்லையெனில் ஒரு பாடலுக்கு டூயட் பாடவாவது வெளிநாட்டிற்கு சென்று விடுகிறார்கள். உண்மையாகவே படத்திற்கு அந்த வெளிநாட்டு காட்சிகள் தேவையா அல்லது படப்பிடிப்பை சாக்காக வைத்து ஊர் சுற்றி பார்க்கிறார்களா என்று தெரியவில்லை. சரி அதெல்லாம் இருக்கட்டும் தமிழ் சினிமாவில் வெளிநாடுகளில் சென்று படப்பிடிப்பு நடத்தும் கலாச்சாரம் எப்போது தோன்றியது என்று தெரியுமா? முதன் முதலில் எந்த தமிழ் படத்தை வெளிநாட்டில் சென்று படமாக்கினார்கள் என்று உங்களுக்கு தெரியுமா? அந்த தகவலை தான் நாம் இதில் பார்க்க போகிறோம். அதன்படி இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் கடந்த 1969ஆம் ஆண்டு வெளியான சிவந்த மண் என்ற தமிழ் படம் தான் முதன் முதலில் வெளிநாட்டில் படமாக்கப்பட்டது.இந்த படத்தில் சில காட்சிகளுக்காக யூரோப், ஈபிள் டவர் மற்றும் ஆல்ப்ஸ் மலைஆகிய இடங்களுக்கு சென்று படப்பிடிப்பு நடத்தியுள்ளார்கள். இந்த படம் கிட்டத்தட்ட 100 நாட்கள் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் இடம்பெற்ற வெளிநாட்...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்