இடுகைகள்

டிசம்பர், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

சிவாஜி பட தலைப்பு ஒற்றுமை

படம்
ஒரு தலைப்பு என்பது ஒரு படத்திற்கு முகவரி போன்றது. ஆனால், நடிகர் திலகத்தின் படங்களில் சில சொற்கள் மீண்டும் மீண்டும் தலைப்புகளில் இடம்பெற்றாலும், அவை ஒவ்வொன்றும் ஒரு புதிய பரிமாணத்தையே நமக்குக் காட்டின. "ஒரே சொல்... ஆனால் இரு வேறு கதைக் கருக்கள்" என்ற ரீதியில் அமைந்த அவரது படங்களின் பெயர்கள், ஒரு தேடலைப் போலவே சுவாரசியமானவை. காலங்கள் கடந்தும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த அந்தத் தலைப்புகளின் அணிவகுப்பை இங்கே விரிவாகக் காண்போம். மனிதன்:  1953-ல் வெளியான 'மனிதனும் மிருகமும்' மனித இயல்புகளைப் பேசியது. 1975-ல் வெளியான 'மனிதனும் தெய்வமாகலாம்' ஆன்மீகத்தை ஒரு புதிய கோணத்தில் அணுகியது.  1975-லேயே 'அவன்தான் மனிதன்' வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து 1977-ல் 'அவன் ஒரு சரித்திரம்' வெளியானது (இவ்விரண்டு படங்களிலும் மஞ்சுளா நாயகி). ​மகன்:  1969-ல் தந்தை-மகன் பாசத்தைச் சொல்லும் 'தெய்வமகன்' (3 வேடம்), 1974-ல் 'என் மகன்' (2 வேடம்) மற்றும் 1992-ல் வெள்ளிவிழா கண்ட 'தேவர் மகன்' என 'மகன்' வரிசை நீண்டது. ​ராஜாக்களின் ...

நடிகனில் ஓர் அவன் தான் மனிதன்

படம்
இளையதிலகம் பிரபு... பெரியதம்பி பட சூட்டிங் பொள்ளாச்சியில் நடந்தது. 1996 ஆம் வருசம். அன்னைக்கு கடைசிநாள் சூட்டிங். பொள்ளாச்சி வந்தார்னா போய் பாக்கறது வழக்கம். நான் பொள்ளாச்சிதான். கடைசி நாள் சூட்டிங்காச்சே ..போய் பாத்துட்டு வந்திடலாம்னு நாங்க போனோம்.போக லேட் ஆயிடுச்சு. பிரபு சாருக்கு சூட்டிங் முடிஞ்சு பிளைட்டுக்கு போயாகணும். அந்த அவசரத்திலயும் ,சூட்டிங்லே இருந்த அத்தனை தொழிலாளிகளுக்கும் புதுத்துணி அன்பளிப்பை தன் கையாலேயே கொடுக்கறார். படத்துலே வேலை செஞ்ச ஒரு தொழிலாளி சொன்னார்:அவுட்டோர் சூட்டிங் வந்தாலே பிரபு சார் இப்படித்தான். எல்லாருக்கும் ஏதோ ஒண்ணு செஞ்சுதான் அனுப்பி வைப்பார்.நான் பல சூட்டிங்லே பாத்திருக்கேன்னு சொன்னார்.தயாரிப்பாளர் பண்றத இவர் செய்யறாறேன்னு நாங்க யோசிச்சோம்.இந்த மாதிரி தெரியாத விஷயத்தை தான் அம்மா கிரியேசன் சிவா ரெண்டு மூணு வருசத்துக்கு முன்னாலே ஒரு யூடியூப் சேனல்லே சொன்னார்.பிரபுவுக்கு தயாரிப்பாளர் சொன்ன சம்பளத்துலே பாதிதான் சூட்டிங்  முடிஞ்சதும் கிடைக்கும். பாதி சம்பளம் இப்படிப்பட்ட செலவுகள்லே போயிடும். இன்னொரு சம்பவம்.ராஜகுமாரன் சூட்டிங் .ஆடி வரட்டும் மயிலைக்காளை...

சோத்துல எங்கடா இருக்கு சாதி

படம்
சோத்துல எங்கடா இருக்கு சாதி?" - இந்த கேள்வியை கேட்டது ஒரு தமிழ் சினிமா பாட்டு.இது என்ன பாட்டு அது கேட்டவிதம் எப்படிங்கறதை பத்திதான் இந்த பதிவுலே நாம பாக்கப் போறோம். ​"எல்லாருக்கும் வணக்கம்!.... 1971-ல வெளிவந்த படம்  'பாபு'. 'சிவாஜி சாரோட கரியர்ல இது ரொம்ப முக்கியமான படம். ஏன்னா, இதுல அவர் ரிக்‌ஷா ஓட்டுற ஒரு விசுவாசமான வேலைக்காரனா வாழ்ந்திருப்பாரு. ​ரிக்‌ஷா ஓட்டுறப்போ ஒரு நடிப்பு , அப்புறம் வீட்டு வேலைக்காரனா வரும்போது ஒரு நடிப்புன்னு மனுஷன் அசத்தியிருப்பாரு. அந்தப் படத்துல வர்ற 'வரதப்பா வரதப்பா கஞ்சி வருதப்பா' பாட்டை ஒரு புதிய பார்வையில ரசிக்கலாம் ..வாங்க ... வாலியின் வாதம்  , எம்.எஸ்.வி யோட மெல்லிசை, நடிகை விஜயஸ்ரீயோட துள்ளல்... இது எல்லாத்தையும் தாண்டி சிவாஜி கணேசன் அப்படிங்கிற ஒரு 'நடிப்புப் பூகம்பம்' அந்த நாலு நிமிஷத்துல என்ன பண்ணியிருக்காருன்னு பார்ப்போம்!" ​ ​"பாட்டு ஆரம்பிக்கும்போதே ஒரு பிஜிஎம் வரும் பாருங்க... 'டான்ட டன்டட...'. அப்போ சிவாஜி சார் ஒரு நடை நடப்பாரு. அந்த நடையில ஒரு ராஜகம்பீரம் இருக்கும். ஆனா அந்த கம்பீரம் ஒரு...

சிவாஜியின் தெலுங்கு ரீமேக் படங்கள்

படம்
 நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த தெலுங்கு ரீமேக் படங்கள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம் .. 1.முதலாவதாக பரதேசி திரைப்படம்.இந்த தெலுங்கு படம் 12.01.1953 ல் வெளியானது.இது தமிழ் மற்றும் தெலுங்கில் இருமொழிகளில் எடுக்கப்பட்ட காதல் திரைப்படம்; இதில்  நாகேஸ்வர ராவ், அஞ்சலி தேவி ஆகியோருடன் சிவாஜிகணேசனும் நடித்தார். இயக்கம்: எல்.வி. பிரசாத்.  அஞ்சலி பிக்சர்ஸ் தயாரித்த படம்.  காதலித்து பிரிந்தவர்கள் மீண்டும் இணைவது தான் கதை சிறப்பம்சம்: இது சிவாஜி கணேசன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட முதல் தெலுங்குப் படம், ஆனால் வெளியானது பராசக்திக்குப் பிறகு. சிவாஜி கணேசன் நடித்த ஆரம்பகால தெலுங்குப் படங்களில் பரதேசி (1953) மிக முக்கியமானது, இது அவரது திரைப்பயணத்தின் தொடக்கப் படமாகவும் கருதப்படுகிறது.  இந்தப் படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு பூங்கோதை என்ற பெயரில் வெளியிடப்பட்டது. ஆக இந்தப் படத்தை ஒரு டப்பிங் படம் என்று கூட சொல்லலாம். பூங்கோதை திரைப்படம் வெளியான தேதி  4 .2 .53  2.அர்த்தாங்கி என்பது 1955-ல் வெளிவந்த ஒரு புகழ்பெற்ற தெலுங்குப் படம். இது  ...

பட்டிக்காடா பட்டணமா தங்கப்பதக்கம் பி மாதவன்

படம்
ஒரு பெரிய டைரக்டர்னா அவர் டைரக்சன் செஞ்ச படங்கள் ஒரு அலைவரிசைலே அமைஞ்சிருக்கும். K.பாலச்சந்தர்னா அவரோட படங்கள் ஒரே அலைவரிசையிலே இருந்தது. பாரதிராஜான்னா அது ஒரு அலைவரிசைலே இருக்கும். ஒண்ணு ரெண்டு படங்கள் மாறி எடுத்திருப்பாங்க. ஆனா எடுத்த எல்லா படங்களையும் வேற வேற களங்கள்லே வேற லெவல் படங்களா மாத்தி காட்டுன சிறப்பக்களை செஞ்சு காட்டுன ஒரு டைரக்டர் லிஸ்ட் தமிழ் சினிமாலே இருக்கு.அப்படிப்பட்ட டைரக்டர்கள் பெரும்பாலும் சிவாஜி யூனிட்டை சேர்ந்தவர்கள்தான். அந்த வரிசைலே பந்துலு கட்டபொம்மன் எடுத்திருந்தா அதுக்கு சம்பந்தம் இல்லாமே தங்கமலைரகசியம்,பலே பாண்டியான்னு வெரைட்டியா பண்ணியிருப்பாரு. AP.நாகராஜன்னா புராண பட மேதைன்னு சொன்னாலும் நவராத்திரி ,தில்லானா மோகனாம்பாள்னு அது ஒரு லைன்லே மிரள வெச்சிருப்பார். இப்படி பல டைரக்டர்களை சொல்லலாம். இந்த ஒரு லிஸ்ட்லே சொல்ல வேணடியவர்தான் இயக்குனர் P.மாதவன்.இவர் டைரக்சன் செஞ்ச எல்லா படங்களும் ஒண்ணுக்கொண்ணு சம்பந்தம் இல்லாத கதைக்களம் சார்ந்த படங்கள் தான். அன்னை இல்லம்னு படம் எடுத்தா ,வியட்நாம் வீடுன்னு எடுத்து தான் இந்த மாதிரி கதைகள்ல்லே மட்டும்  தான்  ஸ்பெசல்...

திரைக்கு வராத சிவாஜி பாடல்கள்

படம்
காலத்தை வென்றும் திரைக்கு வராத  சிவாஜியின் ரகசியப் பாடல்கள்! ​"நடிகர் திலகம் திரைப்படங்களில் இருந்து, நம் காதுகளை வருடிச் சென்றும் திரைக்கு வர மறுத்த முத்துக்கள் சில உள்ளன என்றால் நம்புவீர்களா?" ​ 'போனால் போகட்டும் போடா' முதல் 'வசந்த மாளிகை' வரை... அவர் பாடி நடித்த ஒவ்வொரு பாடலும் இன்றும் நம் நெஞ்சங்களில் ஒலித்துக்கொண்டிருக்கிறது." ​"ஆனால், உங்களுக்குத் தெரியுமா? அவரது திரைப்படங்களுக்காக மிகச் சிறந்த இசையமைப்பாளர்களான விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கே.வி. மகாதேவன், இளையராஜா போன்ற ஜாம்பவான்கள் பதிவு செய்த சில பாடல்கள்... அவை ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்தும்... வானொலியில் சூப்பர் ஹிட்டாக ஒலித்தும்... திரையில் இடம்பெறவே இல்லை!" ​"ஒரு பிரம்மாண்டப் படத்தின் நீளம், கதைக்களத்தின் உணர்வுபூர்வமான தேவை, எதிர்பாராத பட்ஜெட் சிக்கல்கள் அல்லது ஒரு பாட்டுக்குப் பதிலாக அதைவிடச் சிறப்பான ஒரு பாட்டைக் கொண்டு வர வேண்டும் என்ற இயக்குநரின் தொலைநோக்குப் பார்வை... இப்படிப் பல காரணங்களால், இந்த அரிய பாடல்கள் திரைப்படங்களின் இறுதிக் காட்சியில் கத்தரிக்கப்பட்டன." ...

.சிவாஜி நடிப்பின் நுணுக்கங்கள்

படம்
தமிழ் சினிமாவுல நடிப்புக்குன்னே ஒரு யூனிவர்சிட்டி இருந்தா, அது  சிவாஜி கணேசன் தான்! அவர் ஒரு கேரக்டரா வாழ்ந்துட்டுப் போனது இருக்கே... அது உலகத்துல எந்த ஆக்டரும் பண்ணாத ஒரு விஷயம். ​அவர், தனக்குப் பிடிச்ச ஸ்டைலை மட்டும் வெச்சுக்காம, ஒவ்வொரு கதை மாந்தரோட குணம், உணர்வு எல்லாத்துக்கும் ஏத்த மாதிரி, தன்னோட உடம்பு மொழி , குரல்ல, நடை, பாவனைன்னு எல்லாத்தையும் ரொம்ப நுணுக்கமா மாத்தி நடிச்சார். ​அவர் நடிப்புக்கு சாட்சி எதுன்னு கேட்டா... அவர் தன்னோட கை, கால், வாய் அசைவு, டான்ஸ், நடை, சிரிப்பு, மேக்கப்னு எல்லாத்துலயும் காட்டின அக்கறையும், உழைப்பும்தான்! முக்கியமா , உலக அளவுல வேற எந்த நடிகரும், தன்னோட கை, கால்கள்ல இவ்வளவு துல்லியமான வித்தியாசங்களைக் காட்டினதே இல்லை! ​சிவாஜி , ஒரு கேரக்டரோட ஸ்டேட்டஸ், மனநிலை, சிச்சுவேஷன் இதைப் பொறுத்து, தன்னோட உடல் மொழியை எப்படிப் பயன்படுத்தினார்னு விரிவா பார்க்கலாம் வாங்க! ​ பகுதி 1: கை கால்கள்ல அவர் கொடுத்த நடிப்பு மேஜிக்!  இதுலே  கைகளைக் கொண்டு அவர் கொடுத்த நடிப்பை முதல்லே பாக்கலாம். ​ஒரு கேரக்டர் பெரிய அந்தஸ்துல இருக்கா, இல்லையான்னு அவர் கைகளைப் பய...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்