நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த தெலுங்கு ரீமேக் படங்கள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம் ..
1.முதலாவதாக பரதேசி திரைப்படம்.இந்த தெலுங்கு படம் 12.01.1953 ல் வெளியானது.இது தமிழ் மற்றும் தெலுங்கில் இருமொழிகளில் எடுக்கப்பட்ட காதல் திரைப்படம்; இதில் நாகேஸ்வர ராவ், அஞ்சலி தேவி ஆகியோருடன் சிவாஜிகணேசனும் நடித்தார்.
இயக்கம்: எல்.வி. பிரசாத்.
அஞ்சலி பிக்சர்ஸ் தயாரித்த படம்.
காதலித்து பிரிந்தவர்கள் மீண்டும் இணைவது தான் கதை
சிறப்பம்சம்: இது சிவாஜி கணேசன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட முதல் தெலுங்குப் படம், ஆனால் வெளியானது பராசக்திக்குப் பிறகு. சிவாஜி கணேசன் நடித்த ஆரம்பகால தெலுங்குப் படங்களில் பரதேசி (1953) மிக முக்கியமானது, இது அவரது திரைப்பயணத்தின் தொடக்கப் படமாகவும் கருதப்படுகிறது.
இந்தப் படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு பூங்கோதை என்ற பெயரில் வெளியிடப்பட்டது. ஆக இந்தப் படத்தை ஒரு டப்பிங் படம் என்று கூட சொல்லலாம். பூங்கோதை திரைப்படம் வெளியான தேதி
4 .2 .53
2.அர்த்தாங்கி என்பது 1955-ல் வெளிவந்த ஒரு புகழ்பெற்ற தெலுங்குப் படம். இது நாகேஸ்வர ராவ் , சாவித்ரி, சாந்த குமாரி நடித்த ஒரு வெற்றித் திரைப்படம் ஆகும், இது சிறந்த படம் என தேசிய விருது பெற்றது மற்றும் தமிழில் பெண்ணின் பெருமை என மறு ஆக்கம் செய்யப்பட்டது.
இயக்கம்: பி. புல்லையா.
பெண்ணின் பெருமை வெளியான தேதி 17.2.56.தமிழிலும் 100 நாள் ஓடி வெற்றி பெற்ற திரைப்படம் இது..தமிழில் சிவாஜிகணேசன் ஜெமினி கணேசன் சாவித்திரி சாந்தகுமாரி நடித்தார்கள்.
3..தல்லி பிரேமா என்பது 1968 ஆம் ஆண்டு வெளியான தெலுங்கு திரைப்படமாகும் , இதில் என்.டி.ராமராவ் , சாவித்ரி ராம் மோகன் ஆகியோர் நடித்தனர் , சுதர்சனம் இசையமைத்துள்ளார். இந்தத் திரைப்படம் தமிழில் குலமா குணமா (1971), உருவாக்கம் செய்யப்பட்டது . சிவாஜி பத்மினி ஜெய்சங்கர் நம்பியார் லட்சுமி நடித்த இப் படத்தை KS. கோபாலகிருஷ்ணன் இயக்கினார்.
4...ஆஸ்தி பரலு " என்பது நடிகர் நாகேஸ்வரராவ் ,
ஐக்கையா,ஜெயலிதா நடித்த தெலுங்கு திரைப்படம்,
இயக்குநர்: V .மதுசூதன ராவ்
இசையமைப்பாளர்: K.V. மகாதேவன்
தயாரிப்பாளர்: V B ராஜேந்திர பிரசாத்..
இந்த படத்தின் கதைக்களம் பரபரப்பாக வித்தியாசமாக இருந்ததால் இயக்குனர்
A.C.திருலோகச்சந்தர் தமிழில் என்தம்பி என்ற பெயரில் இயக்கினார்..படம் சூப்பர் ஹிட் ஆனது. சிவாஜி கணேசன் பாலாஜி சரோஜாதேவி, நாகேஷ் நடித்தார்கள். படம் வெளியான தேதி 7. 6.68 .இந்தப் படத்தின் கத்திச்சண்டை வாள்சண்டை காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகள் இன்றளவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.
5.பங்காரு காஜுலு என்பது 1968-ஆம் ஆண்டு வெளியான ஒரு பிரபலமான தெலுங்குத் திரைப்படமாகும்.
இதில் நடித்தவர்கள் நாகேஸ்வர ராவ் ,பாரதி, மற்றும் விஜய நிர்மலா .
இயக்குநர்: சி.எஸ். ராவ்.
வெளியான தேதி: ஆகஸ்ட் 22, 1968.இத்திரைப்படம் ஆந்திர அரசின் நந்தி விருதை பெற்றது.
இந்தப் படம் தமிழில் சிவாஜி கணேசன் நடித்த தங்கைக்காக என்ற பெயரில் உருவானது. இது 1971-ல் வெளியானது. யோகானந்த் இயக்கிய இந்தப் படத்தில் சிவாஜி கணேசன், லட்சுமி, வெண்ணிற ஆடை நிர்மலா, முத்துராமன் நடித்தார்கள்.. இதில் சிவாஜி கணேசன், தனது தங்கையின் நலனுக்காகப் போராடும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
6.மூக மனசுலு
என்பது 1964-ல் வெளியான ஒரு கிளாசிக் தெலுங்கு காதல்-நாடகத் திரைப்படம்.இதில் நாகேஸ்வர ராவ் சாவித்ரி ஜமுனா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர், அடூர்த்தி சுப்பா ராவ் இயக்கினார்
இசை: K.V. மகாதேவன்.
மறுபிறவி மற்றும் கடந்த கால நினைவுகளை அடிப்படையாகக் கொண்டது.
தமிழில் இந்த படத்தை நடிகை சாவித்திரி பிராப்தம் என்ற பெயரில் தயாரித்து இயக்கினார். இந்த படம் தமிழுக்கு ஒத்து வராது என்று சிவாஜி கணேசன் கூறியபோதிலும் நடிகை சாவித்திரி பிடிவாதமாக தயாரித்து இயக்கினார்.தெலுங்கு படம் அடைந்த வெற்றியை தமிழில் இந்த படம் அடையவில்லை.
சிவாஜி கணேசன் சாவித்திரி நம்பியார் எஸ்வி ரங்காராவ் நாகேஷ் சந்திரகலா ஆகியோர் நடித்தார்கள் .ப்ராப்தம் திரைப்படம் வெளியான தேதி 13.4.71.
7.பிரேம் நகர் என்பது 1971 ஆம் ஆண்டு வெளியான தெலுங்கு மொழி காதல் திரைப்படமாகும், இது கே.எஸ்.பிரகாஷ் ராவ் இயக்கியது. டி. ராமாநாயுடு தயாரித்தது. நாகேஸ்வர ராவ் மற்றும் வாணிஸ்ரீ நடித்த இந்த படத்துக்கு கே.வி.மகாதேவன் இசையமைத்தார்.. இந்தப் படம் கௌசல்யா தேவியின் நாவலை அடிப்படையாகக் கொண்டது.
தமிழில் இது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வாணிஸ்ரீ கே பாலாஜி சாந்தகுமாரி நாகேஷ் நடிக்க வசந்த மாளிகை ஆனது. தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியடைந்த இந்த திரைப்படம் தமிழில் அதைவிட வெற்றி பெற்றது. இன்றும் இது ஒரு மிகப்பெரிய காதல் காவியமாக ரசிகர்களால் போற்றப்படுகின்றது. ராமாநாயுடு அதற்கு முன்பு தயாரித்த சில படங்களால் தோல்வி ஏற்பட்டு நஷ்டத்தில் இருந்தார்.அந்த சமயத்தில் இந்த தெலுங்கு தமிழ் படங்களை தயாரித்தார்.இரண்டு மொழிகளிலும் மிகப் பெரிய பிளாக்பஸ்டர் படமாக அமைந்து பெரிய லாபத்தை சம்பாதித்து கொடுத்தது. வசந்த மாளிகை திரைப்படம் வெளியான வருடம் 1972.
8.1972 ல் ஒரு வெளியான கமர்சியல் வெற்றிப்படம் மானவடு தானவடு. ஷோபன்பாபு சாரதா எஸ் வி ரங்காராவ் அஞ்சலிதேவி நடித்தார்கள்.தெலுங்கில் நல்ல வெற்றியடைந்த இந்த திரைப்படத்தை தமிழில் தெலுங்கு இயக்குனர் V.B.ராஜேந்திர பிரசாத் அவர்களே தயாரித்து இயக்கினார்.தமிழில் சிவாஜி கணேசன் மஞ்சுளா மேஜர் சுந்தர்ராஜன் நாகேஷ் ஆர் எஸ் மனோகர் சௌகார் ஜானகி நடித்தார்கள். தமிழிலும் பம்பர் ஹிட் ஆனது இந்த திரைப்படம். தமிழில் 1973 ஆம் ஆண்டு வெளியானது.
8.அதிஷ்ட வந்துலு" தெலுங்கில் ஹிட்டான படம்.
அக்கினேனி நாகேஸ்வர ராவ் (ஜெயலலிதா நடித்த திரைப்படம், V. மதுசூதன் ராவ் இயக்கினார். K.V. மகாதேவன் இசை.
தமிழில் பாலாஜி திருடன் என தயாரித்து வெளியிட்டார். சிவாஜி கணேசன் கே ஆர் விஜயா கே பாலாஜி நாகேஷ் நடித்திருந்தார்கள்.இயக்கம்
A.C.திருலோகசந்தர் .1969 ல் வெளியானது இப்படம்.இந்த படத்தில் ஆக்சன் காட்சிகள் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.
10.1969 ஆம் ஆண்டு வெளியான தெலுங்கு படம் புத்தி மந்தடு. நாகேஸ்வரராவ் இரட்டை வேடத்தில் நடித்த படம். இந்த படம் சிவாஜி இரு வேடங்களில் நடிக்க மனிதனும் தெய்வமாகலாம் என்று ரீமேக் செய்யப்பட்டது. படம் வெளியான வருடம் 1975.ஆன்மீகத்தையும் சமூக மூட நம்பிக்களையும் எடுத்து சொன்னது இந்த படம்.
11.அலுமகளு 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தெலுங்கு குடும்ப திரைப்படமாகும். இதில் நாகேஸ்வர ராவ் மற்றும் வாணிஸ்ரீ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இப்படம்தமிழில் நல்லதொரு குடும்பம் (1979) என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. சிவாஜி வாணிஸ்ரீ நடித்தார்கள்.
12.கடகடலா ருத்ரய்யா என்ற படம் தாசரி நாராயண ராவ் எழுதி இயக்கிய1978 ஆம் ஆண்டு தெலுங்கு மொழித் திரைப்படமாகும் . இதில் கிருஷ்ணம் ராஜு , ஜெயசுதா , ராமகிருஷ்ணா , ஜெயசித்ரா ஆகியோர் நடித்துள்ளனர் . இது தமிழில் ச பட்டாக்கத்தி பைரவன் (1979)என்று ரீமேக் செய்யப்பட்டது.சிவாஜி ஜெயசுதா ஸ்ரீதேவி சௌகார்ஜானகி ஜெய்கணேஷ் நடித்தார்கள்.
13.யமகோலா என்பது 1978-ல் வெளிவந்த ஒரு சூப்பர் ஹிட் தெலுங்கு திரைப்படம். இது என்.டி.ராமராவ் மற்றும் ஜெயபிரதா நடித்த ஒரு ஃபேண்டஸி-காமெடி படம், இதில் என்.டி.ஆர், யமலோகம் சென்று வருவார்; இது மிகப்பெரிய வெற்றி பெற்றது, தமிழில் இது எமனுக்கு எமன் என்று ரீமேக் செய்யப்பட்டது. சிவாஜி கணேசன் இரு வேடங்கள், ஸ்ரீபிரியா வி கே ராமசாமி மற்றும் பலர் நடித்தார்கள் .1980 இல் தமிழில் வெளியானது .
14.தாயாரம்மா பங்கரய்யா ... 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தெலுங்கு மொழித் திரைப்படம், சௌகார் ஜானகி ,
சத்தியநாராயணா நடித்தது. 1979 ல் வெளியான இந்தப் படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது. இது தமிழில் சத்திய சுந்தரம் (1981) என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.சிவாஜியுடன் K.R.விஜயா ,வரலட்சுமி மாதவி ஸ்ரீ பிரியா ஜெய் கணேஷ் நடித்தார்கள்.தமிழிலும் 100 நாள் ஓடி வெற்றி கண்ட திரைப்படம் சத்திய சுந்தரம்.
15.டிரைவர் ராமுடு 1979-ல் வெளியான ஒரு சூப்பர்ஹிட் தெலுங்கு திரைப்படம், இதில் என்.டி. ராமராவ் ,ஜெயசுதா நடித்திருந்தனர்; K. ராகவேந்திர ராவ் இயக்கிய இப்படம் ஒரு வெற்றிப் படம் ஆகும்.தமிழில் சிவாஜி கணேசன் நடிக்க லாரி டிரைவர் ராஜாக்கண்ணு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது சிவாஜியுடன் ஸ்ரீப்ரியா மேஜர் சுந்தர்ராஜன் ஜெய் கணேஷ் நம்பியார் ஆகியோர் நடித்தார்கள் .1981 ல் வெளியானது.
16.யேதஸ்தந்துலே மேதா என்பது 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தெலுங்கு திரைப்படமாகும் . தாசரி நாராயண ராவ் இயக்கியது. நாகேஸ்வர ராவ் , சுஜாதா மற்றும் ஜெய சுதா ஆகியோர் நடித்தார்கள் .தமிழில் மாடி வீட்டு ஏழை (1981) என்றும் ரீமேக் செய்யப்பட்டது. சிவாஜி சிவாஜி இரட்டை வேடங்களில் நடித்தார். ஸ்ரீபிரியா சுஜாதா ஜோடியாக நடித்தார்கள் .
17..ரா ரா கிருஷ்ணய்யா என்ற தெலு ங்கு படம் 1981 ல் வெளியானது. சோமயாஜூலு ,மாதவி ,சந்திரமோகன் நடித்த படம். வாரிசு இல்லாத ஒரு பெரியவர் ஒரு குழந்தை மேல் வைத்த பாசப் போராட்டமே கதை.சிவாஜி புரொடொக்சன் இதை வா கண்ணா வா என்ற பெயரில் வெளியிட்டது. சோமாயஜுலு நடித்த வேடத்தை சிவாஜி செய்தார். சுஜாதா விகே ராமசாமி ஜெய்கணேஷ் நாகேஷ் வடிவுக்கரசி நடித்திருந்தார்கள்.1982 ல் வெளியானது.
18. 1981 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஊருக்கிச்சின மாதா'
சிரஞ்சீவி , மாதவி கவிதா நடித்தனர்.
இசை: எம். எஸ். விஸ்வநாதன்
கிராம மக்களின் நலனுக்காக நாயகன் கொடுக்கும் வாக்கையும், அதை அவர் எப்படி காப்பாற்றுகிறார் என்பதையும் மையமாகக் கொண்டது.
இத்திரைப்படம் சிறந்த படத்திற்கான ஆந்திர அரசின் நந்தி விருதை வென்றது. தமிழில் இது ஊரும் உறவும் என்று ரீமேக் செய்யப்பட்டது.
சிவாஜி உடன் கே ஆர் விஜயா மேஜர் சுந்தர்ராஜன் நிழல்கள் ரவி நடித்தனர்.1982 ல் வெளியானது.
19.ஜஸ்டிஸ் சௌத்ரி என்பது 1982 ஆம் ஆண்டு வெளியான தெலுங்குஅதிரடி திரைப்படமாகும்.
கே. ராகவேந்திர ராவ் இயக்கியுள்ளார் . இதில் என்.டி. ராமராவ் மற்றும் ஸ்ரீதேவி ஆகியோர் நடித்துள்ளனர், தமிழில் நீதிபதி என்று பாலாஜி தயாரிக்க ,சிவாஜி கே ஆர் விஜயா சுஜாதா இளையதிலகம் பிரபு
விகே ராமசாமி சுதர்சன் ராதிகா நடித்தனர்.
இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது.இந்த படம் வெளியான வருடம் 1983.
20.1983-ம் ஆண்டு வெளியான தெலுங்குத் திரைப்படம் சண்ட சாசனடு. இந்தத் திரைப்படத்தை என்.டி. ராமராவ் இயக்கி, கதாநாயகனாக நடித்திருந்தார்.
சாரதா, ராதா ஆகியோர் நடித்துள்ளனர்.என்.டி. ராமராவ் ஆந்திரப் பிரதேச முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு வெளியான முக்கியத் திரைப்படங்களில் இதுவும் ஒன்று.
தமிழில் இது சரித்திர நாயகன் என்ற பெயரில் சிவாஜி கணேசன் நடிக்க 1984 ல் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது. நீண்ட இடைவெளிக்குப் பின்பு சிவாஜியின் தங்கையாக சாரதா நடித்திருந்தார். மற்றும் இளைய திலகம் பிரபு ஜெய்சங்கர் ராதா மற்றும் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள்.
21.தாம்பத்யம் என்பது 1985-ல் வெளியான ஒரு தெலுங்குத் திரைப்படத்தின் பெயர், நாகேஸ்வர ராவ் மற்றும் ஜெயசுதா நடித்திருந்தனர், இது 1987-ல் தமிழில் அதே பெயரில் 'தாம்பத்யம்' என்ற பெயரில் சிவாஜி கணேசன், அம்பிகா, ராதா நடித்து ரீமேக் செய்யப்பட்டது.
22.ஆதி தம்பதிலு என்பது 1986-ல் வெளிவந்த ஒரு தெலுங்கு திரைப்படம், நாகேஸ்வர ராவ் ஜெயசுதா நடித்தது, தாசரி நாராயண ராவ் இயக்கியது.1987 ல் சிவாஜி லட்சுமி நடிக்க குடும்பம் ஒரு கோயில் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. பாலாஜி தயாரிப்பு இயக்கம்
ஏசி திருலோக சந்தர்.
23.சின்ன கோடலு என்பது 1990-ல் வெளியான ஒரு தெலுங்குத் திரைப்படமாகும்.சுரேஷ் வாணி விஸ்வநாத் நடித்தனர்.தமிழில் இது சின்ன மருமகள் என்ற பெயரில் சிவாஜி கணேசன் நடிக்க ரீமேக் செய்யப்பட்டது.
1992 ல் வெளியானது.
கருத்துகள்
கருத்துரையிடுக