1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

சிவாஜி பட தலைப்பு ஒற்றுமை

ஒரு தலைப்பு என்பது ஒரு படத்திற்கு முகவரி போன்றது. ஆனால், நடிகர் திலகத்தின் படங்களில் சில சொற்கள் மீண்டும் மீண்டும் தலைப்புகளில் இடம்பெற்றாலும், அவை ஒவ்வொன்றும் ஒரு புதிய பரிமாணத்தையே நமக்குக் காட்டின. "ஒரே சொல்... ஆனால் இரு வேறு கதைக் கருக்கள்" என்ற ரீதியில் அமைந்த அவரது படங்களின் பெயர்கள், ஒரு தேடலைப் போலவே சுவாரசியமானவை. காலங்கள் கடந்தும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த அந்தத் தலைப்புகளின் அணிவகுப்பை இங்கே விரிவாகக் காண்போம்.

மனிதன்: 
1953-ல் வெளியான 'மனிதனும் மிருகமும்' மனித இயல்புகளைப் பேசியது. 1975-ல் வெளியான 'மனிதனும் தெய்வமாகலாம்' ஆன்மீகத்தை ஒரு புதிய கோணத்தில் அணுகியது. 
1975-லேயே 'அவன்தான் மனிதன்' வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து 1977-ல் 'அவன் ஒரு சரித்திரம்' வெளியானது (இவ்விரண்டு படங்களிலும் மஞ்சுளா நாயகி).

​மகன்: 
1969-ல் தந்தை-மகன் பாசத்தைச் சொல்லும் 'தெய்வமகன்' (3 வேடம்), 1974-ல் 'என் மகன்' (2 வேடம்) மற்றும் 1992-ல் வெள்ளிவிழா கண்ட 'தேவர் மகன்' என 'மகன்' வரிசை நீண்டது.

​ராஜாக்களின் அணிவகுப்பு:
​சிவாஜியின் திரையுலகில் 'ராஜா' என்ற சொல் நீக்கமுடியாத ஒன்று.
​நானே ராஜா (1956) தொடங்கி, அதே ஆண்டில் ராஜாராணி வெளியானது.
​1972-ல் சி.ஐ.டி கதையம்சம் கொண்ட ராஜா சூப்பர் ஹிட்டானது.
​1968-ல் எங்க ஊர் ராஜா மற்றும் 1973-ல் எங்கள் தங்க ராஜா என இரண்டுமே இரட்டை வேடப் படங்களாக அமைந்ததோடு, 100 நாட்களையும் கடந்தன.

​ரோஜாவுடன் இணைந்த 'ராஜா'க்களாக ...
ரோஜாவின் ராஜா (1976), வெள்ளை ரோஜா (1983) ஆகிய படங்கள் அமைந்தன.

​குடும்ப உறவுகள்: 
தம்பி, தங்கை மற்றும் மருமகள்..
​தம்பி & மகன்: 
பாலாஜி தயாரிப்பில் 1968-ல் என் தம்பி மற்றும் 1974-ல் என் மகன் வெளியாகி வெற்றி பெற்றன.
​தங்கை: 1967-ல் தங்கை படமும், 1971-ல் தங்கைக்காக படமும் பாசப் போராட்டத்தைச் சித்தரித்தன.
​மருமகள்: 1986-ல் மருமகள், 1992-ல் சின்ன மருமகள் என மருமகள்களின் கதையும் இடம் பெற்றது.

​பறவைகளும் மண்களும்:
​பறவை: 1964-ல் த்ரில்லர் பாணியில் வந்த புதிய பறவை, 1991-ல் ஞானப்பறவை வெளியானது.

​மண்: 1969-ல் பிரம்மாண்டமான சிவந்த மண் மற்றும் 1977-ல் சுதந்திர வேட்கையைச் சொல்லும் நாம் பிறந்த மண் என மண் வாசனை வீசியது.

​தெய்வமும் கோயிலும்...
​தெய்வம்: கை கொடுத்த தெய்வம் (1964), காவல் தெய்வம் (1969) மற்றும் மூன்று தெய்வங்கள் (1971) என தெய்வங்களின் பெயரில் படங்கள் அமைந்தன. 'மூன்று' என்ற சொல்லைக் கொண்டு முத்துக்கள் மூன்று (1987) பின்னாளில் வந்தது.

​கோயில்: 10 ஆண்டுகள் இடைவெளியில் அண்ணன் ஒரு கோயில் (1977) மற்றும் குடும்பம் ஒரு கோயில் (1987) ஆகியவை வெளியாகின.

சிவாஜி கணேசன் அவர்களின் நடிப்பில் 1958-ஆம் ஆண்டு வெளியான உத்தமபுத்திரன் திரைப்படம் ஒரு மைல்கல். அதே 'உத்தமன்' என்ற சொல்லைக் கொண்டு 1976-ல் உத்தமன் என்ற திரைப்படம் வெளியானது. காதலின் ஆழத்தைச் சொல்லும் விதமாக 1955-ல் கள்வனின் காதலி படமும், 1978-ல் அந்தமான் காதலி படமும் வெளிவந்தன.
​பெண்களின் சிறப்பைக் கூறும் 'திலகம்' என்ற சொல்லில் 1955-ல் மங்கையர் திலகம் படமும், 1963-ல் தேசப்பற்றை விளக்கும் ரத்தத்திலகம் படமும் வெளியாயின. அதேபோல், பக்தி உணர்வை மையமாகக் கொண்டு 1958-ல் பதிபக்தி மற்றும் 1960-ல் ராஜபக்தி ஆகிய படங்கள் வெளிவந்தன.

​'நாள்' என்ற சொல்லைத் தாங்கி :
1954 ல் 'மிரக்கிள்' படமாக வந்த அந்தநாள் ,
1956-ல் வாழ்விலே ஒரு நாள் மற்றும் 1982-ல் வசந்தத்தில் ஓர் நாள் ஆகிய படங்கள் வெளியாகின. 

மரியாதையைச் சிறப்பிக்கும் விதமாக:
 1985-ல் முதல் மரியாதை மற்றும் 1987-ல் ராஜ மரியாதை ஆகிய படங்கள் வெளிவந்து ரசிகர்களைக் கவர்ந்தன.

​ஒளியின் அடையாளமான 'விளக்கு' என்ற சொல்லில் ...
1960-ல் பாவை விளக்கு மற்றும் 1964-ல் பச்சை விளக்கு ஆகிய படங்கள் அமைந்தன. 

'சக்கரவர்த்தி' என்ற கம்பீரமான சொல்லில் 1978-ல் ஜெனரல் சக்கரவர்த்தி மற்றும் 1983-ல் மிருதங்க சக்கரவர்த்தி ஆகிய படங்கள் வெளியாகி நடிகர் திலகத்தின் நடிப்பிற்கு மகுடம் சூட்டின.
காலங்கள் மாறினாலும், தலைப்புகள் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டாலும், ஒவ்வொரு முறையும் அந்தத் தலைப்புக்கு ஒரு புதிய கௌரவத்தைத் தன் ஒப்பற்ற நடிப்பின் மூலம் பெற்றுத் தந்தவர் நடிகர் திலகம். "உத்தமன்" முதல் "சக்கரவர்த்தி" வரை அவர் சூட்டிக்கொண்ட பெயர்கள் அனைத்தும் வெறும் திரைப் பெயர்கள் அல்ல; அவை ஒரு மகா கலைஞன் இந்த மண்ணில் பதித்துச் சென்ற அழியாத சுவடுகள். ஒரே சொல்லைக் கொண்டு உருவான இருவேறு காவியங்கள், சிவாஜி என்ற ஒற்றைச் சொல் திரையுலகின் சரித்திரமாக எப்படி நிலைத்து நிற்கிறது என்பதற்குச் சான்றாகும். தலைப்புகள் மீண்டும் வரலாம், ஆனால் அந்தத் தலைப்புகளுக்கு உயிர் கொடுத்த அந்தத் திலகம் மீண்டும் வருவது அரிது!

 செந்தில்வேல் சிவராஜ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்