1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

இளையதிலகம் பிரபு

என் தங்கச்சி படிச்சவ..
1988 லே வெளியான படம் இது.
பட பூஜை விளம்பரத்தை பாத்துட்டு என்னடா இது கொச்சையா தலைப்பு வெச்சிருக்காங்களேன்னு தான் யோசிக்க வெச்சது. படம் வந்த பின்னாலே பாத்தா P.வாசு படத்தை பிரமாதமா பிரசண்ட் பண்ணியிருந்தார்.
இந்த படம் 70 சதவீதம் பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளியிலேதான் ஷுட்டிங் பண்ணுணாங்க.
இது என்னோட சொந்த ஊர்.
இந்த படத்துக்கு பின்னாலே சத்தியவாக்கு, காவலுக்கு கெட்டிக்காரன் படத்தையும் இந்த ஊர்லே ஷூட் பண்ணுணாங்க.

1992 லே தினத்தந்திலே உத்தமராசா முழுப்பக்க  பூஜை விளம்பரம் வந்துச்சு. பிரபு தலை அலைங்காரம் நல்லா இருந்துச்சு. 
மறுபடியும் பிரபு சூட்டிங்குக்காக  
எங்க ஊருக்கு வந்திருந்தார்.
நேர்லே பாத்தப்போ பட்டிக்காடா பட்டணமோ நெனப்பு வந்துச்சு.

இந்த படமும் பாதி சூட்டிங் ஜமீன் ஊத்துக்குளியிலே தான் எடுத்தாங்க.முதல்நாள் சூட்டிங் லஞ்ச் பிரேக்லே இளையதிலகத்தை போய் பாத்தோம். எந்த சூட்டிங்லே அவரை போய் பாத்தாலும் ரசிகர்களை பாத்து அவர் கேக்கற முக்கியமான கேள்விலே ஒண்ணு ,சாப்டீங்களா?
லஞ்ச் டயமா இருந்தா சூட்டிங் ஆளுகளை கூப்பிட்டு சாப்பாடு போடச் சொல்வார்.
இது எங்க ஊரா இருந்தாலும் அதை கேக்க மறக்கலே.

சூட்டிங் மாத்தி மாத்தி  பக்கத்து பக்கத்து ஊர்கள்லே நடந்துச்சு. சேத்துமடை சமத்தூர் மூணாறு உடுமலை... இந்த ஊர்கள்லே எல்லாம் சூட்டிங் பண்ணுண படம் உத்தமராசா.
இந்த படத்தோட ஒரு சண்டைக் காட்சி உடுமலை திருமூர்த்தி மலையிலே நடந்துச்சு. ரொம்ப ஜம்ப் பண்ணி ஒரு பைட் பண்ணினார். அந்த சூட்டிங் நடந்தது ஒரு கோயில்லே. அது பூராவும் கருங்கலுலே கட்டுன பழைய காலத்து கோயிலு.ஒரு சின்ன டைமிங் மாறிப் போச்சு .இளையதிலகம் பைட் பண்ணும் போது டைமிங் கொஞ்சம் மாறி ஒரு ஸ்லிப் ஆகி ஆறேழு அடி  உயரத்துலே இருந்து ஐம்ப் பண்ணுனப்போ  அப்படியே கால் முட்டி கல்தரையிலே மோத கால் முட்டி எலும்பு நல்லா அடி வாங்கிருச்சு.
எந்திரிச்சு நடக்க முடியாத நிலை.
பர்ஸ்ட் எய்ட் மட்டும் அங்க பண்ணிட்டார்.சூட்டிங் கேன்சல் ஆகி சென்னைக்கு போய் ஹாஸ்பிடல்லே அட்மிட் ஆயிட்டாரு.

 ரெண்டு வாரம் ஆயிருக்கும்.மறுபடியும் சூட்டிங் வந்துட்டாரு.போய் விசாரிச்சோம். காலை இழுத்து இழுத்து நடந்தார்.
இந்த மாமனோட மனசு பாட்டை பாத்தா தெரியும். கால் கஷ்டப்பட்டு அவர் நடகக்றத பாக்கலாம். அப்பா மாதிரித்தான் இளையதிலகமும். எந்த தயாரிப்பாளர்களுக்கும்  நஷ்டம் ,இடைஞ்சல் இருக்கக்கூடாதுங்கற மனப்பான்மை.

உத்தமராசா சூட்டிங் ஜமீன் ஊத்துக்குளி அரண்மனையைச் சேந்த ஒரு வீட்டுலே நடந்துட்டு இருந்துச்சு.அந்த வீடு எதுன்னா கிழக்கு வாசல் படத்துலே கார்த்திக் பச்ச மலைப் பூவுன்னு ஒரு பாட்டு பாடுவாரே அந்த வீடுதான்.
படத்துலே குஷ்பூவும்  பிரெண்டுகளும் பேசற காட்சிகள் அங்க தான் எடுத்தாங்க.
பிரபுவுக்கு கால்லே அடி படறதுக்கு முன்னாடியே பல காட்சிகளை எங்க ஊர்லே எடுத்துட்டாங்க.
குஷ்பூ அந்த ஊருக்கு வர்ற இன்ட்ரோ சீன் ,மஞ்சத்தண்ணி விளையாட்டு வர்ற காட்சிகள் ,பிரபு கவுண்டமணி டிரிங்க்ஸ் அடிக்கற காட்சிகள் உள்பட நிறைய காட்சிகளை சொல்லலாம்.

படத்துலே கவுண்டமணி செந்தில் வர்ற ஒரு காமெடி சீன் இருக்கும். தங்கப்பதக்கம் படத்துலே வர்ற சோதனை மேல் சோதனை பாட்டு இடையிலே வர்ற பிரமீளா பேசற டயலாக்கை வெச்சு அந்த காட்சி எடுக்கணும்.ஷூட்டிங் எடுக்கறப்போ அந்த பாட்டு கேசட் இல்லே .இளையதிலகம் எங்க வீட்டை சொல்லி அவங்க கிட்டே இருக்கும் ,போய் வாங்கிட்டு வாங்கன்னு சொல்லியிருக்கார். சூட்டிங்லே வேலை செய்யற ஆளு ஒருத்தர் எங்க வீட்டுக்கு வந்து இதை சொல்லி பாட்டு கேசட் கேட்டார்.

கவுண்டமணி குடுகுடுப்பைக்காரன் வேஷம் போட்டு ராதாரவி கிட்டே நடிக்கற சீன் ,நரி முகத்துலே முழிச்சா நல்ல சகுனம் காமெடி காட்சிகள் ,அந்த வளையல் கடை காட்சிகள் எல்லாம் எடுத்தது ஜமீன் ஊத்துக்குளியிலே தான்.
மேலே சொன்ன இந்த இடங்கள்லே எல்லாம் ராஜகுமாரன் பட காட்சிகளையும் எடுத்தாங்க. 

இளையதிலகத்தை சந்திச்சு எங்க வீட்டுக்கு வாங்கண்ணேன்னு iகூப்பிட்டோம்.ரெண்டு நாள்லே ஒரு லஞ்ச் பிரேக்லே அம்பாஸிடர் கார்லே வந்து இறங்குனார் இளையதிலகம்.மேக்கப் எல்லாம் கலைக்கலே. அப்படியே வந்துட்டார். அவர்  கூட நின்னு குடும்பத்துலே எல்லாரும் போட்டோ எடுத்துகிட்டோம்.
பேமிலியோட சேந்து குரூப் போட்டோ எடுக்கறப்போ ,
எங்க அம்மாவை கை காட்டி ,அவங்க பெரியவங்க ,அவங்க உக்காரட்டும்னு இளையதிலகம் சொல்லி ,அப்படியே குரூப் போட்டோ எடுத்தோம்.


இதே அனுபவம் கொஞ்சம் கூட மாறாமே என் தங்கச்சி படிச்சவ சூட்டிங் நடந்த சமயமும் இளையதிலகம் எங்க வீட்டுக்கு வந்தது எங்களுக்கு எப்பவும் பெருமைதான்.

பாவலரு பாட்டு இது பண்ணைப்புர பாட்டுன்னு ஒரு சூப்பர் சாங் இந்த படத்துலே இருக்கும். இந்த பாட்டோட சூட்டிங் உடுமலை, அமராவதி அணைக்கட்டு , மூணாறு உள்பட பல இடங்கள்லே எடுத்தாங்க.
பாட்டுலே வர்ற ஒரு பேக் ரவுண்ட் மியூசிக் உடுமலை பக்கத்துலே எடுத்துட்டு இருந்தாங்க. பொள்ளாச்சிலே இருந்து போய்ச் சேர சாயந்தரம் 5 மணிக்கு மேலே ஆயிடுச்சு.ரெண்டு மூணு ஷாட்டுதான் எடுத்திருப்பாங்க. மணி 6 க்கு மேலே ஆயிடுச்சு. சூட்டிங்  நடக்கறப்பவே எங்களை பாத்து ஸ்மைல் பண்ணுனார் .டீ கொடுக்க சொன்னார் .சாப்பிட்டோம்.
சூட்டிங் முடிஞ்சதும் , கூப்பிட்டு பேசினார். என்ன,இருட்டாயிடுச்சே ,
ஏன் இவ்வளவு தூரம் சிரமப்பட்டு இந் நேரத்துக்கு வந்தீங்கன்னு கேட்டார்.

இளையதிலகம் பிரபு எங்க ஊருக்கு வந்து நடிச்ச  என் தங்கச்சி படிச்சவ படத்துக்கு பின்னாலே ஒரு 50 பட ஷுட்டிங் நடந்திருக்கு.தர்மம்னு ஒரு படம் ரெண்டு சீன் எடுத்திருந்தாங்க முதல்லே. அதான் பர்ஸ்ட் சூட்டிங்.அது பாழடைஞ்ச பங்களாவுக்குள்ளே எடுக்கப்பட்ட காட்சிகள் தான். ஜனங்க வெளிய நின்னதோடு சரி.என் தங்கச்சி படிச்சவ எல்லாரும் பாக்க பாக்க எடுத்த படம்.
பர்ஸ்ட் டைம் பிரபுவை பாத்து ஊர்லே எல்லாரும் அசந்துட்டாங்க. வீதிலே சூட்டிங் நடந்துட்டு இருக்கும். ஒரு சாதாரண ஆளு போவார். அவர் இளையதிலகத்தை பாத்து கை காட்டுவார். விஷ் பண்ணுவார்.இளையதிலகம் பதிலுக்கு ஒரு ஸ்மைலோட கை காட்டுவார்.
 
மாமான்னு சொல்ல ஒரு ஆளு பாட்டு எங்க வீட்டுக்கு எதிர்லே இருந்த வீட்டு வாசல்லே எடுத்த பாட்டு. இந்த பாட்டுலே வர்ற அந்த கோலம் ,தோரண அலங்காரங்கள் எல்லாம் ரெண்டு நாளா நடந்துச்சு. அந்த பாட்டு சூட்டிங் ரெண்டு நாள் எடுத்த பின்னாலே ,நைட் மழை வந்து எல்லாம் கலைஞ்சு போயிடுச்சு .மறுபடியும் அலங்காரம் பண்ணி அந்த பாட்டு தொடர்ச்சியா எடுத்து முடிச்சாங்க.
இளையதிலகத்தோட ஒவ்வொரு சின்ன ஷாட்டையும் கூட நல்லா மனசுலே கேப்சர் பண்ணி வெச்சிருக்கேன்.

இந்த படத்தை பத்தியே ரொம்ப சொல்ல வேண்டியிருக்கு. இதுலே சில விஷயங்களைத்தான் சொல்லியிருக்கேன்.

இளையதிலகம் பிரபுவோட 100 வது படம் ராஜகுமாரன். இதுவும் மேக்சிமம்  பொள்ளாச்சிலே எடுத்த படம் தான். இந்த பட சூட்டிங் அனுபவம் அது வேற மாதிரி. இது பத்துன விஷயங்களை வேற பதிவுலே சொல்றேன்.

செந்தில்வேல் சிவராஜ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்