1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

சாந்தியில் வெளியான 82 சிவாஜி படங்கள்

நடிகர்திலகம் சிவாஜியின் சொந்த திரையரங்கான சென்னை சாந்தியில் வெளியான சிவாஜி படங்கள் 82.அந்த திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் காணலாம்.
அதற்கு முன்பு சாந்தி திரையரங்கை பற்றிய ஒரு பிளாஸ்பேக்.
சாந்தி தியேட்டர் 1961 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இதை கட்டியவர் ராஜராஜ சோழன் தயாரிப்பாளரான ஜி.உமாபதி.இவருடன் இணைந்து சிவகங்கை ராஜா சண்முகராஜாவும் இதை கட்டினார்கள்.
சாந்தி தியேட்டருக்கு முதலில் வைக்கப்பட இருந்த பெயர் மனசாட்சி. பின்பு சாந்தி என பெயர் சூட்டப்பட்டது.உமாபதி அவர்களின் மகள் பெயரும் சாந்திதான்.சாந்தி தியேட்டரை திறந்து வைத்தவர் முதல்வர் காமராஜர்.சாந்தி தியேட்டரின் பங்குகளை சிவாஜி விலைக்கு வாங்கி தன் பெயரில் மாற்றம் செய்தார்.தமிழகத்தின் முதல் AC தியேட்டர் சாந்திதான்.
சாந்தி தியேட்டரில் திரையிடப்பட்ட முதல் படம் தூய உள்ளம்.

சிவாஜியின் ஆலோசனை படி  தியேட்டரின் உள்ளே,  திரையுலகிற்குப் பெருமை சேர்த்த பிரபலங்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டன.  அணிவகுத்து நிற்கும் இந்த புகைப்படங்களையும் ஒரு சினிமாவுக்குரிய ஆர்வத்துடன் நின்று ரசிகர்கள் பார்ப்பார்கள். தனது சக போட்டியாளரான எம்.ஜி.ஆரின் படத்தையும் இங்கு இடம்பெறச்செய்தவர் சிவாஜி கணேசன்.

இந்த புகைப்பட அணிவகுப்பில் தன் படம் வைக்கப்படவில்லையே என  பிரபல கதாநாயக நடிகர் ஒருவர் ஒருமேடையில் வெளிப்படையாகவே தெரிவித்தார். அங்கு படம் வைக்கப்பட்டால்தான்,  தான் பிரபல நடிகர் என்பதை ஒப்புக்கொள்வேன் எனக் கூறினார். சில ஆண்டுகளில் அவரது படம் அங்கு வைக்கப்பட்டது. இத்தகைய அங்கீகாரத்துக்குரிய இடமாகவும் சாந்தி தியேட்டர் விளங்கியது.  
இங்கு வெளியான முதல் சிவாஜி படம் பாவ மன்னிப்பு.இத் திரைப்படம் வெளியானது 16 மார்ச் 1961.இது சிவாஜியின் 67 வது திரைப்படம் ஆகும்.சிவாஜி கதாநாயகனாக நடித்த படங்கள் 288. இந்த 288 திரைப்படங்களில் பாவமன்னிப்பு படத்துக்கு முந்தைய படங்களை தவிர்த்து விட்டால் ,அதாவது 66 படங்கள் போக அதற்கு பின்பு சிவாஜி நடித்து வெளியான படங்கள் 222.இந்த 222 படங்களில் சிவாஜி நடித்த எந்த படங்கள் சாந்தியில் வெளியானது என்பதை இப்போது பார்க்கலாம்.

1.சாந்தியில் வெளியான முதல் சிவாஜி படம் பாவமன்னிப்பு.வெள்ளிவிழா ஓடியது. படம் வெளியான தேதி 16.3.1961.
2.இரண்டாவதாக வெளியான படம் பாலும் பழமும்.100 நாள் வெற்றிப்படம்.
3.வது படம் பார்த்தால் பசி தீரும் .சிவாஜியின் 75 வது சிறப்பு படம்.
4.வது படம் வளர் பிறை.வெளியான தேதி 30.3.62
5வதுபடம் பலே பாண்டியா
6.,செந்தாமரை.
7.பந்தபாசம்
8.சித்தூர் ராணி பத்மினி
9.அறிவாளி
10.இருவர் உள்ளம்
11.பார் மகளே பார்
12.ரத்தத்திலகம்
13.கர்ணன்
14.பழனி
15.சாந்தி
16 திருவிளையாடல்
17 மோட்டார் சுந்தரம் பிள்ளை
18 சரஸ்வதி சபதம்
19 நெஞ்சிருக்கும் வரை 
20 திருவருட் செல்வர்
21 ஊட்டிவரை உறவு
22திருமால் பெருமை 
23கலாட்டா கல்யாணம்
24:தில்லானா மோகனாம்பாள் 25 அன்பளிப்பு 
26 தங்க சுரங்கம்
27  குருதட்சனை 
28 தெய்வமகன் 
29 வியட்நாம் வீடு 
30 ராமன் எத்தனை ராமனடி 31'எங்கிருந்தோ வந்தாள்
32 தங்கைக்காக 
33சவாலே சமாளி 
34 பாபு
35பட்டிக்காடா பட்டணமா
36 வசந்த மாளிகை
37பாரத விலாஸ் 
38எங்கள் தங்க ராஜா 
39 கௌரவம் 
40தங்கப்பதக்கம் 
41அவன் தான் மனிதன்
42மன்னவன் வந்தானடி 
43பாட்டும் பரதமும் 
44உத்தமன் 
45 தீபம் 
46 அண்ணன் ஒரு கோவில்
47 தியாகம் 
48 ஜெனரல் சக்கரவர்த்தி
 49 தச்சோளிஅம்பு 
50 திரிசூலம் 
51 இமயம் 
52 பட்டாகத்தி பைரவன்
53 ரிஷி மூலம் 
54'ரத்த பாசம் 
55 விஸ்வரூபம் 
56 சத்தியசுந்தரம்
57லாரிடிரைவர் ராஜாக்கண்ணு
58கீழ்வானம் சிவக்கும்
59வா கண்ணா வா
60தீர்ப்பு 
61தியாகி 
62பரீட்சைக்கு நேரமாச்சு 
63நீதிபதி 
64 சந்திப்பு 
65 மிருதங்க சக்கரவர்த்தி 
66 திருப்பம் 
67 சரித்திர நாயகன் 
68சிம்ம சொப்பனம்
 69எழுதாத சட்டங்கள் 
70வம்ச விளக்கு 
71 பந்தம் 
72 நீதியின் நிழல்
 73 முதல் மரியாதை 
74 ஆனந்தகண்ணீர் 
75 வீரபாண்டியன் 
76 அன்புள்ள அப்பா 
77 ஜல்லிக்கட்டு 
78 கிருஷ்ணன் வந்தான்
79 என் தமிழ் என் மக்கள் 
80 புதிய வானம் 
81 ஞானப் பறவை 
82.பசும்பொன் 

செந்தில்வேல் சிவராஜ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்