சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலம்

படம்
2001ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ம் தேதி. இந்த தேதிக்கு இரண்டு நாட்கள் முன்பாக தினகரன் பத்திரிக்கை தனது தலைப்புச்செய்திகள் விளம்பர வால் போஸ்டரில் இந்த செய்தியையும் போட்டிருந்தது. நடிகர்திலகம் சிவாஜிகணேசன் உடல் நலக் குறைவு காரணமாக  மருத்துவமனையில் அனுமதி என்று அந்த தகவலை சொன்னது. அந்த 90 கள் காலகட்டம் சிவாஜிக்கு உடல் நலக் குறைவை மாறி மாறி கொடுத்துக் கொண்டிருந்தது.சிவாஜி உடல் நல குறைவை பற்றி பல முறை பத்திரிக்கை செய்திகளாக வந்துள்ளது. இப்போது வந்த அந்த செய்தியும் பின் வரும் காலகட்டம் மறக்க வைக்கும் என்று தான் அந்த செய்தியை அன்று பார்த்த போதும் நினைக்க வைத்தது. 21.07.2001.இரவு எட்டு மணி இருக்கும். சன் டிவியின் செய்தி  வாசிப்பு அறை. எப்படிப்பட்ட செய்தியாக , தகவலாக இருந்தாலும் அதை சகஜமாக எடுத்து கடந்து போகும் சன் டிவியின் செய்தி வாசிப்பு குழு அந்த நேரத்தில் வந்த அந்த செய்தியை கேட்டதும் அதிர்ந்துதான் போனார்கள்.அப்போது சன் டிவியின் செய்தி எடிட்டராக இருந்தவர் ராஜா. இன்றைக்கெல்லாம் நியூஸ் சேனல்கள் ஓடுவதே கீழே ஓடும் அந்த ஸ்கோரிலிங் செய்திகளால் தான். லேலே குறிப்பிட் அன்றைய கால கட்டத்தில் இது ம...

சிவாஜியின் வெள்ளிவிழா படங்கள்

நடிகர்திலகம் சிவாஜிகணேசன் நடித்த வெள்ளிவிழா திரைப்படங்கள்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த மொத்த நேரடி தமிழ் படங்கள் 288. 1952 ல் நடிக்க தொடங்கி 47 வருடங்களாக திரையுலகில் நடித்துக் கொண்டிருந்தார். 1988 வரை 36 வருடங்களாக ஓய்வில்லாமல் படங்களை நடித்து வெளியிட்டுக் கொண்டிருந்தார் நடிகர் திலகம். 
இந்த 36 வருடங்களில் நடிகர் திலகத்தின் பட சராசரியை எடுத்துக் கொண்டோமானால் வருடத்திற்கு எட்டு படங்கள் கணக்காகின்றது. ஆக 45 நாட்களுக்கு ஒரு படம் வெளியானது என்று கணக்காகின்றது . ஒரு படம் வெள்ளி விழா ஓட வேண்டும் என்றால் 175. நாட்கள் ஓடி இருக்க வேண்டும் .
175 நாட்கள் என்று கணக்கு வரும் போது கிட்டத்தட்ட நான்கு படங்கள் சிவாஜி படங்கள் வெளியாகி இருக்கும் .இப்படி வெளியானால் அது 100 நாள் ஓடுவதற்கே பெரும் தடையாக அல்லவா  இருக்கும் .
இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் நடிகர் திலகத்தின் படங்கள் வெள்ளிவிழா ஓடி வெற்றி வாகை சூடிய பட பட்டியலை  காணலாம் .

1.நடிகர் திலகத்தின் முதல் படமான பராசக்தியே நடிகர் திலகத்தின் வெள்ளி விழா பட்டியலில் முதலாவதாக இடம்பெற்றுள்ளது .
இலங்கை மைலன் திரையரங்கில்
266 நாட்கள் ஓடி வெள்ளி விழாவையும் தாண்டி சாதனை புரிந்த படம் பராசக்தி.
திருச்சியிலும் 200 நாள் ஓடிய படம் .மதுரையில் இரு திரையரங்குகளில் இணைந்து 200 நாட்களுக்கும் மேல் ஓடியது.இதற்கான பத்திரிக்கை ஆவணம் கிடைக்கவில்லை. ஆனால் இலங்கையில் முப்பத்தி எட்டு வாரங்களுக்கு மேல் ஓடியதற்கான பத்திரிக்கை விளம்பரம்  உள்ளது. அதனால் பராசக்தி வெள்ளி விழாவையும் தாண்டி ஓடிய படம் என்று குறிப்பிடலாம் .இப்படம் வெளியான தேதி 
17. 10 .1952 .

2.நடிகர்திலகம் பரதனாக  நடித்த படம் சம்பூர்ண ராமாயணம் .இப்படம் வெளியான தேதி 14 4 1958
இந்தப் படம் 25 வாரங்களுக்கும் மேலாக ஓடியது .முழு ராமாயணத்தையும் பார்த்த ராஜாஜி அவர்கள், பரதனை கண்டேன், என்று ஒற்றைச் சொல்லில் சிவாஜியை புகழ்ந்தார் .

3.நடிகர் திலகத்தின் அடுத்த வெள்ளி விழா படம் வீரபாண்டிய கட்டபொம்மன்.
 வெளியான தேதி 
16 5 1959.
வீரபாண்டிய கட்டபொம்மன் மதுரை நியூ சினிமாவில் 25 வாரங்களை தாண்டி ஓடியது. தமிழில் கலர் படங்கள் அறிமுகமான பிறகு வண்ணத்தில் வெளிவிழா கண்ட முதல் படம் வீரபாண்டிய கட்டபொம்மன். 

4.நடிகர் திலகத்தின் அடுத்த வெள்ளி விழா படம் பாகப்பிரிவினை. வெளியான தேதி 31.10.1959.இந்த படத்தை இயக்கியவர்  பீம்சிங்.
இந்த படம் மதுரை சிந்தாமணியில் 216 நாட்கள் ஓடி  சாதனை புரிந்த படம் .
1959 இல் ஒரே வருடத்தில் இரண்டு வெள்ளிவிழா படங்களில்  வீரபாண்டிய கட்டபொம்மன், பாகப்பிரிவினை நடித்து சாதனை புரிந்தார் நடிகர் திலகம் .

5.நடிகர் திலகத்தின் அடுத்த வெள்ளி விழா படம் பாவ மன்னிப்பு. படம் வெளியான தேதி 16 3 1961. இந்தப் படத்தை இயக்கியதும் பீம்சிங்.
இந்தப் படம் சென்னை சாந்தி திரையரங்கில் 175 நாட்களுக்கும் மேலாக ஓடியது.தமிழ்நாட்டின் முதல் ஏசி திரையரங்கமான சாந்தியில் வெள்ளிவிழா கண்ட முதல் படம் பாவ மன்னிப்பு .


6.நடிகர் திலகம்  நடித்த வெள்ளிவிழா படம் பாசமலர். வெளியான தேதி 27 5 1961.
இந்தப் படத்தை இயக்கியவர் பீம்சிங்  .
இந்தப் படம் சென்னை சித்ரா திரையரங்கில் 25 வாரங்கள் ஓடியது. 

7.நடிகர்திலகத்தின் அடுத்த வெள்ளி விழா படம் திருவிளையாடல் .வெளியான
தேதி 31 7 1965 .
இந்தப் படம் சென்னை சாந்தி கிரவுன் புவனேஸ்வரி ஆகிய மூன்று தியேட்டர்களிலும் 25 வாரங்கள் ஓடியது.மூன்று திரையரங்குகளில் வெள்ளிவிழா கண்ட ஒரே புராண படம் முதலும் கடைசியுமாக திருவிளையாடல் தான் .

8.நடிகர் திலகத்தின் அடுத்த வெள்ளி விழா படம் தர்த்தி.இது தமிழ் சிவந்தமண்ணின்  இந்தி உருவாக்கம் .தர்த்தி  வெளியான தேதி 6 2 1970.தமிழில் முத்துராமன் செய்த வேடத்தை இந்தியில் நடிகர் திலகம் ஏற்று இருந்தார் .மும்பையில் வெள்ளி விழாவையும் தாண்டி ஓடிய படம் .

9.நடிகர்திலகம்  நடித்து அடுத்து வெள்ளி விழா ஓடிய படம் பட்டிக்காடா பட்டணமா. வெளியான தேதி 6.5. 1972 .இந்த படத்தை இயக்கியவர் P.மாதவன் .
இந்தப் படம் மதுரையில் 180 நாட்களுக்கும் மேலாக ஓடியது.
சென்னை திருச்சி சேலம் ஆகிய ஊர்களில் இணைந்து 25 வாரங்கள் ஓடியது. 

10.நடிகர் திலகத்தின் அடுத்த வெள்ளி விழா படம் வசந்த மாளிகை .வெளியான தேதி
 29 9 1972.
காதலுக்கு தாஜ்மஹால் கட்டிய தமிழ் சினிமா திரைப்படம் வசந்த மாளிகை. 
சென்னையிலும் மதுரையிலும் வெள்ளி விழா ஓடிய இந்த படம் 
இலங்கையில் 250 நாட்களுக்கும் மேலாக ஓடியது.இந்த 1972 ஆம் வருடத்திலும் பட்டிக்காடா பட்டணமா வசந்த மாளிகை ஆகிய இரண்டு வெள்ளிவிழா படங்களை  கொடுத்தார் நடிகர் திலகம் .

11.நடிகர் திலகத்தின் அடுத்த வெள்ளி விழா படம் தங்கப்பதக்கம். வெளியான தேதி 
1. 6 1974. சிவாஜி புரொடக்சன் தயாரித்த படம் .இந்தப் படம் சென்னை சாந்தி கிரவுன் புவனேஸ்வரி மற்றும் திருச்சி பிரபாத்தில் 26 வாரங்களை கடந்து மாபெரும் வெற்றி பெற்றது. 

12.நடிகர் திலகம்  நடித்த அடுத்த வெள்ளி விழா படம் உத்தமன் .வெளியான தேதி 
25 6 1976.
இந்தப் படம் இலங்கை கொழும்பு சென்ட்ரல் திரையரங்கில்
 200 நாட்களுக்கு மேலும்,யாழ்ப்பாணம் ராணி திரையரங்கில்  25 வாரங்களும் ஓடி சாதனை செய்தது .

13.நடிகர் திலகத்தின் அடுத்த வெள்ளி விழா படம் தியாகம் வெளியான தேதி 4.3. 1978 .
இந்தப் படத்தை தயாரித்தவர் 
K.பாலாஜி .இந்தப் படம் மதுரை சிந்தாமணியில் 25 வாரங்கள் ஓடியது. பாலாஜியின் தயாரிப்பில் முதல் வெள்ளி விழா படம் .

14.நடிகர் திலகத்தின் அடுத்த வெள்ளி விழா  படம் பைலட் பிரேம் நாத்.
 வெளியான தேதி 30 10 1978 .
இந்தப் படம் இலங்கை யாழ்ப்பாணம்  வின்ஸர் திரையரங்கில் 200 நாட்களைத் தாண்டி ஓடியது. 
கொழும்பு கேபிடல் அரங்கில் 25 வாரங்களும்  ஓடியது.


15.நடிகர் திலகத்தின் அடுத்த வெள்ளி விழா படம் திரிசூலம். வெளியான தேதி 27 1 1979. சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரித்த இப் படத்தில் நடிகர் திலகம் மூன்று வேடங்களில் நடித்திருந்தார் .இப்படத்திற்கு நடிகர் திலகத்தின் 200 வது படம் என்ற சிறப்பும் உண்டு.
எட்டு திரையரங்குகளில் வெள்ளிவிழா ஓடிய முதல் தமிழ் படம் படம் திரிசூலம்.
மதுரை சிந்தாமணியில் 200 நாட்களும்,சென்னை சாந்தி கிரவுன்  புவனேஸ்வரி திரையரங்குகளில் 25 வாரங்களும், சேலம் ஓரியண்டல் ,கோயமுத்தூர் கீதாலயா, திருச்சி பிரபாத் வேலூர் அப்சரா ஆகிய திரையரங்குகளில் 25 வாரங்களும் ஓடியது. 

16.நடிகர் திலகத்தின் அடுத்த வெள்ளி விழா படம் தீர்ப்பு .வெளியான தேதி 21 5 1982.
இப்படத்தின் தயாரிப்பாளர்
 கே பாலாஜி. இப்படம் மதுரை மினி பிரியாவில்  25 வாரங்கள் ஓடியது.

17.நடிகர்திலகத்தின் அடுத்த வெள்ளி விழா படம் நீதிபதி வெளியான தேதி 26 1 1983 .
இந்தப் படத்தை தயாரித்தவரும்
கே பாலாஜி .நடிகர் திலகத்தின் 225 வது படம். இந்தப் படம் மதுரை மினிபிரியாவில் 25 வாரங்கள் ஓடியது.

18.நடிகர் திலகத்தின் அடுத்த வெள்ளி விழா படம் சந்திப்பு. வெளியான தேதி 16 6 1983.
 இந்த படத்தை தயாரித்தது சிவாஜி புரொடக்ஷன்ஸ் .
இந்தப் படம் மதுரை சுகப்பிரியாவில் 25 வாரங்கள் ஓடியது .1983 ஆம் வருடத்தில் நடிகர் திலகம் நீதிபதி சந்திப்பு ஆகிய  இரண்டு வெள்ளி விழா படங்களை கொடுத்தார்.1983 ஆம் வருடம் நடிகர் திலகத்தின் வயது 55 என்பது குறிப்பிடத்தக்கது.

19.நடிகர் திலகம் நடிப்பில் அடுத்து வெள்ளிவிழா கண்ட படம் முதல் மரியாதை .வெளியான தேதி
15 8 1985. பாரதிராஜா சிவாஜியை வைத்து இயக்கிய முதல் படம். இந்தப் படம் சென்னை கோவை தஞ்சை மதுரை ஆகிய ஊர்களில் 25 வாரங்கள் ஓடியது .

20.நடிகர் திலகம் நடித்து அடுத்து வெள்ளி விழா ஓடிய படம் படிக்காதவன். இந்தப் படத்தில் நடிகர்திலகம் கௌரவ நடிகராக நடித்திருந்தார் .11.11.1985 ல் வெளியானது படிக்காதவன்.
இந்தப் படம் சென்னையிலும் மதுரையிலும் வெள்ளி விழா கொண்டாடியது.

21.நடிகர் திலகம் நடித்து அடுத்து வெள்ளி விழா கண்ட படம் தேவர் மகன். 25.10.1992 ல் வெளியான படம் இது.கமலஹாசன் தயாரித்த சொந்தப்படம் இது .இப்படம் சென்னையிலும் மதுரையிலும் வெள்ளிவிழா ஓடியது.
நடிகர்திலகத்துடன்  ரஜினிகாந்த் இணைந்து நடித்த மூன்றாவது படமான படிக்காதவன் படமும், நடிகர் திலகத்துடன் கமலஹாசன் இணைந்து நடித்த மூன்றாவது படமான தேவர் மகன் படமும் ,நடிகர் திலகம் மூன்று வேடங்களில் நடித்த திரிசூலம் படமும், தயாரிப்பாளர்  பாலாஜி தயாரித்த மூன்று படங்களும் ,பீம்சிங் இயக்கிய மூன்று படங்களும் ,சிவாஜி புரொடக்சன் தயாரித்த மூன்று படங்களும் ,வெள்ளி விழா ஓடிய படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

22.நடிகர்திலகம்  நடித்து அடுத்து வெள்ளி விழா கண்ட படம் படையப்பா .வெளியான தேதி 10.4.1999.ரஜினிகாந்தின் சொந்த படம் இது. இப்படம் சென்னை மதுரை கோவை ஆகிய மூன்று ஊர்களில் ஆறு திரையரங்குகளில் வெள்ளி விழா ஓடியது. 

இந்தப் பதிவில் ஏதேனும் குறைகள் இருந்தால் தெரிவிக்கவும் ..

நன்றி ..
செந்தில்வேல் சிவராஜ் 





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற