1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

ஒரு சீனுக்கு இவ்வளவு டயலாக்கா?

பக்க பக்கமா வசனம் பேசறதிலே சிவாஜியைப் பத்தி சொல்லவே வேணாம்.மனுஷன்   எத்தனை பக்கத்திற்கும் வசனத்தை எழுதி நீட்டினா அப்படியே ஒரு ஷாட்டுலே கூட பேசி தள்ளிடுவார்.இந்த அதிசயமான சிறப்பு இருக்கிற சிவாஜி ஒரு படத்துக்கு ஆரூர்தாஸ் எழுதி கொடுத்த வசனங்களை பாத்து ,என்ன இவ்வளவு பக்கத்துக்கு எழுதி கொடுத்திருக்கே ,அதுவும் இந்த  ஒரு சீனுக்கு மட்டும்  அப்பிடின்னுன்னு கோபப்பட்டிருக்காரு.சிவாஜியா அப்படி சொன்னாரு ? சான்ஸே இல்லையே ,அப்படின்னு நாம நினைக்கிறது சரியா இருந்தாலும் மேலே சொன்ன விஷயமும் உண்மைதான்.
அது என்ன படம் ,என்ன காட்சி ,சிவாஜி ஏன் அப்படி சொன்னாரு ,அதுக்கு பின்னாலே என்ன நடந்துச்சு அப்பிடிங்கறத இனிமேலே பாக்கலாம்.
தெய்வமகன் படத்துலே மூணு சிவாஜி சந்திக்கிற காட்சிதான் அது.
இந்த ஒரு சீனுக்காக ஏகப்பட்டவசனங்களை எழுதி தள்ளிட்டார் ஆரூர்தாஸ்.
ஷூட்டிங் ஸ்பாட்டுலேயே யாரையாச்சும் படிக்கச் சொல்லி அப்படியே ஷூட்டிங்லே பேசி அசத்திருவார்  சிவாஜி.இது தான் சிவாஜி பழக்கம்.
தெய்வமகன்லே மூணு சிவாஜி சந்திக்கிற காட்சியை  எடுத்த நாள் அது.வழக்கம்போலே வசனகர்த்தா வசனங்ளை சொல்லிட்டே வர்றாரு.அது ரொம்ப லென்த்தா போயிட்டே இருக்கு.
வசனங்களை கேட்டுட்டே வந்த சிவாஜி ,ஆரூரான் என்னை என்ன மெஷின்னு நெனச்சியா,இது ஒரு சீனுதானே ,இவ்வளவு வசனத்தை சொல்லிட்டே இருக்கே.
நான் இந்த சீனுலே ஒரு கேரக்டர் கிடையாது.மூணு கேரக்டர்லே நடிக்கணும்.மேக்கப்பை மாத்தணும்,டிரஸ்,
ஹேர்ஸ்டைல்னு பண்ணி ரெடியாகறதுக்கு எவ்வளவு நேரம் ஆகும் தெரியுமில்லே.
அது தெரிஞ்சும் நீ பாட்டுக்கு நீட்டிக்கிட்டே போறியே அப்பிடின்னு சிவாஜி லேசா சத்தம் போட ,ஆரூர் தாஸ்,
நீங்க சொல்றது சரிதான்,
ஆனா பாக்கற ஆடியன்ஸ்சுக்கு அதுதெரியாது இல்லே.
அதுவும் இது எவ்வளவு முக்கியமான காட்சி .20 வருஷம்  கழிச்சு அப்பாவை பாக்க வர்றான் மகன்.மகன் அப்படியே சாதாரணமா பேசிட்டு போயிடுவானா ?இருபது வருஷ  கதையை பேசாம போயிடுவானா ?அதை வந்ததும் வராததும் அந்த மகன் கேட்க முடியுமா ?படிப்படியா ஆரம்பிச்சுத்தானே அதை சொல்ல முடியும் .தியேட்டர்லே பாக்கற மக்களும் அப்பத்தானே அந்த காட்சியை ஏத்துப்பாங்க.
 ஆரூர்தாஸ் இப்படி சொன்னதுலேயும் ஒரு நியாயம் இருக்கறத உணர்ந்த சிவாஜி அந்த வசனங்களை அப்படியே உணர்ச்சி பூர்வமா பேசி பாத்த மக்களையெல்லாம் உருக வெச்சிருப்பார்.
சிவாஜி ஆரம்பத்துலே கேட்டதுக்கு காரணம் என்னான்னா ,மூணு வேஷத்தையும் மாத்தி மாத்தி பண்ண வேண்டியிருக்கு.அது ஒரு உணர்வு பூர்வமான காட்சி.இந்த சீனுலே உணர்ச்சிகளை அதிகமாக காட்டி,வசனங்களை குறைச்சு நடிச்சு அந்த சீனை தன்னோட உணர்ச்சிகரமான நடிப்புலேயே நடிச்சு முடிக்கற மாதிரித்தான் காட்சி இருக்கும்னு நினைச்சிருக்காரு..
அதனாலேதான் அப்படி கேட்டாரு சிவாஜி.
படத்துலே இந்த சீனு மட்டும் 8 நிமிஷத்துக்கு பக்கம் வரும்.
தேவையில்லேன்னு நினச்ச தந்தையும்,அவரை தேடியலைஞ்ச மகனும் ஒருத்தரையொருத்தர் சந்திக்கிற அற்புதமான காட்சின்னுதான் அந்த சீனோட முதல் டயலாக்கே.கண்டிப்பா அது தமிழ் சினிமாக்கு கிடைச்ச அற்புதமான காட்சிதானே.அந்த முத டயலாக்குல இருந்து கடைசி வரைக்கும் அருவி கொட்டறமாதிரி 
உணர்ச்சிகரமான வார்த்தைகள்லே அந்த சீனு முழுக்கவும் இருக்கும்.
விகாரமா இருக்கற அப்பா மகன்னு ரெண்டு சிவாஜி மட்டுமில்லாமே இந்த ரெண்டு குணாதிசயத்திக்கு சம்பந்தமே இல்லாத மாதிரியான இன்னொரு சிவாஜி கேரக்டர் வேற இந்த சீனுல வருவார்.மகனா வர்ற அந்த ரெண்டு சிவாஜிக்கும் அப்பாவா வர்ற சிவாஜி பதில் சொல்லற இந்த ஒரு காட்சி இருக்கே .அதை எப்படி சொல்றது.
சினிமாலே ஆயிரம் பிரம்மாண்டமான காட்சிகள் இருக்கலாம் .ரொம்ப செலவு பண்ணுன காட்சிகள் இருக்கலாம்.நடிப்புன்னா சிவாஜி நடிச்ச இந்த மாதிரி சீனுகளை சொல்லாமே இருக்க முடியாது.

செந்தில்வேல் சிவராஜ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்