1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

ராஜ்கபூருக்காக சாந்தி தியேட்டரை விட்டுக் கொடுத்த சிவாஜி

சிவாஜியோட படங்களை எந்த வித இடைஞ்சலும் இல்லாமே ரிலீஸ் பண்றதுக்காகவே சாந்தி தியேட்டரை சென்னையிலே தொடங்குனாங்க.
சாந்தி தியேட்டர்லே முதல்ல போட்ட படம் சிவாஜி படமில்லே.சிவாஜி படம் சாந்தியிலே போடற வரைக்கும் சிவாஜி படங்களை சித்ரா தியேட்டர்லே தான் போட்டுட்டு இருந்தாங்க. பாவ மன்னிப்பு படத்தை முதல் முறையா ரிலீஸ் பண்ணி அது வெள்ளிவிழா ஓடுன பின்னாலே தான் சிவாஜி படங்களை ரிலீஸ் பண்ணிணாங்க.
1964 லிலே சிவாஜி பிலிம்ஸ் புது படம் தயரிக்குது. பெரிய பொருட்செலவிலே கலர் படமா தயாரிச்சாங்க.புதிய பறவை தான் அது.சிவாஜி பிலிம்சோட முதல் கலர் கனவு படம் அது.புதிய பறவை படத்தை சாந்தி தியேட்டர்லே தான் கண்டிப்பா ரிலீஸ் பண்ணுவாங்க அப்படின்னு எல்லோரும் நினைச்சுகிட்டு இருந்தப்போ அந்த படத்தை சாந்தியிலே ரிலீஸ் பண்ணலே.சிவாஜியோட சொந்தப்படம்,பெரிய படம் ,முதல் படம் இப்படிப்பட்ட படத்தை சொந்த தியேட்டரான  சாந்தியிலே ஏன் ரிலீஸ் பண்ணலே.இதுக்கு பின்னாலே ஆச்சர்யமான ஒரு விஷயம் இருக்கு.

ஆரம்ப காலத்துலே பல படங்கள்லே வில்லன் டைப் ஆன்டி ஹீரோ வேஷங்களை தைரியமா செஞ்ச சிவாஜி சில வருஷமா அந்த மாதிரியான வேஷங்களை செய்யறதுக்கு வாய்ப்பு அமையலே.1964 லே புதிய பறவை படம் நெகடிவ் டைப் வேஷம்தான் சிவாஜிக்கு.சிவாஜி அப்ப இருந்த உசரத்துக்கு இந்த மாதிரி  ரிஸ்க் எடுக்க வேண்டிய அவசியமில்லே.

படம் தயாரிக்க தொடங்குனப்போ கொடுத்த முதல் விளம்பரத்துலே இயக்க மேற்பார்வை சிவாஜிகணேசன்னு விளம்பரம் செஞ்சிருந்தாங்க.டைரக்டரா சிவாஜி அவதாரம் எடுக்க போறாரா அப்படினெல்லாம் பேசிகிட்டாங்க.ஆனா சிவாஜியோட பிசி ஷெட்யூல்லாலே அதுக்கு வாய்ப்பு அமையலே .
திரைக்கதை அமைக்கற வேலையிலே சிவாஜியோட தம்பி சண்முகம் கூட அதிக சிரத்தை எடுத்து கவனிச்சுகிட்டார்.
திரைக்கதையிலே ரொம்ப ஐடியா சண்முகம் கொடுத்தார்.ஆனாலும் டைட்டில்லே அவர் பேரை போட்டுக்கலே.
சௌகார் ஜானகிக்கு இது 100 வது படம்.
எங்கே நிம்மதி பாட்டுக்கு மட்டும் நூத்துக் கணக்குலே இசைக்கருவிகளை விஸ்வநாதன் பயன்படுத்தினாரு.அவ்வளவு இசைக் கருவிகளை பயன்படுத்தி அதுக்கு முன்னாலே விஸ்வநாதன் எந்த பாட்டுக்கும் இசை அமைச்சதில்லே.
ஒளிப்பதிவுலே எல்லாம் மிரட்டி இருந்தாங்க.வித்தியாச வித்தியாசமா லைட்டிங்குகளை பயன்படுத்தி தமிழ் ரசிகர்கள் அது வரை பாக்காத ஒரு தரத்தை இந்த படத்துலே பயன்படுத்தி இருந்தாங்க.


அது ஒரு ஆக்ஷன் படமா இல்லேன்னாலும் ஆங்கில பட பாணியிலே நல்ல ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லரா சிவாஜி பிலிம்ஸ் தயாரிச்சது.பெரிய பெரிய சினிமா டெக்னீயசன்களே அந்த படத்தோட தரத்தை பாத்து மலைச்சு போயிட்டாங்க.படத்தோட பாட்டுக வேற வேற லெவலா மத்த எந்த தமிழ் சினிமா பாட்டுகளோட சாயலா இல்லாம ரொம்ப கலக்கலா இருந்தது.
ஜெமினி லேப்பிலே உருவான ரெண்டாவது தமிழ் படமா இருந்தது.கலர்லே ரொம்ப தரமா உயர்வா இருந்தது புதிய பறவை.
இந்த படம் ரிலீசான பின்னாலே சிவாஜியோட நடிப்பை பாத்து கண்டிப்பா சினிமா பீல்டு ரொம்ப மிரண்டு போயிடும்னெல்லாம் பேசிகிட்டாங்க.
இப்படி பல சிறப்பு அம்சங்களை
கொண்ட புதிய பறவை படத்தை சாந்தியிலே எல்லோரும் எதிர்பாத்தாங்க. 


எல்லா வேலையும் முடிஞ்சு படத்தை ரிலீஸ் பண்றதுக்கு முன்னாலே இந்தி நடிகர் ராஜ்கபூர் சிவாஜிகிட்டே பேசினார்.
விஷயம் இதுதான்:
சிவாஜியோட  சாந்தி தியேட்டர்லே அப்போ ராஜ்கபூரோட சங்கம் படம் ஓடிகிட்டு இருந்துச்சு.சங்கம் படம் பெரிய ஹிட்.அந்த படத்துக்கான கூட்டமும் குறையவே இல்லே.இப்படி நல்லா ஓடிகிட்டு இருக்கற படத்தை சென்னையில் சிவாஜி தியேட்டர்லே வெள்ளிவிழா ஓட வைக்கணும்னு ராஜ்கபூர் விரும்புனாரு.அந்த டயத்துலே சிவாஜியோட புதிய பறவை ரிலீஸ் ஆகப் போகுதுன்னு தெரிஞ்சிகிட்ட ராஜ்கபூர் நேரிடையா சிவாஜியையே கூப்பிட்டு பேசுனார்.சாந்தியிலே சங்கம் திரைப்படம் வெள்ளிவிழா ஓடணும்கிறது தன்னோட விருப்பம் அப்படின்னு ராஜ்கபூர் சிவாஜிகிட்டே சொல்ல,சிவாஜியும் சரின்னுட்டார்.ஒரு பெரிய நடிகரே கேக்குறப்போ அதை மறுக்க முடியுமா ?
தன்னோட புதிய பறவை படத்தாலே சங்கம் இந்தி படத்துக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாதுன்னு புதிய பறவை படத்தை பாரகன் தியேட்டர்லே ரிலீஸ் பண்ணினார்.புதிய பறவை படத்துக்காகவே பாரகன் தியேட்டர் ஸ்கிரீன் எல்லாம் புதுசா ஆல்டர் பண்ணுணாங்க.சவுண்ட் சிஸ்டம் எல்லாம் தரமா மாத்துனாங்க.
புதிய பறவை படத்தை சென்னையிலே பாரகன் கிருஷ்ணா சயானி தியேட்டர்லே ரிலீஸ் பண்ணிணாங்க.
அந்த டயத்துலே வேற எந்த தியேட்டர்லேயும் இல்லாத டெக்கரேசன் ,
அலங்காரமெல்லாம் புதிய பறவை ஓடுன தியேட்டர்களில்ல செஞ்சிருந்தாங்க.சிவாஜியோட பெரிய சைஸ் கட் அவுட் மூணு தியேட்டர்லேயும் வெச்சிருந்தாங்க.
ஜெமினி அரங்கோட வலது பக்கம் புதிய பறவை படத்தோட ராட்சஷ சைஸ்லே பேனர் வெச்சிருந்தாங்க.எங்கே நிம்மதி பாட்டுல வந்த ஒரு போஸ்தான் பேனர்லே வரைஞ்சிருந்தாங்க.அவ்வளவு பெரிய பேனர்லே சிவாஜியோட உருவத்தை பாக்கறப்போ ரொம்ப பரவசமா இருந்துச்சு.

இப்படியெல்லாம் சிறப்பு பெற்ற ,
தமிழ் சினிமாவோட ஒரு மைல் ஸ்டோன் படமா புதிய பறவை அமைஞ்சிருந்தும் ,சிவாஜி பிலிம்ஸ் தயாரிச்ச முதல் படமா இருந்தும் ,அது வரைக்கும் தமிழ் மக்கள் பாக்காத கலர்லே படத்தை தயாரிச்சு இருந்தும்,சிவாஜிக்கு சொந்தமான சாந்தி தியேட்டர் இருந்தும் ,ஒரு சகக் கலைஞன் கேட்டுகிட்டதற்காக தன்னோட படத்தை சிவாஜி தன் சொந்த தியேட்டலே ரிலீஸ் செய்யாதது இந்தி நடிகர் ராஜ்கபூரை மெய் சிலிர்க்க வைத்தது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்