திரைக்கு வராத சிவாஜி பாடல்கள்

படம்
காலத்தை வென்றும் திரைக்கு வராத  சிவாஜியின் ரகசியப் பாடல்கள்! ​"நடிகர் திலகம் திரைப்படங்களில் இருந்து, நம் காதுகளை வருடிச் சென்றும் திரைக்கு வர மறுத்த முத்துக்கள் சில உள்ளன என்றால் நம்புவீர்களா?" ​ 'போனால் போகட்டும் போடா' முதல் 'வசந்த மாளிகை' வரை... அவர் பாடி நடித்த ஒவ்வொரு பாடலும் இன்றும் நம் நெஞ்சங்களில் ஒலித்துக்கொண்டிருக்கிறது." ​"ஆனால், உங்களுக்குத் தெரியுமா? அவரது திரைப்படங்களுக்காக மிகச் சிறந்த இசையமைப்பாளர்களான விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கே.வி. மகாதேவன், இளையராஜா போன்ற ஜாம்பவான்கள் பதிவு செய்த சில பாடல்கள்... அவை ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்தும்... வானொலியில் சூப்பர் ஹிட்டாக ஒலித்தும்... திரையில் இடம்பெறவே இல்லை!" ​"ஒரு பிரம்மாண்டப் படத்தின் நீளம், கதைக்களத்தின் உணர்வுபூர்வமான தேவை, எதிர்பாராத பட்ஜெட் சிக்கல்கள் அல்லது ஒரு பாட்டுக்குப் பதிலாக அதைவிடச் சிறப்பான ஒரு பாட்டைக் கொண்டு வர வேண்டும் என்ற இயக்குநரின் தொலைநோக்குப் பார்வை... இப்படிப் பல காரணங்களால், இந்த அரிய பாடல்கள் திரைப்படங்களின் இறுதிக் காட்சியில் கத்தரிக்கப்பட்டன." ...

திரைப்படங்களில் நடிக்க சிவாஜி வாங்கிய சம்பளங்கள்

சிவாஜி வாங்கிய சம்பளங்கள்..
முதல் படமான பராசக்தியில் சிவாஜி நடித்தபோது மாத சம்பளத்திற்குத்தான் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.அதிலும் படத்தில் நடித்தபோது சிவாஜி ஒல்லியாக இருப்பதை காரணம் காட்டி சிவாஜியை பல மாதங்கள் நன்றாக சாப்பிட்டு ஓய்வு எடுக்கும் படி ஏவிஎம் நிறுவனத்தால் கட்டாயப்படுத்தப்பட்டார்.
பராசக்தி படத்தில் நடித்ததற்காக சிவாஜிக்கு மாதச் சம்பளமாக ரூபாய் 250 கொடுக்கப்பட்டது.ஒரே படத்தின் மூலமாக ஒரே நாளில் சூப்பர்ஸ்டாரான சிவாஜிக்கு கொடுக்கப்பட்ட மாதச் சம்பளம் 250 ரூபாய்.

பராசக்தியில் நடித்து கொண்டிருந்த காலத்திலேயே சிவாஜியை தன் பணம் படத்திற்காக கலைவாணர் ஒப்பந்தம் செய்தார்.இந்த படத்தில் நடிக்க எவ்வளவுசம்பளம் கேட்பது என்று சிவாஜிக்கு கூட இருந்த சினிமா நண்பர்களே சிவாஜிக்காக பேசி 25000 ரூபாய் சம்பளம் வாங்கி கொடுத்தனர்.ஆக பணம் படத்திற்காக சிவாஜி வாங்கிய  சம்பளம் 25000.

1954ல் வெளிவந்த கூண்டுக்கிளி படத்தில் நடித்தபோது சிவாஜி ராமண்ணாவிடம் அட்வான்ஸ் எதுவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.
ராமண்ணாவிடம் உங்கள் கையால் சில வெள்ளிக் காசுகளை மட்டும் கொடுங்கள்
என்று கேட்டு வாங்கிக் கொண்டார்.படம் முடிந்ததும் ராமண்ணா சிவாஜிக்கு கொடுத்த சம்பளம் ரூபாய் 25000.

1959 ல் வெளியான தங்கப்பதுமை திரைப்படத்திற்காக அந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் சிவாஜிக்கு கொடுத்த சம்பளம் ரூபாய் 60 ஆயிரம்.

1964 இல் வெளியான கர்ணன் திரைப்படத்திற்காக பந்துலு சிவாஜிக்கு ரூபாய் 2 லட்சத்துக்கும் மேல் சம்பளமாக கொடுத்தார்.பந்துலு தயாரிக்கும் திரைப்படங்களுக்கு சிவாஜி அவர் கொடுக்கும் சம்பளத்தை பெற்றுக்கொள்வார்.
கஷ்டப்பட்டு எடுக்கப்பட்ட கப்பலோட்டியதமிழன் முதல் வெளியீட்டில் சரியாக போகவில்லை என்பதற்காக பந்துலு எடுத்த அடுத்த திரைப்படமான பலே பாண்டியாவுக்கு சிவாஜி சம்பளம் எதுவும் வங்காமல் இலவசமாக நடித்துக் கொடுத்தார்.

1968 ல் வெளியான தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்திற்கு சிவாஜி பெற்ற சம்பளம் ரூபாய் 2 லட்சத்து ஐம்பதாயிரம்.

1968 இல் வெளியான சிவாஜியின் கறுப்பு வெள்ளை திரைப்படம் உயர்ந்த மனிதன்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 125 வது திரைப்படம். நீண்ட இடைவெளிக்கு பின் ஏவிஎம் சிவாஜியை வைத்து தயாரித்த திரைப்படம்.
இந்த படத்தில் நடித்த போது ஏவிஎம் நிறுவனத்திற்கு சிவாஜிக்கு எவ்வளவு சம்பளம் கொடுப்பது என்று தெரியவில்லை.அப்போது ஏவிஎம் செட்டியார் சிவாஜி இதற்கு முன் நடித்த கலர் படமான தில்லானா மோகனாம்பாள் படத்திற்கு இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளார். அது கலர் படம். நாம் தயாரிப்பது கறுப்பு வெள்ளை திரைப்படம். வேலையும் குறைவு .எனவே ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொடுக்கலாம் என்று சொன்னபோது சிவாஜியின் தம்பி சண்முகம் அதை ஏற்றுக் கொண்டார். ஒரே ஒரு கண்டிஷன் போட்டார். படம் முடிஞ்ச பிறகு நீங்க சம்பளத்தை ஒட்டுமொத்தமாக கொடுத்தால் போதும் என்று சொல்லிவிட்டார்.

1969 இல் வெளியான ஸ்ரீதர் தயாரித்த மிகப் பிரமாண்டமான வெளிநாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படமான சிவந்தமண் திரைப்படத்திற்கு சிவாஜி மூன்று லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டதாக பேசப்பட்டது.

1971 ல் திருலோக சந்தரின் சொந்த திரைப்படம் பாபு .இந்தத் திரைப்படம் கறுப்பு வெள்ளையில் மிகக் குறைந்த செலவில் உருவாக்கப்பட்ட திரைப்படம் ஆகும்.
திருலோகசந்தர் சிவாஜியின் நெருங்கிய நண்பர் என்பதற்காகவும்,அவருடைய சொந்த குறைந்த தயாரிப்பு கறுப்பு வெள்ளை திரைப்படம் என்பதாலும், திருலோகச்சந்தர் சிவாஜிக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தார்.

1973 இல் வெளியான மிகப் பிரம்மாண்டமான சரித்திர படம் ராஜராஜ சோழன். ஏ பி நாகராஜன் மிகுந்த
 பொருட்செலவில் இந்த படத்தை தயாரிப்பதால் சிவாஜி அவர்கள் இந்த படத்திற்கு இவ்வளவு சம்பளம் என்று எதுவும் சொல்லவில்லை.இந்த படத்தில்  நடித்தற்காக சிவாஜி அவர்களுக்கு மூன்று லட்சம் வரை A.P.நாகராஜன் கொடுத்ததாக பேசப்பட்டது.

1979இல் சிவாஜி புரொடக்சன் தயாரித்த திரைப்படம் திரிசூலம் .நடிகர் திலகம் சிவாஜியின் சொந்த தயாரிப்பு ஆகும்.
இந்தப் படம் வெளிவந்த சமயத்தில் அதுவரை வெளிவந்த தமிழ் சினிமாக்களில் மாபெரும் வசூல் சாதனை சரித்திர படமாக அமைந்தது. எந்த நடிகராவது இப்படி ஒரு பெரிய இன்டஸ்ட்ரி ஹிட் வெற்றிப்படம்கொடுத்து விட்டால் அந்த நடிகர் அடுத்த படத்தில் வாங்கும் சம்பளமே வேற லெவலாக இருக்கும்.
ஆனால் சிவாஜி அவர்கள் தன்னுடைய சம்பளத்தை அடுத்த படங்களில் ஏற்ற வில்லை.
பெரும்பாலும் 1980 களுக்கு பின்பு தயாரிப்பாளர்களின் தகுதிகளுக்கு ஏற்றவாறு தன் சம்பளத்தை வாங்கிக் கொண்டார்.கட் அண்ட் ரைட்டாக  தனக்கு சம்பளம் இவ்வளவு தந்தாக வேண்டும் என்று யாருக்கும் நிபந்தனை விதித்ததேயில்லை.

1992ல் கமலஹாசன் தயாரித்து வெளிவந்த திரைப்படம் தேவர் மகன். இந்தப் படத்தில் சிவாஜி அவர்களுக்கு ரூபாய் 20 லட்சம் 
சம்பளமாக கமலஹாசன் கொடுத்ததாக தகவல் உண்டு.

1997 இல் வெளியான திரைப்படம் ஒன்ஸ்மோர். இந்தப் படம் இயக்குனர் சி வி ராஜேந்திரனின் சொந்த திரைப்படம் ஆகும். இந்தப் படத்தில் சிவாஜி அட்வான்ஸ் வாங்கிய தொகை 100 ரூபாய் மட்டுமே.படம் முடிந்ததும் சிவாஜிக்கு 10 லட்சம் சம்பளமாக தரப்பட்டது.

1999 இல் வெளியான திரைப்படம் படையப்பா. இது ரஜினியின் சொந்த திரைப்படம் ஆகும்.
இந்தப் படத்தில் நடித்ததற்காக சிவாஜி அட்வான்ஸ் தொகை எதுவும் வாங்கவில்லை. படம் முடிந்ததும் சிவாஜிக்கு ஒரு காசோலை தரப்பட்டது .அந்தக் காசோலையில் ரூபாய் ஒரு கோடி என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. ஒரு சைபரை சேர்த்து விட்டார்கள் என்று தயாரிப்பாளருக்கு சிவாஜி தரப்பில் சொல்லப்பட இல்லை சரிதான் உங்களுக்கு ஒரு கோடி சம்பளம் தான் அவர்களால் சொல்லப்பட்டது.

நடிகர் திலகம் சிவாஜி  எல்லா வருடத்திலும் 100 நாட்கள் திரைப்படங்களை கொடுத்துள்ளார்.
எவ்வளவு பெரிய வெற்றி படங்களை கொடுத்திருந்தாலும் சரி அதற்காக தன் படங்களின் சம்பளத்தை  ஏற்றியதே இல்லை.இவ்வளவு சம்பளம் கண்டிப்பாக வேண்டும் என்று எந்த தயாரிப்பாளரிடம் கேட்டதே இல்லை .
அவ்வளவு ஏன் சில தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் தொகை கூட தர வேண்டாம் படத்தில் நடித்து தருகிறேன் படம் முடிந்த பிறகு அது நன்றாக வியாபாரம் ஆன பிறகு, உங்களால் முடிந்ததை கொடுங்கள் என்று  பல தயாரிப்பாளர்களுக்கு சொல்லியிருக்கிறார்.
ஸ்ரீதர் விடிவெள்ளி தயாரித்த போது இப்படித்தான்.
பாலாஜி சிவாஜியை வைத்து முதலில் தயாரித்த தங்கை திரைப்படத்தின் போதும் இப்படித்தான்.
எஸ் பி சுப்பையா காவல் தெய்வம் திரைப்படம் தயாரித்த போது பணமே பெற்றுக் கொள்ளவில்லை.
இப்படி சிவாஜியால்  பலன் பெற்ற பல தயாரிப்பாளர்கள் உள்ளனர் 
1956  ல் வெளியான அமரதீபம் திரைப்பட சமயத்தில்தான் சிவாஜி பிலிம்ஸ் நிறுவனம் உருவாக்கப்பட்டது.
அந்த படத்தில் இருந்துதான் சிவாஜி பிலிம்ஸ் சிவாஜி நடித்த படங்களின் விநியோக உரிமையை  பெற்றது.
சிவாஜி நடித்த எல்லா படங்களின் விநியோக உரிமையையும் அல்ல.முக்கியமான படங்களையும், தயாரிப்பாளர்களால் சிறந்தபடி விநியோகம் செய்ய முடியாத படங்களையும் ,சிவாஜி நிறுவனங்கள் தயாரித்த படங்களையும் வெளியிடவே சிவாஜி பிலிம்ஸ்  செயல்பட்டது.

செந்தில்வேல் சிவராஜ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற