1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

அம்பென பாய்ந்த கலைஞன்..சிவாஜி

 சிவாஜி ...
ஏழு கலர் தான் அடிப்படை.பக்கத்துல பாக்கையில. எல்லாக் கலரும் ஜோராத்தான் இருக்கும்.ஆனா தூரமா போனா மஞ்சள் கலருதா மின்னும்.உதாரணமா இருட்டுல ஆகாசத்த பாருங்க.நட்சத்திரம் எல்லாம் மஞ்சள் கலருல பளீர்னு இருக்கும்.அது மாதிரிதான் சிவாஜி படங்களும்.காலமாக ஆக ரொம்ப வியப்பா இருக்கும்.

நாலு தலைமுறைக்கு முன்னால நடிக்க வந்தாரு.அப்ப இருந்தவங்களும் ரசிச்சாங்க. ரசிகனா மாறுனாங்க.இப்பவும் நாலு தலைமுறை தாண்டியாச்சு.
இப்ப இருக்கற சின்ன பசங்க கூட சிவாஜி நடிப்புல மயங்கறாங்க.5 ஆம் வகுப்பு படிக்கிற பையன் சிவாஜியோட 300 படத்த அப்படியே சொல்லுறான்.மேடையில, டிவில எல்லாம்  சிவாஜி செஞ்ச வேஷத்த, நடிப்பை எல்லாம் சின்ன பசங்க செய்யறாங்க.இதெல்லாம் சில உதாரணங்கதான்.

தனுர் வேதமானது அசாத்திய வில் வித்தையை சொல்லறது.யுத்த வித்தைகளில் ரொம்ப  மேலானது.குறிப்பிட்ட இலக்கை வீழ்த்த துணை புரியறது .வில் வித்தையில துரோணாச்சாரியாரை அடிச்சுக்க யாருமில்ல.அந்த துரோணாச்சாரியார் மாதிரித்தான் நடிப்புல சிவாஜி. ஒரு கேரக்டரை கொடுத்து நடிக்கச் சொன்னா அவர் நடிக்கறப்போ அந்த நடிப்போட இலக்கு குறி தவறாத தனுர் வித்தை போலத்தான்.

தமிழ் நாட்டுல ரொம்ப பெரியவங்க,பல தலைவர்கள் இப்படி  பல பேருக்கு சினிமான்னா புடிக்காது.பாக்கவும் மாட்டாங்க.அவங்க சிவாஜிக்காக சினிமா பாத்தாங்க .சினிமான்னா சிவாஜிதான்னும் சொல்லிட்டாங்க.காமராஜர்,
ராஜாஜியை இதுக்கு உதாரணமா சொல்லலாம்.காஞ்சி ஆச்சார்யாரோ ஒரு சிவாஜியோட போஸ்டரை பாத்துட்டே, என்ன இது நானா? என்னைப் போலவே இருக்காளே ,அவாள பாக்கணுமேன்னு சொல்ல வெச்சவர்தான் சிவாஜி.

எந்த நடிகனா இருந்தாலும் படம் முழுதும் வர்ற வேஷத்தை தான் விரும்புவாங்க. நடிக்க ஆசைப் படுவாங்க.சிவாஜியை பொறுத்த வரை இதெல்லாம் இல்ல.கால் மணி நேரம் நடிச்சாலும் சரி, அரை மணி தான் வேஷம்னாலும் சரி நடிக்கறதுக்கு வாய்ப்பு இருந்தா சரி.இதான் அவரோட கொள்கை. இதுக்கு உதாரணமா பல படங்களையும், வேஷத்தையும் சொல்லலாம்.

ஒரு சாதாரண நடிகனா இருந்தாலும் சரி, ரொம்ப உச்சமா போன நடிகனா இருந்தாலும் சரி.சிவாஜியளவுக்கு தமிழ்நாட்டை சுத்தி வந்தவங்க யாருமே கிடையாது.
ரசிகர்களுக்காக பிறந்த நாள் விழாக்களை நடத்தின விதத்திலும் சரி,கல்யாணம், கச்சேரி, 
அப்படின்னு எத்தனையோ விழாக்களானாலும்  சரி,சாதாரண ரசிகனா இருந்தாலும் அவங்க வீட்டு விசேஷத்துல கலந்துக்கிட்டதுலயும் சரி, சிவாஜி மாதிரி விழாக்கள்,நிகழ்வுகள் அப்படின்னு கலந்துகிட்ட ஒரு நடிகன் உலகத்துலேயே கிடையாது.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்