திரைக்கு வராத சிவாஜி பாடல்கள்

படம்
காலத்தை வென்றும் திரைக்கு வராத  சிவாஜியின் ரகசியப் பாடல்கள்! ​"நடிகர் திலகம் திரைப்படங்களில் இருந்து, நம் காதுகளை வருடிச் சென்றும் திரைக்கு வர மறுத்த முத்துக்கள் சில உள்ளன என்றால் நம்புவீர்களா?" ​ 'போனால் போகட்டும் போடா' முதல் 'வசந்த மாளிகை' வரை... அவர் பாடி நடித்த ஒவ்வொரு பாடலும் இன்றும் நம் நெஞ்சங்களில் ஒலித்துக்கொண்டிருக்கிறது." ​"ஆனால், உங்களுக்குத் தெரியுமா? அவரது திரைப்படங்களுக்காக மிகச் சிறந்த இசையமைப்பாளர்களான விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கே.வி. மகாதேவன், இளையராஜா போன்ற ஜாம்பவான்கள் பதிவு செய்த சில பாடல்கள்... அவை ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்தும்... வானொலியில் சூப்பர் ஹிட்டாக ஒலித்தும்... திரையில் இடம்பெறவே இல்லை!" ​"ஒரு பிரம்மாண்டப் படத்தின் நீளம், கதைக்களத்தின் உணர்வுபூர்வமான தேவை, எதிர்பாராத பட்ஜெட் சிக்கல்கள் அல்லது ஒரு பாட்டுக்குப் பதிலாக அதைவிடச் சிறப்பான ஒரு பாட்டைக் கொண்டு வர வேண்டும் என்ற இயக்குநரின் தொலைநோக்குப் பார்வை... இப்படிப் பல காரணங்களால், இந்த அரிய பாடல்கள் திரைப்படங்களின் இறுதிக் காட்சியில் கத்தரிக்கப்பட்டன." ...

லட்சுமி கல்யாணம் யாரடா மனிதன் இங்கே?

யாரடா மனிதன் இங்கே பாடல்.
(லட்சுமி கல்யாணம்)

நல்ல  குணங்களுக்கு விலங்குகளின் குணத்தை  உவமை கூறி பாராட்டுவது உலக இயல்பு.
மான் விழி
சிங்ககர்ஜனை
புலிப்பாய்ச்சல்
குதிரை ஓட்டம்.
இப்படி சில.மிருகங்களை உவமையாக்கி பாராட்டும் அதே சமயம் ,தீய குணம் கொண்டோரின் குணங்களுக்கும் அதே மிருகங்களின் குணத்தையே உவமை யாக பயன்படுத்துகின்றான்.
 இது ஒரு முரண் ?என்றுசிலர் கூறுவதும் உண்டு. கவியரசரும் தன் பங்கிற்கு  லட்சுமி கல்யாணம் படத்திற்காக மிருகங்களை உவமையாக்கி 
இந்தப்பாடலை கொடுத்துள்ளார்.அந்த விவாதங்கள் நமக்கெதற்கு. நமக்கு நம் நடிகர்திலகத்தின் நடிப்பு ஒன்று போதுமே.

கதைமாந்தர்களின் வஞ்சக எண்ணங்களால் பாதிக்கப்படும் கதையின் நாயகன் அம்மனிதர்களின் குணங்கள் கண்டு கொந்தளித்து பாடுவதாக அமைந்த பாடல் இது. அதை நம் தலைவர் எப்படி வெளிப்படுத்துகிறார் பாருங்கள்.நல்ல மனிதர்கள்யாராவது  நடந்து போகிறார்களா என்று தீப்பந்தத்தைதூக்கி ஒவ்வொரு மனித முகமாகப் பார்த்து  சலித்துப்போய் தீப்பந்தத்தை தூக்கி எறியும் அந்த முதல் ஷாட்டிலேயே அந்த விரக்தியை
எப்படி அருமையாகக் காட்டுவார் பாருங்கள்.முகத்தில் வந்து விழும் சுருட்டின் புகையை அலட்சியப்படுத்தி நம்பியாரை தள்ளிவிட்டு நடப்பதும்,எதிரில் வரும் மனிதரை தட்டு தட்டி நகர்ந்து போகச் செய்வதிலும்,சீட்டு விளையாட்டுக்கும்பலை முறைத்தபடி நகர்வதிலும் அந்தக் கோபம் எப்படியெல்லாம் வெளிப்படும்.ஒரு மனிதர் கோபப்பட்டு அதை மற்றவர்களை ரசிக்கவைக்க அவரை  விட்டால் வேறு யார் உள்ளனர்.?
வெள்ளை ஜிப்பாவில் மனிதரை பார்த்துக்கொண்டேஇருக்கலாம்.நிஜத்திலும் கடைசிவரை டிரேட்மார்க் ஆடை அதுவல்லவா.
காமிரா கோணங்கள் எல்லாம் பிரமாதப்படுத்தும்.லைட் அண்ட் டார்க் வெளிச்சக்கீற்றுக்களை எந்தவித பார்வை உறுத்தல்கள் இல்லாமல் படம் பிடித்த 
விதத்திற்குகாமிராமேனை எல்லோரும் பாராட்டியாக வேண்டும்.
யாரடா  மனிதன் இங்கே இரண்டாவது முறையாக பாடும் 
போது சட்டென்று திரும்பி ஒரு போஸ் கொடுப்பார் பாருங்கள்.அட்டகாசம் தான்.கூட்டிவா அவனை
இங்கேவில்  முகம் காட்டும் வெறுப்பில் தான் எத்தனை உண்மையான உணர்ச்சிகள்.இறைவன் படைப்பில் குரங்குதான் மீதி இங்கே. இந்த வரிகளின் போது கீழிலிருந்து மேல் செல்லும் காமிரா  உழைப்பு க்கு ஒரு சபாஷ்.

பிண்ணணி இசையில் நமக்கு போனசாக கந்தன் கருணை நோட்டீஸ் விநியோக காட்சி.

மனிதரில் நாய்கள் உண்டு
இந்த வரிகளின் போது தலைவர் மெல்ல முகம் திருப்பி பார்ப்பார். என்ன அழகான போஸ் அது.அந்தப் பார்வையே ஆளை ஒரு வழி பண்ணிவிடும்.
மனதினில் நரிகள் உண்டுவுக்கு நம்பியாரை பார்த்து உடலை சற்று வளைத்து முகத்தில்காட்டும் பாவனைகள் சொல்லி மாளாது.என்ன ஒரு அர்ப்பணிப்பான நடிப்பு வெறியர்..நம்பியாரையும் நடிக வேந்தரையும் காட்டும் ஷாட் அசத்தலாக இருக்கும்.நம்மவரை வெளிச்சத்திலும் நம்பியாரை இருட்டிலுமாய் படம் பிடித்து இருவரின் குணங்களையும் ஒரே  பிரேமில் காட்டுவது வெகு சிறப்பு.அற்புத பதிவு.தலைவர் காமிராவுக்குள் வந்து புகுவது போல் காட்டும் ஷாட் , தொழில் சிரத்தையை  காட்டுகின்றது.க்ளோஷப் ஷாட்களில் பிரமிக்க வைப்பார்.இந்த ஷாட்களுக்கு மயங்காத மனிதர் எவரும் இருக்க முடியாது.பார்வையில் புலிகள்உண்டு என்ற வரிகளின் போது நடந்து வந்து நின்று ஒரு பார்வை பார்ப்பார் பாருங்கள்.
என்ன ஒரு போஸ்.
என்ன ஒரு பார்வை
என்ன ஒரு மிடுக்கு
என்ன ஒரு அலட்சியம்.
எந்த ஹாலிவுட் நடிகரானாலும் இந்த ஒரு ஸ்டைலுக்கே மிரண்டு விடுவார்கள் மிரண்டு
பழக்கத்தில் பாம்பு உண்டு என்பதில் அடுத்த ஸ்டைல் அஸ்திரத்தை பிரயோகித்து வியப்பு மேல் வியப்பு காட்டுவார்,
"பூமிப்பந்தின் சிறந்த நடிகன்."

நாயும் நரியும் புலியும் பாம்பும் வாழும் பூமியிலே
மானம் பண்பு ஞானம் கொண்ட மனிதனைக் காணவில்லை.

எல்லாம் சொல்லி புரிய வைக்க முடியாது.வார்த்தைக்கு வார்த்தை சரமாரியாவந்து விழும் பாவனைகள். 
 உடம்பின் செல்கள் அனைத்திலும் ஊடுருவும் உருக்கமான நடிப்பு.ஒவ்வொரு வார்த்தைக்கும் அணு அணுவாக காட்டிய நடிப்பு.
ஒவ்வொரு நடிப்பும் அவரிடத்தில் இருந்து வெளிப்பட்ட பின் தானே நடிப்புக்கலை என்னவென்று நாம் உணர முடிந்தது.நடிப்புக்கலையின் ஆசான்  அவரல்லவோ.

சிரிப்பினில் மனிதன் இல்லை
அழுகையில் மனிதன் இல்லை
உள்ளத்தில் மனிதன் இல்லை
உறக்கத்தில் மனிதன் உண்டு.
மனிதன் விழித்திருக்கும் நேரமெல்லாம் மனதில் மிருகங்கள் தான் நடமாடிக்கொண்டிருக்கின்றன என்பதைத்தான் கவிஞர் எவ்வளவு நாசூக்காக வரிகளில் விளையாடி இருக்கிறார்.

கண் இமை நடிக்கும்
கன்னத்து தசைகள்  நடிக்கும்
என்பதை விளக்கும் க்ளோசப் காட்சிகள் இப்போது.அவர்  கை அசைந்தால்  நம்மையறியாமல் நம் கை அசையும்.காலசைந்தால் தன்னிச்சையாக காலசையும்.
அவரின் வாயசைவு நம்மைவாயசைக்கச் செய்யும் உணர்வுகளை ஏற்படுத்துகின்றது.அது தான் ஜீவனுள்ள நடிப்பு என்பது.

செந்தில்வேல் சிவராஜ் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற