ஐந்து சிகரங்களின் சங்கமம்!
தமிழ் சினிமாவோட பொற்காலத்தை சேர்ந்த ஐந்து மகா கலைஞர்கள்... நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நாட்டியப் பேரொளி பத்மினி, நடிகையர் திலகம் சாவித்திரி, புன்னகை அரசி கே.ஆர்.விஜயா, கன்னடத்து பைங்கிளி சரோஜாதேவி... இவங்க எல்லாரும் ஒரே இடத்துல உட்கார்ந்து பேசினா எப்படி இருக்கும்?
ஒரு அழகான விஐபி அறையின் சோபாவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடுவில் அமர்ந்திருக்கிறார். அவருக்கு இருபுறமும் சாவித்திரி, பத்மினி, சரோஜாதேவி மற்றும் கே.ஆர்.விஜயா ஆகியோர் புன்னகையோடு அமர்ந்து காபி குடித்துக்கொண்டே பேசத் தொடங்குகிறார்கள்.)
சிவாஜி கணேசன்: (தமக்கே உரிய கம்பீரமான குரலில், கைகளை அசைத்து) என்னம்மா... எல்லாரும் எப்படி இருக்கீங்க? ரொம்ப நாளைக்கு அப்புறம் நம்ம 'பாசமலர்' குடும்பம், 'சரஸ்வதி சபதம்' டீம், 'தில்லானா மோகனாம்பாள்' டீம்னு எல்லாரும் ஒண்ணா சேர்ந்த மாதிரி இருக்கு! இந்த நேரத்துல எனக்கு நாம ஒண்ணா சேர்ந்து நடிச்ச அந்த பழைய நினைவுகள் தான் ஞாபகத்துக்கு வருது.
சாவித்திரி: (கனிவான புன்னகையோடு) ஆமா அண்ணே... குறிப்பா 'பாசமலர்' படத்தோட நாட்களை இப்போ நினைச்சாலும் என் நெஞ்சம் நெகிழுது.
ஆமா அண்ணே... குறிப்பா 'பாசமலர்' படத்தோட ஷூட்டிங் ஸ்பாட்டை யாராலயும் மறக்க முடியாது. அந்தப் படத்துல நாம அண்ணன்-தங்கையா நடிச்சப்போ, நிஜமாவே நாம சொந்த அண்ணன் தங்கை ஆகிட்டோம்.
இந்த படம் கிளைமாக்ஸ் நடந்த சமயம் , இந்த காட்சி நல்லா வரணும் அப்படிங்கறதுக்காக நான் சரியா சாப்பிடல பட்டினி கிடந்தேன் பல நேரம்,அதேபோல நீங்களும் முதல் நாள் நைட் பூரா தூங்காம சோகமான தோற்றம் வருவதற்காக எப்படி எல்லாம் நம்மளை சிரமப்படுத்திவிட்டு நடிச்சோம். நாம அவ்வளவு கஷ்டப்பட்டோம் .நாம அன்னைக்கு அவ்வளவு கஷ்டப்பட்ட தாலேதானே இன்னைக்கும் அந்த படத்துக்கு அவ்வளவு பேர் இருக்கு .இது இல்ல நம்ம மறக்க முடியுமா?
சிவாஜி கணேசன்: (நெகிழ்ச்சியோடு) ஆமாம்மா சாவித்திரி... நீ நடிக்கும்போது என் சொந்தத் தங்கையாவே மாறிடுவ. அதனாலதான் அந்தப் பாசம் இன்னைக்கு வரைக்கும் அழியாம இருக்கு. அதுமட்டும் இல்ல, நம்ம 'நவராத்திரி' படத்துல நான் ஒன்பது வேஷம் போட்டு வந்தப்போ, ஒவ்வொரு கேரக்டருக்கும் நீ கொடுத்த ரியாக்ஷன்ஸ் இருக்கே... அதுதான் அந்தப் படத்தோட மிகப்பெரிய பலம்.
பத்மினி: (நாட்டியப் பேரொளிக்கே உரிய துடிப்புடன் கைகளை அசைத்து குறுக்கிடுகிறார்) சாவித்திரி, நீ அழுது பாசம் காட்டுனே.... ஆனா 'தில்லானா மோகனாம்பாள்' படத்துல எனக்கும் அவருக்கும் நடுவுல நடந்ததே தனி யுத்தம்! டைரக்டர் ஏ.பி.நாகராஜன் சார் என்கிட்ட வந்து, "பத்மினி, சிவாஜி நாதஸ்வரம் வாசிக்கும்போது நீ சளைக்காம டான்ஸ் ஆடணும், ஈகோ காட்டணும்"னு சொன்னார். அந்த 'நலந்தானா பாட்டுல, நீங்க நாதஸ்வரத்தை வச்சுக்கிட்டே கண்ணாலயே எனக்கு சவால் விடுவீங்களே !அந்தச் சிம்மக்குரலோட பார்வைக்கு முன்னாடி நின்னு ஆடுறது சாதாரண விஷயம் இல்ல. ஆனா, அந்த ஆரோக்கியமான போட்டிதான் அந்தப் படத்தை காவியமாக்குச்சு.
சிவாஜி கணேசன்: (சத்தமாக, மனமார சிரித்துக்கொண்டு) அட போம்மா பத்மினி! நீ ஆடும்போது உன்னையே அறியாம உன் கால்ல இருக்குற சலங்கை பேசும்மா. 'மோகனா' கேரக்டருக்கு உன்னைத் தவிர இந்த உலகத்துல யாராலயும் உயிர் குடுக்க முடியாது. நாதஸ்வர கலைஞனா நான் நடிச்சதுக்கு நீ ஆடுன ஆட்டம் தான் முழு பெருமையையும் சேர்த்துச்சு. அது சரி, நம்ம சரோஜா ஏன் இன்னைக்கு இவ்வளவு அமைதியா இருக்கா? நம்ம 'பாகப்பிரிவினை' நினைவுகள் ஏதும் வரலையா?
சரோஜாதேவி: (தனக்கே உரிய அந்த மழலை கலந்த கொஞ்சல் குரலில், முகத்தை சுருக்கி) ஐயோ அண்ணே, நான் பத்மினி அக்காவோட டான்ஸையும், சாவித்திரி அக்காவோட நடிப்பையும் நினைச்சு வியந்துட்டு இருக்கேன்! 'பாகப்பிரிவினை' படத்துல அந்த "தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்" பாட்டுல நீங்க அந்த கையை மடிச்சு வச்சுட்டு பக்கவாத நோயாளி மாதிரி நடிச்சப்போ, தியேட்டர்ல மக்கள் நிஜமாவே உங்களுக்கு ஏதோ ஆகிடுச்சுன்னு அழுதுட்டாங்க. உங்க கூட நடிக்கும்போது எனக்கு டயலாக் பேசவே பயமா இருக்கும். ஏன்னா நீங்க ஒரே டேக்ல பேசி ஓகே வாங்கிடுவீங்க. நான் தப்பு பண்ணா திட்டுவீங்களோனு பயந்தப்போ, நீங்கதான் "சரோஜா, பயப்படாதே... கேமரா முன்னாடி நீ எனக்கு ஜோடி, தைரியமா நடி" அப்படின்னு சொல்லி எனக்கு டயலாக் சொல்லிக் கொடுத்தீங்க. உங்களோட நடிச்ச அந்த 'பாலும் பழமும்' பட நாட்கள் என் வாழ்க்கையோட பொன்னான நாட்கள் அண்ணே.
கே.ஆர்.விஜயா: (தன் பிரசித்தி பெற்ற முகமெல்லாம் நிறையும் புன்னகையோடு பவ்யமாக) நீங்க எல்லாம் ஜோடியா அவருக்கு நடிச்ச பின்னாலேதான் எனக்கு அவர் கூட நடிக்கறதுக்கு வாய்ப்பு வந்துச்சு.முதல் படத்துல கூட அவருக்கு ஜோடியா நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைக்கல.
சரஸ்வதி சபதம் படத்தில தெய்வம் இருப்பது எங்கே பாட்டுக்காக
அவரோட அந்த நடிப்பை பாத்து
அப்படியே அசந்து போயிட்டேன்.
அதுக்கு பின்னாடி செல்வம் படத்துல தான் எனக்கு அவருக்கு ஜோடியா நடிக்க வாய்ப்பு கிடைச்சது.
அவர் கூட ஜோடியாக நடிக்கற வாய்ப்பு வந்தத நினைச்சு ஒரு பக்கம் சந்தோஷமா இருந்தாலும் இன்னொரு பக்கம் இவர் கூட எப்படி நான் ஜோடியா நடிக்க போறேன் அப்படிங்கற பயமும் இருந்தது .
சூட்டிங்கில அவர் என்னை தைரியப்படுத்தி நடிக்க வைச்சத என்னால மறக்கவே முடியுமா ?
ஷாட் முடிஞ்சதும் , "நல்லா நடிச்சம்மா... உன் புன்னகை ரொம்ப அழகா இருக்கு"னு பாராட்டினீங்க. பின்னாடி எனக்கு 'புன்னகை அரசி'னு
பட்டம் கிடைச்சப்போ, என்னை வாழ்த்தின பெரிய மனசு உங்களுடையது தானே..
சிவாஜி கணேசன்: (அனைவரையும் பெருமிதத்தோடும், பாசத்தோடும் பார்த்து, கண்களை சுருக்கி) நீங்க நாலு பேரும் மாறி மாறி என்னை மட்டுமே புகழ்ந்து பேசுறீங்க. ஆனா ஒன்னு தெரியுமா... நான் எவ்வளவுதான் நடிப்புத் திலகம், சிம்மக்குரலோன்னு பேர் வாங்கினாலும், நீங்க நாலு பேரும் உங்க கண்ணாலயும், புன்னகையாலயும், அசாத்திய நடிப்பாலயும் தமிழ் சினிமாவோட பொற்காலத்தை செதுக்கிய சிற்பங்கள்மா. நீங்க எனக்கு இணையா நடிச்சு, நல்ல பேரும் கிடைச்சதுக்கு உங்களோட தனித்திறமைதான் காரணம்
உங்களோட நடிச்ச அந்த 60, 70-கள் காலம் தான் என் திரை வாழ்க்கையில பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய காலம்!
சாவித்திரி, பத்மினி, சரோஜாதேவி, கே.ஆர்.விஜயா: (அனைவரும் ஒருசேர புன்னகையோடு) ரொம்ப நன்றி அண்ணே! அந்தப் பொற்காலம் எப்பவுமே மக்கள் மனசுல அழியாது!
(அனைவரும் காபி கப்பை உயர்த்தி மகிழ்ச்சியோடு 'சியர்ஸ்' சொல்ல,
அந்த உரையாடல் நிறைவானது.
செந்தில்வேல் சிவராஜ்
9087620800
கருத்துகள்
கருத்துரையிடுக