1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

சிவாஜியின் செல்வாக்கு

​சினிமாவுல ஒரு நடிகன் நாலு பேருக்குத் தெரிஞ்சிருக்கிறது பெரிய விஷயமே இல்லை. ஆனா, ஒரு மனுஷன் நினைச்சா... ஹாலிவுட்ல இருந்து ஆரம்பிச்சு, ஹரித்வார் வரைக்கும், ஜனாதிபதி மாளிகையில இருந்து சாதாரண ரசிகனோட திண்ணை வரைக்கும் ஒரு சாம்ராஜ்யத்தையே கட்ட முடியும்னு நீங்க நம்புவீங்களா?

​நம்ம ஊர்ல 'சிவாஜி' அப்படின்னு சொன்னாலே, அந்தப் பேருக்குப் பின்னாடி ஒரு பிரம்மாண்டமான வரலாறு இருக்கு. அவர் வெறும் கேமரா முன்னாடி நடிச்சுட்டுப் போன நடிகர் மட்டும் இல்ல... அவர் ஒரு 'குளோபல் கனெக்டர்'!
​அமெரிக்க அதிபர் ஜான் கென்னடி, இவருக்கு கௌரவம் பண்றார்... எகிப்து அதிபர் நாசர், இந்தியாவுக்கு வந்தப்போ இவரோட தனிப்பட்ட விருந்தை ஏத்துக்கிறார்... இங்கிலாந்து ராணி எலிசபெத்தே இவரோட நடிப்புக்குச் சலாம் போடுறாங்க!

​அரசியல்னு எடுத்துக்கிட்டா நேரு இந்திரா வாஜ்பாய் விபிசிங் இன்னும் பல  ஆளுமைகளோட நட்பு... விளையாட்டுன்னு பார்த்தா கபில்தேவ்ல இருந்து இன்னைக்கு இருக்கிற சச்சின் வரைக்கும் 'சிவாஜி சார்'னா ஒரு தனி மரியாதை! தொழில்துறையில அம்பானி, பிர்லா... ஆன்மீகத்துல காஞ்சி பெரியவர், வாரியார் சுவாமிகள்...
​ஒரே ஒரு மனுஷனால எப்படி அத்தனைத் துறையிலயும் இவ்வளவு பெரிய ஜாம்பவான்களோட நெருங்கிய நட்புல இருக்க முடிஞ்சது? 'நடிகர் திலகம்' அப்படிங்கிற அந்த ஒற்றை மனிதரைச் சுத்திப் படர்ந்திருந்த அந்த இமாலய நட்பு வட்டத்தைப் பத்தி   இதுலே பாக்கலாம்.

இன்னைக்கு நம்ம சினிமாவுல ஒரு நடிகர் 100 கோடி சம்பளம் வாங்குறதோ, இல்ல நிறைய ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வெச்சிருக்கிறதோ ,ஒரு சினிமா 500 கோடி வசூல் ஆயிரம் கோடி வசூல் பண்றதோ  பெரிய விஷயமா இருக்கலாம். ஆனா, ஒரு வசதியும் இல்லாத அந்த காலத்துல, தன் நடிப்பாலயே உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்க வச்ச ஒருத்தர் இருந்தார்னா அது நம்ம 'சிம்மக்குரலோன்' சிவாஜி கணேசன் மட்டும்தான். 

​"முதல்ல ஹாலிவுட்ல இருந்தே ஆரம்பிப்போம். உலகப்புகழ் பெற்ற 'பென்ஹர்' (Ben-Hur) படம் பார்த்திருப்பீங்க. அதுல நடிச்ச சார்ல்ஸ் ஹெஸ்டன் சிவாஜி மேல எவ்வளவு மரியாதை வச்சிருந்தார்னா, சிவாஜி அமெரிக்கா போனப்போ அவருக்குப் பெரிய டைமண்ட் லஞ்ச் விருந்து கொடுத்தார். 'மார்லன் பிராண்டோ கூட சிவாஜிய பார்த்து வியந்து போயிருக்கார். ஒரு இந்திய நடிகனை ஹாலிவுட் கொண்டாடுனது அப்போ ஒரு பெரிய சரித்திரம்!"
​"அமெரிக்க அதிபர் ஜான் எப். கென்னடி, சிவாஜியை அமெரிக்காவுக்கு அழைச்சார். அங்க ஒரு கௌரவ பிரஜையா அவரை அங்கீகரிச்சாங்க. அதேபோல, எகிப்து அதிபர்  நாசர் இந்தியா வந்தப்போ, மத்த தலைவர்களை விட சிவாஜிகிட்ட அதிக நேரம் செலவு பண்ணார். 

ஒரு நடிகருக்காகத் தன் அரண்மனை கதவையே திறந்து வச்ச வாரணாசி மகாராஜாவைப் பத்தி உங்களுக்குத் தெரியுமா? சிவாஜி காசிக்கு போனப்போ, 'மன்னர் குடும்பம் தங்குற இடத்துல நீங்க தங்கணும்'னு சொல்லி வாரணாசி மகாராஜா உபசரிச்சார். இதுதான் சிவாஜிக்கு இருந்த 'ராயல்' மரியாதை!"
​"வட இந்தியாவுல அமிதாப் பச்சன் இன்னைக்கும் சிவாஜியைப் பத்தி பேசும்போது 'The Master'னு தான் சொல்லுவார். திலீப் குமார் இவரோட நெருங்கிய நண்பர். ராஜ்கபூர் குடும்பமே சிவாஜியைத் தங்களோட ஒருத்தரா தான் பார்த்தாங்க. தென்னிந்தியாவுல சொல்லவே வேண்டாம்... என்.டி.ஆர் (NTR) ஆகட்டும், ஏ.என்.ஆர் (ANR) ஆகட்டும், இவங்க எல்லாருமே ஒரு அண்ணன் தம்பியா தான் பழகினாங்க. மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் இன்னைக்கும் சிவாஜி சாரோட போட்டோவை தான் தன் வீட்ல வச்சிருக்கார். ஏன்னா, அவர் வெறும் நடிகர் இல்ல, எல்லாருக்கும் ஒரு பாடம்!"
​"ஆன்மீகத்துல சிவாஜி ஒரு பெரிய பக்தர். காஞ்சி பரமாச்சாரியார் முன்னாடி சிவாஜி போய் நின்னப்போ, 'யானை கொடுத்த கணேசனா?'ன்னு தான் பெரியவா கேட்டாராம். ஏன்னா, கோயில் விசேஷங்களுக்கு யானை தானம் கொடுக்கிறதுல சிவாஜிக்கு நிகர் யாருமில்லை. வாரியார் சுவாமிகள் மேடையில பேசும்போது, 'சிவாஜி நடிச்சா அதுல ஒரு தெய்வீகம் இருக்கும்'னு பலமுறை சொல்லியிருக்கார். புட்டபர்த்தி சாய்பாபாவுல இருந்து பங்காரு அடிகளார் வரைக்கும் எல்லாருக்கும் சிவாஜியோட அந்த 'பணிவு' ரொம்பப் பிடிக்கும்."
​"கிரிக்கெட்ல கபில்தேவ்லே இருந்து பட்டோடி நவாப் வரைக்கும்  சிவாஜி மேலே மரியாதை வெச்சிருந்தவங்கதான்.

தொழில்துறையில திருபாய் அம்பானி, பிர்லான்னு இந்தியாவோட டாப் லெவல் விஐபி-க்கள் கூட சிவாஜியோட நட்புல இருந்தாங்க. 
​"மைசூர் மகாராஜா ஜெயசாம ராஜ உடையார் ஒரு தீவிர சிவாஜி ரசிகர். ஒருமுறை 'கர்ணன்' பட ஷூட்டிங் மைசூர்ல நடக்குது. அப்போ மகாராஜா ஒரு வேண்டுகோள் வச்சார். 'சிவாஜி அந்த கர்ணன் காஸ்டியூம்ல, அந்த நகைகளோடயே வந்து என்னைச் சந்திக்கணும்'னு சொன்னார். சிவாஜியும் அதே கர்ணன் கெட்டப்ல போக, ஒரு ராஜாவே இன்னொரு ராஜாவை (திரை உலக ராஜாவை) வரவேற்கிற மாதிரி அந்த சந்திப்பு அமைஞ்சது. இதெல்லாம் இப்ப நினைச்சாலும் சிலிர்க்க வைக்குதுல?"

 நம்ம நடிகர் திலகம் சிவாஜி கணேசனைப் பத்தி உலகமே பேசுதுன்னு நமக்குத் தெரியும். ஆனா, நம்ம தமிழ்நாட்டுல அவருக்கு இருந்த செல்வாக்கு இருக்கே... அது தனி ஒரு சாம்ராஜ்யம்! தமிழ்நாட்டுல ஒரு பிரபலமான மனுஷன் இருக்கார்னா, அவருக்கு சிவாஜியைத் தெரியாம இருக்கவே முடியாது. முதலமைச்சர்கள்ல இருந்து சாதாரண ரசிகன் வரைக்கும் அந்த நட்பு வட்டம் எவ்வளவு பெருசு தெரியுமா ?

​"தமிழ்நாடு அரசியலை எடுத்துக்கிட்டா, அப்போ இருந்த எல்லா முக்கிய தலைவர்களுமே சிவாஜியோட நட்பு வட்டத்தில் இருந்தவங்கதான். 

​"அந்தக் காலத்துல தமிழ்நாட்டுல இருந்த எக்கச்சக்கமான ஜமீன்தார்கள் சிவாஜிக்கு நெருங்கிய நண்பர்களா இருந்தாங்க. பாளையங்கோட்டை ஜமீன், எட்டயபுரம் ஜமீன் ,சமத்தூர் ,திருநெல்வேலி
ஜமீன், இப்படி எந்த ஊர் ஜமீன்தாரைப் பார்த்தாலும் சிவாஜி வீட்டுல ஒரு விசேஷம்னா முன்னாடி வந்து நிப்பாங்க. அதேபோல சிவாஜியும் அவங்க வீட்டு விசேஷங்களுக்குத் தப்பாமப் போயிருவார். அவங்ககிட்ட இருந்த அந்த ராஜ கம்பீரம் சிவாஜிகிட்டயும் இருந்ததுனாலயோ என்னவோ, இந்த ஜமீன்தார்களுக்கு சிவாஜியை ரொம்பவே பிடிச்சுப் போச்சு. இவ்வளவு ஏன், ஒரு படப்பிடிப்புக்காக எந்த ஊருக்குப் போனாலும், அந்த ஊரோட பெரிய மனுஷங்க இவரை வரவேற்கிறதுக்காகவே தவம் கிடப்பாங்க!"
​"சினிமாத் துறைக்கும் தொழில்துறைக்கும் எப்பவும் ஒரு தூரம் இருக்கும். ஆனா சிவாஜி விஷயத்துல அது கிடையாது. தமிழ்நாட்டோட அடையாளமா இருக்கிற டிவிஎஸ் (TVS) குடும்பத்தோட சிவாஜிக்கு ரொம்ப காலத்து நட்பு உண்டு. குறிப்பா டிவிஎஸ் கிருஷ்ணா அவர்கள் சிவாஜியோட நெருங்கிய நண்பர். அதேபோல ஏவிஎம் (AVM) குடும்பம், ஜெமினி வாசன் அவர்கள்னு பெரிய பெரிய சினிமாத் தயாரிப்பு நிறுவனங்களோட அதிபர்கள் மட்டும் இல்லாம, டெக்ஸ்டைல் மற்றும் சுகர் மில் அதிபர்கள்னு எல்லாரும் சிவாஜியோட 'அன்பு'க்குக் கட்டுப்பட்டவங்க. இவங்க எல்லாரும் ஒண்ணா உட்கார்ந்து பேச ஆரம்பிச்சா மணி கணக்குல போகும்!"
​"ஆன்மீகத் துறையில தமிழ்நாட்டோட அடையாளமா இருந்த மகான்கள் எல்லாரும் சிவாஜியை 'தன் பிள்ளை' போலப் பார்த்தாங்க. காஞ்சி பரமாச்சாரியார் அவரோட கொடைத்தன்மையைப் பாராட்டிப் பேசினது ஒரு பெரிய வரலாறு. அதேபோல தவத்திரு கிருபானந்த வாரியார் சுவாமிகள், 'நடிப்புக்கு ஒரு சிவாஜி'னு மேடை மேடையாப் புகழ்வார். மதுரை ஆதீனம், குன்றக்குடி அடிகளார், மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார்னு ஆன்மீகத் தலைவர்கள் அத்தனை பேரும் சிவாஜி மேல ஒரு தனி அன்பு வச்சிருந்தாங்க. சிவாஜி எப்போ கோயிலுக்குப் போனாலும், அந்த ஊர் கோயில் நிர்வாகிகள் அவருக்கு ஒரு தனி மரியாதையை (முதல் மரியாதை) கொடுப்பாங்க. ஏன்னா அவர் அந்த அளவுக்குக் கோயில்களுக்கு யானை தானம் கொடுக்கிறதுல இருந்து திருப்பணிகள் செய்யுறது வரைக்கும் அள்ளி அள்ளிக் கொடுத்த வள்ளல்!"
​"விளையாட்டுத் துறையில நம்ம தமிழ்நாட்டோட அடையாளமா இருந்த டென்னிஸ் வீரர்கள் ராமநாதன் கிருஷ்ணன், விஜய் அமிர்தராஜ், ஆனந்த் அமிர்தராஜ் மற்றும் ரமேஷ் கிருஷ்ணன் இவங்க எல்லாரும் சிவாஜியோட 
நட்பு வட்டத்துலே வர்றவங்க. 

 இசைத்துறையை எடுத்துக்கிட்டா கே.பி. சுந்தராம்பாள் அவங்களை சிவாஜி 'அம்மா'னு தான் கூப்பிடுவார். 
நாதஸ்வரம் ராஜரத்தினம் பிள்ளை அவர்களும் சிவாஜி நடிப்பை ரசிச்சவர்தான்.சிவாஜி இவர் மேல ரொம்ப மரியாதை வைத்திருந்தார்.

​தமிழ்நாட்டுல எந்த ஊரை எடுத்துக்கிட்டாலும் சரி... நெல்லை, மதுரை, கோவை, திருச்சி, சென்னைன்னு எந்த ஊர்ல பார்த்தாலும் அந்த ஊரோட 'பெரிய மனுஷன்' சிவாஜியோட நட்பு வட்டத்தில் இருப்பார். ஆனா அதையும் தாண்டி, ஒரு சாதாரண ரசிகன் தன் வீட்டு கல்யாணத்துக்குப் பத்திரிகை வச்சா, அந்த ஊருக்குப் போய்க் கலந்துக்குற அந்த குணம் இருக்கே... அதுதான் அவரை எல்லாரோட மனசுலயும் ஒரு 'திலகமா' உட்கார வச்சிருக்கு."
 ஒரு மனுஷனுக்கு எப்படி இவ்வளவு தூரம் எல்லாத் துறையிலயும் செல்வாக்கு இருக்க முடியும்னு ஆச்சரியமா இருக்குதில்லே? 
செந்தில்வேல் சிவராஜ் 9087620800









கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்