எப்பவாச்சும் பழைய பாடல்களைக் கேட்கும்போது, நீங்க அந்தப் பழைய காலத்துக்குப் போயிருக்கீங்களா?அப்போதைய தியேட்டர்களின் வாசம், அந்தப் பாடல்களின் ஆழம்... இப்படி பல மனசுக்குள்ளே தூங்கிட்டு இருக்கற அந்த உணர்வுகளை தட்டி எழுப்பற ஒரு விஷயத்தை தான் இப்போ பேசப் போறோம்.
அப்படி இதுலே நாம பேசப்போற விஷயம் தியாகம் படத்தை பத்திதான்.
இந்த 'தியாகம்' படம் நம்ம மனசை எவ்வளவு அழகா வருடுன அந்த நினைவுகளை கொஞ்சம் நெனச்சு பார்போமா?
சிவாஜி நடிப்பு, இளையராஜாவோட இசை, கே.பாலாஜியோட மேஜிக் - இது எல்லாத்தையும் பத்தி ஒரு ரசனை கலந்த ஒரு பயணத்துக்குப் போகலாம். என் கூடவே வாங்க!"
அது தமிழ் சினிமாவின் ஒரு பொற்காலம்னு சொல்லலாம்.. 1978... அந்த வருஷம் பொறந்தப்பவே ஒருவிதமான எதிர்பார்ப்பு. ஜனவரி 26, 1978. அன்னைக்குத்தான் 'அந்தமான் காதலி' ரிலீஸ் ஆகுது. அந்தப் படம் பத்தி பேசவே வேண்டாம், பாட்டெல்லாம் செம ஹிட்டு. ஆனா அதே தேதியில, கே.பாலாஜி சார் தன்னோட அடுத்த படமான 'தியாகம்' படத்தை ரிலீஸ் பண்ணணும்னு பிளான் பண்ணியிருந்தார். ஒரு தயாரிப்பாளரா அந்த தேதியை அவர் ரொம்ப நம்பினார். ஆனா, அந்த முறை சின்னதா ஒரு மாற்றம் நடந்துடுச்சு. பாலாஜிக்கு பதிலா முக்தா தன்னோட அந்தமான் காதலியை வெளியிட ,பாலாஜி தியாகம் படத்தை ரெண்டு மாசம் கழிச்சு வெளியிட்டார்.
பாலாஜி படம் எப்ப ரிலீசானா என்ன? அது வழக்கம் போலவே செய்ய வேண்டியதை செஞ்சிரும்.இந்த தடவை வழக்கத்தை விடவே கொண்டாட வெச்சிருச்சு.
கே.பாலாஜி சார்னாலே நமக்கு முதல்ல ஞாபகம் வர்றது ‘ரீமேக் கிங்’ அப்படிங்கிற பேருதான். நடிகர்திலகம் சிவாஜி கணேசன் சாரை வெச்சு எடுத்த 'தியாகம்' படமும் ஒரு ரீமேக் படம்தான். 'அந்தமான் காதலி' படத்துக்கு விஸ்வநாதன் சார் இசை அமைச்சிருந்தார். பாட்டுகள் எல்லாம் பெரிய ரீச் ஆச்சு.இருந்தாலும், பாலாஜி சார் 'தியாகம்' படத்துக்கு இளையராஜாவை இசை அமைக்க வெச்சார். அதுக்கு முன்னாடி 'தீபம்' படத்துல இளையராஜா மியூசிக்ல காட்டிய அந்த எனர்ஜி, பாலாஜி சாரை அந்தப் படத்துக்கும் இளையராஜாவையே புக் பண்ண வச்சது. இளையராஜாவும் சும்மா விடுவாரா? தன்னோட பேரை நிலைநாட்ட, இந்தப் படத்துல மியூசிக்ல பட்டைய கிளப்பியிருப்பார்.
பாலாஜி சாருக்கு கேரளாவைக் கண்டாலே பிடிக்கும். 'தீபம்' படத்துல கேரளா அழகை எப்படி காட்டினாரோ, அதே போல இந்த 'தியாகம்' படத்துலயும் கேரளாவையே ஒரு கேரக்டரா மாத்திருப்பார். அந்த மீனவ கிராமங்கள், படகுத்துறைகள், ரம்மியமான இயற்கை காட்சிகள்... இதையெல்லாம் கேமராவுல அவ்வளவு அழகா, ஒரு ஓவியம் மாதிரி படம் புடிச்சிருப்பாங்க. கதைக்களம் புதுசு, அதுக்கு ஏத்த மாதிரி இசையும் புதுசா இருந்ததால, இளையராஜா அஞ்சு பாட்டுக்கும் அஞ்சு விதமான ட்ராக்ல மியூசிக் போட்டு மிரட்டியிருப்பார்.
முதல்ல, 'தேன் மல்லிப்பூவே'... இது ஒரு அருமையான காதல் பாட்டு. டி.எம்.எஸ் சோட அந்த கம்பீரமான குரல்ல, "முத்தாரம் மார் மீது தவழ்கின்றது எனக்கதில் கொஞ்சம் இடமும் கொடு"னு கேட்கும்போது, மனசு அப்படியே லேசா உருகும். அந்தப் பாட்டுல புல் தரைலே உருண்டு வர்ற வர்ற ஆரஞ்சு சாத்துக்குடி பழங்கள் காட்சிகள் எல்லாம் பாட்டுக்கு ஒரு தனி அழகை கொடுத்துச்சு .சின்ன வயசுல இந்தப் படத்தைப் பார்க்கும்போது, "அடடா, இவ்வளவு பழங்களை வேஸ்ட் பண்றாங்களே!"னு ஒரு ஆதங்கம் வரும். அந்தப் பழங்களை வெச்சு டிசைன் பண்ணி அந்த மலைப்பிரதேச காட்சிகள்ல காட்டின விதம் இருக்கே... இன்னைக்கும் அதை ரசிக்கலாம். இளையராஜாவோட ஆரம்ப கால இசைங்கிறதால, இது விஸ்வநாதன் போட்ட மியூசிக்னு கூட சில சமயம் தப்பா நினைச்சதுண்டு.
அப்புறம், 'வசந்த கால கோலங்கள்'... இது மனசை அள்ளுற ஒரு மெலடி. லட்சுமி அந்தத் துணிகளை விலக்குற அந்த கேப்ல, தூரத்துல கடற்கரை மணல்ல சிவாஜி நின்னுட்டு இருப்பார். அந்தப் பாடல் வரிகள்... "தேரில் ஏறும் முன்னமே தேவன் உள்ளம் தெரிந்தது... கலைந்திடும் கனவுகள், கண்ணீர் சிந்தும் நினைவுகள்..."னு கண்ணதாசன் வரிகள்ல வர்ற அந்த சோகம், சுகமானது. கேரளா லொக்கேஷன்ல ஒரு கவிதை மாதிரி அந்தப் பாட்டு நகரும்.
அடுத்து, சிவாஜி நடிப்புக்கும், அந்த யதார்த்தத்துக்கும் ஒரு சாம்பிள் பார்க்கணுமா? அதுக்கு 'வருக எங்கள் தெய்வங்களே' பாட்டுதான். ஜமீன் சொத்தெல்லாம் இழந்து, ஒரு மீனவனா வாழ்ற சிவாஜி, மூணு நாள் விடாம சைக்கிள் ஓட்டி சாதனை செய்யணும். எந்த வித பில்டப்பும் இல்லாம, சினிமாத்தனமான ஹீரோயிசம் இல்லாம, ஒரு மனுஷன் தன்னோட லட்சியத்துக்காகப் போராடுறதை அவ்வளவு இயல்பா அந்தப் பாட்டுல காட்டியிருப்பாங்க. சைக்கிள் சவாரியிலேயே முழுப் பாட்டும் போகும். அந்த காட்சிகளைப் பார்க்கும்போது, நாமளும் கூடவே பயணம் செய்ற ஃபீல் கிடைக்கும்.
மறக்க முடியாத இன்னொரு பாட்டு 'உலகம் வெறும் இருட்டு'. இதுல சிவாஜி சார் குடிச்ச மாதிரி நடிச்சிருப்பார். விகேஆர் கோஷ்டியை வெச்சு கிண்டல் பண்ணுவாரு. அந்தப் பாட்டுல இளையராஜாவோட பின்னணி இசை இருக்கே... வேற லெவல்! கண்ணதாசன் சார் பொதுவா அர்த்தமுள்ள வரிகளை எழுதுவாரு, ஆனா இந்த பாட்டுல ரொம்ப பாமரத்தனமான வார்த்தைகளை வெச்சு ஒரு யதார்த்தத்தை உருவாக்கியிருப்பார்.
கடைசியா, 'நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு'. இது வெறும் பாட்டு இல்ல, ஒரு தத்துவமே! "தவறுக்கு துணிந்த மனிதன் அழுவதில்லையே... தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லையே" - இந்த வரிகள்ல கவிஞர் கண்ணதாசன் வட்டியும் முதலுமா சேர்த்து அசத்தியிருப்பார். இந்த பாட்டுல சிவாஜி நடிப்பைச் சொல்ல வார்த்தைகளே இல்லை. கடலோரத்துல அந்தப் போட்டுல நின்னுட்டு அவர் கொடுக்கற ரியாக்ஷன்ஸ்... அந்த கேமரா கோணங்கள், அந்த நீல நிற ஆகாயம், தண்ணியை கிழிச்சிட்டுப் போற படகு... "நதி வெள்ளம் காய்ந்து விட்டால் நதி செய்த குற்றமன்று"னு அந்த வரிகளுக்கு அவர் கொடுக்குற முகபாவனை, இன்னைக்கும் எல்லாரோட பேவரிட் லிஸ்ட்லயும் இருக்கு. அந்தப் பாட்டுல குளோசப் ஷாட்கள்ல சிவாஜி சார் காட்டுற அந்த அழகு, ஒரு தனி ஸ்டைல்!
இப்படி அஞ்சு பாட்டையும் அஞ்சு விதமா, இளையராஜாவோட இசையில ஒரு காவியமா மாத்திருப்பார். கோயில் திருவிழா காட்சிகள்ல வர்ற பேக்ரவுண்ட் மியூசிக்ல கூட அவர் மிரட்டியிருப்பார்.
வித விதமா ஹோலி பவுடர்களை தூவி விட்டுட்டு அதுக்கு இடையில் சிவாஜியும் கோஷ்டியும் அதகளம் பண்ணி இருப்பாங்க. தேங்காயை வெறுப்பத்ற மாதிரி சிவாஜி பேசற டயலாக்குகளும் அதிரடியாத்தான் இருக்கும்.தியேட்டரே ஒரே விசில் கொண்டாட்டத்துலே அலப்பறை பண்ண வெச்சிரும்.
நடிகர்திலகம் கே.பாலாஜி, இளையராஜா, கண்ணதாசன், - இந்த நாலு பேரும் ஒண்ணு சேர்ந்து ஒரு கமர்சியலா அதே சமயம் அதை கவிதையா காட்டுன படம் தான் இந்த தியாகம்.
'தியாகம்' படம் இன்னைக்கும் ஒரு க்ளாசிக். நீங்க இந்தப் படத்தைப் பார்த்துட்டு, அந்தப் பாடல்களைக் கேட்கும்போது, மேல நான் சொன்ன அந்த விஷயங்கள் எல்லாம் உங்களுக்கும் ஞாபகம் வரும்னு நினைக்கிறேன்.
இன்னைக்கு வர்ற பல படங்கள்லே சில படங்கள்லே கதை இருக்கலாம் .அதுலயும் இதயம் இருக்குதாங்கறது கேள்விக்குறி .
ஆனா இன்னைக்கும் இதயத்தில் இருந்து பேச வைக்குது பாருங்க, தியாகம் மாதிரியான படங்கள்.
நடிகர்திலகத்தோட அந்த நடிப்பு, இளையராஜாவோட அந்த ஆரம்ப காலத்து இசை ஞானம், கண்ணதாசனோட வரிகள்னு... இது வெறும் கூட்டணி இல்லை, இது ஒரு 'காலப்பெட்டகம்'. கே.பாலாஜி சார் காட்டிய அந்த எதார்த்தமான கேரளா, இன்னைக்கு வரைக்கும் நம்ம கண்ணுக்குள்ளேயே நிக்குதுன்னா, அதுக்கு காரணம் அந்தப் படத்தின் மேக்கிங்ல இருந்த நேர்த்திதான்.
தொழில்நுட்பம் வளரலாம், கலரிங் மாறலாம், ஆனா அந்தப் பழைய படங்களோட ஆன்மா... அது வேற ரகம். அந்த ரசனை இன்னும் மனசை விட்டுப் போயிடலை. இன்னொரு தடவை அந்தப் படத்தை எடுத்துப் பாருங்க... அந்தப் படத்துல வர்ற நுணுக்கங்கள், சிவாஜி சாரோட முகபாவனைகள், இளையராஜாவோட பின்னணி இசை... இதெல்லாம் இப்போ பார்க்கும்போது இன்னும் ஆழமா மனசுல பதியும்.
செந்தில்வேல் சிவராஜ்
9087620800
கருத்துகள்
கருத்துரையிடுக