1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

300 பட சாதனைகள்

"நடிகர் திலகம்" - இந்த இரண்டு வார்த்தைகளுக்குள் அடங்காத ஆளுமையா? இல்லை, அந்த இரண்டு வார்த்தைகளே ஒரு வரலாற்றின் அடையாளம்!
​ எத்தனை எத்தனை வேடங்கள்!

அவர் தொட்டதெல்லாம் பொன்னானது, அவர் நடித்ததெல்லாம் காவியமானது. சண்டைக் காட்சிகள் இல்லாமலேயே வரலாறுகளைப் படைத்தவர், எண்களால் அளவிட முடியாத சாதனைகளுக்குச் சொந்தக்காரர்.
​நடிகர் திலகத்தின் இந்த அசுரத்தனமான மற்றும் ஆச்சரியமூட்டும் திரையுலகப் பயணத்தை, புள்ளிவிவரங்களோடும், சுவாரஸ்யமான தகவல்களோடு  இதில் பார்க்கலாம்.

நடிகர்திலகம் நடித்த 300 திரைப்படங்கள் ஓர் பார்வை.
இந்த 300 படங்களில்..
சரித்திர படங்கள் ஒரு பகுதி
புராண படங்கள் அது ஓர் அத்தியாயம்
சமூக படங்கள் நீண்ட தொகுதி
பாசத்தை மையமாக கொண்ட படங்கள்
பழிவாங்கும் படலங்கள்
பக்தி படங்கள் வரிசை என்று இன்னும் பல வரிசைகள் கொண்ட திரைப்படங்களின் ஆச்சர்யமூட்டும் தகவல்களை இப்போது பார்க்கலாம்.

முதலில் உண்மையான சரித்திர கதைகள் திரைப்படங்கள் ஆனவை :
வீரபாண்டிய கட்டபொம்மன் சித்தூர் ராணி பத்மினி 
கப்பலோட்டிய தமிழன் ராஜ ராஜ சோழன்
விஸ்வநாத நாயக்கர் தெலுங்கு
சந்திரகுப்த சாணக்யா தெலுங்கு 

புராண திரைப்படங்கள் வரிசையை எடுத்துக் கொண்டால் ,திருவிளையாடல் சரஸ்வதி சபதம் திருமால் பெருமை 
 கந்தன் கருணை முதலிய படங்கள் அடங்கும்.

கற்பனை சரித்திர திரைப்படங்களை எடுத்துக் கொண்டால்,
மனோவரா துளி விஷம்
தூக்குத்தூக்கி காவேரி நானே ராஜா வணங்காமுடி தங்கமலை ரகசியம் உத்தமபுத்திரன் சாரங்கதாரா தங்கப்பதுமை குறவஞ்சி மருதநாட்டு வீரன் ராஜபக்தி என்று ஒரு பெரிய பட்டியல் நீளும். 

காவிய திரைப்படங்களின் வரிசையில் அம்பிகாபதி சம்பூர்ண ராமாயணம் கர்ணன்முதலிய படங்களை சொல்லலாம். 

சிவாஜி நடித்த காமெடி திரைப்படங்களை பார்க்கலாம்
கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி கோடீஸ்வரன் சபாஷ் மீனா பலே பாண்டியா அறிவாளி ஊட்டி வரை உறவு அஞ்சல் பெட்டி 520 மூன்று தெய்வங்கள்

பா வரிசை சார்ந்த பா எழுத்து படங்களில் மட்டும் நடிகர் திலகம் 28 படங்களில் நடித்திருக்கிறார்.
பராசக்தி பணம் பாக்யவதி பதிபக்தி படிக்காத மேதை பாவை விளக்கு பாவ மன்னிப்பு பாசமலர் பாலும் பழமும் பார்த்தால் பசி தீரும் படித்தால் மட்டும் போதுமா பலே பாண்டியா பந்தபாசம் பார் மகளே பார் பச்சை விளக்கு பழனி பாதுகாப்பு பாபு பட்டிக்காடா பட்டணமா பாரத விலாஸ் பாட்டும் பரதமும் பட்டாக்காட்சி பைரவன் பரீட்சைக்கு நேரமாச்சு பந்தம் படிக்காத பண்ணையார் படிக்காதவன் பாரம்பரியம் படையப்பா 

ராஜா என்ற தலைப்பை மட்டும் வைத்து நடிகர் திலகம் 14 படங்களில் நடித்திருக்கிறார்.
அந்தப் படங்கள் நானே ராஜா,ராஜா ராணி, ராஜபக்தி, 
எங்க ஊர் ராஜா,ராஜா, ராஜராஜ சோழன் எங்கள் தங்க ராஜா ராஜபார்ட் ரங்கதுரை  ரோஜாவின் ராஜா தர்மராஜா
ராஜரிஷி ராஜ மரியாதை லாரி டிரைவர் ராஜாக்கண்ணு என் ஆச ராசாவே.

தொழிலாளர் தினமான மே ஒன்றாம் தேதி வெளியான சிவாஜி படம் காவல் தெய்வம்
வெளியான தேதி 1.5.69.
இந்த மே ஒன்றாம் தேதி நடிகர் திலகத்தின் திருமண நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

சிவாஜியின் பிறந்த தினமான அக்டோபர் ஒன்றில் வெளியான ஒரே ஒரு திரைப்படம் துணை வெளியான தேதி 1.10.82 

ஆங்கில வருட பிறப்பான ஜனவரி 1ஆம் தேதி வெளியான சிவாஜி ஒரே ஒரு திரைப்படம் அன்பளிப்பு வெளியான தேதி 1.1.69.

அநடிகர் திலகம் ஒரே வருடத்தில் தலா 10 படங்களை ஆறு முறை வெளியிட்டு சாதனை செய்துள்ளார் .
அந்த சாதனை விபரம்:
1954 ஆம் வருடம் 10 படங்கள் 1963 10 படங்கள் 1971 10 படங்கள் 1982 13 படங்கள் 1984 10 படங்கள் 1987 10 படங்கள் இப்படி ஆறு முறை ஒரே வருடத்தில் தலா 10 படங்களை வெளியிட்டு இருக்கிறார் .

சிவாஜ் அவர்கள் 20 படங்களில் மட்டும் போலீஸ் வேடத்தில் நடித்திருக்கிறார்.
அந்தப் படங்கள் நவராத்திரி ராஜா என் மகன் தீர்ப்பு விடுதலை தங்கப்பதக்கம் ரத்தபாசம் நீதியின் நிழல் திரிபுவுடன் தங்க சுரங்கம் வைர நெஞ்சம் ரிஷிமூலம் திருப்பம் தியாகி புதிய வானம் சங்கிலி ஸ்கூல் மாஸ்டர் வெள்ளை ரோஜா சட்டம் ஒரு சக்கரம் (தெலுங்கு) .

சிவாஜி கணேசன் டாக்டர் வேடத்தில் 9 படங்களில்  நடித்துள்ளார்.அந்த படங்கள்:
​பாலும் பழமும்
​நவராத்திரி
​நிறைகுடம்
​அண்ணன் ஒரு கோவில்
​டாக்டர் சிவா
மனிதரில் மாணிக்கம்
​நல்லதொரு குடும்பம்
​கீழ்வானம் சிவக்கும்
​தாம்பத்யம்

நடிகர் திலகம் வக்கீல் நீதிபதியாக நடித்த திரைப்படங்கள் :
அவள்யார் எதிரொலி கௌரவம் ஜஸ்டிஸ் கோபிநாத்
நீதிபதி சிம்ம சொப்பனம் ஜல்லிக்கட்டு.


சிவாஜி கணேசன் மாவட்ட ஆட்சியாளராக நடித்த திரைப்படம் அவன் ஒரு சரித்திரம்.
சிவாஜி பத்திரிக்கை நிருபராக நடித்த படம் முதல் குரல்.
சிவாஜி அரசியல்வாதியாக நடித்த படம் என் தமிழ் என் மக்கள்.

நடிகர் திலகம் சிவாஜியின் சொந்த வீடான அன்னை இல்லத்தில் இருபதுக்கும் மேற்பட்ட சிவாஜி படங்கள் எடுக்கப்பட்டுள்ளது. 
உதாரணத்துக்காக சில படங்களை பார்க்கலாம்.
முதன்முதலாக படம் பிடிக்கப்பட்ட படம் பாவை விளக்கு அதை எடுத்து பாசமலர் பந்தபாசம், பார் மகளே பார் கலாட்டா கல்யாணம் திருடன் கௌரவம் தங்கப்பதக்கம் அண்ணன் ஒரு கோவில் திரிசூலம் ரத்தபாசம் பட்டாக்கத்தி பைரவன் என்று இன்னும் பல படங்கள் உள்ளன .

சண்டைக் காட்சிகள் இல்லாமலேயே 40-க்கும் மேற்பட்ட 100 நாள் திரைப்படங்கள் கொடுத்து சாதனை செய்தவர் சிவாஜி மட்டுமே.

தமிழகத்தில் 60க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 50 நாட்களைக் கடந்த முதல் தமிழ் படம் பராசக்தி.

புராணப்படச் சாதனையை எடுத்துக் கொண்டால் என்றும் முதலிடத்தில் இருப்பது திருவிளையாடல் திரைப்படம் மட்டுமே இந்த திரைப்படம் மூன்று திரையரங்குகளில் வெள்ளி விழாவும் 13 திரையரங்குகளில் 100 நாட்களும் ஓடிய சாதனையை செய்துள்ளது. இந்த சாதனையை எந்த புராண படமும் இதுவரை  செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 

100க்கும் மேலான கருப்பு வெள்ளை திரைப்படங்கள் 100க்கும் மேலான கலர் படங்களில் கதாநாயகனாக நடித்த நடிகர் சிவாஜி ஒருவர்தான்.

புனர்ஜென்மம் படத்துக்காக சிவாஜிக்கு நாலு பின்னணி பாடகர்கள் பாடியிருக்கிறார்கள் தமிழ் சினிமாவில் ஒரு கதாநாயகனுக்கு நாலு பேர் பின்னணி பாடி இருப்பது இதுவே முதல் முறை.

தமிழ் சினிமாவில் ஒரு நடிகரின் அதிக படங்கள் 124 படங்கள் டப்பிங் செய்யப்பட்டது முதல் முதலாக சிவாஜி படங்களுக்கு மட்டும் தான் தெலுங்கு ஹிந்தி கன்னடம் மராத்தி வங்க மொழிகளில் இந்த படங்கள் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மட்டும் சிவாஜி கணேசன் நடித்த 90-க்கும் மேலான படங்கள் 100 நாட்களை தாண்டி ஓடி சாதனை செய்துள்ளன.இந்த சாதனையை வேறு எந்த நடிகரும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் சிவாஜி கணேசன் நடித்த நான்கு படங்கள் 200 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை செய்துள்ளது .இந்த சாதனையும் வேறு எந்த நடிகரும் செய்யவில்லை என்பது குறிப்படத்தக்கது. சிவாஜியின் அந்த  படங்கள் :
பராசக்தி வசந்த மாளிகை உத்தமன் பைலட் பிரேம்நாத்.

​"எண்ணிக்கையில் அடங்காத சாதனைகள், காலத்தைக் கடந்த நடிப்பு, பல தலைமுறைகளைக் கடந்த ஆளுமை - இவை அனைத்தும் சேர்ந்த கலவைதான் 'நடிகர் திலகம்'. ஒரு மனிதனால் ஒரு துறையை இத்தனை உயரத்தில் வைத்துப் பார்க்க முடியுமா என்பதற்கு, சிவாஜி கணேசனின் இந்தத் திரையுலகப் பயணமே ஆகச்சிறந்த சாட்சி!
​சினிமா உலகம் பல நடிகர்களை உருவாக்கியிருக்கலாம்; ஆனால், ஒரு நடிகனை வைத்துத் தன் இலக்கணத்தையே மாற்றிக்கொண்டது தமிழ் சினிமா. இவரது ஒவ்வொரு அசைவும் ஒரு பாடம்; ஒவ்வொரு வசனமும் ஒரு காவியம்; ஒவ்வொரு படமும் ஒரு வரலாறு.
​சாதனைகள் முறியடிக்கப்படுவதற்காகவே படைக்கப்படுகின்றன என்பார்கள். ஆனால், சிவாஜி படைத்த பல சாதனைகளை முறியடிக்க, அந்தச் சாதனைகளே பல காலம் கடந்தாலும் அதுவரை அவரது உச்சத்தை நெருங்க எந்த ஒரு நடிகனாலும் முடியாது.
​காலம் மாறலாம், திரையரங்குகள் மாறலாம், தொழில்நுட்பம் வளரலாம். ஆனால், நடிப்பின் அகராதியைத் திறந்து பார்த்தால், அங்கே 'நடிப்பு' என்ற சொல்லுக்குப் பக்கத்தில் எப்போதும் ஒரே ஒரு பெயர் மட்டுமே மின்னும்... அது - நடிகர் திலகம் சிவாஜி கணேசன்!"

செந்தில்வேல் சிவராஜ் 
9087620800


























கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்