1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

டென்ட் கொட்டகையில் ராஜா

அமைதியான அன்றைய கிராம வாழ்வு.
என் அன்றைய 1970 களின் இறுதி.
இரவுகள் விழிப்பதற்காக அல்ல.
இப்போது போல் அல்ல.
அந்த காலங்கள் நிம்மதியானவை.
காலை நேர விழிப்பு உற்சாகமாகவே விடியும்.

வீதி இறங்கி சென்றால்.
நண்பர் பட்டாளத்துடன் சிறகுகள் விரியும்.
திரைப்படங்கள் வாழ்வோடு ஓடியவை.

ஊரை சொல்லாவிட்டால் எப்படி? 
பொள்ளாச்சியை தொட்ட 
ஜமீன் ஊத்துக்குளி...

அந்த குட்டிச்சுவரை மறக்க முடியாது. காரை பெயர்ந்து செங்கல்களுடன்.
சினிமா போஸ்டர்களின்  தாங்கிகள்.
அன்று..
புதிய போஸ்டர்.
பழையதுதான்.
டென்ட் கொட்டகைக்கு புதியது.
ராஜா..
வயதுக்கேற்ற படம்தான்.

அடடே!இன்றைய மாலையும் ,முன்னிரவும் ராஜா கொடுக்கும் விருந்தா..
சந்தோசமே சந்தோசம்.
பள்ளி சென்றாலும் மனம் 4 மணிக்கு காத்திருந்தது.
4 க்கு வீட்டுக்கு வந்தாலும் 6மணிக்கு காத்திருந்தது.

படம் பார்க்க வேண்டும்.
காசு வேண்டும்.
கேட்டேன்.
எப்போதும் போலே 50 காசுகள்ள்ள்ள்.
25 டிக்கட்டுக்கு.
25 கடலையும் மற்ற எதுவுமே.

டென்ட் கொட்டகை ஆஜர்.
நானும் நண்பர்களும்.
இரண்டு தியேட்டர் கூட்டம்.
ஒன்றரை மக்கள் கொள்ளவை அடைத்து விட்டார்கள்.
தெரிந்தவர் வாங்கிக் கொடுத்தார் டிக்கட்டுகளை.

சிலைடு..ஆரம்பம்.
வணக்கம். நல்வரவு.
ரீல் சத்தம்.
மக்கள் சத்தம் .
தியேட்டர் அதிர்ந்தது.
பாலாஜி படமா?
விஸ்வநாதன் இசையா?
அதெல்லாம் யாருக்கு தெரியும் .
அப்போதெல்லாம்.
சிவாஜி படம். 
ராஜா சிவாஜி. 

படம் ஆரம்பம்.
போலீஸ் குடும்பத்தை காட்டினார்கள்.
சிறுவர்கள் இரண்டு பேர்
குத்துச்சண்டை போட்டார்கள்.
யாரோ ஒருவரை ஒருவர்  கத்தியால் குத்தினார்.
ரங்காராவ் என்று கத்தினார்கள்..
கொஞ்ச நேரம் போனது.

பின் அடுத்த ஒருகாட்சி வந்தது. ஜெயில் ..
சாதாரணமாக பார்த்தேன்.
சிகரெட் பற்ற வைப்பார் சிவாஜி.
ஆனால் சிகரெட்டுக்கு லைட்டர் நீட்டுவது வேறு ஒருவர்.
ஆர் எஸ் மனோகர்.

ராஜா..
அந்த ஸ்டைல்.
அந்த அழகு. 
அந்த கம்பீரம்.
அந்த வயதிலேயே அப்படி ஆட்கொண்டார்.
விசில்கள் பறந்தது.
கை தட்டல் அதிர்வுகள்.
சிங்கமே என்று யாரோ கத்தினார்.

ரீல்களால் ரயில் விரைந்தது.
ஸ்பீடு.
எக்ஸ்பிரஸ் போலே...
 
வரும் வழி தோறும் உந்தன் முகம் பார்த்தேன் ...
இன்னும் ரீங்காரிக்கிறது.
மனதில்..
அந்த டென்ட் கொட்டகையில் அன்று ..
அந்த பாடல் கொடுத்த அதிர்வு.
பரவசம்.
சிவாஜியை பார்க்கும் போதெல்லாம் அப்படி ஒரு துடிப்பு.
ஸ்டைல்களாக கொட்டியிருப்பார்.

அந்த வயதில் நினைவுகள் வந்ததுண்டு.
சிவாஜி மட்டும் எப்படி..
இப்படி..
ஒருவரை கூட இப்படி பார்க்க முடிவதில்லையே.
இன்றே ஆச்சர்யம்.
அதிசயம்.
அன்று என்ன சொல்ல..

காட்சிகள் தடக்..தடக்..
போக போக வேகம்.
போகப் போக சுறுசுறுப்பு.
படமும் ..
சிவாஜியும்..
நானும்...

ஒரு பயில்வான் சிவாஜியை அடிப்பார்.
ரந்தாவா.
பின்னாளில் தெரிந்தது.
சிவாஜி பேசும் ஒரு வசனத்திற்கு திரையரங்கை தூள் கிளப்பினார்கள்.
மகனே ! இன்னைக்கு உன் காட்டுலே மழை ..
ஒரு வசனத்தையாவது கேட்க விட்டார்களா ..என்ன ?
ராஜா..
ரசிகனுக்கான ராஜ்ஜியம்..
ஏக அதிகாரம் செய்தார்கள்.

காட்சிகள் போக..
அந்த ரந்தாவுடன் சண்டைகாட்சி வர..
ஸ்பீக்கர் சத்தம் குறைவா..
மக்கள் சத்தம் அதிகமா ..
கிழியோ கிழியென்று கிழித்து விட்டார்கள்.
விசில்கள்...கை தட்டல்கள்.
நிறைய இரைச்சலுடன் ..
ரசிக்க முடிந்தது..
மறுபடியும் அந்த காட்சியை போட்டால் நன்றாக இருக்குமே.
நினைப்புத்தான்...

ஜிவ்வென்று காட்சிகள் பறக்க...

இடைவேளை...
நிலக்கடலை ..முறுக்கு..
அந்த 25 பைசா காலி..
சுகமோ சுகம்..
நண்பர்களுடன் விமர்சனங்கள் 
பரிமாறப்பட்டன.

பெல் சத்தம். 
படம் போட ,முட்டி மோதி,மணல் குவித்த இடத்தை தேடி அமர..
இதற்குள்ளாகவே..
ஆங்காங்கே களேபரங்கள் ..
இது என் இடம் ..இது உன் இடம்
என்ற கூச்சல்கள் ..

இடைவேளை கொடுத்த அந்த ஆசுவாசம் சிறிது நேரம் தொடர ..
படமும் தொடர..

பாடல்களை சொல்ல வேண்டுமே..
 இடைச்செருகலாக சொல்கிறேன் ..
நீ வரவேண்டும் ...
கல்யாண பொண்ணு கடை பக்கம் போனா...
இரண்டில் ஒன்று ...
ஸ்கிரின்களை கிழிக்காதது தான் பாக்கி..
ஆடித் தீர்த்து விட்டார்கள்..
சிவாஜி சும்மா வந்தாலே கிழியும்...
இத்தனை ஸ்டைல்களில் அட்டகாசம் செய்தால்..
விடுவார்களா ..
செண்டையாட்டம் போலே 
வெடித்தது...
ஸ்டைலிஸ் ராஜா...இதில் 
கூடவே பாலிஸ் ராஜா வேறு..
ஸ்கிரினில் சிவாஜி ஆட்டமும்
தரையில் தலைகளின் பாட்டமுமாக...
கொண்டாட்டமோ கொண்டாட்டமே...

அப்புறம்..
நாகையா..கோயில் நகை கொள்ளை..என்று காட்சிகள் போக..
தியேட்டரே சற்று அமைதி காத்தது.
பாலாஜி கும்பலை கைது செய்வார்  சிவாஜி.
போலீஸ் உடையில்.
அந்த சிவாஜியின் வருகைக்கு பெரும்  ஆர்ப்பாட்டம் கொட்டகையில்.

அப்புறம்.
ரங்காராவ் அண்டர் கிரவுண்ட் ரகசியங்கள்..ஜெயலலிதா கூடாரத்தில் நுழைவு..இப்படி சில காட்சிகள் போக...

சேகர் , நீ நினைக்கற மாதிரி ராஜா இல்லே.ராஜா ஒரு துப்பறியும் போலீஸ்..
இப்படி ஆர் எஸ்மனோகர் பாலாஜியிடம் பற்ற வைக்க...
மறுபடியும் நெருப்பு பறக்க காட்சிகள் போகும்.
ஆர் எஸ் மனோகர் பாலாஜியிடம்  பேசும்..
நான் கொஞ்சமாத்தான் நம்புனேன் .கொஞ்சமா ஏமாந்தேன்,ஆனா நீ...
என்பது எல்லாம்  ரசிக்க 
வைத்தது...

உண்மையைச் சொல்லு ,நீ யார் என பாலாஜி மலைச்சரிவில் சிவாஜியை அடிக்க,
சில அடிகள் வாங்கும் சிவாஜி,பாலாஜி கொடுத்ததை திருப்பி கொடுக்க..
சிவாஜியின் அந்த ஹேன்ட்சம்மான அழகு ,ஸ்டைல் ...
இந்த கால பாணியில் சொன்னால்..
சான்ஸே இல்லை..
அத்தனை காசம்..அட்டகாசமோ அட்டகாசம் ..
 
எல்லா தமிழ் சினிமாக்கள் வழக்கம் போலே 
விவரிப்பதை இங்கு ராஜாவும்..
ராஜா இல்லே..
சேகர்..சந்தர்..
ஒரு முடிச்சு அவிழ..
இணையும் சிவாஜி பாலாஜி...

ராஜா இறுதியை நெருங்க...
பட்டாசாகிறது திரை...
அதிர அதிர ..
அட்டகாசங்கள்..
ரங்காராவ் பண்டரிபாய் 
ஆர் எஸ் மனோகர் பாலாஜி 
 மேஜர்  ப்ளஸ் ஸ்டைலிஸ் ராஜாவும் அணி வகுக்க..
திரையை  ஒவ்வொரு பார்ட்டாக 
வெடிக்க வைப்பார்கள்.
போகுது ..போகுது..
க்ளைமேக்ஸ் காட்சிகள்..நீளமே தெரியாது...
அத்தனை சுவராஸ்யம்.
அத்தனையும் அவ்வளவு ரசிப்பாக போக...
சிவாஜி சிரித்து அழுகிறாரா ?
அழுது ரசிக்கிறாரா..
எதுவோ ,ஆனால் கொட்டகையில்  வெடித்தது கொண்டாட்டமே..

பின்..
வழக்கம் போலே சினிமாக்களுக்கே ஆன க்ளைமேக்ஸ்க்கான  சண்டை காட்சி ,
முடிவுற ..
சிவாஜி பாலாஜி காம்போ படத்திலும் வெற்றியை பகிர்ந்து உற்சாகமாக...
எல்லாம் சுபமே சுபம்.

செந்தில்வேல் சிவராஜ்
9087620800....






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்