1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

தம்பி சண்முகத்துக்கு சிவாஜி எழுதிய கடிதங்கள்


நடிகர் திலகம்' சிவாஜி கணேசனை திரையில சிம்மக் குரலோட, காவிய நாயகனா, கம்பீரமா பார்த்துதான் நமக்கு பழக்கம்.ஆனா, கேமராவுக்குப் பின்னாடி, அவரோட நிஜ வாழ்க்கையில அவர் எவ்வளவு எளிமையான ஒரு மனுஷன், எவ்வளவு பாசக்கார அண்ணன் அப்படின்றது இப்ப இருக்கற பல பேருக்குத் தெரியாது.

​1962-ல் நிகழ்ந்த அந்த வரலாற்றுப் பயணம்
​கடந்த 1962-ஆம் வருஷம், அமெரிக்க அரசாங்கத்தோட சிறப்பு அழைப்பாளரா நம்ம நடிகர் திலகம் உலக நாடுகள் முழுக்க ஒரு வரலாற்றுப் பயணம் மேற்கொண்டார். இந்திய சினிமா வரலாற்றுலேயே ஒரு பொன்னான மைல்கல்லா அமைஞ்ச அந்தப் பயணத்துல, அந்நிய நாட்டுல நம்ம தேசத்தோட கலைப் பெருமையை அவர் உயர்த்திப் பிடிச்சார்.
​அப்படி அவர் ரோம், பாரிஸ், வாஷிங்டன்னு உலகத்தோட பிரம்மாண்டமான நகரங்கள்ல வலம் வந்தப்ப... தன் மனசுக்கு ரொம்ப நெருக்கமான அவரோட அருமைத் தம்பி சண்முகத்துக்குத் தன் கைப்பட சில அரிய கடிதங்களை எழுதியிருக்காரு.
​பாசமும் எளிமையும் நிறைந்த கடிதங்கள்
​உலகமே கொண்டாடுன ஒரு மகா நடிகர், அந்த அந்நிய நாட்டுல கடும் குளிர்ல கூட தன்னோட துணிகளைத் தானே துவைச்சுக்கிட்டாராம்! அதுமட்டுமில்ல, "என் வாழ்நாள்லயே நான் என் கைப்பட எழுதுற முதல் கடிதம் இதுதான்" அப்படின்னு தன் தம்பிக்கு ரொம்ப உருக்கமாவும் அந்த கடிதங்கள்ல குறிப்பிட்டிருக்காரு.

​அவர் ரோம் நகரத்து வீதிகள்ல நடந்தாலும் சரி, பாரிஸ் அழகை ரசிச்சாலும் சரி, வாஷிங்டன் கம்பீரத்துல இருந்தாலும் சரி... அந்த உலகப் புகழுக்கு நடுவுலயும் அவரோட இதயம் என்னவோ தன்னோட அன்னை ராஜாமணியம்மாளோட உடல்நலத்து மேலயும், தம்பி சண்முகம் மேல இருந்த பாசத்துலயும்தான் நிலைச்சு இருந்துச்சு அப்படிங்கறதை அந்த கடிதங்களின் ஒவ்வொரு வரியிலயும் நாம உணர முடியுது. எந்தப் பந்தாவும் இல்லாத ஒரு மிக எளிமையான மனிதரை இந்தக் கடிதங்கள் நமக்குக் கண் முன்னாடி கொண்டு வந்து நிறுத்துது.

​தொடர்ந்து ஷூட்டிங்கில் ஈடுபட்டிருந்த சிவாஜி, நாளுக்கொரு தேசமாக மேல் நாடுகளில் தற்சமயம் பயணம் செய்து கொண்டிருந்தாலும் தம்பிக்குக் கடிதம் எழுதத் தவறுவதில்லை. திரு. கணேசன் எழுதிய சில கடிதங்களை இங்கே வெளியிட்டிருக்கிறோம்.
இது போன்ற அறிமுகம் கொடுத்து ஒரு வார இதழ் அன்று நடிகர் திலகம் எழுதிய கடிதங்களை பிரசுரம் செய்திருந்தது. இதற்குப் பின்னால் அந்த கடித செய்திகள் இடம் பெற்றன. அந்த கடிதங்களில் இருக்கும் தகவல்களை  அப்படியே இப்போது நாம் பார்க்கலாம் .

​ரோம் (17-3-62)
அருமை தம்பி சண்முகத்துக்கு 
​நேற்று இங்குவந்து சேர்ந்தோம். திரு. எம்பாரும், நண்பரும் கெய்ரோவில் எங்களுடன் வந்துசேர்ந்து கொண்டார்கள். இது மிகவும் அருமையான நகரம். முடிந்த வரை சுற்றிப் பார்த்துவிட்டு நாளை ஜெனிவாவுக்குப் போகிறோம். என் உடல் நிலை சுகமே. குழந்தைகளுக்கு என் அன்பு ஆசி. மூத்தவர்களுக்கு வணக்கம்.

அடுத்த கடிதம்:
​நூரம்பர்க் (23-3-62)
​நலம். வீட்டில் எல்லோரும், குறிப்பாக அம்மா சௌக்கியமா? நாங்கள் இப்போது நூரம்பர்க்கில் இருக்கிறோம். நாளை பெர்லின் புறப்படுகிறோம். இங்கு குளிர் மிகவும் அதிகமாக இருக்கிறது. அம்மாவின் உடம்பை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளவும். எல்லோரையும் நான் விசாரித்ததாகச்சொல்லவும். தினமும் எனது சட்டைத் துணிமணிகளையெல்லாம் நானே துவைத்துக் கொள்கிறேன். எனது இந்த வெளிநாட்டுப் பயணம் என் வாழ்நாளிலேயே நான் பார்க்க முடியாத பல அனுபவங்களைக் கொடுக்குமென்று நினைக்கிறேன். இப்பயணம் என் வாழ்க்கையிலேயே நான் மறக்க முடியாத சம்பவமாக அமையும். என் வாழ்நாளிலேயே என் கைப்பட நான் எழுதும் முதல் கடிதம் இதுதான்.

அடுத்த கடிதம்:
​பாரிஸ் (28-3-62)
​நான் இப்போது பாரிஸில் இருக்கிறேன். பல இடங்களைப் பார்த்து முடித்துக் கொண்டு நாளை மாலை லண்டனுக்குப் புறப்படுகிறேன். நாளைமாலை சித்ரா கிருஷ்ணசாமியின் படத்திற்காக நான் சில காட்சிகளில் நடிக்க இருக்கிறேன்.

அடுத்த கடிதம்:
​வாஷிங்டன் (8-4-62)
​நான் 4-ஆம் தேதி இங்கு வந்தேன். நான் கலந்துகொள்ள நிறைய நிகழ்ச்சிகள் இருக்கின்றன. 'வாய்ஸ் ஆப் அமெரிக்கா'வில் என் பேச்சு ஒன்றைப் பதிவு செய்தார்கள். அது 16-ஆம் தேதி ஒலிபரப்பப்படும். உணவுப் பிரச்சினைக்கு இடமே இல்லை. இங்கு தென்னிந்தியர்கள் நிறைய இருக்கிறார்கள். கடிதங்களை 'பாரின் லீடர்ஸ் அண்டு ஸ்பெஷலிஸ்ட்ஸ் பிராஞ்சு, வாஷிங்டன்' மேற்பார்வைக்கு எழுதவும்.
​இப்படிக்கு,
(சிவாஜி கணேசனின் கையெழுத்து)

​ஸ்கிரீன்ல நாம பார்த்து வியந்த அந்த நடிப்புச் சக்கரவர்த்திக்கும், நிஜ வாழ்க்கையில அவரோட பாசக்கார மனசுக்கும் நடுவுல இருந்த அந்தப் எளிமையை ரொம்ப அழகா வெளிச்சம் போட்டுக் காட்டுறதுதான் இந்தக் கடிதங்களோட ஆகச்சிறந்த சிறப்பம்சம். உலகமே கொண்டாடுன ஒரு மகா கலைஞனோட இன்னொரு பக்கத்தை நமக்குப் புரிய வைக்குது இந்தத் தொகுப்பு.

இந்தக் தகவல்கள் வெறும் பழைய நினைவலைகள் மட்டும் கிடையாது. ஒரு மனுஷன் எவ்வளவு பெரிய உயரத்துக்குப் போனாலும், தன்னோட வேர்களையும் குடும்பத்தையும் எப்படி மறக்காம இருக்கணும்னு இன்னைக்கு இருக்குற தலைமுறைக்குச் சொல்லித்தர்ற ஒரு வாழும் பாடம்.

​இதை வாசிக்கும் போது அவரோட அன்பும் கம்பீரமும் இன்னைக்கும் நம்ம கண் முன்னாடி வந்து போகுது.
​சுருக்கமா சொல்லணும்னா, திரையில அவர் செதுக்கின கதாபாத்திரங்கள் காலத்தால் அழியாததுனா, நிஜ வாழ்க்கையில அவர் வாழ்ந்த இந்த அன்பான, எளிமையான வாழ்க்கை முறைதான் அவரை இன்னும் பல தலைமுறைகளுக்கு நம்ம மனசுல சிம்மாசனம் போட்டு உட்கார வைச்சிருக்கு. நடிப்புலகின் அந்தச் சிம்மக் குரலுக்குப் பின்னால், ஒரு மென்மையான பாச நெஞ்சம் துடிச்சுக்கிட்டு இருந்ததுக்கு இந்தக் கடிதங்களே எக்காலத்துக்கும் சாட்சி!

செந்தில்வேல் சிவராஜ்
908720800

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்