நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த தெலுங்கு திரைப்படங்கள் :
1.சிவாஜி கணேசன் நடித்த முதல் தெலுங்கு திரைப்படம் பரதேசி. இந்த திரைப்படம் வெளிவந்த ஆண்டு 14. 1. 1953 .
நடிகை அஞ்சலி தேவி தயாரித்த திரைப்படம் இது.சிவாஜியுடன் நாகேஸ்வரராவும் நடித்திருந்தார் .இந்தப் படத்தை இயக்கியவர் எல் வி பிரசாத் நடிகர் திலகத்துக்கு ஜோடி வசந்தா.
2.நடிகர் திலகத்தின் அடுத்த தெலுங்கு திரைப்படம் பெம்புடு கொடுகு.இந்தத் திரைப்படம் வெளிவந்த ஆண்டு 11.11.1953 .
சிவாஜிகணேசனுடன் சாவித்திரி நடித்த முதல் திரைப்படம் இது.இந்தப் படத்தின் இயக்குனர்
எல் வி பிரசாத். ஏழு ஆண்டுகளுக்குப் பின்பு சிவாஜி நடித்து வந்த பெற்ற மனம் படத்தின் கதை தான் இது.இந்தப் படத்தில் நடிக்க சிவாஜி கணேசனை ஒப்பந்தம் செய்தால்தான் தெலுங்கில் தயாரிக்க அனுமதிப்பேன் என்று P.A.பெருமாள் அவர்கள் தயாரிப்பாளரிடம் நிபந்தனை விதித்தார்.
3.அடுத்து நடிகர் திலகம் நடித்து தெலுங்கில் வெளியான படம் மனோகரா.இப்படம் வெளிவந்த
தேதி 3.6.1954.இந்தப் படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்தவர் கிரிஜா. இயக்கம்
எல் வி பிரசாத். இந்தப் படத்தின் தெலுங்கு வசனங்களை சிவாஜியே பேசினார் .
4.சிவாஜியின் அடுத்த தெலுங்கு திரைப்படம் பராசக்தி. இந்தப் படம் வெளிவந்த தேதி 11. 1 .1957 .
நேஷனல் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த படம். தெலுங்கிலும் மாபெரும் வெற்றி பெற்ற படம் இந்த படம்.
5.சிவாஜியின் அடுத்த தெலுங்கு திரைப்படம் பொம்மள பெள்ளி.இந்தத் திரைப்படம் வெளிவந்த தேதி
11. 1 .1958 .சிவாஜிக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ஜமுனா. இந்தப் படத்தின் இயக்குனர் R.M.கிருஷ்ணசாமி.
இந்த திரைப்படம் தமிழில் பொம்மை கல்யாணம் என்ற பெயரில் வெளியானது. வரதட்சணை கொடுமையை சொன்ன திரைப்படம் இது.
6.நீண்ட இடைவெளி விட்டு 24 வருடங்கள் கழித்து சிவாஜி நடித்து வெளியான தெலுங்கு திரைப்படம் நிவுரு கப்பின நிப்புஇந்தத் திரைப்படம் வெளிவந்த தேதி 12. 9. 1982 .
இந்தப் படத்தின் இயக்குனர்
P.சந்திரசேகர ரெட்டி .இந்தப் படத்தில் நடிகர் கிருஷ்ணா,ஜெயப்பிரதாவும் நடித்திருந்தார்கள்
இந்தப் படம் தமிழில் மிஸ்டர் மகேந்திரா என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளிவந்தது .
7.நடிகர் திலகம் நடித்து அடுத்ததாக வெளிவந்த தெலுங்கு திரைப்படம் பெஜவாடா பெப்புலி.
இந்தத் திரைப்படம் வெளிவந்த தேதி 14. 1 .1983 .இந்தப் படத்தின் இயக்குனர் நடிகை விஜய நிர்மலா.
சிவாஜியை வைத்து இயக்கிய இரண்டாவது பெண் இயக்குனர் விஜய நிர்மலா என்பது குறிப்பிடத்தக்கது .
இந்த படத்தில் சிவாஜியுடன் சௌகார் ஜானகி கிருஷ்ணா நடிகை ராதிகா ஆகியோரும் நடித்திருந்தார்கள் .
இந்தப் படம் தமிழில் சட்டம் ஒரு சக்கரம் என்ற பெயரில் டப் செய்து வெளியிடப்பட்டது.
8.சிவாஜி கணேசன் நடித்த அடுத்து வெளியான தெலுங்கு திரைப்படம் விஸ்வநாத நாயக்கடு. இந்தத் திரைப்படம் வெளிவந்த தேதி 1. 5 .1987 .சிவாஜிக்கு ஜோடி கே ஆர் விஜயா. இந்தப் படத்தின் இயக்குனர் தாசரி நாராயண ராவ்.கிருஷ்ண தேவராயர் காலத்து சரித்திரத்தை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம். சிவாஜி கணேசன் ஏற்ற கதாபாத்திரம் வரலாற்றில் ஒரு முக்கியமான கதாபாத்திரம் ஆகும். இந்தத் திரைப்படத்திலும் நடிகர் கிருஷ்ணா நடித்திருந்தார்.
9.நடிகர் திலகம் நடித்து அடுத்து வெளியான தெலுங்கு திரைப்படம் அக்னி புத்ருடு .
இந்தத் திரைப்படம் வெளியான தேதி 14. 8. 1987 .இந்தப் படத்தின் இயக்குனர் ராகவேந்திர ராவ். இந்தப் படத்தில் நடிகர் நாகார்ஜுனாவும் சிவாஜியுடன் இணைந்து நடித்திருந்தார்.
நடிகர்திலகம் சிவாஜி கணேசன் கௌரவ வேடத்தில் நடித்த தெலுங்கு திரைப்படங்கள் :
1.நடிகர் திலகம் கௌரவ வேடத்தில் நடித்த திரைப்படம் பில்லலு தெச்சின செல்லுன ராஜ்யம்.இந்தத் திரைப்படம் வெளி வந்த தேதி 1.7. 1960 .இந்தப் படத்தின் இயக்குனர் பந்துலு.இந்தத் திரைப்படம் தமிழில் குழந்தைகள் கண்ட குடியரசு என்று மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவந்தது.
2.நடிகர் திலகத்தின் அடுத்த கௌரவ வேட திரைப்படம் ராமதாசு. இந்தப் படம் வெளிவந்த தேதி 23. 12. 1964 .
இந்தப் படத்தின் இயக்குனர்
V.நாகையா .நடிகர் திலகம் இந்த படத்தில் லட்சுமணன் வேடத்தில் நடித்திருப்பார் .
3.நடிகர் திலகம் நடித்த அடுத்த கௌரவ வேட தெலுங்கு திரைப்படம் பங்காரு பாபு.
இந்தத் திரைப்படம் வெளியான 15. 3. 1973 .இந்தப் படத்தின் இயக்குனர் V.B. ராஜேந்திர பிரசாத் .இந்தப் படத்தின் கதாநாயகன் நாகேஷ்வரராவ் .
4.நடிகர் திலகம் நடித்த அடுத்த கௌரவ வேட திரைப்படம் பக்த துக்காராம். இந்தப் படம் வெளியான தேதி 5. 7.1973 .
நடிகை அஞ்சலி தேவியின் சொந்தப்படம் இது .இந்தப் படத்தின் இயக்குனர் மதுசூதன ராவ்.பக்த துக்காராமாக நாகேஸ்வரராவ் நடித்த படம் இது.சத்ரபதி சிவாஜியாக நடிகர் திலகம் நடித்த திரைப்படம் இது .
5.நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கௌரவ வேடத்தில் நடித்து அடுத்து வெளியான தெலுங்கு திரைப்படம் ஜீவன திராலு.திரைப்படம் வெளியான தேதி 12. 8 .1977 .இந்தப் படத்தின் இயக்குனர் G.C.சேகர்.
இந்தத் திரைப்படம் தமிழில் வாழ்க்கை அலைகள் என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
6.நடிகர் திலகத்தின் அடுத்த கௌரவ வேட தெலுங்கு திரைப்படம் சாணக்கிய சந்திரகுப்தா. இந்தத் திரைப்படம் வெளியான தேதி 25. 8 .1977 .இந்தப் படத்தின் இயக்குனர் என்டி ராமராவ்.
நடிகர் திலகம் என்டி ராமராவ் நாகேஸ்வர ராவ் மூவரும் இணைந்து நடித்த திரைப்படம் இது. நடிகர்திலகம் கிரேக்க வீரன் அலெக்சாண்டர் வேடத்தில் நடித்த படம் திரைப்படம் இது .
தொகுப்பு:
செந்தில்வேல் சிவராஜ்
கருத்துகள்
கருத்துரையிடுக