திரைக்கு வராத சிவாஜி பாடல்கள்

படம்
காலத்தை வென்றும் திரைக்கு வராத  சிவாஜியின் ரகசியப் பாடல்கள்! ​"நடிகர் திலகம் திரைப்படங்களில் இருந்து, நம் காதுகளை வருடிச் சென்றும் திரைக்கு வர மறுத்த முத்துக்கள் சில உள்ளன என்றால் நம்புவீர்களா?" ​ 'போனால் போகட்டும் போடா' முதல் 'வசந்த மாளிகை' வரை... அவர் பாடி நடித்த ஒவ்வொரு பாடலும் இன்றும் நம் நெஞ்சங்களில் ஒலித்துக்கொண்டிருக்கிறது." ​"ஆனால், உங்களுக்குத் தெரியுமா? அவரது திரைப்படங்களுக்காக மிகச் சிறந்த இசையமைப்பாளர்களான விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கே.வி. மகாதேவன், இளையராஜா போன்ற ஜாம்பவான்கள் பதிவு செய்த சில பாடல்கள்... அவை ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்தும்... வானொலியில் சூப்பர் ஹிட்டாக ஒலித்தும்... திரையில் இடம்பெறவே இல்லை!" ​"ஒரு பிரம்மாண்டப் படத்தின் நீளம், கதைக்களத்தின் உணர்வுபூர்வமான தேவை, எதிர்பாராத பட்ஜெட் சிக்கல்கள் அல்லது ஒரு பாட்டுக்குப் பதிலாக அதைவிடச் சிறப்பான ஒரு பாட்டைக் கொண்டு வர வேண்டும் என்ற இயக்குநரின் தொலைநோக்குப் பார்வை... இப்படிப் பல காரணங்களால், இந்த அரிய பாடல்கள் திரைப்படங்களின் இறுதிக் காட்சியில் கத்தரிக்கப்பட்டன." ...

எளிமையும் கம்பீரமும் -நடிகர்திலகம்

சிவாஜி! 
மிக எளிமையான 
மனிதர் தான்
உருவத்திலும் பேச்சிலும்
ஆனால் 
கேமராவை வைத்தால்
அவர்  பிரம்மராட்சஷன்-ஆனால்
யாரையும் விழுங்காத ராட்சஷன்

ஒரு நடிகன் நன்றாக நடித்தால்
இவன் நன்றாக நடிக்கின்றானே 
என்பார் பொதுஜனம்
எவனையும் நன்றாக 'நடக்கிறான் '
என்றதில்லை அதே ஜனம்
என்ன காரணம்  என்போரே
சிவாஜியின் நடையை பாருங்கள்

அள்ளி அள்ளி கொடுத்தாரா அத்தாட்சி எங்கே?
வாரி வாரி கொடுத்தாரா 
பத்திரத்தை காட்டுங்கள்? 
அறியா மக்கள்
கேட்கும்  கேள்விகள் இவை! 
என் செய்வது! 
அப்படித்தானே  பழக்கப்பட்டுள்ளீர்கள்!
கொடை என்றால் என்ன?
கொடுப்பவன் சொல்லாதது
வாங்கியவனை சொல்ல விடாதது
எல்லோருக்கும் தெரிய 
சிவாஜி செய்தது விளம்பரக் கொடையல்ல 
விளம்பாத கொடை

படத்துக்கு படம் உடைகளை
மாற்றுவான் நடிகன்
சிவாஜியோ உடலையே  
மாற்றும் நடிகன்

இவ்வளவு செய்தாயிற்று
இன்னும் என்ன 
ஓய்வுக்கும் ஓய்வு கொடுக்கலாமே?
இப்படி கேட்டதுண்டு பலபேர்..
அய்யன் சொன்ன பதிலில்(பரா)சக்தியுண்டு
'உடல் சவமாகும்வரை
சிவமாக இயங்குவேன்'

நீ செத்து பிழைத்தவனில்லை
செத்தும் பிழைப்பை கொடுத்தவன் நீ

நேரத்துக்கே நேர்மையை காட்டியவன் நீ
ஆதலால் தான்,
நேரத்தை உதாரணமாக சொல்ல
சிவாஜி என்கிறார்கள்

'பதவி மூன்றெழுத்து
மோகம்' மூன்றெழுத்து
இல்லை ' மூன்றெழுத்து 
சிவாஜி மூன்றெழுத்து
சிவாஜிக்கு பதவி மோகம் இல்லை

பகவத் கீதை உன் மனவாழ்வு
மகாபாரதம் உன் புற வாழ்வு
பாரதம் போல் போர்கள் நிரம்பியதுதான் 
உன் வாழ்க்கை-அதை
கீதை நிரம்பிய மனத்தால்
செம்மையாக்கி கொண்டவன் நீ! 

நண்பர்களே அதிகம் துரோகிகளாக மாறியது 
உன் வரலாற்றில் தான்!
எப்படி உன்னால் மறக்க முடிந்தது?
மன்னிக்க முடிந்தது?
காலமானாலும் கடவுள் கூட தண்டிப்பானே!
உன்னை என்ன சொல்வது?

நடிப்புக்கு இலக்கணம் இல்லையாமே?
அது தெரியாது?
ஆனால் சிவாஜி நடிப்புத்தான்
இலக்கணம் ஆகி விட்டது
அது தெரியும்!

தமிழுக்கில்லை  பஞ்சம்தான்
வாரி வாரி கொடுக்கிறதே வார்த்தைகளை! 
ஆனால்
உன்னை எழுதும் போதுதான் உணர்கின்றேன்
அதற்கும் கூட சிறிது பஞ்சமென்று!

செந்தில்வேல் சிவராஜ் .....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற