திரைக்கு வராத சிவாஜி பாடல்கள்

படம்
காலத்தை வென்றும் திரைக்கு வராத  சிவாஜியின் ரகசியப் பாடல்கள்! ​"நடிகர் திலகம் திரைப்படங்களில் இருந்து, நம் காதுகளை வருடிச் சென்றும் திரைக்கு வர மறுத்த முத்துக்கள் சில உள்ளன என்றால் நம்புவீர்களா?" ​ 'போனால் போகட்டும் போடா' முதல் 'வசந்த மாளிகை' வரை... அவர் பாடி நடித்த ஒவ்வொரு பாடலும் இன்றும் நம் நெஞ்சங்களில் ஒலித்துக்கொண்டிருக்கிறது." ​"ஆனால், உங்களுக்குத் தெரியுமா? அவரது திரைப்படங்களுக்காக மிகச் சிறந்த இசையமைப்பாளர்களான விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கே.வி. மகாதேவன், இளையராஜா போன்ற ஜாம்பவான்கள் பதிவு செய்த சில பாடல்கள்... அவை ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்தும்... வானொலியில் சூப்பர் ஹிட்டாக ஒலித்தும்... திரையில் இடம்பெறவே இல்லை!" ​"ஒரு பிரம்மாண்டப் படத்தின் நீளம், கதைக்களத்தின் உணர்வுபூர்வமான தேவை, எதிர்பாராத பட்ஜெட் சிக்கல்கள் அல்லது ஒரு பாட்டுக்குப் பதிலாக அதைவிடச் சிறப்பான ஒரு பாட்டைக் கொண்டு வர வேண்டும் என்ற இயக்குநரின் தொலைநோக்குப் பார்வை... இப்படிப் பல காரணங்களால், இந்த அரிய பாடல்கள் திரைப்படங்களின் இறுதிக் காட்சியில் கத்தரிக்கப்பட்டன." ...

பஞ்ச் டயலாக்ஸ்

தமிழ் சினிமாவின் கதைகளையும் வசனங்களையும் நன்றாக எழுகிறார்களோ  இல்லையோ,பஞ்ச் டயலாக் எழுதுகிறேன் பேர்வழி என்று மொக்கை மொக்கையாக எழுதித் தள்ளுகின்றனர் ..
அந்த பஞ்ச் டயலாக் செலவழித்த நேரத்தில் கதைகளுக்கும் வசனங்களுக்கும்  முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம் ..
ஒரு வரி வசனம் எழுதினாலும் அது உருப்படியாக எழுத வேண்டும். வசனங்கள் என்று வந்துவிட்டாலே அது நடிகர் திலகத்தின் படங்களை தவிர வேறு எதை கூற முடியும் ? வசனம் அதற்கேற்ற நடிப்பு என்றால் நடிகர் திலகத்தின் ஞாபகம் தான் வரும் ..வசனமே இல்லாமல் கூட நடிப்பார் நடிகர் திலகம் ..ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்து நிற்கும் நடிகர் திலகத்தின் ஒருவரி வசனங்களை
நாம் பார்க்கலாம்  .

தமிழ்நாட்டின் முதல் குரலே நன்றாக இருக்கிறதே -இது பராசக்தி

என் வாழ் களத்திலேதான் விளையாடும் கனிகளை காயப்படுத்தாது-இது மனோகரா 

வேங்கை பதுங்கி போனாலும் விருந்தை கண்டால் சீர் கொண்டு கொண்டு எழும்-வீரபாண்டிய கட்டபொம்மன் 

அது என் குற்றமல்ல உன்னையும் என்னையும் படைத்தவனின் குற்றம் இது- உத்தமபுத்திரன் 

ஏன்  எப்படியும் சொல்லலாமே !இருண்ட வீட்டுக்கு ஒரு விளக்கு என்று -சாக்கரடீஸ் ஆக ,ராஜா ராணியில் ..

ஆனந்தா  !நான் என் கண்ணையே உன்கிட்ட நான் ஒப்படைக்கிறேன்.
அதில் எப்பவும் ஆனந்த கண்ணீரைத்தான்  நான் பாக்கணும் . -இது பாசமலர்..

சொற்சுவை  பொருட்சுவை அனைத்தும் கூட்டி சுந்தரத் தமிழில்  கவிபாடும் புலவன் நான்-திருவிளையாடல் 

எல்லோரையும் என்  பக்கம் திருப்பித்தான் பழக்கம்- இது தங்கப்பதக்கம் .

குழந்தே  குழந்தைன்னு கோகுலாஷ்டமி கொண்டாடினாலும் கம்சனுக்கு என்னமோ கிருஷ்ணன்  கர்ப்ப விரோதி தானடி - இது கௌரவம் பாரிஸ்டர் ரஜினிகாந்த்.

காக்கைக்குகூட  தன் குஞ்சு பொன் குஞ்சுன்னு சொல்லுவாங்களே அந்த காக்கையா நான் பிறந்திருக்க கூடாதா - இது தெய்வமகன்

கரையான் புற்றென்ன  கருநாகங்களுக்கு சொந்தமா? இது சத்ரபதி சிவாஜி  ராமன் எத்தனை ராமனடி .

உலகத்திற்கே நாகரிகத்தை கத்துக் கொடுத்த நாட்டில் பிறந்த மறத்தமிழன் பரம்பரையில பொறந்தவன்டி - இது மூக்கையா பட்டிக்காடா பட்டணமா

இதத்தான் அவங்க பாசங்கறாங்க!
அத நீ மோசம்கறயா -இது வசந்த மாளிகை ஆனந்த்.

எச்ச இல மேல பறந்தாலும் எச்ச இலை  தான். கோபுரம் கீழ சாஞ்சாலும்  கோபுரம் தான்.

என் வாழ்க்கை குட்டையில் ஓடிக்கொண்டிருக்கும் கழிவுநீர் அல்ல ..சுத்தமான மழைநீர் ..- இது டாக்டர் சிவா 

இவையெல்லாம் சாம்பிள்கள் தான். ஒவ்வொரு படத்திலும் ஏராளமான வசனங்கள் இதுபோல் உள்ளன. கடைசி காலத்தில் வெளிவந்த தேவர் மகனில் கூட, நடிகர் திலகத்திற்கு எழுதபட்ட வசனமான "வெத நாம் போட்டது இதெல்லாம் என்ன பெருமையா "
என்ற வசனம் தான் மீம்ஸ் உலகிலும் டாப்பாக உள்ளது ...

நன்றி!
செந்தில்வேல் சிவராஜ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற