திரைக்கு வராத சிவாஜி பாடல்கள்

படம்
காலத்தை வென்றும் திரைக்கு வராத  சிவாஜியின் ரகசியப் பாடல்கள்! ​"நடிகர் திலகம் திரைப்படங்களில் இருந்து, நம் காதுகளை வருடிச் சென்றும் திரைக்கு வர மறுத்த முத்துக்கள் சில உள்ளன என்றால் நம்புவீர்களா?" ​ 'போனால் போகட்டும் போடா' முதல் 'வசந்த மாளிகை' வரை... அவர் பாடி நடித்த ஒவ்வொரு பாடலும் இன்றும் நம் நெஞ்சங்களில் ஒலித்துக்கொண்டிருக்கிறது." ​"ஆனால், உங்களுக்குத் தெரியுமா? அவரது திரைப்படங்களுக்காக மிகச் சிறந்த இசையமைப்பாளர்களான விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கே.வி. மகாதேவன், இளையராஜா போன்ற ஜாம்பவான்கள் பதிவு செய்த சில பாடல்கள்... அவை ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்தும்... வானொலியில் சூப்பர் ஹிட்டாக ஒலித்தும்... திரையில் இடம்பெறவே இல்லை!" ​"ஒரு பிரம்மாண்டப் படத்தின் நீளம், கதைக்களத்தின் உணர்வுபூர்வமான தேவை, எதிர்பாராத பட்ஜெட் சிக்கல்கள் அல்லது ஒரு பாட்டுக்குப் பதிலாக அதைவிடச் சிறப்பான ஒரு பாட்டைக் கொண்டு வர வேண்டும் என்ற இயக்குநரின் தொலைநோக்குப் பார்வை... இப்படிப் பல காரணங்களால், இந்த அரிய பாடல்கள் திரைப்படங்களின் இறுதிக் காட்சியில் கத்தரிக்கப்பட்டன." ...

சிவாஜியின் நடிப்பு என்னும் ஆயுதம்

நடிப்பாயுதம்....

கண்ணில் நீர் பெருக 
 நடிகர்திலகம் திரையில் நிற்கும் நிலை பார்த்து  பெண்டிர் விட்ட கண்ணீர்த்துளிகளே கலையுலகில் அதிகமிருக்கும்.

எல்லோரும் போகும் வழி
 நடிகர்திலகம் போனபின் அது யாரும் போக முடியாத தனிப்பாதை சிறப்பை அடைந்து விடும்

தண்ணீர் தனல் போல் எரியும்
செந்தனலும் நீர் போல் குளிரும் ..
என்பது எப்படியோ  அதுபோல் சிங்கம் போல் கர்ஜிக்கும் குரலை மறு நிமிடமே சிறுமான் போல் பேசும் பாவனைக்கு தொனியை மாற்றும் திறமையை கொண்டிருப்பவர் நடிகர்திலகம்.

கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா 
நடிப்பெல்லாம் நடிகர்திலகம் நடிக்கும் நடிப்பை போலாகுமா?

சிந்தனை தோன்றி அறிவு வளர்ந்ததும் ,
அதன்பின் கலைகள் தோன்றியதும், 
அதன்பின் தொடர்ச்சியாய் நடிப்புக்கலை தோன்றியதும் ,
அதன்பின் சிவாஜி நடிக்க தொடங்கியதும், அதன்பின் நடிப்பென்றால்  நடிகர்திலகமே என்று தொடர்வுகள் முற்றுப் பெற்று  முடிந்து போனது.

பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்
பாயும் மீன்களில் படகினைக் கண்டான்
எல்லாப் படைப்புக்கும் மூலம் உண்டென்றால்,
எதனை கண்டார் நடிகர்திலகம்?
நடிப்பதில் புதுமையை படைத்தார்?

காவலுக்கு வேலுண்டு 
ஆடலுக்கு மயிலுண்டு
நடிப்புக்கு பொருளென்னடா - சண்முகத்தண்ணனே 
நீயிருக்கும் இடம் தானய்யா!

பாளை போல் சிரிப்பிருக்கு.. 
பக்குவமா குணமிருக்கு..
ஆணழகும் சேர்ந்திருக்கு
எங்கேய்யா?
அதை சூரக்கோட்டை 
சொல்லுமய்யா
கதை கதைய்யா ..

கவியுரைத்த கற்பனை போல்
கைபிடித்த பூங்கொடியாள்
கமலம்மை துணையினிலே
காலம் போற்ற வாழ்ந்தவரே!

மழை கொடுக்கும் கொடையுமொரு
இரண்டு மாதம்...
வயல் கொடுக்கும் கொடையுமொரு
மூன்று மாதம்...
பசு வழங்கும் கொடையுமொரு
நான்கு மாதம்...
நடிக வள்ளல் நடிகர்திலகத்தின்
நடிப்புக்கோ ஏது காலம்! 

மாலையில் தென்றல் வரும் வாசலைக் கூட்டி விடும்..
மல்லிகை பூக்கள் விடும் வாசனைக் கோலம் இடும்...
நடிப்பினை அள்ளித்தரும்
நல்லுணர்வை  பரப்பிவிடும்
நடிகர்திலகம் நடிப்பினிலே
நானிலம் மெய்மறக்கும்
இவர் போலே யாருமில்லை
இணை சொல்ல எவருமில்லை
இவர் வேர்வைகளால்
இவர் சேவைகளால்
கலையுலகம் பொன்னாக மின்னியதே!

அபாய அறிவிப்பு!
அய்யா!
அபாய அறிவிப்பு!
சிவாஜி நடித்த கதையென்றால்
நடிகருக்கெல்லாம்
நடிப்பதென்பது அபாய அறிவிப்பு!

நெஞ்சில் போராட்டமா 
கண்ணில் நீரோட்டமா 
அதை நீ காட்டினால்
மயங்காத மனிதரெல்லாம்
மண்ணில் இல்லையே!

கீதை சொல்ல கண்ணன் வந்தான் பாரதத்திலே 
கடமை சொல்ல ராமன் வந்தான் காவியத்திலே
நடிப்பை சொல்ல கணேசன் வந்தார்
கலையுலகிலே 
என்னசொல்ல அவரை மிஞ்ச ஆளுமில்லை  இந்த மண்ணிலே! 

சிங்கத்தமிழனடா!
எங்கள் தலைவனடா!!
சிவாஜி என்னும் பெயரைக் கொண்ட 
நடிகர்திலகமடா!

நன்றி 
செந்தில்வேல் சிவராஜ்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற